PDA

View Full Version : கோபம்



இனியவள்
11-07-2007, 06:54 PM
கோபம் எம்மை
அழித்து பிறரையும்
அழிக்கும் அற்ப
ஆயுள் கொண்டது...

அதனைக் கட்டிக் காப்பாற்றி
கடைசிவரை உயிர் போல்
இருக்கும் நண்பர்களை
இறுதியாக்கும் மூன்றாம் கண்.....

அக்னி
11-07-2007, 06:58 PM
கோபத்தில்,
விரிந்தன விழிகள்...
குருடாகியது,
பார்வை...

பாராட்டுக்கள் இனியவள்...

இனியவள்
11-07-2007, 07:04 PM
கோபத்தில்,
விரிந்தன விழிகள்...
குருடாகியது,
பார்வை...

பாராட்டுக்கள் இனியவள்...

கோபம் தணிந்து
பார்க்கின்றேன் ஈடு
கட்ட முடியாத
அன்பை அல்லவா
இழந்து தவிக்கின்றேன்
கண்ணை மூடி என்
வாழ்வை அதாள
பளத்தில் தொலைத்து
விட்டு தவிக்கின்றேன்

நன்றி அக்னி

மாதவர்
11-07-2007, 07:06 PM
கோபத்துடன் கூடவே வருவதுதான்
பாவம்!!
அய்யோ பாவம்!!!

இனியவள்
11-07-2007, 07:08 PM
கோபத்துடன் கூடவே வருவதுதான்
பாவம்!!
அய்யோ பாவம்!!!

பாவம் பார்த்ததால்
வந்த கோபம்
பரிதாபத்தில் முடிந்தது

மாதவர்
11-07-2007, 07:13 PM
ஆறுவது சினமா?
ஆற்றுபடுத்தினால் சினம் தனியுமா?

இனியவள்
11-07-2007, 07:16 PM
ஆறுவது சினமா?
ஆற்றுபடுத்தினால் சினம் தனியுமா?

காட்டுத் தீ
போல் பரவி
அழித்து விடும்
ஆற்றல் தணிக்கப்படல்
சிறந்தது இல்லையே
தணித்து விடும்
அன்பு கொண்ட
உள்ளங்களை

மாதவர்
11-07-2007, 07:18 PM
காட்டுதீ கூட கட்டுக்குடங்கும்
அப்பா கோபம்
அதிலும்
காரிகைகளின் கோபம்...
விளக்க வார்த்தை இல்லை

இனியவள்
11-07-2007, 07:20 PM
காட்டுதீ கூட கட்டுக்குடங்கும்
அப்பா கோபம்
அதிலும்
காரிகைகளின் கோபம்...
விளக்க வார்த்தை இல்லை

கட்டுக்கடங்கிய காட்டுத்
தீ வந்த வழியினை
பின்னோக்கிப் பார்த்தேன்
எதனை அழிவுகள்

மாதவர்
11-07-2007, 07:22 PM
தீ அனையுமா?
தீர்வும் வருமா?
தீர்த்தங்கள் வேண்டாமா?

இனியவள்
11-07-2007, 07:25 PM
தீ அனையுமா?
தீர்வும் வருமா?
தீர்த்தங்கள் வேண்டாமா?

சாம்பல்களாய் உன்
மேல் நான் கொண்ட
நேசம் உன் தீ போன்ற
கோபத்தால் தீர்த்தம்
கூட அனல் கக்குகின்றது
உன் கோபக்கினி பறந்து

அம்மாடியோவ் என்னால முடியேலை

மாதவர்
11-07-2007, 07:27 PM
கோபத்தீயே
உனக்கு தீராத தாகமா?

இனியவள்
11-07-2007, 07:28 PM
கோபத்தீயே
உனக்கு தீராத தாகமா?

உயிர் பலி கொண்டு
தாகம் தணித்தது
கோபத் தீ

ஓவியன்
11-07-2007, 07:31 PM
அதனைக் கட்டிக் காப்பாற்றி
கடைசிவரை உயிர் போல்
இருக்கும் நண்பர்களை
இறுதியாக்கும் மூன்றாம் கண்.....

நீ எனை விட்டுப்
பிரிகையில் தான்
எனக்குக்
கோபம்
மேலேயே கோபம்
வந்தது!.

இனியவள்
11-07-2007, 07:33 PM
நீ எனை விட்டுப்
பிரிகையில் தான்
எனக்குக்
கோபம்
மேலேயே கோபம்
வந்தது!.

கோபம் மேல் வந்த
கோபம் உன் மேல்
எனக்கு வர வில்லையே
கோபம் கூட உன்னைக்
கண்டால் அசடு
வழியுது போல்

ஹீ ஹீ கோபத்தை காதல் திரிக்கு மாத்திடுவாங்கள் போல இருக்கு :ohmy:

ஓவியன்
11-07-2007, 07:46 PM
கோபம் மேல் வந்த
கோபம் உன் மேல்
எனக்கு வர வில்லையே
கோபம் கூட உன்னைக்
கண்டால் அசடு
வழியுது போல்

ஹீ ஹீ கோபத்தை காதல் திரிக்கு மாத்திடுவாங்கள் போல இருக்கு :ohmy:

கோபத்துடன்
இரண்டில் ஒன்று
பார்க்கவென உன்
வீட்டுக் கதவை
தட தடத்தேன்!

கோபத்துடன்
வந்தது உன் குரல்,
யாரது?

அவ்வளவுதான்
உன் குரலால்
அசடு வழிந்த
என் கோபம்!
என்னைக்
கோபித்துவிட்டு
எங்கேயோ
போய் விட்டது!.

ஹீ!,ஹீ!............


உங்கள் கவி வரிகளை நிரம்பவும் இரசித்தேன் இனியவள்!. :aktion033:

இனியவள்
11-07-2007, 07:51 PM
என் குரலால் அசடு
வழிந்த உன் கோபம்
அடுத்த வீட்டுக்காரன்
மேல் கத்திபோல்
பாய்ந்து சென்று
விழியால் மிரட்டி
அவனை கதி கலங்க
வைத்ததைப் பார்த்து
யாரது என நான்
கேட்ட கேள்வி
நீயா என
என்னுள் விடையோடு
வெளிப்பட்டது கோபத்தில்
கூட நீ எவ்வளவு
அசிங்கமாக இருக்கின்றாய்

ஹீ ஹீ ஹீ சும்மா :D:D:D:D:D

நன்றி ஓவியன்

ஓவியன்
11-07-2007, 08:06 PM
என் குரலால் அசடு
வழிந்த உன் கோபம்
அடுத்த வீட்டுக்காரன்
மேல் கத்திபோல்
பாய்ந்து சென்று
விழியால் மிரட்டி
அவனை கதி கலங்க
வைத்ததைப் பார்த்து
யாரது என நான்
கேட்ட கேள்வி
நீயா என
என்னுள் விடையோடு
வெளிப்பட்டது கோபத்தில்
கூட நீ எவ்வளவு
அசிங்கமாக இருக்கின்றாய்

ஹீ ஹீ ஹீ சும்மா :D:D:D:D:D

நன்றி ஓவியன்

அசிங்கமா இருக்கிறாயே
என்று நீ செல்லமாய்
திட்டிய போதே
உன் கோபமும்
உன்னைக் கோபித்து
போய் விட்டதே!.

பி.கு − கவிதையால கலங்கடிக்கிறீங்களே இனியவள்!. :aktion033:

இனியவள்
11-07-2007, 08:13 PM
அசிங்கமா இருக்கிறாயே
என்று நீ செல்லமாய்
திட்டிய போதே
உன் கோபமும்
உன்னைக் கோபித்து
போய் விட்டதே!.

பி.கு − கவிதையால கலங்கடிக்கிறீங்களே இனியவள்!. :aktion033:

என் கோபம் கூட
உனக்கு செல்லமாய்
தோன்ற எனக்கோ
உன் கோபம் அழகாய்
தோன்றுகின்றது இப்பொழுது

ஹீ ஹீ நன்றி ஓவியன் உங்கள் கவிதையும் நல்லா இருக்கு :aktion033:

அமரன்
11-07-2007, 08:21 PM
கோபம் எம்மை
அழித்து பிறரையும்
அழிக்கும் அற்ப
ஆயுள் கொண்டது...

அதனைக் கட்டிக் காப்பாற்றி
கடைசிவரை உயிர் போல்
இருக்கும் நண்பர்களை
இறுதியாக்கும் மூன்றாம் கண்.....

இனியவள் கவிதையின் முதல்பகுதி உண்மை..அதில் அற்ப ஆயுள் கொண்டது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது..இரண்டாம் பகுதி அமைக்கும்போது சற்றுக்குழம்பி இருகின்றீர்கள். கோபத்தைக் கட்டிக்காக்கச் சொல்வது போல் அமைந்துளது இரண்டாம் பகுதியின் முதல் வரி. நல்ல கருத்தை சொன்ன கவிதைக்குப் பாராட்டுகள்.

அனல் கக்கும் விழிகளில்
கருக்கட்டிய சக்தி
தீயை கருக்கியது.
−சூரசம்காரம்

இனியவள்
11-07-2007, 08:28 PM
இனியவள் கவிதையின் முதல்பகுதி உண்மை..அதில் அற்ப ஆயுள் கொண்டது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது..இரண்டாம் பகுதி அமைக்கும்போது சற்றுக்குழம்பி இருகின்றீர்கள். கோபத்தைக் கட்டிக்காக்கச் சொல்வது போல் அமைந்துளது இரண்டாம் பகுதியின் முதல் வரி. நல்ல கருத்தை சொன்ன கவிதைக்குப் பாராட்டுகள்.

அனல் கக்கும் விழிகளில்
கருக்கட்டிய சக்தி
தீயை கருக்கியது.
−சூரசம்காரம்

நன்றி அமர்

உங்கள் விமர்சனம் என்னை சிந்திக்க வைக்கின்றது இன்னும் எழுத தூண்டுகின்றது

அமரன்
11-07-2007, 08:31 PM
நன்றி அமர்

உங்கள் விமர்சனம் என்னை சிந்திக்க வைக்கின்றது இன்னும் எழுத தூண்டுகின்றது

என் கவிதையிலும் தவறு இருகின்றது...
கவிதை இப்படி வரவேண்டும்...

மூன்றாம் கண்ணில்
கருக்கட்டிய சக்தி
தீயை அழித்தது..
−சூரசம்காரம்

அமரன்
11-07-2007, 08:35 PM
இது சமய சரித்திரம் இனியவள்..ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை..

மூன்றாம் கண்களில்
கருக்கட்டும் சக்தி
தீயை பிரசவிக்கிறது.
−பத்திரிக்கை.

இனியவள்
11-07-2007, 08:39 PM
இது சமய சரித்திரம் இனியவள்..ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை..

மூன்றாம் கண்களில்
கருக்கட்டும் சக்தி
தீயை பிரசவிக்கிறது.
−பத்திரிக்கை.

ம்ம் ஆமாம் அமர்
இப்பொழுது எங்கே சினிமா கிசு கிசு எழுதவே பத்திரிகைகளுக்கு நேரம் இருக்கின்றது.. விதி விலக்காய் ஒரிரு பத்திரிக்கைகள் உண்மைகளை புடம் போட்டு காட்டினாலும் மக்கள் தடம்போட்டு புரட்டி விடுகின்றனர்

வாழ்த்துக்கள் அமர்

அமரன்
11-07-2007, 08:41 PM
கோபத்துடன் கூடவே வருவதுதான்
பாவம்!!
அய்யோ பாவம்!!!

கோபமும் பாவம்தானே மாதவா....

அமரன்
11-07-2007, 08:42 PM
கோபத்தில்,
விரிந்தன விழிகள்...
குருடாகியது,
பார்வை...

பாராட்டுக்கள் இனியவள்...

அக்னியின் முரண்கவிதை நச். பாராட்டுகள்.

இனியவள்
11-07-2007, 08:42 PM
கோபமும் பாவம்தானே மாதவா....

பாவத்தப் பார்த்து
அவன் அய்யோ
பாவம் என்றான்
அவனைப் பார்த்து
கோபம் அய்யோ
பாவம் என்றது

ஹீ ஹீ

அமரன்
11-07-2007, 08:46 PM
பாவத்தப் பார்த்து
அவன் அய்யோ
பாவம் என்றான்
அவனைப் பார்த்து
கோபம் அய்யோ
பாவம் என்றது

ஹீ ஹீ

நான் சொன்னது வேறு அர்த்தம் இனியவள்.....

கோபப்படத் தெரியாது
சொன்ன மாணவிக்கு
கோபப்பட்டு அடித்தாள்.
நடன ஆசிரியை

இனியவள்
11-07-2007, 08:51 PM
நான் சொன்னது வேறு அர்த்தம் இனியவள்.....

கோபப்படத் தெரியாது
சொன்ன மாணவிக்கு
கோபப்பட்டு அடித்தாள்.
நடன ஆசிரியை

கோபம் அமர் கோபம் பற்றி ஒரு ஆராச்சியே நடத்தலாம் போல் இருக்கின்றது ..:ohmy:

அமரன்
11-07-2007, 08:56 PM
கோபம் அமர் கோபம் பற்றி ஒரு ஆராச்சியே நடத்தலாம் போல் இருக்கின்றது ..:ohmy:

ஏங்க கவிதை எழுதியதற்காகவா என்மேல் கோபம்...நீங்க கோபபட்டாலும் நிறுத்த மாட்டேன்..

கோபப்பட்டு கொன்றுவிட்டு
பாவமென பரிதாபட்டான்
அப்பாவி புருஷன்.

இனியவள்
11-07-2007, 09:00 PM
ஏங்க கவிதை எழுதியதற்காகவா என்மேல் கோபம்...நீங்க கோபபட்டாலும் நிறுத்த மாட்டேன்..

கோபப்பட்டு கொன்றுவிட்டு
பாவமென பரிதாபட்டான்
அப்பாவி புருஷன்.

ஆஹா அமர்...

கொக்கரக்கோ என்று
கூவி எழுப்பிய கோழியை
கோபத்தில் அடித்து கொன்று
சாப்பிட்டு விட்டு தன்னை
நேரத்துக்கு எழுப்புவதற்கு
யாரும் இல்லை என
அந்தரப்பட்டான் கோபக்காரன்

ஹீ ஹீ ஒரு ஜோக்கா சொன்னன் ஜோக்கா இல்லாடி ஜோக் என்று நினைச்சு சிரியுங்க பிரச்சனை இல்லை :music-smiley-019:

அமரன்
11-07-2007, 09:18 PM
சிரித்"தேன்" இனியவள்...

கோழி குழம்பில் கொதிக்க
அவன் குழம்பிக் கொதிக்கிறான்
ஆபீசுக்கு லேட்டாகிவிட்டதாம்.

இனியவள்
11-07-2007, 09:20 PM
சிரித்"தேன்" இனியவள்...

கோழி குழம்பில் கொதிக்க
அவன் குழம்பிக் கொதிக்கிறான்
ஆபீசுக்கு லேட்டாகிவிட்டதாம்.

கோழி குழம்பில்
கொதிக்க அவன்
மனமோ கோபத்தில்
கொந்தளிக்க மனைவி
நாக்கோ கோழிக் குழம்பை
ருசி பார்க்க துடித்தது

அன்புரசிகன்
12-07-2007, 03:35 AM
ருசிபார்க்கும் நாக்கை அடக்கவேண்டும்
பசி வந்தால் 10ம் பறக்கும்
(கோபமும்)