PDA

View Full Version : கவிதை



மாதவர்
11-07-2007, 06:31 PM
தை தை எனக் குதிக்கும் எண்ணங்களை

விளக்கி விற்கும்

கலை
கவிதை

இனியவள்
11-07-2007, 06:32 PM
தை தை எனக் குதிக்கும் எண்ணங்களை

விளக்கி விற்கும்

கலை
கவிதை

மாதவரே

விளக்கி விற்குமா இல்லை விலைக்கு விற்குமா

அக்னி
11-07-2007, 06:35 PM
தலைகீழாக வந்தாலும், மாதவரின் கவிதை தைவிக அருமை...

புதுமையாய், பல கவிகள் உங்களிடமிருந்து குதிக்கும் என எதிர்பார்க்கவைத்துவிட்டீர்கள்...
தொடரும் உங்களைத் தொடர்வோம் நாங்கள்...

வாழ்த்துக்கள்...

மாதவர்
11-07-2007, 06:39 PM
விலைபோகுமா விளங்காத சரக்கு நண்பரே?

மனோஜ்
11-07-2007, 06:50 PM
தைக்கதான் பலர் என்னுகிறார்கள் தம் எண்ணங்களை
விற்பனையாவதுதான் கடினம்
கடையில்

இனியவள்
11-07-2007, 07:01 PM
கற்பனைகளை அடுக்கி
எண்ணங்களை விதைகளாக
தெளித்து உருப்பெறுவதே
கவிதை

நன்று மாதவர் வாழ்த்துக்கள்

அக்னி
11-07-2007, 07:04 PM
மாதவரே..,
இந்தக் கவிதை விரைவில் குறுங்கவிதைகள் பகுதிக்கு மாற்றப்படும்...
பதிவுகளைப் பதிவேற்றும்போது, உரிய இடங்களில் பதிவேற்றுமாறு அன்பாக கேட்கின்றேன்...
நன்றி!

ஓவியன்
11-07-2007, 07:09 PM
கவிதை என்றதும் செல்வன் அண்ணா தொடக்கிய ஒரு திரி ஞாபகத்திற்கு வந்தது!.

நண்பர்களே இதனைச் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6077) சுட்டிப் பார்க்கவும்!.

மாதவர்
11-07-2007, 07:12 PM
மாதவரே..,
இந்தக் கவிதை விரைவில் குறுங்கவிதைகள் பகுதிக்கு மாற்றப்படும்...
பதிவுகளைப் பதிவேற்றும்போது, உரிய இடங்களில் பதிவேற்றுமாறு அன்பாக கேட்கின்றேன்...
நன்றி!


புதியவன் என்பதால் எனக்கு சற்று பிடிபடவில்லை நண்பரே
தங்கள் செய்திக்கு நன்றி

அறிஞர்
11-07-2007, 07:13 PM
கவிதை.. பற்றி.. ஒரு கவிதை....

மாதவரின் அர்த்தம் செரிந்த புதுக்கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ஓவியன்
11-07-2007, 07:19 PM
மாதவரே

விளக்கி விற்குமா இல்லை விலைக்கு விற்குமா

குதிக்கும் எண்ணங்களை வரிகளாக விளக்கி விற்கும் என்று சொல்ல வருகிறார் இனியவள்!.

இளசு
11-07-2007, 08:14 PM
ரசித்து புன்முறுவல் செய்யவைத்த கவிதை! பாராட்டுகள் மாதவரே!

சொல்வேந்தர்கள் தாமரையும் ராகவனும் படித்தால் , மிக ரசிப்பார்கள்..

அமரன்
11-07-2007, 08:24 PM
மாதவர்..கவிதைக்கு அழகு செர்த்த கவிதை..பாராட்டுகள்..