PDA

View Full Version : ஓசாமாவுடன் ஒரு கற்பனை பேட்டிleomohan
11-07-2007, 03:03 PM
http://www.atimes.com/atimes/South_Asia/images/osama-travel.gif

முஷ்ரபின் பண்ணை வீட்டில், ஓசாமா ஹாயாக ஹூக்கா அடித்துக் கொண்டு க்ளாஸ்கோவ் விமான தகர்ப்பை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்

லியோ - வணக்கம்

ஓசாமா - வணக்கம்

லியோ - அட தமிழ் இவ்வளவு நல்லா பேசறீங்களே.

ஓசாமா - அடேய் நான் தொண்டியார்பேட்டையில் துணி அயர்ன் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்ப கத்துக்கிட்டது தான்.

லியோ - அட அப்படியா. அப்புறம் எப்படி இவ்வளோ பெரிய பணக்காரனா ஆனீங்க.

ஓசாமா - ஏம்பா அம்பானி மட்டும் ஏமன்ல க்ளர்க்கா இருந்திட்டு இப்ப 4 லட்சம் கோடி சொத்தை விட்டுட்டு போனார்னு சொன்னா நம்பறீங்களே.

லியோ - சரி தான். நீங்க ஏ ஆர் ரகுமான் மேல பயங்கர கோபமா இருக்கீங்களாமே. ஏன் தாஜ் மஹாலுக்கு பாட்டி எழுதினதுக்கா
ஓசாமா - அட இல்லப்பா. அவன் எழுதின பாட்டை கேட்டாலே எனக்கு கடுப்பா இருக்கு.

லியோ - அப்படி என்ன பாட்டை எழுதிட்டாரு அவரு

ஓசாமா - ஓட்டகத்தை கட்டிக்கோன்னு எழுதலையா அவன். அந்த பாட்டை கேட்டாலே எனக்கு பழைய நினைப்பு வந்திடுத்து. அதனால கடுப்பாயிடறேன்.

லியோ - அது சரி. நீங்க எங்கு ஊர் டாக்டருங்களை ஏன் கெடுக்கறீங்க.

ஓசாமா - Because they do clinically clean work

லியோ - அது சரி. அடுத்த குண்டு எங்கே எப்போ

ஓசாமா ஒரு பேப்பரில் ஒரு நாற்காலி வரைகிறார்.


லியோ - யார் நாற்காலி கீழே. முஷ்ரப்பா .......

என்று கேட்டு முடிப்பதற்குள் டமார் என்று சத்தம். ஐயோ என்று அலறி விழுகிறார் லியோ

ஓவியன்
11-07-2007, 03:07 PM
ஹீ!

இரசித்தேன் மோகன்!

அதுசரி ஓசாமா முசாரப்பின் பண்ணை வீட்டிலேயா இருக்கிறார்!.

தகவலுக்கு நன்றி!.:D

அரசன்
11-07-2007, 03:08 PM
பாத்து லியோ இது போன்ற ஆசாமிகளே இப்படிதான். நல்ல வேளை காலுக்கு வந்தது நாற்காலியோட போயிட்டு.
உங்க கற்பனைக்கு படு ஜோர். அசத்துங்க!

ஷீ-நிசி
11-07-2007, 03:08 PM
அவரையும் விடலையா நீங்க.. தண்டையார்பேட்டையில அவர் துணி துவைச்சத நான் கூட பார்த்திருக்கேன்ங்க.... ஹி ஹி :)

leomohan
11-07-2007, 03:11 PM
அவரையும் விடலையா நீங்க.. தண்டையார்பேட்டையில அவர் துணி துவைச்சத நான் கூட பார்த்திருக்கேன்ங்க.... ஹி ஹி :)

அது உங்க ஏரியா ஆச்சே. பாக்காம இருந்திருப்பீங்களா. அப்ப நீங்க சின்ன புள்ள. டவுசர் போடாம திரிஞ்சீங்களே ;-)

அரசன்
11-07-2007, 03:11 PM
அவரையும் விடலையா நீங்க.. தண்டையார்பேட்டையில அவர் துணி துவைச்சத நான் கூட பார்த்திருக்கேன்ங்க.... ஹி ஹி :)

தண்டையார்பேட்டையிலேயே தட்டியிருக்கலாம்ல. இன்னைக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதுல.

leomohan
11-07-2007, 03:14 PM
தண்டையார்பேட்டையிலேயே தட்டியிருக்கலாம்ல. இன்னைக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதுல.
அதை விடுங்க மூர்த்தி. ஒழுங்கா துணி கெடைச்சிருந்தா அவர் ஏன் இந்த நிலைமைக்கு வரப்போறாரு.

ஷீ-நிசி வூட்ல வாஷிங்க மிஷின் வாங்கிட்டதால இந்த பிரச்சனை.

ஓவியன்
11-07-2007, 03:16 PM
அவரையும் விடலையா நீங்க.. தண்டையார்பேட்டையில அவர் துணி துவைச்சத நான் கூட பார்த்திருக்கேன்ங்க.... ஹி ஹி :)

ஹீ!

துணி துவைக்கக் கொடுத்தீங்களோ?

:icon_blush:

lolluvathiyar
11-07-2007, 03:22 PM
லியோ பேட்டி சூப்பர், இன்னும் பெரிசா எழுதி இருக்கலாமே.
உங்களுக்கு பேட்டி எடுக்க அடுத்த பட்டியல்
முசரப்
புஸ்
பிளேயர்

leomohan
11-07-2007, 03:23 PM
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன்

--------------------------------------------------------------------------------

ஒரு கற்பனை பேட்டி

வணக்கம்.

வணக்கம்.

அமெரிக்காவை நெருக்கடியில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பத்தி கேட்கனும்.

எங்க நாட்ல பிரச்சனையா.

ஆமா இருக்கு.

சரி கேளுங்க.

இந்த ஈரான் பிரச்சனை....

ஈரான் ஒரு பெரிய நாடு. 100 கோடி மக்கள் தொகை. கஷ்டங்கள் சகஜம் தான்.

ஐயா நான் குறிப்பது இந்தியாவை இல்லை. ஈரான்....

ஓ. வடக்கு ஈரான். அங்கே கம்யூனிசத்தின் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. அதனாலதான்.

ஐயா நான் வட கொரியா பற்றி பேசவில்லை. ஈரான் ஐயா ஈரான்.

நாட்டின் பெயரில் என்ன இருக்கிறது. என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் தான்.

உள்நாட்டு விவகாரம்-உயரும் வரி வேலையில்லாமை விலைவாசி இதை யார் கவனிப்பது.

அநாவசியமாக கேள்வி கேட்டு தொந்திரவு செய்யும் நிருபர்களையும் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கலாம் என்று தீவிரமாக யோசிக்கிறேன்.

ஐயா சாமி ஆளை விடுங்க.

leomohan
11-07-2007, 03:24 PM
இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேருடன் ஒரு கī

--------------------------------------------------------------------------------

வணக்கம்.
கொஞ்சம் இருங்க என்று சொல்லிக் கொண்டே ஜார்ஜ் புஷ்ஷுக்கு போன் போடுகிறார்.
இவரு லியோ தமிழ் நிருபர். அவர் பயங்கரவாதி இல்லைன்னு நீங்க சொன்னீங்கன்னா பதில் வணக்கம் போடறேங்க.
....
சரிங்க.
வணக்கம் லியோ.
என்ன ஐயா வணக்கம் சொல்லக் கூட அவருகிட்டே அனுமதி வாங்கறீங்க.
அனுமதி இல்லை. அவருக்கு எல்லாம் தெரியும். நீங்க பேட்டிக்கு வாங்க.
நீங்க ஏன் அநாவசியமா ஈராக் போரில் தலை நுழைத்தீர்கள்.
அநாவசியமா. அது அவசியம். ஜார்ஜ் சொன்னார்.
உங்க நாட்டு சுகாதாரத் துறையில் ஊழல் அதிகமாகிவிட்டதாமே. நீங்க எதுவும் நடவடிக்கை எடுக்கமாட்டீங்களா.
அதை பத்தி அவர் இன்னமும் ஒன்றும் சொல்லவில்லை.
ஐயா இது உங்கள் உள்நாட்டு விவகாரம்.
ஐயா நான் தினமும் எந்த நிறத்தில் டை அணிய வேண்டும் என்பதையே அவரை கேட்டுத்தான் செய்கிறேன்.
நன்றி. நான் இப்ப போகலாமா.
ஒரு நிமிஷம் ஜார்ஜை கேட்டு சொல்கிறேன்


குறிப்பு - இவையிரண்டும் முன்பு எழுதியது

leomohan
11-07-2007, 03:26 PM
அவருடைய குழந்தை வயது படம்

http://www.ahajokes.com/cartoon/baby_osama.jpg


http://www.ahajokes.com/cartoon/baby_osama.jpg

ஷீ-நிசி
11-07-2007, 03:27 PM
தண்டையார்பேட்டையிலேயே தட்டியிருக்கலாம்ல. இன்னைக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதுல.நல்லா கேட்ட* பாரு கேள்வி.... அன்னைக்கு அந்த* ஆள* புடிக்கலாம்னுதான் ஒரு துண்ட* க*வுத்துனேன்.. அன்னைக்கு எங்கிட்ட* எஸ்கேப்பான*வ*ன் தான்.......:icon_blush:

இனியவள்
11-07-2007, 03:30 PM
ஹா ஹா ரசித்தேன் சிரித்தேன் சிரி சிரி என்று சிரித்தேன் நான் சிரிச்சதைப் பார்த்து கண்கள் அழுகையோ அழுகை ஹீ ஹீ

நல்லா இருந்தது மோகன் நன்றி & வாழ்த்துக்கள்

leomohan
11-07-2007, 03:31 PM
நன்றி ஷீ-நிசி. நன்றி இனியவள்.

பென்ஸ்
11-07-2007, 04:16 PM
ஹஹ்ஹா....

ரசித்தேன் மோகன்....

நாற்காலி என்ரு அவரு வரைந்து காட்டியதும் என் நாற்காலி கீழே எட்டி பார்த்தேன்...
அது உங்கள் நாற்காலி கீழேயா வெடித்தது...

leomohan
11-07-2007, 04:20 PM
ஹஹ்ஹா....

ரசித்தேன் மோகன்....

நாற்காலி என்ரு அவரு வரைந்து காட்டியதும் என் நாற்காலி கீழே எட்டி பார்த்தேன்...
அது உங்கள் நாற்காலி கீழேயா வெடித்தது...


ஐயோ அவரோட லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்களா.
கொஞ்சம் ஜாக்கிரதை. ப்ளாட்பார்மல நடக்காம ரோட்ல நடக்கனும், விமான தளத்தில் பார்க்கிங்கில் காரை விடக்கூடாது அப்புறம் முக்கியமா டிரெயின்ல போகும் போது லீவு எடுத்துக்கறது நல்லது

அறிஞர்
11-07-2007, 07:08 PM
மீண்டும் மோகனின் கல கலப்பான பேட்டிகளை படிப்பது.. மகிழ்ச்சியாக உள்ளது.. இன்னும் தொடருங்கள்...

அக்னி
11-07-2007, 07:22 PM
ஒரு திரியில் மூன்று முக்கிய பிரபலங்களின் பேட்டியைத் தந்து,
சிரிக்க வைத்துவிட்டீர்கள்...
அசத்தல் பேட்டிகள் இன்னுமின்னும் தொடரட்டும்...
பாராட்டுக்கள்...

இணைய நண்பன்
11-07-2007, 09:57 PM
அசத்தலான கற்பனை.வாழ்த்துக்கள்

விகடன்
31-07-2007, 05:16 AM
எப்படி லியோ உங்களால மட்டும் இப்படிப்பட்டவர்களுடனெல்லாம் பேசிக்கொள்ள முடிகிறது!!!

leomohan
31-07-2007, 10:29 AM
ஹாஹா நன்றி விராடன்.

அனைவருக்கும் நன்றி.

அன்புரசிகன்
31-07-2007, 10:57 AM
இந்த மாதிரியான நகைச்சுவைப்பெட்டிகள் இன்னும் தாருங்கள். நன்றாக உள்ளது லியா ஐயா

leomohan
31-07-2007, 11:33 AM
நன்றி அன்புரசிகன். கற்பனை வரும்போதெல்லாம் முதல் புகலிடம் மன்றம் தான். :-)

அக்னி
31-07-2007, 11:35 AM
இந்த மாதிரியான நகைச்சுவைப்பெட்டிகள் இன்னும் தாருங்கள். நன்றாக உள்ளது லியா ஐயா

பெட்டின்னு ஏதோ காதில விழுந்ததே...
எனக்கும்...

leomohan
31-07-2007, 12:02 PM
அடடா அக்னிக்கு ஷார்ப் காதுப்பா. பெட்டி இல்லை மேன் பேட்டி. பேட்டியில் பெட்டி வரலாம். ஆனால் பெட்டியில் பேட்டி வராது.

அக்னி
31-07-2007, 12:04 PM
அடடா அக்னிக்கு ஷார்ப் காதுப்பா. பெட்டி இல்லை மேன் பேட்டி. பேட்டியில் பெட்டி வரலாம். ஆனால் பெட்டியில் பேட்டி வராது.

அடடே... நானும் ஏதோ பணப்பெட்டி கொடுக்கிறாங்களோன்னு, வரிசையில் நிற்க ஆயத்தமாகிட்டேன்...
இப்படிக் கவுத்துட்டீங்களே...