PDA

View Full Version : காதல்



இனியவள்
11-07-2007, 02:50 PM
கரங்களை துடுப்பாக்கி
இதயத்தை ஓடமாக்கி
வாழ்க்கை என்னும்
கடலிலே வெற்றி
என்னும் மலரைப்
பறிக்க தாயைக் கண்ட
குழந்தை போல் விரைந்து
வந்தேன்....

ஒரு பிடிச் சோற்றைக் கண்ட
ஏழைக்கு அந்த நாள் திருவிழா
போல் உன்னோடான என் கனவுகள்
கண்களில் ததும்பி விருந்து படைக்கின்றன
என் கண்களுக்கு....

கல்வெட்டில் பதிந்த வாக்கியம்
போல் நீ அன்று சொன்ன
ஹாய் என்ற ஒற்றைச் சொல்
என்னைப் பித்துப் பிடிக்க
வைத்து இதயமே இன்று கல்வெட்டாய்
அதில் தாங்கும் வாக்கியம் அனைத்தும்
நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை .....

இசையாய் என் காதில் விழுந்த
உன் வார்த்தை இயக்க மறுத்து
விட்டது என் செவியை எதிரொலிக்கும்
அனைத்தும் உன் குரலாகவே.....

சுவாசிக்கும் காற்றில் கூட
வாசம் உன்னைத் தீண்டியதால்
காணும் காட்சிகள் அனைத்தும்
உணவில் கூட உன் உருவம்
மென்று திண்டால் உனக்கு
வலிக்குமே என தவிக்கின்றேன்
உண்ணமுடியாமல் உணவை
பசி தீர்க்கின்றாய் உன் விழியால்....

விண்ணைத் தாண்டும் அளவு
கற்பனைகள் உன்னோடு
நீரைப் போன்று கிள்ள கிள்ள
கிள்ள முடியா உன் கன்னம்
பார்க்க பார்க்க திவட்டாத
உன் விழிகள்.....

கற்பனைகளோ ஆயிரம்
கனவுக்குள் கனவாக நீ
என் கண்களுக்குள்
கனவாகவே போய் விடாதே
நீ காணமல் போய் விடுவேன்
நான் .....


(காதலித்துப் பார் கவிதைகள் உன்னை வட்டமிடும்
காற்றுக்கூட தூது போவதாய் நீ உணர்வாய்..

கண்கள் தீண்டியே உன் உயிர்
பிரிவதாய் உணர்வாய்..

அவன் கண்களே உன் உயிரை
மீட்பதாயும் உணர்வாய் :− வைரமுத்துவின் பொன்னான வரிகள்)

ஷீ-நிசி
11-07-2007, 03:00 PM
காதல் கவிதை என்றால் இனியவளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல என்று நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள்! கலக்குங்க!

அரசன்
11-07-2007, 03:04 PM
காதல் கவிதை என்றால் இனியவளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல என்று நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள்! கலக்குங்க!

காதல் கவிதை என்றால் மட்டுமா? இல்லை காதல் என்றால் கூடவா?

வாழ்த்துக்கள்!

பிச்சி
11-07-2007, 03:04 PM
கவிதை அருமையாக இருக்கிறது. காதல் உணர்வுகளை நேரில் கண்டமாதிரி இருக்கிறது

இனியவள்
11-07-2007, 04:23 PM
காதல் கவிதை என்றால் இனியவளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல என்று நினைக்கிறேன்...

வாழ்த்துக்கள்! கலக்குங்க!

நன்றி ஷீ

எனக்கு தேநீர் மட்டும் தான் கலக்க தெரியும் :sport009:

aren
11-07-2007, 04:28 PM
காதல் உங்கள் கைகளில் விளையாடுகிறது
எங்கள் கண்களுக்கு விருந்தாகிறது
எங்கள் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

தொடருங்கள். அருமையான வரிகள்.

நீங்கள் உங்கள் காதல் கவிதைகளை ஒரு தொகுப்பாக சேகரிக்கலாமே. அனைத்தும் பிரசுரிக்கத்தக்கவையே. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
11-07-2007, 06:10 PM
காதல் கவிதை என்றால் மட்டுமா? இல்லை காதல் என்றால் கூடவா?

வாழ்த்துக்கள்!

நன்றி மூர்த்தி

கவிதையோடு காதலும் கவிதையைக் காதலிக்கிறேன் என்று சொல்றன் தப்பா நினைச்சால் நான் பொறுப்பு இல்லையுங்கோ :sport009:

இனியவள்
11-07-2007, 06:11 PM
கவிதை அருமையாக இருக்கிறது. காதல் உணர்வுகளை நேரில் கண்டமாதிரி இருக்கிறது

நன்றி பிச்சி

அக்னி
11-07-2007, 06:22 PM
காதலின் அவஸ்தை...
காதலிக்கும் வரை தொடரும்...
காதல், திருமணத்தில் முடிந்தால், வலிகள் சுகமாகும்...
பிரிந்தால் மாறா ரணமாகும்...

கரும்பாக இனிக்கும் காதல்,
துரும்பாக இளைக்கும் காதலர்,
காரணம், இனிமையாக காட்டும் வரிகள்...

உணவில் கூட உன் உருவம்
மென்று திண்டால் உனக்கு
வலிக்குமே என தவிக்கின்றேன்
உண்ணமுடியாமல் உணவை

புதுமை...

எதிர்பார்ப்புக்கள் கனவுகளாக இருக்கும் காதல்,
திகட்டாது... பிரியாவிட்டால்...

கனவாகவே போய் விடாதே
நீ காணமல் போய் விடுவேன்
நான் .....

பாராட்டுக்கள் இனியவள்...

அமரன்
11-07-2007, 08:39 PM
இனியவளின் கவிதைகளென்றால் காதல் ரசம் கொட்டும் என்பது மன்றமே அறிந்தது. இங்கேயும் அப்படியே..வாழ்த்துகள் இனியவள்..

இனியவள்
11-07-2007, 08:57 PM
இனியவளின் கவிதைகளென்றால் காதல் ரசம் கொட்டும் என்பது மன்றமே அறிந்தது. இங்கேயும் அப்படியே..வாழ்த்துகள் இனியவள்..

நன்றி அமர்

இனியவள்
11-07-2007, 08:58 PM
காதல் உங்கள் கைகளில் விளையாடுகிறது
எங்கள் கண்களுக்கு விருந்தாகிறது
எங்கள் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
தொடருங்கள். அருமையான வரிகள்.
நீங்கள் உங்கள் காதல் கவிதைகளை ஒரு தொகுப்பாக சேகரிக்கலாமே. அனைத்தும் பிரசுரிக்கத்தக்கவையே. பாராட்டுக்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் உங்கள் வாழ்த்துக்கு