PDA

View Full Version : மருத்துவர் ராமதாசுடன் ஒரு கற்பனை பேட்டி - 2



leomohan
11-07-2007, 02:50 PM
லியோ - வணக்கம்

மரு - வணக்கம்

லியோ - தாங்கள் கலைஞரை தயாநிதி மாறனிடமிருந்து காப்பாற்றியதற்காக உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப்போகிறார்களாமே

மரு - நான் போகமாட்டேன்

லியோ - ஏன் ஐயா

மரு - என்னை வெயிலில் உட்கார வைத்துவிடுவார்கள்.

லியோ - ஐயோ. அதுவிடுங்க கூட்டுறவு சங்க தேர்தல்.....

மரு - அதுவா டீலிங் வொர்க் அவுட் ஆகலை ஊத்தி மூடிட்டோம்.

லியோ - ஐயோ இத்தனை ஆங்கில வார்த்தைகளா

மரு - சரிப்பா சரி. சரியாக பங்கீட்டு ஆகாததால் வெளி(out)க்கு வந்துவிட்டோம்.

லியோ - பிஎஸ்என்எல் டென்டரில் ஊழலாமே

மரு - 10,000 கோடி பார்க்கலாம்னு தெரிஞ்சிருந்தா அன்பை அந்த இலாக்காவுக்கே மாத்தியிருப்பேன்

லியோ - நீங்கள் தமிழ்நாட்டில் நட்பான எதிர்கட்சியாக நடப்பீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்களே. அதன் பொருள் என்ன

மரு - அதுவா கண்டபடி திட்டிப்போம். ஆனா திமுகவை விட்டுட்டு போகமாட்டோம்.

லியோ - என்ன பிரச்சனையாக இருந்தாலும் என்கிட்ட பேசுங்க. பத்திரிகையில் பேட்டி கொடுக்காதீங்கன்னு கலைஞர் சொல்லியிருக்காரே

மரு - அவர்கிட்ட பேச எங்க நேரம் இருக்கு. அவர்தான் கவிதை விழா இலக்கிய விழான்னு 5-6 மணி நேரம் ஒரு நாள்ல பிசியா இருக்காரே.

லியோ - ஓய்வெடுக்க பெங்களூர் போயிருக்காரே கலைஞரு .....

மரு - அதை எதிர்த்து ஒரு போராட்டம் வருதே. தமிழ் நாட்ல ஓய்வெடுக்க இடமா இல்லை. அந்த போராட்டத்திற்கு பேரு -- பெங்களூர் Unpleasant Stay போராட்டம்

லியோ - ஐயா நான் எஸ்கேப்.

மரு - தப்பு. நான் தப்பிச்சிக்கறேன். அதான் தமிழ்.

அன்புரசிகன்
11-07-2007, 02:56 PM
சூப்பர்
ச்சீ... நன்றாக இருக்கிறது... அது தான் தமிழ்...
வாழ்த்துக்கள் மோகன்.

அரசன்
11-07-2007, 03:02 PM
எங்கே புடிச்சிங்க இந்த ஐடியாவை. நல்ல காமெடியாக இருக்கு.

leomohan
11-07-2007, 03:55 PM
நன்றி அன்பு ரசிகன், மூர்த்தி.

மலர்
11-07-2007, 03:59 PM
நல்ல கற்பனை..
நன்றாக இருக்கிறது..

ஷீ-நிசி
11-07-2007, 04:06 PM
ஹா ஹா... அருமை... மோகன்ஜி!

விகடன்
31-07-2007, 06:18 AM
மருத்துவர் அவ்வளவு தமிழ் பற்றுள்ளவரா லியோ?
நம்ம தமிழ் மன்றைத்தை பற்றி ஏதாச்சும் சொல்லி வைச்சீங்களா?

lolluvathiyar
31-07-2007, 07:09 AM
இன்னும் மோகன் பட்டியலில் சிக்காமல் இருப்பது யாரோ.
(ஜெயலலிதா இருக்காங்க)

அமரன்
31-07-2007, 08:28 AM
அடடா...இந்த சுவையான திரியை தவற விட்டேனே..மோகன் கலக்கல்..

leomohan
31-07-2007, 11:28 AM
படித்து, மகிழ்ந்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

அக்னி
31-07-2007, 11:45 AM
மருத்துவர் ராமதாஸ் பேட்டி, அசத்தல் லியோமோகன்...
மென்மேலும் எதிர்பார்ப்புக்கள்... நிறைவேற்றுங்கள்...