PDA

View Full Version : என் உணர்வுகள் ஊமையில்லை!



அரசன்
11-07-2007, 01:46 PM
மொழி தெரிந்தும்
மொழிப்பெயர்க்க முடியவில்லை
என் உணர்வுகளை!

உன்னை மட்டும்
நெஞ்சில் சுமக்கின்றேன்
ஒரு சுமைதாங்கிப் போல!

அன்பு வைத்ததென்னவோ
அறவழியில் தான்.
இருந்தும் தெரியவில்லை − அது
அறவழி வன்முறை என்று!

என்
உணர்வுகளின் உச்சரிப்பு
நீ உணரும் வரையில்
உணரப்படாதது!

என்
உணர்வுகள் ஊமையில்லை.
ஊமையானது
என் உள்ளம் தான்!

அன்புரசிகன்
11-07-2007, 01:52 PM
கண்களினால் பேசப்பட்டுபரிமாறப்படும் காதலின் ஸ்பரிசம் மொழிகள் அத்தனையும் கடந்தவை.
உணரத்தான் முடியும்.
ஊவமானம் காட்டமுடியாது...

நன்றாக உள்ளது மூர்த்தி

அரசன்
11-07-2007, 01:53 PM
கண்களினால் பேசப்பட்டுபரிமாறப்படும் காதலின் ஸ்பரிசம் மொழிகள் அத்தனையும் கடந்தவை.
உணரத்தான் முடியும்.
ஊவமானம் காட்டமுடியாது...

நன்றாக உள்ளது மூர்த்தி


மகிழ்ச்சியுடன் நன்றியும் அன்புக்கு!

leomohan
11-07-2007, 01:58 PM
அறவழி வன்முறை - இம். சிந்திக்க வைக்கிறது. மீண்டும் ஒரு அருமையான கவிதை மூர்த்தி.

அரசன்
11-07-2007, 01:59 PM
அறவழி வன்முறை - இம். சிந்திக்க வைக்கிறது. மீண்டும் ஒரு அருமையான கவிதை மூர்த்தி.

நன்றி மோகன் அண்ணா!

பிச்சி
11-07-2007, 02:28 PM
உணர்வுகளின் விளையாட்டு அருமையாக இருந்தது. கவிதை சூப்பர்

அரசன்
11-07-2007, 02:33 PM
உணர்வுகளின் விளையாட்டு அருமையாக இருந்தது. கவிதை சூப்பர்

நன்றி பி ச் சி.

இனியவள்
11-07-2007, 03:14 PM
உன் சுமைகளை இறக்கி
விடாதே அது சுகமான
சுமைகள் அல்லவா

உணர்வுகளை மொழி
பெயர்க்க முனையாதே
உணர்வுகள் மொழியாகமல்
உணர்வாகவே இருப்பது
அதற்கு சிறப்பு..

அறவழியில் அன்பு வைத்து
மென்மையாய் என்னுள்
நுழைந்து செய்கின்றாய் காதல்
வன்முறை....

என் உணர்வை உன்னுள்
புகுத்தி உன் உணர்வை
என்னுள் செலுத்துகின்றேன்...

என் மெளனமே என்
உணர்வை உனக்கு
சொல்கிறதே அதை
புரிந்து உன் மெளனத்தை
நீ கலைக்க மாட்டாயா அன்பே

இனியவள்
11-07-2007, 03:16 PM
மூர்த்தி கவிதை அருமை வாழ்த்துக்கள்

அரசன்
11-07-2007, 03:19 PM
உன் சுமைகளை இறக்கி
விடாதே அது சுகமான
சுமைகள் அல்லவா

உணர்வுகளை மொழி
பெயர்க்க முனையாதே
உணர்வுகள் மொழியாகமல்
உணர்வாகவே இருப்பது
அதற்கு சிறப்பு..

அறவழியில் அன்பு வைத்து
மென்மையாய் என்னுள்
நுழந்து செய்கின்றாய் காதல்
வன்முறை....

என் உணர்வை உன்னுள்
புகுத்தி உன் உணர்வை
என்னுள் செலுத்துகின்றேன்...

என் மெளனமே உன்
உணர்வை உனக்கு
சொல்கிறதே அதை
புரிந்து உன் மெளனத்தை
நீ கலைக்க மாட்டாயா அன்பே


உங்க கவிதையில் என்னை கலங்கடிக்கிறீங்க. நன்றி இனி!

அமரன்
11-07-2007, 03:33 PM
மூர்த்தி கவிதை சிறப்பானது.....
மொழி தெரிந்தும் மொழிபெயர்க்க முடியாதது உணர்வு...
நல்லாக இருக்கு. உணர்வுகள் பேசும் காதலில்/அன்பில் மொழிபெயர்க்கப்பட வேண்டியதில்லை.
உள்ளம் திறந்தாலே போதுமானது. அந்த உள்ளம் ஊமையானதால் ஏற்பட்ட விளைவுகளை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
அறவழி வன்முறை கவர்ந்தது....
பாராட்டுகள்

அக்னி
11-07-2007, 06:52 PM
உணர்வுகள்...
ஆயிரம் மொழி பேசும், கேட்கும்... மௌனமாகவே...

உன்னை சுமக்கின்றேன்
சுமைதாங்கியாய்...
உன்னால் வேதனையை
ஏற்கின்றேன்,
இடிதாங்கியாய்...

பாராட்டுக்கள் மூர்த்தி...
உணர்வுக்கு...

lolluvathiyar
12-07-2007, 10:16 AM
உன்னை மட்டும்
நெஞ்சில் சுமக்கின்றேன்
ஒரு சுமைதாங்கிப் போல!

ம*ண*ம் என்ப*து விலாச*மான*து, அதில் நிரைய* பேருக்கு இட*ம் உண்டு, அப்ப*டி நிரைய* பேரை சுமந்து விட்டால் சுமை தெரியாதாமே

ஷீ-நிசி
12-07-2007, 10:46 AM
சொல்லிவிடு காதலை...

ஏற்றுகொண்டால் அது அவளது அதிர்ஷ்டம்....

இல்லையென்றால் உன் அதிர்ஷட தேவதை இன்னும் உனக்காய் எங்கோ காத்துக்கொண்டிருப்பாள்..