PDA

View Full Version : எங்களை புதைக்காதீர்கள்!

அரசன்
11-07-2007, 01:32 PM
எங்களை புதைக்காதீர்கள்!
இரவோ, பகலோ
இதயமற்ற
சில மனித மிருகங்கள்
எங்களை தோண்டியெடுத்து,
பாலியல் பலாத்காரம்
செய்யக்கூடும்.
தயவுசெய்து
எங்கள் பிணங்களுடன்
எங்கள் உணர்வுகளையும்
சேர்த்து எரித்து விடுங்கள்!

அன்புரசிகன்
11-07-2007, 01:36 PM
போனது மானம்
இழந்தது கற்பு
இனியும் ஏது
இழக்க இங்கு
நிறைவேற்றவேண்டும்
இறுதி ஆசையை...

பாராட்டுக்கள் மூர்த்தி...

leomohan
11-07-2007, 01:40 PM
நெஞ்சை நெருடியது மூர்த்தி. கண்ணீர் கண்களில் தேங்கி நிற்கின்றன.

விகடன்
11-07-2007, 01:54 PM
தமிழினத்திற்கு குறிப்பாக யுவதிகளுக்கு வேண்டாம் வேண்டாமென்று சொன்ன்னாலும், அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் சலுகை இது ஒன்றுதான்.

ஓவியன்
11-07-2007, 02:13 PM
மூர்த்தி!

கவிதையை நேரடியாக அணுகும் போது, மானத்தை காலத்தால் தொலைத்த பெண்ணின் அலறலாகப் படுகிறது.

ஆனால் இது நேரடிப் பொருள் தரும் ஒரு கவிதையாக எனக்குப் படவில்லை மூர்த்தி!.

பெண்ணாகவும் கற்பாகவும் வேறு எதனையோ உருவகப் படுத்தியுள்ளீர்கள் போல் இருக்கிறது. அது என்ன என்ன என்று சிந்தித்து சிந்தித்துப் பார்தேன் பிடிபடவில்லை.

நான் நினைத்தது சரியெனின் எதனை உருவகப் படுத்தி இருக்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

விகடன்
11-07-2007, 02:15 PM

முடிவெடுத்துவிட்டு விளக்கம் கேற்கும் முதலாவது ஆள் நீர்தானப்பா:aktion033:

அரசன்
11-07-2007, 02:31 PM
மூர்த்தி!

கவிதையை நேரடியாக அணுகும் போது, மானத்தை காலத்தால் தொலைத்த பெண்ணின் அலறலாகப் படுகிறது.

ஆனால் இது நேரடிப் பொருள் தரும் ஒரு கவிதையாக எனக்குப் படவில்லை மூர்த்தி!.

பெண்ணாகவும் கற்பாகவும் வேறு எதனையோ உருவகப் படுத்தியுள்ளீர்கள் போல் இருக்கிறது. அது என்ன என்ன என்று சிந்தித்து சிந்தித்துப் பார்தேன் பிடிபடவில்லை.

நான் நினைத்தது சரியெனின் எதனை உருவகப் படுத்தி இருக்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

வேறு எதனையும் உருவகப்படுத்தவில்லை. நேரடி பொருள் தரும் கவிதைதான் இது. அதாவது, சமூகத்தில் நடக்கின்ற மிக கொடுமையான இது போன்று அருவருக்க தக்க வகையிலும், சிந்தனைக்கு அப்பாற்ப்ப*ட்ட செயலிலும் இது போன்ற கொடுமைகள் நடக்கின்றன. இக்கொடுமைகளைக் காணுகின்ற ஒரு பெண் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால் பிணங்களைக் கூட எரித்து விடுங்கள் என்பாள். இந்த பொருளில் ஒரு பெண் கூறுவது போல் எழுதியிருக்கிறேன்.

ஓவியன்
11-07-2007, 02:34 PM

நன்றி மூர்த்தி!

ஆதவனின் உருவகக் கவிதைகளைப் பார்த்துப் பார்த்து அப்படியே எண்ணி விட்டேன்!.

உண்மையில் கவிதை அருமை!

இறுதி வரிகள் கலங்க வைத்து விட்டன!.

பாராட்டுக்கள் மூர்த்தி!. :aktion033:

அமரன்
11-07-2007, 04:10 PM
கைகொடுங்க மூர்த்தி...பலாத்"காரம்" பற்றிய கவிதை. பிணத்தைக்கூட விடமாட்டார்கள் என்பது நெஞ்சை வருடுகின்றது...உண்மை. கலங்கடிக்கும் உண்மையைக்கூறி கலங்கவைத்துவிட்டீர்கள்.

இனியவள்
11-07-2007, 04:10 PM
கவிதை அருமை மூர்த்தி வாழ்த்துக்கள்