PDA

View Full Version : என்ன(அ)வளோ?!



சுகந்தப்ரீதன்
11-07-2007, 08:22 AM
அமைதியாய் இருந்தேன்
ஊமையா என்றாள்!
வாயை திறந்தேன்
வழியுது என்றாள்!

அழகாய் உடுத்தினேன்
ஆடாதே என்றாள்!
அடக்கி வாசித்தேன்
அவ்வளவுதானா என்றாள்!

விலகிச் சென்றேன்
புத்தனா என்றாள்!
நெருங்கி சென்றேன்
பித்தனா என்றாள்!

காதலை சொன்னேன்
முடியாது என்றாள்!
திரும்பி நடந்தேன்
தேவதாஸ் என்றாள்!

பிடித்திருக்கிறது என்றேன்
பைத்தியமா என்றாள்!
இல்லை என்றேன்
இன்னுமா என்கிறாள்!

என்னவள்......
என்ன(அ)வளோ?!

ஓவியன்
13-07-2007, 12:31 AM
கிட்டப் போனால் எட்டிப் போவதும், எட்டப் போனால் கிட்டப் போக ஏங்குவதும் தானே காதல்!.

வாழ்த்துக்கள் சுகந்தா!

இன்னும் நிறைய எழுதுங்கள்!.

aren
13-07-2007, 02:20 AM
இதுதான் காதல் நண்பரே. அவர்கள் தானாக எதுவும் கொடுக்கமாட்டார்கள். அருகில் சென்றால் விலகி ஓடுவார்கள். ஆனால் அதுதான் காதல். காத்திருந்தால் எல்லாம் தானாகவே கணியும். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

தமிழ்
13-07-2007, 07:50 AM
அருமையான விளக்கங்கள். கவிதையைப் படித்த மாதிரி இல்லை,
என் மன் உணர்வுகளை பிடித்த மாதிரி இருந்தது...

அமரன்
13-07-2007, 11:21 AM
பிடித்திருக்கிறது என்றேன்
பைத்தியமா என்றாள்!
இல்லை என்றேன்
இன்னுமா என்கிறாள்!

சிலேடையாகப் பதில் சொல்கிறாளோ....
கெஞ்சினால் மிஞ்சுவார்
மிஞ்சினால் கெஞ்சுவார்


பாராட்டுக்கள் சுகந்தா...

ஷீ-நிசி
13-07-2007, 11:23 AM
ஆஹா! பிரமாதமா இருக்குது கவிதை...

சின்ன சின்ன கற்களில் ஒரு அழகிய கோபுரம்...

வாழ்த்துக்கள் தொடருங்கள் ப்ரீதன்......

அக்னி
13-07-2007, 11:38 AM
ஒளிர்ந்தால் கண்களுக்கு கூச்சம்...
ஒளிராவிட்டால் இருள்...
காதலின் ஊடலில், அசைவுகள் யாவுமே,
ரசிக்கப்படுகின்றன, கவனிக்கப்படுகின்றன, சீண்டப்படுகின்றன...
புரிந்தாலும், புரியாவிட்டாலும்..,
செய்வதறியா திகைப்பும் இன்பமே... காதலில்.., காதலரிடையில்...

கொஞ்சும் கவிதைக்குப் பாராட்டுக்கள்...

சுகந்தப்ரீதன்
19-07-2007, 04:22 AM
மன்னிக்கவும்....
உங்களுக்கு உடனுக்குடன் என்னால் நன்றி சொல்லமுடியவில்லை!
வாழ்த்திய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை எனக்கில்லை!

சிவா.ஜி
19-07-2007, 05:23 AM
ஒவ்வொன்றும் சுகமான வரிகள். காதலில் மட்டும்தான் இந்த கண்ணாமூச்சி. இல்லையென்றால் உண்டு என்பதும்,உண்டு என்றால் இல்லையென்பதும்
காதலில் ஒரு விளையாட்டு.அந்த விளையாட்டை விவரித்த விதம் அபாரம்.
நல்ல படைக்கும் திறன் இருக்கிறது உங்களிடம். வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் சுகந்தப்ப்ரீதன்.

குந்தவை
19-07-2007, 02:22 PM
உண்மையிலேயே அருமையான வரிகள். சுக*மான* க*விதை.
கவிதையும் அதன் பின்னூட்டங்களும் பெண்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களின் குரல்கள். பரவாயில்லை.
வாழ்த்துக்கள் சகோதரனே!

ஓவியன்
19-07-2007, 02:27 PM
கவிதையும் அதன் பின்னூட்டங்களும் பெண்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களின் குரல்கள்!
ஓட்டு மொத்தமாக அப்படிச் சொல்லி விட முடியாது குந்தவை!
ஒவ்வொருவரது கருத்துக்களும் அந்தந்த சூழலுக்கு ஏற்பத் தானே வரும். இந்தக் கவிதைக்கு அந்தக் கருத்துக்கள்...........!

அவ்வளவுதான்!

கவிதைக்குப் பொய் அழகு தானே!. :grin:

குந்தவை
19-07-2007, 02:34 PM
அப்படியா? மன்னித்துவிடுங்கள் ஓவியன் அண்ணா! எனக்கு சற்று அனுபவம் குறைவு!

ஓவியன்
19-07-2007, 02:39 PM
மன்னிப்பெல்லாம் எதற்கு இங்கே இவ்வாறான கருத்துக்களைப் பரிமாறினால் தானே இப்படியான திரிகள் மேலும் அழகு பெறும்!.

உங்களுடைய வித்தியாசமான பார்வையை இங்கே தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சுகந்தப்ரீதன்
23-07-2007, 12:43 PM
மன்னிப்பெல்லாம் எதற்கு இங்கே இவ்வாறான கருத்துக்களைப் பரிமாறினால் தானே இப்படியான திரிகள் மேலும் அழகு பெறும்!.

உங்களுடைய வித்தியாசமான பார்வையை இங்கே தொடர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஒவியருக்கும் குந்தவைக்கும் எனது ந்ன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!