PDA

View Full Version : இட்லி கணக்கு

மதி
11-07-2007, 02:23 AM
எத்தனை தான் சாப்பிட்டாலும்
மூணு தானேடா வச்சேன்
வீட்டு நிதியமைச்சருக்குத்
தெரியவில்லை
இட்லி கணக்கு.

aren
11-07-2007, 03:07 AM
அதுக்குப் பெயர்தான் பாசம் மதி. அவர்களுக்கு உங்களைவிட கணக்கு நன்றாகவே தெரியும். சில சமயங்களில் தெரியாததுபோல் நடிப்பார்கள். அதுதான் பாசம்.

நன்றாக உள்ளது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
11-07-2007, 03:27 AM
அட! நல்லாருக்கே மதி.. அருமை...

பாசம் கண்ணையும் மறைக்கிறது.. கணக்கையும் மறைக்கிறது....

மதி
11-07-2007, 03:52 AM
அதுக்குப் பெயர்தான் பாசம் மதி. அவர்களுக்கு உங்களைவிட கணக்கு நன்றாகவே தெரியும். சில சமயங்களில் தெரியாததுபோல் நடிப்பார்கள். அதுதான் பாசம்.

நன்றாக உள்ளது. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
கணக்கு தெரிவதால் தானே நிதியமைச்சராய் உள்ளார்கள்..

மதி
11-07-2007, 03:55 AM
அட! நல்லாருக்கே மதி.. அருமை...

பாசம் கண்ணையும் மறைக்கிறது.. கணக்கையும் மறைக்கிறது....

நன்றி ஷீ−நிசி..
இதனாலே கண்மண் தெரியாம நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.

ஓவியன்
11-07-2007, 03:59 AM
எத்தனை தான் சாப்பிட்டாலும்
மூணு தானேடா வச்சேன்
வீட்டு நிதியமைச்சருக்குத்
தெரியவில்லை
இட்லி கணக்கு.

கணக்குத் தெரிவதில்லை தான்
அவர்களுக்கு மதி!
முதலில் பத்து மாதம்!
பின்னர் எத்தனை வருடம்!
மடியிலும் தோளிலும்
தாலாட்டி சீராட்டி!
எமை வளர்த்து ஆளாக்கி!
கணக்குப் பார்த்தால்
எம்மால் கணக்கைச்
சீராக முடித்து வைக்க
முடியாது இந்த
வாழ் நாளில்!

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மதி!.

உங்களிடமிருந்து இன்னும் நிறைய
எதிர்பார்க்கும்

ஓவியன்!.

அன்புரசிகன்
11-07-2007, 04:23 AM
பாசக்கணக்கு
வீட்டு நிதி நிர்வாகம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதி
இப்படித்தான் இருக்குமோ???!!!
கொடுத்துவைச்சவங்க...

இதயம்
11-07-2007, 04:33 AM
பாசக்கணக்குகள் எப்போதும் உண்மையான முடிவை கொடுத்ததில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல, எடை கூட சரியாக காட்டுவதில்லை. உண்டு பெருத்த தன் மகனை கண்டால் "ஏண்டா ராஜா... இப்படி துரும்பா இளைச்சி போயிட்டே..?" என்று கேட்கிறாள்...!! அவள் கண் பார்வையில் வைத்து, தான் அவனை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வேறு யாரும் பார்த்துக்கொள்ள முடியாது, அது அவனால் கூட முடியாது என்பது ஒரு தாயின் கணிப்பாக இருக்கிறது. அவனை உபசரிப்பதை தன் கடமையாக, உரிமையாக செய்கிறாள். அதனால், அதைச் செய்வதில் அவளுக்கு அலுப்பு, சலிப்பு ஏற்படுவதில்லை. அது தான் தாய்மையின் மகத்துவம். அந்த கடமைக்கும், உரிமைக்கும் மனைவி என்ற பெயரில் ஒரு பங்கம் வரும்போது தான் மாமியார், மருமகள் பிரச்சினை தொடங்குகிறது.

தாய்மையின் மகத்துவத்தை தெரிவித்த மதியின் அற்புதமான கவிதைக்கு என் பாராட்டுக்கள்.!!

ஓவியன்
11-07-2007, 04:35 AM

மதியின் கவி முத்தென்றால அதற்கு உங்கள் விளக்கம் வைரம் இதயம்!

மனதாரப் பாராட்டுகிறேன் - அருமையா இருக்கு!.

மதி
11-07-2007, 05:27 AM
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மதி!.

உங்களிடமிருந்து இன்னும் நிறைய
எதிர்பார்க்கும்

ஓவியன்!.
இந்த மாதிரி விஷயங்களில் அவர்களுக்கு எப்போதும் கணக்கு தெரிவதில்லை.
நன்றி ஓவியன்..

மதி
11-07-2007, 05:30 AM
பாசக்கணக்குகள் எப்போதும் உண்மையான முடிவை கொடுத்ததில்லை. எண்ணிக்கையில் மட்டுமல்ல, எடை கூட சரியாக காட்டுவதில்லை. உண்டு பெருத்த தன் மகனை கண்டால் "ஏண்டா ராஜா... இப்படி துரும்பா இளைச்சி போயிட்டே..?" என்று கேட்கிறாள்...!! அவள் கண் பார்வையில் வைத்து, தான் அவனை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வேறு யாரும் பார்த்துக்கொள்ள முடியாது, அது அவனால் கூட முடியாது என்பது ஒரு தாயின் கணிப்பாக இருக்கிறது. அவனை உபசரிப்பதை தன் கடமையாக, உரிமையாக செய்கிறாள். அதனால், அதைச் செய்வதில் அவளுக்கு அலுப்பு, சலிப்பு ஏற்படுவதில்லை. அது தான் தாய்மையின் மகத்துவம். அந்த கடமைக்கும், உரிமைக்கும் மனைவி என்ற பெயரில் ஒரு பங்கம் வரும்போது தான் மாமியார், மருமகள் பிரச்சினை தொடங்குகிறது.

தாய்மையின் மகத்துவத்தை தெரிவித்த மதியின் அற்புதமான கவிதைக்கு என் பாராட்டுக்கள்.!!
மிக்க* ந*ன்றி இத*ய*ம்..
தாய்மையின் தூய்மையை நன்கு எடுத்திய*ம்பியுள்ளீர்க*ள்.!

aren
11-07-2007, 05:35 AM
இந்தக் கவிதை தாயின் பாசத்தை மட்டும் சொல்லவில்லை, தாரத்தின் பாசத்தையும் அழகாக சொல்கிறது.

என் மனைவிக்கு நான் வெளியில் சாப்பிட்டுவிட்டு வந்தாலும் வீட்டில் ஒரு வாய் சாப்பிடவில்லையென்றால் கோபம் வந்துவிடும். அதை நான் கோபமாக நினைக்கவில்லை, என் மேல் இருக்கும் பாசமாகவே நான் நினைக்கிறேன்.

ஓவியன்
11-07-2007, 05:44 AM

கொடுத்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா!

வாழ்த்துக்கள்!.

aren
11-07-2007, 05:51 AM
கொடுத்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா!

வாழ்த்துக்கள்!.

ச*த்த*மாக* சொல்லாதீர்க*ள். என் ம*னைவியின் காதில் விழுந்துவிடப்போகிற*து.

ஓவியன்
11-07-2007, 06:02 AM
ச*த்த*மாக* சொல்லாதீர்க*ள். என் ம*னைவியின் காதில் விழுந்துவிடப்போகிற*து.

காதில் விழுந்தால் உங்களைக் கணக்கு பண்ணி விடுவாரோ?:sport-smiley-018:

aren
11-07-2007, 06:05 AM
காதில் விழுந்தால் உங்களைக் கணக்கு பண்ணி விடுவாரோ?:sport-smiley-018:

சட்னிதான்.

இதயம்
11-07-2007, 06:10 AM
சட்னிதான்.

தாய்மையின் அன்பை பற்றி விவாதிக்கும் இந்த திரியில் மனைவியின் (காதல்) தீவிரவாதம் பற்றி விவாதிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!! :nature-smiley-008:

பிச்சி
11-07-2007, 06:10 AM
ரொம்ப நேரம் கழித்துதான் எனக்குப் புரிந்தது. கவிதை சூப்பர் அண்ணா. நீங்க கவிதை எழுதுவதே எனக்கு இப்போதான் தெரியும்

மதி
11-07-2007, 06:13 AM
ரொம்ப நேரம் கழித்துதான் எனக்குப் புரிந்தது. கவிதை சூப்பர் அண்ணா. நீங்க கவிதை எழுதுவதே எனக்கு இப்போதான் தெரியும்

நன்றி பிச்சி... எனக்கே அப்பப்போ தான் தெரியும்...:sport-smiley-018:

aren
11-07-2007, 06:17 AM
தாய்மையின் அன்பை பற்றி விவாதிக்கும் இந்த திரியில் மனைவியின் (காதல்) தீவிரவாதம் பற்றி விவாதிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!! :nature-smiley-008:

ம*ன்னிச்சுக்கோப்பா!! த*ப்புதான்.

பென்ஸ்
11-07-2007, 06:32 AM
நன்றி ஷீ−நிசி..
இதனாலே கண்மண் தெரியாம நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.

கவிதை சூப்பர்டா...
சொல்லவந்ததை "நச்" சுன்னு சொல்லிட்டே....

ஆனால், மதி அந்த அளவு சாப்பிடுற மாதிரி தெரியலையே....

ஓவியன்
11-07-2007, 06:38 AM
சட்னிதான்.

ஹீ!

இதுக்காகவாவது வெகு சீக்கிரத்திலே கல்யாணம் பண்ணிக்கணும் போல கிடக்கு!.:D

மதி
11-07-2007, 06:38 AM
கவிதை சூப்பர்டா...
சொல்லவந்ததை "நச்" சுன்னு சொல்லிட்டே....

ஆனால், மதி அந்த அளவு சாப்பிடுற மாதிரி தெரியலையே....
பென்ஸ் பாராட்டா....வானில் மிதக்கிறேன் நான்.
நான் சாப்பிடும் போதெல்லாம் நீங்க பேச்சில கவனமா இருந்திருப்பீங்க போல.... :food-smiley-008:

ஓவியன்
11-07-2007, 06:41 AM
பென்ஸ் பாராட்டா....வானில் மிதக்கிறேன் நான்.
நான் சாப்பிடும் போதெல்லாம் நீங்க பேச்சில கவனமா இருந்திருப்பீங்க போல.... :food-smiley-008:

ஹீ!

இனி நீங்களும் கவிதையா எழுதிக் குவியுங்க......

அப்படியே கவிச்சமர் பக்கமும் அடிக்கடி வாங்க....

அப்படினா பென்ஸ் அண்ணா அடிக்கடி வானத்திலே மிதக்க வைப்பார்.

மனோஜ்
11-07-2007, 07:19 AM
வாழ்த்துக்கள் மதி அவர்களே அருமை கவிக்கு
கணக்கு கணக்காதான் இருக்கும் பாசத்தின் முன்

பென்ஸ்
11-07-2007, 07:29 AM
ஹீ!

இனி நீங்களும் கவிதையா எழுதிக் குவியுங்க......

அப்படியே கவிச்சமர் பக்கமும் அடிக்கடி வாங்க....

அப்படினா பென்ஸ் அண்ணா அடிக்கடி வானத்திலே மிதக்க வைப்பார்.

ஓவியன்....

மதி காற்றில் பறக்க கவிதை எழுத வேண்டியது அவசியம் என்று இல்லை...

நல்ல காற்று அடித்தாலே போதும்... :music-smiley-019: :music-smiley-019: :icon_tongue: :icon_tongue:

அமரன்
11-07-2007, 07:36 AM
தாய்மையின் பாசத்தை அழகாகச் சொன்ன கவிதை..வாசிக்கும்போதே மனைவி கூட இப்படித்தான் இருப்பார் என நினைத்தேன்...தாய்,மனைவி மட்டுமல்ல பாட்டியும் அப்படித்தான் என்பதை எனது அனுபவத்தில் சொல்வேன். கலக்கல் பாசக் கவிதை அண்ணா. பாராட்டுகள்...
*********************************************************************************************
ஆமா காத்தடிச்சா நீங்க பறந்திடுவீங்களாமே...இத்திரியில் எங்கோ வாசித்த ஞாபகம்.

ஓவியன்
11-07-2007, 07:49 AM
ஓவியன்....

மதி காற்றில் பறக்க கவிதை எழுத வேண்டியது அவசியம் என்று இல்லை...

நல்ல காற்று அடித்தாலே போதும்... :music-smiley-019: :music-smiley-019: :icon_tongue: :icon_tongue:

இருக்கலாம்!, அதற்காக அவர் ஒல்லி என்றாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன்!.

எவ்வளவு குண்டான பலூன் எல்லாம் காற்றிலே பறக்குது!.:D

மதி
11-07-2007, 07:57 AM
ஓவியன்....

மதி காற்றில் பறக்க கவிதை எழுத வேண்டியது அவசியம் என்று இல்லை...

நல்ல காற்று அடித்தாலே போதும்... :music-smiley-019: :music-smiley-019: :icon_tongue: :icon_tongue:
பென்ஸ்..
என்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சுல..அதான்..

ஆனாலும் என்னை ஒல்லி என்று கூப்பிடும் போது எவ்வளவு நன்றாக இருக்குது.. என் நண்பர்களை பாருங்க... பெங்களூருக்கு வந்ததும் 20கி ஏறிவிட்டேனாம்.. குண்டு என்கிறார்கள்.நீங்களாவது அவங்களுக்கு எடுத்து சொல்லுங்க..:ohmy: :ohmy:

மதி
11-07-2007, 07:58 AM
தாய்மையின் பாசத்தை அழகாகச் சொன்ன கவிதை..வாசிக்கும்போதே மனைவி கூட இப்படித்தான் இருப்பார் என நினைத்தேன்...தாய்,மனைவி மட்டுமல்ல பாட்டியும் அப்படித்தான் என்பதை எனது அனுபவத்தில் சொல்வேன். கலக்கல் பாசக் கவிதை அண்ணா. பாராட்டுகள்...
*********************************************************************************************
ஆமா காத்தடிச்சா நீங்க பறந்திடுவீங்களாமே...இத்திரியில் எங்கோ வாசித்த ஞாபகம்.
நன்றி அமரன்...
காத்து மட்டுமில்லை..யார் அடிக்கறதா இருந்தாலும் நான் பறந்துடுவேன்..அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன்... :ohmy: :aktion033:

அமரன்
11-07-2007, 08:02 AM
காத்து மட்டுமில்லை..யார் அடிக்கறதா இருந்தாலும் நான் பறந்துடுவேன்..அந்த இடத்திலேயே இருக்க மாட்டேன்... :ohmy: :aktion033:

உங்களை எனக்கு ரொம்......பப் பிடிச்சிருக்கு..

ஓவியன்
11-07-2007, 08:07 AM
பென்ஸ்..
என்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சுல..அதான்..

ஆனாலும் என்னை ஒல்லி என்று கூப்பிடும் போது எவ்வளவு நன்றாக இருக்குது.. என் நண்பர்களை பாருங்க... பெங்களூருக்கு வந்ததும் 20கி ஏறிவிட்டேனாம்.. குண்டு என்கிறார்கள்.நீங்களாவது அவங்களுக்கு எடுத்து சொல்லுங்க..:ohmy: :ohmy:

உங்க நண்பர்(கள்) ரொம்ப வெயிட்டான ஆளுங்க போல!.:D

மதி
11-07-2007, 08:15 AM
உங்க நண்பர்(கள்) ரொம்ப வெயிட்டான ஆளுங்க போல!.:D
:icon_nono: :icon_nono: :nature-smiley-003:

namsec
11-07-2007, 08:18 AM
வீட்டு நிதியமைச்சருக்கு தெரியும் சரியான கணக்கு ஆனால் அவர்கள் வெளியில் சொல்லுவதில்லை

அவர்கள் பட்ஜெட்டில் விழாது துண்டு

இளசு
11-07-2007, 05:08 PM
மிக எளிய வரிகளில் மிக அழகாக பாசக்கணக்கைச் சொல்லிய
மதியின் இக்குறுங்கவிதை.. ஓர் ஆழ்கவிதை!

வெகுவாய் ரசித்தேன் மதி.. பாராட்டுகள் கவி(ஞர்)மதிக்கு!

அக்னி
11-07-2007, 05:38 PM
தாய்மையின் பொய்மை..,
சேய்மைக்குப் பசுமை...
தாய்மைக்குப் பெருமை..,
சேய்மையின் கடமை...

அருமைக்கவிகளுக்குப் பாராட்டுக்கள்...

மதி
12-07-2007, 03:53 AM
மிக எளிய வரிகளில் மிக அழகாக பாசக்கணக்கைச் சொல்லிய
மதியின் இக்குறுங்கவிதை.. ஓர் ஆழ்கவிதை!

வெகுவாய் ரசித்தேன் மதி.. பாராட்டுகள் கவி(ஞர்)மதிக்கு!
நன்றி இளசு...

தாய்மையின் பொய்மை..,
சேய்மைக்குப் பசுமை...
தாய்மைக்குப் பெருமை..,
சேய்மையின் கடமை...

அருமைக்கவிகளுக்குப் பாராட்டுக்கள்...
நன்றி அக்னி...!

அன்புரசிகன்
12-07-2007, 04:16 AM
மதி அண்ணா... :D
லொட்டா இட்டலி போடுங்க...
குட்டா வெயிட் போடுங்க...

ஓவியன்
12-07-2007, 11:13 PM
மதி அண்ணா... :D
லொட்டா இட்டலி போடுங்க...
குட்டா வெயிட் போடுங்க...

என்ன வர வர நீரும் பிரதீப் அண்ணா மாதிரி புரியாத பாசைகளைப் பாவிக்கிறீர்?:D