PDA

View Full Version : உன்னை ஏன் காதலித்தேன்?



lenram80
10-07-2007, 10:43 PM
காதல் எல்லாம் கனவுதான் என்றவனை
உன் அடாவடி சிரிப்பால் அசைத்துவிட்டு
உன் விடாப்பிடி அழகால் உசிப்பிவிட்டு
இதயத்தில் இடிமழை பொழிந்து எழுப்பிவிட்டவள் நீ!

தூறலுக்கே தும்முபவன் நான்!
தென்றலுக்கே தேம்புபவன் நான்!
சூறாவளி சுற்றும் சுறா விழி கொண்டு என்னை
சுற்றி வளைத்தால் என்ன செய்வேன்?

என்னை கண்டிக்க இடிமழையும்
என்னை தண்டிக்க மௌன மழையும்
என்னை வசந்தப்படுத்த வானவில் மழையும்
என்னை உன் வசப்படுத்த சந்தோஷ சாரல் மழையும்
இப்படி அடை பொழியும் மேகமாக நீயானதால்
உன்னால் நனையும் நதியாக நான் ஆனேனோ?

உன் ஈரப்பசை முத்தத்துக்கும்
உன் கொலுசொலி சத்தத்துக்கும்
உன் கலப்படமற்ற காதல் சுத்ததிற்கும்
உன்னால் என்னுள் மூளும் யுத்ததிற்கும்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு
நித்தம் ஊறும் புத்தம் புது ரத்தத்திற்கும் - காரணம் நீ என்பதால்
என் காயமெல்லாம் காதல் காயமாக ஆனதோ?

குறைகளின் மாற்று உருவமாக நான் இருந்தாலும்
என் நிறைகளாலேயே அந்த குறைகளை நிரப்பி...
பட்ட கிளை கொண்டதால் மட்ட மரமாய் என்னை எல்லோரும் பார்க்க
என் பிற கிளைகளில் பூத்த பூக்களோடு என்னை
மற்ற மரங்களிலிருந்து ஒரு மாறுபட்டதாய் பார்த்தவள் நீ என்பதால்
உன் கிட்டபார்வை பட்டதால், என் பட்ட கிளை கூட பச்சையானதோ?

என்னை பாதித்த பெண்களை எல்லாம் நான் காதலிக்க நினைத்ததில்லை!
உன்னை காதலிக்கும் முன்வரை நான் சாதித்ததாய் நினைத்ததில்லை!

உன்னை காதலிக்கும் பெருமை எனக்கே!
என்னை உன்னுள் மூழ்கடிக்கும் உரிமை உனக்கே!
உன் கரம் பற்றும் பெருமை எனக்கே!
என் கரம் பற்றும் உரிமை உனக்கே!

பிச்சி
11-07-2007, 06:18 AM
கவிதை ரொம்ப மென்மையா இருக்கிறது.

lolluvathiyar
11-07-2007, 08:38 AM
காதல் வெற்றி ஆனின் பெருமை , பெணிடம் அளிக்க பட்ட* உரிமை
இதை நிலை நாட்ட எத்தனை வரிகள், கவிதை உரிமை மட்டும் உள்ளதா?

guna
12-07-2007, 07:26 AM
வெகு நாட்களுக்குப் பிறகு மன்றம் வந்தேன், வந்தவுடன் என்னை கவர்ந்த மன்றத்தின் கவிஞர்களில் ஒருவரான உஙளின் புதிய படைப்பை படிக்கும் வாய்ப்பு கிடைததில் மகிழ்ச்சி..

உங்களின் கவிதைகளில் வெளிப்படும் ஒருவித ஆவேசத்தைக் காணவில்லையே லெனின்..?
மிக மிக மென்மையாய்....
அழகாய்..

வாழ்த்துக்கள் லெனின்..

lenram80
17-07-2007, 06:56 PM
நன்றி பிச்சி, லொள்ளு வாத்தியார் & சுகுனா

பார்த்திபன்
17-07-2007, 08:04 PM
"பட்ட கிளை கொண்டதால் மட்ட மரமாய் என்னை எல்லோரும் பார்க்க
என் பிற கிளைகளில் பூத்த பூக்களோடு என்னை
மற்ற மரங்களிலிருந்து ஒரு மாறுபட்டதாய் பார்த்தவள் நீ"


நீங்கள் காதலித்தவரை விட..
உங்களை காதலித்தவரை பெற்ரீர்..


பாக்கியசாலி....

அக்னி
17-07-2007, 08:11 PM
வார்த்தைகளின் கோலத்தில் அழகு ஒளிர்கிறது...
நிறைவான விருந்தை உண்டது என் விழிகள்...
தாகம் தீர, தாராளமாகவே பருகினேன் கவி வரிகளை...

என்னை பாதித்த பெண்களை எல்லாம் நான் காதலிக்க நினைத்ததில்லை!
உன்னை காதலிக்கும் முன்வரை நான் சாதித்ததாய் நினைத்ததில்லை!

இந்த வரிகள் சிந்தை கவர்கின்றது...
பாராட்டுக்கள் லெனின்...

aren
18-07-2007, 01:21 AM
நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். இதுமாதிரியான காதலி கிடைத்தால் ஒவ்வொரு ஆண்மகனும் சாதிக்க நினைத்த அனைத்தையும் சாதித்துவிடுவான்.

கவிதை வரிகள் அருமை. மென்மையாக அழகாக இருக்கிறது உங்கள் கவிதை. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
18-07-2007, 02:39 AM
லெனின் வரிகளில் மீண்டும் ஒரு காதல் சொட்டும் வரிகள்...............

லெனின் நீங்கள் காதல் தேவதையின் பூரண அனுக்கிரகம் பெற்றவர் வாழ்த்துக்கள் நண்பரே!.

paarthiban
19-07-2007, 09:39 AM
அழகான மென்மையான காதல் கவிதை. பாராட்டுக்கள் லெனின் அவர்களே

lenram80
20-07-2007, 10:43 PM
நன்றி பார்த்திபன், அக்னி, ஒவியன், ஆரென், மற்றும் பார்த்திபன்

அமரன்
21-07-2007, 09:04 AM
சந்தங்கள் விளையாடுகின்றது ராம்...பாராட்டுக்கள். அழகிய கவிதை.
************************************************************************
முன்னோடி உறவான சுகுணா ஆனந்தன் அவர்களை மீண்டும் மன்றத்தில் காண்பது மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.

theepa
21-07-2007, 10:28 PM
ஆகா ஆகா எத்தனை அழகு உங்கள் கவிதை கண்ணுக்கும் மனசுக்கும் மிகவும் அருமையாக உள்ளது நன்பரே பாறாட்டுக்கள்

அன்புடன்
லதுஜா

lenram80
24-07-2007, 12:35 AM
நன்றி அமரன் & தீபா