PDA

View Full Version : வளர்ச்சி



அமரன்
10-07-2007, 07:39 PM
நடக்க முயன்று
வீழ்ந்ததும்...
எழுந்து நடந்த நீ

வாழ முயன்று
வீழ்ந்ததும்...
மாழ நினைக்கிறாயே..

வளர்ந்தது....
நீ மட்டும்தானா....?

அன்புரசிகன்
10-07-2007, 08:07 PM
வளர்ந்தாலும்
கவுந்தது ஏற்க்கமுடியாதே...

அமரன்
10-07-2007, 08:09 PM
வளர்ந்திருந்தால்...எற்கமுடியுமே....

மனோஜ்
10-07-2007, 08:15 PM
தோல்விக்கு மரணம் முடிவெடிப்பது கீழ்தரம்
முயற்சி என்றும் மேல் தரம் அருமை அமரன்

அன்புரசிகன்
10-07-2007, 08:20 PM
வளர்ந்தாலும்
இழக்கும் போது
சிறுத்துவிடுகிறோமே...
வளர்ந்தது மதியென்றாலும்
அவசரத்தில் கதியில்லாமல்
போய்விடுமே...

இளசு
10-07-2007, 09:31 PM
முற்றைய மரம்தான் காற்றுக்கு
முறிந்துவிடும்..
வளர்ந்த மனமோ சோதனையை
விழுங்கிவிடும்..

மனவளர்ச்சி வலியுறுத்தும்
மன்றக்கவி அமரனுக்கு பாராட்டுகள்!

அமரன்
11-07-2007, 09:05 AM
கவிதையைப்படித்துக் கருத்துக்கூறிய அன்புரசிகன்,மனோஜ் இருவருக்கும் நன்றிகள்..

அமரன்
11-07-2007, 09:10 AM
வளர்ந்தாலும்
இழக்கும் போது
சிறுத்துவிடுகிறோமே...
வளர்ந்தது மதியென்றாலும்
அவசரத்தில் கதியில்லாமல்
போய்விடுமே...

வளரும்போது வளர்த்தால்
வளர்த்துவிடும்..
நம்பிக்கை..


நாம் வளரும்போது இளசு அண்ணா சொன்னதுபோல் மதியையும் வளர்த்து, அதனுடன் சேர்த்து நம்பிக்கையையும் வளர்த்தால் அது நம்மை வளர்த்துவிடும்...இல்லையா ரசிகா....

பிச்சி
11-07-2007, 09:58 AM
நல்ல தத்துவக்கவிதை சூப்பர் கருத்து.

இனியவள்
11-07-2007, 01:18 PM
நடக்க முயன்று
வீழ்ந்ததும்...
எழுந்து நடந்த நீ

வாழ முயன்று
வீழ்ந்ததும்...
மாழ நினைக்கிறாயே..

வளர்ந்தது....
நீ மட்டும்தானா....?

நடக்க முயன்று
வீழ்ந்த போது
என்னைத் தாங்க
ஒர் கை அன்னை
வடிவில் அன்று...

வாழ முயன்றும்
வீழ்ந்த போது
என்னைத் தாங்கிய
அந்தக் கையை
இன்று மண் தாங்கிக்
கொண்டிருக்கின்றது...

வீழ்ந்து வீழ்ந்து
வாழ்க்கையே வீழ்ச்சியாகி
எழும்ப முயற்சித்து கரம்
நீட்டினேன் உதவும் கரமே
என்னை கீழே வீழ்த்தும்
என்று அறியாமல்...

எறும்பு போன்று
சுறுசுறுப்பான கைகளையே
எனக்கு துணையாக கொண்டு
முயற்சிக்கின்றேன் என்றாவது
என் முயற்சி திருவினையாகும்
என்று...

ஓவியன்
12-07-2007, 07:47 AM
அமரா!

கொஞ்சம் சாப்பிட்டாலும் அமுதம் சிரஞ்சீவி மருந்து தானே!, அவ்வாறே சில வரிகளாயினும் நிறைவான தத்துவம் சொல்லி நிற்கின்றது உங்கள் கவிதை!.

அத்துடன் கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகளையும் என் மனதில் ஞாபகமூட்டியது, பாராட்டுக்கள் அமரன்!.

"சுடும் வரைக்கும் நெருப்பு!
சுற்றும் வரைக்கும் பூமி!
போராடும் வரைக்கும் மனிதன்!
நீ மனிதன்!."

- வைரமுத்து!.

விகடன்
12-07-2007, 07:49 AM
மனதில் உரமூட்டும் கவிதை அமரன்.
பாராட்டுக்கள்

சிவா.ஜி
12-07-2007, 08:01 AM
உன்னை நீ நேசி,எல்லோராலும் நேசிக்கப்படுவாய் என்பது உண்மை.எத்தனை வீழ்ச்சிகள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் எழவேண்டுமே தவிர வீழ்ந்துவிடக்கூடாது என விவேகம் பகர்ந்த அமரனின் கவிதை அற்புதம். வாழ்த்துக்கள் அமரன்.

அமரன்
12-07-2007, 09:01 AM
நன்றி ஓவியன்...கவிதைகள் அதிகம் படிக்கின்றீர்களே. நான் விரும்பினாலும் நேரம் அமைவதில்லை. வைரமுத்துவின் வரிகள், அறிவுமதியின் வரிகள் எல்லாம் என்னைக் கவர்ந்தவை.
************************************************************************************************************************************************************
நன்றி விராடன். எனது மனதில் தோன்றிய சிந்தனையை கவிதையாக எழுதினேன்.
**************************************************************************************************************************************************************
சிவா நீண்ட காலத்தின் பின்னர் உங்கள் பின்னூட்டத்தைக் காண்பதில் மகிழ்ச்சி. அழகான விமர்சனம். இப்போதும் தாயகத்திலா?