PDA

View Full Version : வா(க)ன விரட்டிகள்



அமரன்
10-07-2007, 05:15 PM
கடதாசியில் பதித்த முத்துக்கள்-அவை
கன்னத்தில் பதித்த முத்தங்கள்.−இன்று
அவையே என் சொத்துக்கள்.

அலைபேசியில் கேட்டசத்தங்கள்-அவை
அன்புச்செல்வம் தந்த சந்தங்கள்..−இன்று
அவையே என் பந்தங்கள்.

வருவாய் தேடி வந்தவன்
வருவான் எனக் காத்திருந்து
வந்தபோது சென்றுவிட்டனர்.


கோடுகள் தாண்டி திரவியம் தேடியவனை
கோடுகள் தாண்டி உறவுகளை அழித்து
நிம்மதி தேடவைத்த கொடு(ம்)பாவிகளே!

விதிகளை மீறி
விதிகளை முடித்து
அகதியாக்கும் நீங்கள்
வாகன ஓட்டிகளா?
வா(க)ன விரட்டிகளா?

இனியவள்
10-07-2007, 05:22 PM
கடதாசியில் பதித்த முத்துக்கள்-அவை
கன்னத்தில் பதித்த முத்தங்கள்.
அவையே என் சொத்துக்கள்.

அலைபேசியில் கேட்டசத்தங்கள்-அவை
அன்புச்செல்வம் தந்த சந்தங்கள்.
அவையே என் பந்தங்கள்.

வருவாய் தேடி வந்தவன்
வருவான் எனக் காத்திருந்து
வந்தபோது சென்றுவிட்டனர்.

விதிகளை மீறி
விதிகளை முடித்து
அகதியாக்கும் நீங்கள்
வாகன ஓட்டிகளா?
வா(க)ன விரட்டிகளா?

ஓடுவதோ ரோட்டில்
நினைப்பதோ விமானம்
ஓட்டுவதாய் வானத்தில்..


கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

அமரன்
10-07-2007, 05:41 PM
கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

நன்றி இனியவள்...

இளசு
10-07-2007, 10:08 PM
தேடியது கிடைத்துத் திரும்பும்போது
தேடவைத்த ஊக்கசக்திகளே இல்லையென்றால்..

வருந்தும் மனம் படும் வேதனை பலமடங்கு..
விழுந்த சாபம் பற்றாதே.. இன்னும் முழங்கு!

பாராட்டுகள் அமரன்!

ஷீ-நிசி
11-07-2007, 03:31 AM
நல்ல கவிதை அமரன்... வாழ்த்துக்கள்!


முதலிரண்டு பகுதிகள் ஸ்டைலிலேயே தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....

aren
11-07-2007, 06:05 AM
விதிகளை மீறி
விதிகளை முடித்து
அகதியாக்கும் நீங்கள்
வாகன ஓட்டிகளா?
வா(க)ன விரட்டிகளா?

அருமை அமரன். நிச்சயம் வான விரட்டிகள்தான்.

பிச்சி
11-07-2007, 06:05 AM
கவிதை அருமையாக இருக்குது அமரன் அண்ணா. கடைசி வரி மட்டும் புரியாலை

மதி
11-07-2007, 06:08 AM
அமர்..
அருமையான கவிதை..பாராட்டுக்கள்.

அமரன்
11-07-2007, 07:40 AM
வருந்தும் மனம் படும் வேதனை பலமடங்கு..
விழுந்த சாபம் பற்றாதே.. இன்னும் முழங்கு!


உண்மைதான் அண்ணா...ஆனால் கவிதை நீண்டு விடும் என்பதால் சிலவற்றை சேர்க்கவில்லை...சேர்த்துவிடுகின்றேன்...நன்றி அண்ணா..

lolluvathiyar
11-07-2007, 07:49 AM
புரியவில்லையே

அமரன்
11-07-2007, 07:53 AM
புரியவில்லையே

தினம் நடக்கும் வீதி விபத்துகளை மனதில்கொண்டு படியுங்கள் வாத்தியாரே..!

lolluvathiyar
11-07-2007, 08:04 AM
தினம் நடக்கும் வீதி விபத்துகளை மனதில்கொண்டு படியுங்கள் வாத்தியாரே..!

இப்பொழுது புரிகிறது அமரன்
நன்றாக இருகிறது

அமரன்
11-07-2007, 08:33 AM
அருமை அமரன். நிச்சயம் வான விரட்டிகள்தான்.

நன்றி அண்ணா...

அமரன்
11-07-2007, 08:35 AM
கவிதை அருமையாக இருக்குது அமரன் அண்ணா. கடைசி வரி மட்டும் புரியாலை

நன்றி பிச்சி பிரபா. வான விரட்டிகள். விபத்துகள் மூலம் வானத்துக்கு விரட்டுபவர்கள்..

அமரன்
11-07-2007, 08:38 AM
அமர்..
அருமையான கவிதை..பாராட்டுக்கள்.

நன்றி அண்ணா....

அமரன்
11-07-2007, 08:40 AM
முதலிரண்டு பகுதிகள் ஸ்டைலிலேயே தொடர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்....

ஷீ..உங்கள் கவிதைகள் இருக்கும் ஸ்டைலில் எழுத முயன்றேன். முதலிரண்டு பகுதிகளிலும் அதைப் புகுத்தினேன். ஆனால் அடுத்த பகுதிகள் எழுதும்போது வழக்கமான ஸ்டைல் வந்து ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து முயற்சிக்கின்றேன். நன்றி ஷீ..