PDA

View Full Version : விழுதுகள்ப்ரியன்
10-07-2007, 12:11 PM
நகரின்
அந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்
பெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்
எதிர்பாராமல்
நிகழ்ந்து முடிந்தது
அந்த சந்திப்பு!

அதிர்விலிருந்து மீண்டு
நான் உதிர்த்த புன்னகை
உனைச் சேர்ந்திடும் முன்னம்
கழுத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாய்!

கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;
மிஞ்சிய சதையும்
உயிர்ப்பில்லா உதடும்
காதோரம் ஓடிய நரை ஒன்றும்
உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!

கட்டிடத்தின் உயரம்
அங்குலம் அங்குலமாய் கடக்க
காலம் தன் கால்களை
வேகமாய் வீசி
ஆண்டு கணக்கில் பின்னோக்கி
பயணப்பட்டிருந்தது!

கை பிணைந்த கணம்
மடி சாய்ந்த தருணம் என
நீளமாய் விழுந்து பரவ தொடங்கிய
நினைவின் விழுதுகள்
சட்டென அறுந்து தொங்கின
லிப்ட் நின்ற வேகத்தில்!

பேசிவிடும் முனைப்புடன்
கூட்டத்தில் முண்டி அடித்து வெளியேறுகையில்
கரைந்து
காணாமல் போயிருந்தாய்
முந்தைய காலத்தை போலவே
சொல்லாமல் கொள்ளாமல்!

வீடு திரும்பியவன்
மனையின் மடி சாய்ந்து
கதைச் சொல்லி அழுது
அவளை
கட்டியபடி உறங்கிப்போனேன்!

தைரியம் சிறிதும் அற்ற நீ
சன்னமாக அழுதிருப்பாயா -
குளியலறை குழாயை
சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!

- ப்ரியன்.

ஓவியன்
10-07-2007, 12:35 PM
ஆகா!

வந்து விட்டீர்களா?

உங்கள் பழைய திரிகளைப் பார்த்து எங்கே இவரைக் காணோமென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவைக் கண்டதும் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி!.

உங்களிடமிருந்து இவ்வாறான கவிதைகள் நிறையவே வேண்டும் எமக்கு, தொடர்ந்து தருவீர்களா?

சூரியன்
10-07-2007, 01:21 PM
நல்ல படைப்பு நண்பரே.

பென்ஸ்
10-07-2007, 02:13 PM
ப்ரியன்...

நலமா..???

உங்களிடம் பேசியும் பல காலமாகிவிட்டதே...
காலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகி கொண்டிருக்கிறேனோ???

வாசித்து முடித்த உடம் மனதில் பெரும் மழைக்கும், புயலுக்கும் பின் பின் வரும் அந்த தெளிவும், அமைதியும்....

அழகாக சொல்லிவிட்டீர்கள் ப்ரியன்....

"சொல்லிவிட்டு போயிருந்தால்.." (நன்றி: இளசு) ஒருவேளை நின்று ஒரு புன்னகையேனும் உதிர்த்திருப்பாள்... அவ*ள் தான் தைரிய*ம் அற்ற* ஒரு சுய*ந*ல* "மாக்கான்" ஆகி போனாளே....

வீடு திரும்பியவன்
மனையின் மடி சாய்ந்து
கதைச் சொல்லி அழுது
அவளை
கட்டியபடி உறங்கிப்போனேன்!

இது முதிர்ந்த ஒரு உறவை தெளிவாக காண்பிக்கின்றது....

தைரியம் சிறிதும் அற்ற நீ
சன்னமாக அழுதிருப்பாயா -
குளியலறை குழாயை
சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!

இது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...
அவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்
ஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...
இவை இரண்டும் இல்லாத பச்சதில்....

அல்லது....

தனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...

அவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...
என்ன செய்வது ப்ரியன்...

கவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....
புரிந்து கொள்கிறென்...
மாற முயற்ச்சிபதில்லை...

மதி
10-07-2007, 03:13 PM
ப்ரியன்,
நல்லதொரு படைப்போடு மீண்டும் நீங்கள்..!
வேறென்ன சொல்ல...?
நல்லாருக்கு..

அமரன்
10-07-2007, 04:17 PM
முதலில் கிட்டத்தட்ட நாற்பது நாட்களின் பின்னர் மன்றம் வந்த (இவன்)ப்ரியனை வரவேற்கின்றேன். உங்கள் பல கவிதைகளைப் படித்து சுவைத்து வெறி கொண்டு அலையும் நண்பர் குலாமில் நானும் ஒருவன். உங்கள் அடுத்த கவிதையைக் காண்பதில் மகிழ்ச்சி.

பால்ய காலக் காதலை அந்திமகாலத்திலும் மறக்காது இருக்கும் பாங்கு. இன்றாவது என்னை நினைத்து அழுவாயா என்ற ஏக்கம். மகிழ்ந்தேன் ப்ரியன். காதலின் பிரிவை இலைமறை காயாகச் சொன்ன விதம் என அத்தனையும் ரசிக்க வைத்தன. நன்றி ப்ரியன்.

இனியவள்
10-07-2007, 04:19 PM
(இவன்)பிரியன்

கவிதை அருமை நான் படித்த
உங்கள் முதல் கவிதை
பின்னூட்டம் இடும் முதல்
கவிதையும் இதுவே
படித்ததும் பிடித்து
விட்டது

வாழ்த்துக்கள்

பிச்சி
11-07-2007, 06:23 AM
கவிதை சூப்பர் பிரியன். அதே மென்மை உங்களிடம் தொடர்ந்து இருக்கிது, ரொம்ப ரொம்ப சூப்பர்.

ப்ரியன்
11-07-2007, 10:44 AM
ஆகா!

வந்து விட்டீர்களா?

உங்கள் பழைய திரிகளைப் பார்த்து எங்கே இவரைக் காணோமென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவைக் கண்டதும் இனம் புரியா ஒரு மகிழ்ச்சி!.

உங்களிடமிருந்து இவ்வாறான கவிதைகள் நிறையவே வேண்டும் எமக்கு, தொடர்ந்து தருவீர்களா?

வணக்கம் ஓவியன் ,

நன்றி...

தற்சமயம் கொஞ்சம் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன் ஓவியன்.இந்த கவிதைக் கூட ரொம்ப நாட்கள் அடைக் காக்க முடியாதாலேயே இட்டேன்.

ஆனால் இன்னும் சில நாட்களுக்கு வனவாசம் தொடரும்...

ஓவியன்
11-07-2007, 10:52 AM
வணக்கம் ஓவியன் ,

நன்றி...

தற்சமயம் கொஞ்சம் எல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறேன் ஓவியன்.இந்த கவிதைக் கூட ரொம்ப நாட்கள் அடைக் காக்க முடியாதாலேயே இட்டேன்.

ஆனால் இன்னும் சில நாட்களுக்கு வனவாசம் தொடரும்...

நல்லது ப்ரியன் அண்ணா உங்களது முன்னேற்றத்திற்கே இந்த வனவாசமென எண்ணுகிறேன், ஆதலால் இந்த வனவாசத்தை வெற்றிகரமாக முடித்து வெகுவிரைவில் மீண்டும் எங்களுடன் கவியாள வர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

ப்ரியன்
11-07-2007, 10:57 AM
நல்ல படைப்பு நண்பரே.

நன்றி சூரியன்

ப்ரியன்
11-07-2007, 12:27 PM
ப்ரியன்...

நலமா..???

உங்களிடம் பேசியும் பல காலமாகிவிட்டதே...
காலத்தின் ஓட்டத்தில் கரைந்து போகி கொண்டிருக்கிறேனோ???

மிக்க நலம் பென்ஸ்...

நிச்சயம் இல்லை...காலத்தால் எல்லோரையும் , எல்லாவற்றையும் கரைத்திட முடிவதில்லை...வாசித்து முடித்த உடம் மனதில் பெரும் மழைக்கும், புயலுக்கும் பின் பின் வரும் அந்த தெளிவும், அமைதியும்....

அழகாக சொல்லிவிட்டீர்கள் ப்ரியன்....நன்றி பென்ஸ்
"சொல்லிவிட்டு போயிருந்தால்.." (நன்றி: இளசு) ஒருவேளை நின்று ஒரு புன்னகையேனும் உதிர்த்திருப்பாள்... அவ*ள் தான் தைரிய*ம் அற்ற* ஒரு சுய*ந*ல* "மாக்கான்" ஆகி போனாளே....

இது முதிர்ந்த ஒரு உறவை தெளிவாக காண்பிக்கின்றது....

இது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...
அவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்
ஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...
இவை இரண்டும் இல்லாத பச்சதில்....

அல்லது....

தனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...

அவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...
என்ன செய்வது ப்ரியன்...

கவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....
புரிந்து கொள்கிறென்...
மாற முயற்ச்சிபதில்லை...

கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;
மிஞ்சிய சதையும்
உயிர்ப்பில்லா உதடும்
காதோரம் ஓடிய நரை ஒன்றும்
உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!

உண்மையில் இந்த வரிகளில் இருந்தே , அக்கவிதை முழுதும் வந்தது...

முதலில் இருபாலருக்கும் பொருத்தமாகவே எழுத நினைத்தேன், அது சரியாக வராதாலேயே இப்படி முடித்தேன்

ப்ரியன்
11-07-2007, 12:30 PM
நன்றி மதி , அமரன் , இனியவள் & பிச்சி

பிச்சி
11-07-2007, 12:35 PM
ப்ரியன்...இது கொஞ்சம் ஓவர்... ஆனால் சொல்ல வரும் கருத்து கொஞ்ஷம் ஆளமானது...
அவள் கணவன் புரிந்து கொள்பவனாயிருந்தால்... தைரியமாக பெசியிருக்கலாம்
ஏற்றுகொள்பவனாக இருந்தால் ... இவனை கண்டதை சொல்லி இருக்கலாம்...
இவை இரண்டும் இல்லாத பச்சதில்....

அல்லது....

தனக்கான தைரியம் இல்லாத நிலையில்... குளியலறை அழுகை...

அவள் நிலை என்ன என்பதை அறியாமலே, அவளை சின்னதாய் தாழ்த்து உள்மனதில் சந்தோசபட்டு கொள்ளும் இயற்க்கையான மனம்...
என்ன செய்வது ப்ரியன்...

கவிதை வாசிக்கும் போது நானும் ஒரு சாதாரணம் மனிதனாய்....
புரிந்து கொள்கிறென்...
மாற முயற்ச்சிபதில்லை...

அவ*ள் பார்த்த* க*ண*த்திலிருந்து க*ன்டிப்பாய* அழுதிருப்பாள் அண்னா. ஒருவேளை பேசியிருந்தால் இன்னும் அழுகை நிறைய* வ*ந்த்கிருக்கும். அழுக*ல் இல்லாவிட்டாலும் ம*ன*க்க*ஷ்ட*மாவ*து இருக்கும். ஏனெனில் அவ*ள் ஒரு பெண். இது ஆணுக்கு இருக்குமா என்ப*து தெரியாது.

பென்ஸ்
11-07-2007, 12:42 PM

பிச்சி....
இருக்கலாம்.... பெண்கள் மென்மையானவர்கள் என்பதை ஒத்து கொள்கிறேன்.... ஆனாலும் பல நேரங்களில் சூழ்நிலையை கையாள முடியாமல் "விட்டுவிடுவதால்" வரும் பாதிப்புகளின் ஆழ*ங்களை அவர்கள் உணர்வதில்லை.

அந்த நேரம்...
அந்த சூழ்நிலை ...
அதில் இருந்து தப்ப என்ன செய்யமுடியுமோ அதையே பெரும்பான்மையான பெண்கள் செய்வார்கள்...(எல்லோரும் அல்ல, குறிப்பாக தமிழ் நாட்டில் இது அதிகம்)

ப்ரியன்..
உங்கள் திரியில் விவாதிப்பதற்க்காக மன்னிக்க... ஆனால் ஒரு நல்ல விவாதத்தை கொடுத்ததற்க்காக பாராட்டுகள்....

பிச்சி
11-07-2007, 02:23 PM

அண்ணா. அதற்குக் காரணம் சமுதாய சூழ்நிலைகளுஇம் இருக்கலாம் இல்லையா? நிச்ச*ய*ம் ம*ன*துக்குள் புழுங்குவார்க*ள். ஆனால் அது உண்மையான* காத*லாக* இருந்தால் தான். பெரும்பாலான* ஆண்க*ள் இந்த* மென்மைத்த*ன*த்தை செய்வ*தில்லை. க*ண்டால் ஓடிவிடுவ*து அவ*ர்க*ளின் குண*ம். எல்லா ஆண்க*ளும் அப்ப*டிய*ல்ல*. சில*ர் ம*ட்டும்.

பென்ஸ்
11-07-2007, 02:38 PM

சரியாக சொன்னாய் குழந்தை...

சமுதாயசூழ்நிலை ஒரு முக்கிய காரணம்...
ஆண்கள் அழகூடாது...
பெண்கள் அழலாம்...

காதல் இருவருக்கும் பொதுவானதுதான்...
ஆனால் உணர்வுகளை கையாளுவதில் பெண்கள் பல* நேரம் மாட்டிவிடுகிறார்கள்... சில நேரம் ஆண்களும்.

இளசு
11-07-2007, 05:41 PM
வனவாசம் மீறிப்பீறிட்ட ப்ரியனின் மென்
மனவாசம் வீசும் கவிதை..

பலரும் பொருத்திப்பார்க்கக் கூடிய கரு..
ப்ரியனின் விரல் வழி உருவானால் இத்தனை அழகு!

பாராட்டுகள் ப்ரியன்..

வனவாசம் விரைவில் முடியும் என்பது
ரசிகனாய் என் எதிர்பார்ப்பு..

வழக்கம்போல் இனிய பென்ஸின் ஆழ்ந்த விமர்சனம் கண்டு
வழக்கம்போல் அசந்து..அட என நிற்கிறேன்.. எப்படிப்பா?????

அக்னி
11-07-2007, 05:56 PM
பிரியன்...
தற்காலிகமாகப் பிரிந்திருந்தாலும்...
அனைவருக்கும் பிரியமானவர்...
எதிர்பார்ப்புக்கள்... வெற்றியின் எல்லைதொட பிரார்த்தனைகள்...

மிகவும் மென்மையாக, ஒரு பிரிவில்... இரு சேர்க்கை...
சேர்ந்ததில் ஒன்று.., ஆறுதல் தேடி துணையின் மடி நாட...
மற்றது, ஆறியதா என்று தெரியாமல் சிந்தனை தேட...
அருமை...

காலங்கள் ஒடியே போனாலும்,
கை கோர்த்த கணங்களும்,
பரிமாறிக்கொண்ட நினைவுகளும்,
தினமும் உயிர்த்துக்கொண்டே...

மிகவும் கவர்ந்த வரிகள்...
விஞ்ஞானத்தின் வேகத்தோடு போட்டிபோடும், மனதின்வேகம்...
நினைவுகளை கணநேரத்தில், காட்சிப்படுத்தியபடி...

கட்டிடத்தின் உயரம்
அங்குலம் அங்குலமாய் கடக்க
காலம் தன் கால்களை
வேகமாய் வீசி
ஆண்டு கணக்கில் பின்னோக்கி
பயணப்பட்டிருந்தது!

இனிய கவிதைக்குப் பாராட்டவா..?
இன்னும் தொடரும் வனவாசத்திற்கு ஏங்கவா..?
வனவாசம் முடித்து மன்றவாசம் வரவேண்டும்... எங்களுக்காக...

பிரியமுடன், பிரியனுக்காக காத்திருக்கும் உறவுகளோடு பார்த்திருக்கும்...

ப்ரியன்
16-07-2007, 02:03 PM
அவ*ள் பார்த்த* க*ண*த்திலிருந்து க*ன்டிப்பாய* அழுதிருப்பாள் அண்னா. ஒருவேளை பேசியிருந்தால் இன்னும் அழுகை நிறைய* வ*ந்த்கிருக்கும். அழுக*ல் இல்லாவிட்டாலும் ம*ன*க்க*ஷ்ட*மாவ*து இருக்கும். ஏனெனில் அவ*ள் ஒரு பெண். இது ஆணுக்கு இருக்குமா என்ப*து தெரியாது.

தாடி வைத்துக் கொண்டும் தண்ணீர் அடித்துக் கொண்டும்,தெரு நாயை கட்டிக் கொண்டு சோக கீதம் இசைத்துக் கொண்டும் ஆண் இருந்தாலும் மனதில் புழுங்கி அழுது அழுது தினம் தினம் சாவதென்னவோ அதிகம் பெண் இனம்தான்.

இந்த கவிதை, ஒரு பெண்ணின் தைரியமின்மையால் முறிந்த காதல் பற்றி பேசுகிறது...அதற்கு பல காரணங்கள் சொல்லாம் சமுதாயம் , குடும்ப கெளரவம் இப்படி என்று.

முதலில்

*தைரியமும் ஆதரவும் அற்ற நீ*

என்றுதான் எழுதி இருந்தேன்...இங்கே ஆதரவும் அற்ற நீ என்பது கணவன் அற்றவள் என்ற அர்த்ததை பெற்றுவிடுவதுப் போல் தோன்றியதால் நீக்கிவிட்டேன்...

ஊர் உலகத்தில் பெண்கள் − ஆண்களை காட்டிலும் தைரியசாலிகள் என்பதுதான் உண்மை...