PDA

View Full Version : பெண்ணே..!



வசீகரன்
10-07-2007, 09:43 AM
வில்லென்ற புருவம்
சில்லென்ற பருவம்
கொல்லேன்ற உருவம்...கொண்டாய் பெண்ணே..!

கொஞ்சம் இடை கொண்டு
கொஞ்சும் நடை கொண்டு
மஞ்சம் இதோ என்றே...

இயல்பாக ஈர்த்திட்டாய்
இதயத்தை கோர்த்திட்டாய்...!

அக்னி
10-07-2007, 09:50 AM
சொக்க வைக்கும்க் கவிதை...
நினைக்க வைக்கிறது கனவில் தேவதையை...
வார்த்தைகளின் கோர்வை... கவிதையில் இதயத்தையும்,
கவிதையோடு, எங்களையும் ஈர்த்தே கோர்க்கின்றது...
பாராட்டுக்கள் வசீ...

நாண் பூட்டி விட்டாய்
பார்வை அம்பு...
நான் மாட்டி விட்டேன்
பாவை உன் அன்பில்...

அமரன்
10-07-2007, 10:06 AM
மீண்டும் வசீகர வரிகளில் கலக்கி விட்டார் வசீகரன். எதுகை மோனையில் ரசனை அதிகாமகிவிட்டது. பாராட்டுகள் நண்பரே!

அக்னியின் கவிதை அழகுக்கு அழகு சேர்கின்றது. பாராட்டுகள்.

இனியவள்
10-07-2007, 10:11 AM
நாண் பூட்டி விட்டாய்
பார்வை அம்பு...
நான் மாட்டி விட்டேன்
பாவை உன் அன்பில்...

காற்றையும் துளைத்துக்
கொண்டு வருகின்றதே
பாவை உன் விழியின்
கூர்மை உன் விழி
என்னும் அம்பில்
அகப்படாமல் தப்பித்து
போக முடியாமல் விரும்பியே
சிறைப்படுகின்றேன் இதயம்
என்னும் சிறையில்

இனியவள்
10-07-2007, 10:12 AM
வாழ்த்துக்கள் வசி

உங்கள் கவி
வசிகரிக்கின்றது
எங்கள் மனதை
உங்கள் பெயருக்கு
ஏற்றது போல்
கவி புனையும் தன்மை
வாழ்த்துக்கள் பல நண்பரே

வசீகரன்
10-07-2007, 10:47 AM
நன்றி நண்பரே.....! தமிழ் மன்ர* நண்பர்களின் அன்பு என்னை ரொம்பவே நெகிழ வைக்கிறது....

வசீகரன்
10-07-2007, 10:49 AM
காற்றையும் துளைத்துக்
கொண்டு வருகின்றதே
பாவை உன் விழியின்
கூர்மை உன் விழி
என்னும் அம்பில்
அகப்படாமல் தப்பித்து
போக முடியாமல் விரும்பியே
சிறைப்படுகின்றேன் இதயம்
என்னும் சிறையில்
நன்றி நண்பரே

ஓவியன்
13-07-2007, 12:33 AM
இயல்பாக ஈர்த்திட்டாய்
இதயத்தை கோர்த்திட்டாய்...!

இயல்பாய்க் கோர்த்து
இதயத்தை ஈர்த்த வரிகள்!.

வாழ்த்துக்கள் வசிகரரே!.

ஓவியன்
13-07-2007, 12:34 AM
நாண் பூட்டி விட்டாய்
பார்வை அம்பு...
நான் மாட்டி விட்டேன்
பாவை உன் அன்பில்...

வரிகள் அசத்த வைக்கிறது அக்னியாரே! :aktion033: