PDA

View Full Version : தி(இ)ரு மண(ன)ம்



இனியவள்
10-07-2007, 09:41 AM
கல கலவென சிரிப்பு சத்தம்
உண்டியலில் இருந்து கொட்டிடும்
காசுகளைப் போல் மண்டபம் முழுதும்
எதிரொலித்தது....

சூரியனைக் காணாது குனிந்து
வாடி நிற்கும் சூரிய காந்திப்
பூப் போல் மணப் பெண்
தலை குனிந்திருந்தால்....

சந்திரனை நோக்கி ஈர்க்கப்
படும் காந்தக் கற்கள் போல்
மணமகன் நாடி வந்தான் அவள்
அருகே....

டும் டும் கொட்டி மேளம் முழங்க
நாதஸ்வரம் இசைக்க சங்கு போன்ற
கழுத்தில் மணமாங்கல்யம் அணிவித்தான்...

இரு மனம் சேர்ந்து ஒரு மனம்
ஆவதாம் திருமணம்..இவள் மனம் எங்கோ
நினைவினில் மூழ்கி இருக்க அவன் மனமோ
சிற்பிக்குள் இருக்கும் முத்துப் போல் இவளிடத்தில்
மூழ்க்கி இருந்தது.........

நண்பர்களின் கிண்டல்களுடன் கூடிய வாழ்த்துக்கள்
உற்றார் உறவினர் புடை சுழ கன்னியிவள்
கரம் பிடித்தான் காளையவன்....

மழையை எதிர் பார்த்துக் காத்திருக்கும்
பயிர் போல் பால் பொழியின் நிலவின்
வெளிச்சத்தில் பளிங்கு போல் இருக்கும்
துணைவியவள் முகம் பார்க்க காத்திருந்தான்
துணைவன்.....

மனதிலே ஒரு சுமையை சுமந்து கண்ணாளன்
முகம் நோக்க அச்சம் கொண்டு
அன்று தன்னை அனைத்துக் கொள்ள
மறுத்த பூமித் தாய் மீது கண்ணீர்
அபிஷேகம் செய்து கொண்டு இருந்தாள்
கன்னியிவள்...

அருவி போல் வழிந்தோடும் கண்ணீரோடும்
குறுகுறுக்க்கும் விழியோடும் பட படக்கும்
நெஞ்சோடும் அன்று உலர்ந்த பூப் போல்
அவன் முகம் பார்த்தாள்.....

குளிரில் நடுங்கும் தன் சேய்க்கு
ஆதரவாய் இறக்கை விரித்து
அரவணைக்கும் கோழி போல்
இவன் அரவணைக்க தைரியம்
பெற்ற குஞ்சு போல் சுமை இறக்கி
வைக்கும் தொழிலாளி போல் தன்
கடந்த கா(தல்)லத்தை கணவரிடம்
ஒப்புவித்தாள்.......

கண்கள் பேசி மெளனம் விளையாட
புன்னகைகள் ததும்பி குதுகலம்
அரும்பி ஓட வேண்டிய இடத்தில்
நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது.....

சிறு குண்டுசீ மெளனத்தைக் கலைப்பது
போல் அவன் வார்ததைகள் அந்த
நிசப்தத்தைக் கலைத்தது....

கண்மணியே உலகை விட்டு சென்ற
உயிர்களைப் போன்றது கடந்த கால
காலங்கள் அதனை நினைத்து உன்
எதிர் காலத்தை விரயமாக்கதே...

இனி பிறக்கும் உயிரைப் போன்றது
நிகழ்காலமும் எதிர்காலமும்
அதனை சிறப்பாகவோ அல்லது
சிறப்பற்றதாகவோஆக்குவது
நம் கையில் அல்லவா இருக்கின்றது....

இன்றில் இருந்து நீயல்லவா என்
எதிர்காலமும் நிகழ்காலமும்
நானல்லவா உன் எதிர்காலமும்
நிகழ்காலமும் கடந்தவை கடந்தவையாகவே
இருக்கட்டும்......

நீ என் உயிரில் கலக்க வந்த
உறவல்லவா வந்து விடு அன்பே
என் உயிரில் கலந்து விடு....

கண்ணாடியில் தெளிவுறத் தெரியும்
முகம் போல் கண்ணாளவன் முகம்
பளிங்கு போல் தெரிய கலையும்
மேகம் போல் அவள் வாழ்வில்
ஏற்பட்ட கசப்புக்கள் மறைய
அவனுள் இரண்டறக் கலந்தால்
பதியவள்....


(மன்றத்தில் எனது 1000மாவது பதிவு இது...இங்கு வந்தே கிறுக்கத் தொடங்கினேன் உங்கள் ஆதரவுகள் என்னை மென்மேலும் கிறுக்கத் தூண்டியது தூண்டிக் கொண்டிருக்கின்றது நன்றிகள் நண்பர்களே :nature-smiley-002: :icon_08: :music-smiley-008: )

அன்புரசிகன்
10-07-2007, 10:01 AM
கடந்த காலங்களில் விட்டுப்போன அனைத்து நன்மைகளுகம் எதிர்காலத்தில் உங்களை அணைக்கட்டும். தீமைகளை ஊதித்தள்ளிவிடுங்கள்.

மிக நன்றாக இருந்தது உங்கள் 1000 ஆவது பதிப்பு. வாழ்த்துக்கள் இனியவளே... :medium-smiley-029:

அக்னி
10-07-2007, 10:19 AM
ஒரு பெரும் நிகழ்வை, கவிதையில் புகுத்தியிருக்கின்றீர்கள் நன்று...

ஆனாலும் சில கருத்துக்கள்...


சூரியனைக் காணாது குனிந்து
வாடி நிற்கும் சூரிய காந்திப்
பூப் போல் மணப் பெண்
தலை குனிந்திருந்தால்....

அழகிய உவமானம்... மணவாளன் வந்ததும் வாட்டம் தெளிந்து, முகம் பார்க்க சற்றே தலை உயர்த்தும் சிறு சலனம்... மனதில் விரிகின்றது...
ஆனாலும்,
இங்கு சூரியன் காதலனா? கணவனாகப் போகின்றவனா?


சந்திரனை நோக்கி ஈர்க்கப்
படும் காந்தக் கற்கள் போல்
ஈர்ப்பு சக்தி இல்லாத சந்திரனை நோக்கி, ஈர்க்கப்பட்டு வரும் கற்கள்...
அவளின் விருப்பில்லாமலே, நெருங்கி வரும் மணவாளனைக் குறிக்கின்றதா..?
அல்லது, அவளின் அழகில் மனதைத் தொலைத்து, நெருங்கும் மணவாளனைக் குறிக்கின்றதா..?
அல்லது, அவளின் காதல் நினைவைக் காயம் செய்ய விரைந்து வரும் கற்களாக அவளின் மனதில் விழுகின்றதா...?

கவரும் கவிதை... சுவையாக இருக்கிறது...

பதியவள்
அவனுக்குள்ளே பதிகின்றவள்...
காதலில் மனதை மட்டுமே தொலைத்தவள் என்பதை உணர்த்தும் பதிவிரதையின் குறியீடு...
இறுதி வார்த்தையில், இயல்பாய் வந்த பதியவள்...
கவிதைப் பெண்ணவளின் இயல்பை மேன்மைப்படுத்துகின்றது...

பாராட்டுக்கள்...

gayathri.jagannathan
10-07-2007, 10:39 AM
கவிதை நன்று.. ஆனால் எவ்வளவு கணவன்மார்களுக்கு இவ்வளவு பரந்த மனப்பான்மை இருக்கும் என்று தெரியவில்லை...

(இனியவள்... கவிதை படைக்கும் அதே நேரம்.. எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்...)

இனியவள்
10-07-2007, 01:38 PM
கடந்த காலங்களில் விட்டுப்போன அனைத்து நன்மைகளுகம் எதிர்காலத்தில் உங்களை அணைக்கட்டும். தீமைகளை ஊதித்தள்ளிவிடுங்கள்.
மிக நன்றாக இருந்தது உங்கள் 1000 ஆவது பதிப்பு. வாழ்த்துக்கள் இனியவளே... :medium-smiley-029:

நன்றி அன்பு

சோதனகளை கண்டு
சாதனகளைக் கோட்டை
விடாதே என்று
சொல்வதைப் போல்
இருக்கின்றது

இனியவள்
10-07-2007, 01:44 PM
நன்றி அக்னி ஆழமாக கவிதையுனுள் உறைந்து பதிவிட்டு இருக்கின்றீர்கள்..

சூரியன் அவள் காதலன்

நிலவு போன்று இருக்கும்
கரம் பிடிக்க போகும்
துணைவியிடம் ஈர்க்கப்
பட்டு மாப்பிளை மணப்
பெண்ணை நோக்கி விரைகின்றார்
சந்திரனை நோக்கி ஈர்க்கப்படும்
கந்தக் கல் போல் அவன் அவளை
நோக்கி விரைகின்றான்......

இனியவள்
10-07-2007, 01:48 PM
கவிதை நன்று.. ஆனால் எவ்வளவு கணவன்மார்களுக்கு இவ்வளவு பரந்த மனப்பான்மை இருக்கும் என்று தெரியவில்லை...
(இனியவள்... கவிதை படைக்கும் அதே நேரம்.. எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்...)

நன்றி காயா அக்கா

கற்பனையில் உருவானது
மலரும் நினைவுகள் போல்
நிஜத்தில் நடக்காத என
எக்கம் கொண்டு கிறுக்கிய
சிறிய கிறுக்கல்

முயற்சிக்கின்றேன் காயா அக்கா

அன்புரசிகன்
10-07-2007, 01:58 PM
நன்றி அன்பு

சோதனகளை கண்டு
சாதனகளைக் கோட்டை
விடாதே என்று
சொல்வதைப் போல்
இருக்கின்றது
சோதனைகள் இல்லா வாழ்க்கை
பருப்பு இல்லாத பந்தி
உப்பு இல்லாத பண்டம்
இவை மூன்றிற்கும் ஏது வித்தியாசம்.

சோதனைகள் வந்தால்
சாதனையாக்கிடு தோழி
அடித்தால் தான் MGR :D

ஷீ-நிசி
10-07-2007, 03:27 PM
1000 மாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள்!

கவிதை மிக அருமை இனியவளே! மிகப் பெரியதாய் இருந்தாலும் படித்துக்கொண்டு போனதில் தெரியவில்லை....

வாழ்த்துக்கள்!

இனியவள்
10-07-2007, 04:27 PM
சோதனைகள் இல்லா வாழ்க்கை
பருப்பு இல்லாத பந்தி
உப்பு இல்லாத பண்டம்
இவை மூன்றிற்கும் ஏது வித்தியாசம்.

சோதனைகள் வந்தால்
சாதனையாக்கிடு தோழி
அடித்தால் தான் MGR :D

ஹீ ஹீ அன்பு

நான் போட்டேன் கவிதை
சிவாஜீ M.G.R. போட்டார் மொட்டை


1000 மாவது பதிப்புக்கு வாழ்த்துக்கள்!

கவிதை மிக அருமை இனியவளே! மிகப் பெரியதாய் இருந்தாலும் படித்துக்கொண்டு போனதில் தெரியவில்லை....

வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ

அமரன்
10-07-2007, 04:41 PM
என்னத்தைச் சொல்வது. எல்லோரும் சொல்லிவிட்டார்களே! பாராட்டுத்தான் சொல்ல முடியும்.
மங்கலஇசை ஒலிக்க
காதலுக்கு
மங்களம் பாடிய
கவிதைக்குப் பாராட்டுகள் இனியவள்.

இனியவள்
10-07-2007, 05:39 PM
என்னத்தைச் சொல்வது. எல்லோரும் சொல்லிவிட்டார்களே! பாராட்டுத்தான் சொல்ல முடியும்.
மங்கலஇசை ஒலிக்க
காதலுக்கு
மங்களம் பாடிய
கவிதைக்குப் பாராட்டுகள் இனியவள்.

நன்றி அமர்

lolluvathiyar
11-07-2007, 08:09 AM
கவிதை ஒரு கதை போலவே இருந்தது. வாழ்த்துகள்

இனியவள்
15-07-2007, 10:36 AM
கவிதை ஒரு கதை போலவே இருந்தது. வாழ்த்துகள்

நன்றி வாத்தியார்