PDA

View Full Version : கலையாத நட்பு



சூரியன்
10-07-2007, 09:32 AM
'பூவில்' இருக்கும்
பனி மறைவது போல
உன் மேல் வைத்திருக்கும்
நட்பு
என்றும் மறையாது.......
சூவாசம் கொள்வது போல்
உன்னை ஒரு ஒரு நொடியும்
உன்னை மறாவாதுயிருப்பேன்.....!

மனோஜ்
10-07-2007, 09:38 AM
'பூவில்' இருக்கும்
பனி மறைவது போல
உன் மேல் வைத்திருக்கும்
நட்பு
என்றும் மறையாது.......
...!
பனி என்பது மறைவது அது போல என்றால்
எளிதாக மறையாது மெதுவாக மறையும் என்கிறீர்களா
கவிதை நன்று

அக்னி
10-07-2007, 09:47 AM
'பூவில்' இருக்கும்
பனி மறைவது போல
உன் மேல் வைத்திருக்கும்
நட்பு
என்றும் மறையாது.......
சூவாசம் கொள்வது போல்
உன்னை ஒரு ஒரு நொடியும்
உன்னை மறாவாதுயிருப்பேன்.....!

பூவில் படர்ந்த பனி
கரைவது போல,
கரைந்துவிட,
உன்னுடனான நட்பு
பனியல்ல,
பூவின் வாசம்...

பூவின் இறப்போடு,
மறையும் வாசம்போல,
என் சுவாசம் வரை...
வாசம் செய்வேன் உன்னுள்ளே...

சூரியரே... இது போன்று வந்திருந்தால், கவியின் அழுத்தம், ஆழமாயிருந்திருக்கும்...
மறைவதை ஒப்பிட்டு மறையாது என்று சொல்வதை விட,
மறைவதை ஒப்பிடும்போது, இதுபோன்றதல்ல என்று கூறின், சிறப்பாயிருக்கும்,
என்பது, எனது தாழ்மையான எண்ணம்...

பாராட்டுக்கள் சூரியரே...
கவிச்சமரிலும் சமராட குதிக்கலாமே...

இளசு
10-07-2007, 10:35 PM
வாழ்த்துகள் சூரியன்..

(கவிதையில் வரும் ஒரு சொல் − சூவாசம்..
சுவாசமா இல்லை பூவாசமா?)

அக்னியின் பதிவில் அசந்தேன்.. பாராட்டுகள்..
சூரியன் மட்டுமல்ல.. கவிதை எழுத விரும்பும் அனைவருக்கும்
பயன்படும் விமர்சனம் அது..

ஷீ-நிசி
11-07-2007, 03:44 AM
'பூவில்' இருக்கும்
பனி மறைவது போல
உன் மேல் வைத்திருக்கும்
நட்பு
என்றும் மறையாது.......
சூவாசம் கொள்வது போல்
உன்னை ஒரு ஒரு நொடியும்
உன்னை மறாவாதுயிருப்பேன்.....!

சூரியன்! வாழ்த்துக்கள் முதலில் கற்பனைக்கு.. சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்க இல்ல... அது போதும்.. அக்னி சொன்னபடி கவிதையில் மாற்றம் வேண்டும்.. எழுதிய கவிதையை நீங்கள் ஒருமுறை படித்திருந்தால் அந்த தவறு புலப்படிருக்கும்...


'பூவில்' இருக்கும்
பனி மறைவது போல
உன் மேல் வைத்திருக்கும்
நட்பு
என்றும் மறையாது.......

உவமை சொல்லும்போது மறையும் என்றால் மறையும் என்றே முடித்திருக்கவேண்டும்.. எதிராக அமையக்கூடாது...

இப்படி மாற்றலாம்....

வகை 1

பூவில் இருக்கும் பனி
மெல்ல உறைவதுபோல
உன் மேல் இருக்கும்
என் பயமும்
மெல்ல கறைகிறது!

வகை 2

பூவில் இருக்கும் வாசம்
எப்படி மறையாதோ -அப்படி
உன் மேல் இருக்கும்
என் பாசமும் மறையாது!

வாழ்த்துக்கள் சூரியன்.....

aren
11-07-2007, 05:20 AM
சூரியன் பாராட்டுக்கள்.

அக்னி, ஷீ−நிசி பின்னூட்டங்கள் இன்னும் பலரை கவிதை எழுதத்தூண்டும் என்பது நிஜம். உங்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
11-07-2007, 08:53 AM
பாராட்டுக்கள் சூரியன்....
அக்னி ஷீ இருவரும் வேறுபட்ட வடிவில் அமைத்து அசத்திவிட்டீர்கள்..பாராட்டுகள் இருவருக்கும்..