PDA

View Full Version : தண்ணீர் அதிகம் குடிக்காவிட்டால்...!



சூரியன்
10-07-2007, 08:41 AM
கோடையாக இருந்தால், சிலர் நிச்சயமாக தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டார்கள். ஆனால்,மழைக்காலத்தில், பலருக்கும் அது தோன்றவே தோன்றாது. ஆனால், எப்போது உணவு சாப்பிட்டாலும், குறிப்பிட்ட இடைவெளியிலும் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது.
இது, சிலருக்கு தெரிவதில்லை. மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு, தண்ணீர் குடிக்காமல், கிளம்பி விடுவர். அப்புறம் நெஞ்செரிச்சல், சரியாக சிறுநீர் போகாத நிலை, ஜீரண பாதிப்பு போன்றவை வரும் போது தான், தண்ணீர் மகிமை தெரியும்.

தண்ணீர் போதுமான அளவு குடிக்காமல் இருப்பதாலும், சத்தாக <உணவுகளை சாப்பிடுவதை குறைப்பதாலும், ஏற்படும் பாதிப்புகளில் "கிட்னி ஸ்டோன்' என்ற சிறுநீரக கற்கள் பாதிப்பும் ஒன்று.

"கிட்னி ஸ்டோன்' இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால், அதனால் வரும் வலி, பெரிய தொந்தரவாக இருக்கும்.

சிறுநீர் கழிப்பதில் சிலருக்கு தொடர்ந்து கோளாறு இருக்கிறது என்றால், அவர்களுக்கு இந்த பாதிப்பு வரப்போகிறது என்பது பொருள். ஆனால், இந்த அறிகுறி தெரியாது.

உடலில் இடுப்பு பகுதியில், கருஞ்சிவப்பு நிறத்தில், "பீன்ஸ்' உருவத்தில் இருக்கும் சிறுநீரகம். எல்லாருக்கும் இரண்டு சிறுநீரகம் இருக்கும். இவற்றின் வேலை, உடலில் கழிவுப்பொருளில் திரவத்தை பிரித்து, சிறுநீராக வெளியேற்றுவது தான்.

அப்படி செய்யும் போது, சிறுநீரகத்தில், ஒரு வித ரசாயனம் உண்டு. ரத்தத்தில், மற்றவற்றில் உள்ள அசுத்த திரவங்களை எல்லாம் இது வெளியேற்றும். அப்படி வெளியேற்றும் போது, அவை கட்டி விடாமல், சிறுநீரகம் வழியாக வெளியேற்றும் வேலையை செய்கிறது இந்த ரசாயனம்.

ஆனால், சில காரணங்களால், சிலருக்கு சிறுநீரகத்தில் சிறுநீராக வெளியேற வேண்டியவை, மணல் போன்று சேர்ந்து, சிறிய கல்லாக உருப்பெற்று, தங்கி விடுகின்றன. இவைதான் சிறுநீரக கற்கள்.

இருபது பேரில் ஒருவருக்கு என்ற வீதத்தில், நம்மில் பலருக்கு சிறுநீரக கற்கள் பாதிப்பு உள்ளது. சிறுநீரில் உள்ள கால்சியம், மற்ற துகள்கள் தான் சேர்ந்து கற்களாக ஆகின்றன. நாம் சாப்பிடும் உணவுகள், நம் தசைகளுக்கும், எலும்புகளுக்கும் சத்துக் களை தர வேண்டும். ஆனால், சத் தில்லாத உணவுகளாக சாப் பிட்டு வந்தால், சிறுநீரில் ஒரு வித ஆசிட் உருவாகிறது. அது தான் கற்கள் உருவாக காரணம்.

ஆண்களுக்கு 40 வயதில் ஆரம்பித்து, சரியாக கவனிக்காவிட்டால், 70 வயது வரை பாடாய்படுத்தும். பெண்களுக்கு 50 வயதை தாண்டியதும் வரும்.

அறிகுறிகள் என்ன?

* இடுப்பு பகுதியில், பக்கவாட்டில் தொடர்ந்து இனம் புரியாத வலி நீடித்தபடி இருக்கும்.

* சிறுநீரில் சில சமயம் ரத்தம் சேர்ந்து வரும்.

* குளிர் ஜுரம் வரும்.

* வாந்தி வரும்.

* சிறுநீர் போகும் போது நாறும்.

* சிறுநீர் போகும் போது அந்த இடத்தில், எரிச்சல் வரும்.

எப்படி கண்டுபிடிக்கலாம்?

முன்பெல்லாம், ரத்தப்பரிசோதனை செய்தால் தெரியும். இப்போது "ஸ்கேன்' வசதி வந்து விட்டது. எக்ஸ்ரே எடுத்துப்பார்க்கலாம்.சந்தேகம் வந்தால், சிறுநீர் சோதனை செய்து பார்த்தால் உறுதியாகி விடும். சிறிய அளவில் கற்கள் இருப்பது தெரிந்தால், மருந்துகளில் , உணவுப்பழக்கங்களில் கரைத்து விடலாம்.

முத்து அளவுக்கு, தானியம் அளவுக்கு இருந்தால், அதை கரைப்பது கஷ்டம். அறுவை சிகிச்சை தான் வழி. இப்போது நவீன வழிகள் வந்துவிட்டன.

தவிர்ப்பது எப்படி?

எந்த ஒரு பிரச்னையும் வந்துவிட்டால் தான் , அதை சரி செய்வதில் தான் நாம் பலரும் சிந்திக்கிறோம். ஆனால், தவிர்ப்பது பற்றி யோசிப்பதே இல்லை. கேட்டால், "டென்ஷன்' நிறைந்த வாழ்க்கை என்பர்.

வியாதி என்று வந்துவிட்டால், எல்லாவற்றையும் முடக்கிப்போட்டு விடுமே! அது தெரியாமல் பலர் உள்ளனர்.

என்ன பரபரப்பு மிகுந்த வாழ்க்கையாக,வேலையாக இருந்தாலும், சரியான நேரத்தில் சாப்பிடுவது, சத்தான உணவுகளை சாப்பிடுவது நல்லது. சாப்பிட்டவுடன், குறிப்பிட்ட மணி நேர இடைவெளியில், தண்ணீர் குடிப்பது, உடலுக்கு மிக நல்லது. குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக கற்கள் தொல்லை இருந்தது என்றால், கண்டிப்பாக வாரிசுகள், சாதாரண அறிகுறி வந்தாலே, டாக்டரை பார்த்து பரிசோதித்துக்கொள்வது நல்லது.


நன்றி:தினமலர்

namsec
10-07-2007, 10:07 AM
ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்துவைத்து கொள்வேண்டியா அவசியமான ஒரு திரி பதித்தமைக்கு நன்றி