PDA

View Full Version : புறா கறி



ஆதவா
10-07-2007, 07:29 AM
சந்திரன் தேகத்தை
தொட்டுப் பார்த்தேனென்று
தோள்தட்டும் ஓர் நாட்டில்
அனைத்துலக மாநாடு.
ஆங்கிலத்தில் உரையாடல்கள்.

சொல்கிறார் ஒருவர்.

உலகத்தில் அமைதி
உருக்குலைந்துவிட்டது.
உண்மை, தொலைந்துவிட்டது.
உன்னதமான நாடுகளில்
உயிர்சேதம் மலிந்துவிட்டது.

வீதிகளில் பெருச்சாளிகள்
குருதி குடிக்கிறது.
துப்பாக்கிச் சத்தம்
வழக்கமாகிவிட்டது.

அச்சத்தினால் மக்கள்
அயர்ந்து போயிருக்கிறார்கள்
அண்மைக் காலங்களில்
அவலங்கள் மீண்டெழுகிறது.

ஒரே கரங்களாக நாமிணைவோம்
நெஞ்சு நிமிர்வோம்
அமைதி காப்போம்
ஆனந்த விதை விதைப்போம்.

நன்றி.

கூட்டம் கலைந்தது.
விருந்துக்கு கலந்தது.
வந்தவர்கள் எல்லாம்
விரும்பித் தின்றனர்
புறா கறியை.

aren
10-07-2007, 07:32 AM
ஐயோ!! இது அநியாயம். அமைதிப்பேச்சுவார்த்தை பேசுபவர்கள் புறாக்கறியா? நெஞ்சு கலங்குகிறது.

கவிதை அருமை. அதில் இருக்கும் அர்த்தங்கள் அதைவிட அருமை. தொடருங்கள் ஆதவா.

பென்ஸ்
10-07-2007, 07:32 AM
ஹி ஹி....
என்ன இது ஆதவா.. நகைசுவை கவிதையா....
படித்தேன்... ரசித்து சிரித்தேன்....

அந்த சமாதான புறாவின் ஒரு கால் எனக்கு கிடைக்குமா சொல்லு :−)

aren
10-07-2007, 07:38 AM
அந்த சமாதான புறாவின் ஒரு கால் எனக்கு கிடைக்குமா சொல்லு :−)

ஐயோ பாவம்!! முழுசாக தின்றாலே வயிறு நிறம்பாது. வெறும் கால் மட்டும் எம்மாத்திரம். விட்டுவிடுவோமே அந்த ஜீவனை.

அக்னி
10-07-2007, 07:38 AM
சமாதானப் புறாவை
சுவைத்தார்கள்...
சமாதான விரும்பிகளாக,
தம்மை உருவகிப்பவர்கள்...
சமாதானம் விழுங்கப்படுகின்றது...
விரும்புவர்களாலேயே...

அருமை ஆதவா... பாராட்டுக்கள்....

பென்ஸ்
10-07-2007, 07:41 AM
ஹி ஹி....
என்ன இது ஆதவா.. நகைசுவை கவிதையா....
படித்தேன்... ரசித்து சிரித்தேன்....

அந்த சமாதான புறாவின் ஒரு கால் எனக்கு கிடைக்குமா சொல்லு :−)


ஐயோ பாவம்!! முழுசாக தின்றாலே வயிறு நிறம்பாது. வெறும் கால் மட்டும் எம்மாத்திரம். விட்டுவிடுவோமே அந்த ஜீவனை.

:food-smiley-002: சரி விட்டுடுவோம்:food-smiley-002:

ஆதவா
10-07-2007, 08:00 AM
நன்றீ ஆரென் அண்ணா..... என் கவிதைக்கு நீங்க எட்டிப் பார்த்ததே கவிதையின் சிறப்பு..
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பென்ஸ் அண்ணா... இந்த கிண்டல் தானே வேணாங்கறது??// எவ்வளவு கஷ்டப்பட்டு புறாகறியை சமைச்சா அதை நீங்க நகைச்சுவை நு எடுத்துக்கிட்டீங்களே!!!! ம்ஜூம்..... ம்ஜூம்,

ஆதவா
10-07-2007, 08:00 AM
சமாதானப் புறாவை
சுவைதார்கள்...
சமாதான விரும்பிகளாக,
தம்மை உருவகிப்பவர்கள்...
சமாதானம் விழுங்கப்படுகின்றது...
விரும்புவர்களாலேயே...

அருமை ஆதவா... பாராட்டுக்கள்....

நன்றிங்க அக்னி....

ஆதவா
10-07-2007, 08:02 AM
:food-smiley-002: சரி விட்டுடுவோம்:food-smiley-002:

ஒரு காலா? இதெல்லாம் அநியாயம்.... எனக்கு ஒரு டவுட்..... ஒருவேளை நீங்க புறா கறியை ரொம்ப விரும்பி சாப்பிடுவீங்களோ?

ஷீ-நிசி
10-07-2007, 10:49 AM
ஹி ஹி....
என்ன இது ஆதவா.. நகைசுவை கவிதையா....
படித்தேன்... ரசித்து சிரித்தேன்....

அந்த சமாதான புறாவின் ஒரு கால் எனக்கு கிடைக்குமா சொல்லு :−)

ஒருக்காலும் கிடைக்காது:icon_v:

ஷீ-நிசி
10-07-2007, 10:51 AM
நல்ல முரண் கவிதை ஆதவா... நல்லவேளை புறாக்கறி தின்றார்களே... மனிதக்கறி தின்னாமல்..

(என்ன கவிதை போட்டுட்டு எஸ்கேப் ஆகிறீர்... சீக்கிரம் பழைய நிலையில் கலக்குங்கள்... வாழ்த்துக்கள் ஆதவா!)

gayathri.jagannathan
10-07-2007, 11:12 AM
என்ன ஒரு முரண்பாடு... வேதனையைத் தரும் கவிதை...

ஷீ சொன்னது போல்... மனிதனையாவது தின்னாமல் விட்டார்களே..

இனியவள்
10-07-2007, 05:28 PM
வானத்தில் பறந்த புறா
வானலியில் வதங்குகின்றது
பறக்க விட்டவர்களே
பறித்து விட்டனர் உயிரை


கவிதை அருமையோ அருமை வாழ்த்துக்கள் ஆதவா

அமரன்
10-07-2007, 05:36 PM
ஆதவா! கவிதை அருமை...
அவலங்கள் பற்றிப் பேசுவோர்
காரணம் தாமென்பதை உணர்வதில்லை.
கரன்ஸி நோட்டுகளுக்காக
அழிவாயுதங்களை பிரசவித்து
அவலங்களைப் பிறப்பிப்பதும் அவர்கள்.
சந்தையான நாடுகளில்
சண்டையை நிறுத்தாது
தூண்டுவது அவர்கள்...
<<<<<நச்சென்ற முரண் கவிதை>>>>>>>>>
பாராட்டுக்கள்...

இளசு
10-07-2007, 10:18 PM
பாராட்டுகள் ஆதவா..

தலைப்பிலும் முதல் பத்தியிலும்
இறுதி முரணை உடனே ஊகிக்க முடிகிறது..

(இக்கவிதை படித்து, பழைய சுஜாதா சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்தது..
ஓர் இளைஞன்.. அவன் தெருவுக்குக் குடிவரும் அழகிய குடும்பத்தில் மிக மிக மிக..அழகான இரு பருவப்பெண்கள்..சகோதரிகள்..

நகம் வெட்டிப்பராமரிப்பதில் இருந்து.. கூந்தல், உடை, நடை, பாவனை, − எல்லாம் எல்லாம் நளினம்..சுகந்தம்.. உறுத்தா மென்நாகரிகம்..
குரல்... பேச்சு, புன்னகை − எல்லாமே இனிமை..
தோட்டச்செடிகளிடம் காட்டும் பரிவு, வளர்க்கும் மயில்களிடம் காட்டும் சிநேகம்.. எல்லாமே மனித நேய உச்சம்!

இவர்களிடம் அவன் மயங்கியது போக
இவனால் அவர்களும் கவரப்பட்டு
அவனைச் சிறப்பாய் உபசரிக்க
அவர்கள் வீட்டில் விருந்து..

அது முடிந்து , அவர்கள் தோட்டத்தில் உலாவும்போது
அவன் மயில்களைத் தேட..
................
...................

ஓ.ஹென்றி பாணி அதிரவைக்கும் கதை..
படித்து பலப்பல ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் மறக்கவில்லை!)

aren
11-07-2007, 03:01 AM
நன்றீ ஆரென் அண்ணா..... என் கவிதைக்கு நீங்க எட்டிப் பார்த்ததே கவிதையின் சிறப்பு..
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−


ஆதவா, எனக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியும். அவ்வளவே. உங்கள் மாதிரி கவிதை ஞானமெல்லாம் கிடையாது. அதனாலேயே கவிதையைப் படித்துவிட்டு அதன் அர்த்தத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் ஏதாவது கருத்து சொல்லிவிட்டால் என்னசெய்வது என்ற பயத்தாலேயே நான் இந்த பக்கம் அவ்வளவாக வருவதில்லை. சில சமயங்களில் கொஞ்சம் தைரியம் வந்து என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். சில கவிதைகள் புரியும், பல கவிதைகள் புரியாது. ஆகையால் புரிந்த கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுவேன். உங்கள் கவிதை புரிந்தலையும் மீறி என் கல் நெஞ்சையும் கசக்கிவிட்டது. அதனாலேயே பின்னூட்டம் இட்டேன்.

நான் இங்கே வருவதில்லையென்பதன் காரணம் இப்பொழுது மக்களுக்கு புரிந்திருக்கும். என்னை மன்னித்துவிடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
11-07-2007, 03:39 AM
ஆதவா ஆழமாக இரசித்தேன் விளக்கமாக பின்னூட்டம் போட நினைத்தேன் முடியவில்லை.(அலுவலகத்தில் இருந்து பின்னூட்டமிடுகிறேன் இப்போது). அண்ணாவின் அழகான விமர்சனம் இந்த திரிக்கு மேலும் அழகு சேர்கிறது!

அருமையாக இருக்கிறது ஆதவா பாராட்டுக்கள்.........

ஓவியன்
11-07-2007, 03:42 AM
சில கவிதைகள் புரியும், பல கவிதைகள் புரியாது. ஆகையால் புரிந்த கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுவேன். உங்கள் கவிதை புரிந்தலையும் மீறி என் கல் நெஞ்சையும் கசக்கிவிட்டது. அதனாலேயே பின்னூட்டம் இட்டேன்.

நான் இங்கே வருவதில்லையென்பதன் காரணம் இப்பொழுது மக்களுக்கு புரிந்திருக்கும். என்னை மன்னித்துவிடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அண்ணா!, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரிப் புரிவது தானே கவிதைகள், தாங்கள் தங்களுக்குப் புரிந்ததை கூறினால் வித்தியாசமான ஒரு களம், கவிதைக்குக் கிடைக்குமல்லவா!

இது என் கருத்து தவறென்றால் மன்னித்துவிடுங்கள் அண்ணா!

உங்களை அடிக்கடி
இங்கே எதிர் பார்க்கும்

ஓவியன்!.

aren
11-07-2007, 04:59 AM
அண்ணா!, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரிப் புரிவது தானே கவிதைகள், தாங்கள் தங்களுக்குப் புரிந்ததை கூறினால் வித்தியாசமான ஒரு களம், கவிதைக்குக் கிடைக்குமல்லவா!

இது என் கருத்து தவறென்றால் மன்னித்துவிடுங்கள் அண்ணா!

உங்களை அடிக்கடி
இங்கே எதிர் பார்க்கும்

ஓவியன்!.

மக்கள் திட்டாமல் இருந்தால் நிச்சயம் வருகிறேன், பின்னூட்டம் இடுகிறேன்.

ஓவியன்
11-07-2007, 05:16 AM
மக்கள் திட்டாமல் இருந்தால் நிச்சயம் வருகிறேன், பின்னூட்டம் இடுகிறேன்.

ஆகா!

நாங்கள் ஏன் திட்டப் போகிறோம்!

வாருங்கள் தாராளமாக......

ஆவலுடன் :nature-smiley-008:

ஓவியன்!.

பிச்சி
11-07-2007, 06:12 AM
எனக்கு புரியலையே? ஏன் கவிதை பாதியொடு நின்றுவிட்டது?

ஷீ-நிசி
11-07-2007, 06:27 AM
எனக்கு புரியலையே? ஏன் கவிதை பாதியொடு நின்றுவிட்டது?


தேசத்தில் அமைதி வரவேண்டும் என்று கூடிய தலைவர்கள் மாநாடு முடிந்தபிறகு அவர்களுக்கு அளித்த விருந்தில் புறாவின் கறி பரிமாறப்பட்டது...

புறா - அமைதிக்கும் சமாதானத்துக்கும் குறிக்கபடுகிறது...

புரிகிறதா பிச்சி.. முரண் கவிதை....

அமைதியை பற்றி பேசுகிறவன் புறா கறி தின்னக்கூடாதா என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் அதற்கு பதில் என்னிடம் இல்லை... :)

மதி
11-07-2007, 06:36 AM
நல்ல முரண் கவிதை ஆதவா..
தொடருங்கள்..!

மனோஜ்
11-07-2007, 07:11 AM
சமாதன எடுத்துகாட்டு இன்று சமைக்க பயண்பட்டுவிட்டது பாவம் தான்
அருமை ஆதவா

lolluvathiyar
11-07-2007, 07:36 AM
அருமையான கவிதை, உன்மையை எடுத்து காட்டிய கரு



உலகத்தில் அமைதி
உருக்குலைந்துவிட்டது.

துப்பாக்கிச் சத்தம்
வழக்கமாகிவிட்டது.


துப்பாக்கி விற்றவர்கள் இப்படியும் சொல்லி மீண்டும் வேறு ஒருவருக்கு துப்பாக்கி விற்பார்கள். இதுவும் ஒரு வியாபர தந்திரமே


சமாதானப் புறாவை
சுவைத்தார்கள்...

புறா கறி சாப்பிடுவது தப்புங்களா.
(புறா அப்படி ஒன்னும் ருசியா இருக்காது. சாப்பிட கெட்டியா இருக்கும். சரியா சீரனம் ஆகாது)



அவலங்கள் பற்றிப் பேசுவோர்
காரணம் தாமென்பதை உணர்வதில்லை.

அவர்கள் தெளிவாக உனர்ன்து தான் வியாபரம் பன்னுகிறார்கள்



கரன்ஸி நோட்டுகளுக்காக
அழிவாயுதங்களை பிரசவித்து
அவலங்களைப் பிறப்பிப்பதும் அவர்கள்.
சந்தையான நாடுகளில்
சண்டையை நிறுத்தாது
தூண்டுவது அவர்கள்...


ஆனால் இதை நாம் தான் உனர்வதில்லை. மீண்டும் அவர்களையே நம்புகிறோம்.

ஆதவா
14-07-2007, 06:21 PM
புறா கறி உண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.....

சிவா.ஜி
15-07-2007, 04:15 AM
புறாக்கறியை தின்றுவிட்டு மனித ரத்தத்தை குடிக்கும் கழுகுகள் அவர்கள். கற்பைப்பற்றி அதிகமாக பேசுபவள்தான் கற்பில்லாதவளாக இருப்பாள் என்று சொல்வார்கள. அதுபோல அமைதியைப்பற்றி அதிகம் பேசும் இப்படிப்பட்டவர்கள்தான் உலகெங்கும் அமைதியை குலைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். எல்லாம் ஒருநாள் மாறும் இதே கழுகுகள் புறாக்களுக்கு இரையாகும். சிந்திக்கவைத்த கவிதை. பாராட்டுக்கள் ஆதவா.

ப்ரியன்
16-07-2007, 01:25 PM
அன்பின் ஆதவா,

அருமையான கவிதை...வாழ்த்துக்கள்...

/*

சந்திரன் தேகத்தை
தொட்டுப் பார்த்தேனென்று
தோள்தட்டும் ஓர் நாட்டில்
அனைத்துலக மாநாடு.
ஆங்கிலத்தில் உரையாடல்கள்.

சொல்கிறார் ஒருவர்.

*/

இதில் இந்த வரிகள் தேவை இல்லை என்பது என் கருத்து

/*ஆங்கிலத்தில் உரையாடல்கள்.

சொல்கிறார் ஒருவர்.*/

இதுவும்.

/*நன்றி.*/

உலகத்தில் அமைதி
உருக்குலைந்துவிட்டது.
உண்மை, தொலைந்துவிட்டது.
உன்னதமான நாடுகளில்
உயிர்சேதம் மலிந்துவிட்டது.

வீதிகளில் பெருச்சாளிகள்
குருதி குடிக்கிறது.
துப்பாக்கிச் சத்தம்
வழக்கமாகிவிட்டது.

அச்சத்தினால் மக்கள்
அயர்ந்து போயிருக்கிறார்கள்
அண்மைக் காலங்களில்
அவலங்கள் மீண்டெழுகிறது.

ஒரே கரங்களாக நாமிணைவோம்
நெஞ்சு நிமிர்வோம்
அமைதி காப்போம்
ஆனந்த விதை விதைப்போம்.

என்ற உரத்த குரலோடு
முடிந்த*து உரை...

இப்படி இருக்கலாம்...

அதேப் போல்

*ஓர் நாட்டில்* அல்ல ஒரு நாட்டில் தான் சரி

உயிர்மெய்க்கு முன்னால் ஓர் என இடக்கூடாது...

ஓவியன்
16-07-2007, 05:13 PM
உயிர்மெய்க்கு முன்னால் ஓர் என இடக்கூடாது...

ஆகா!

இப்படியெல்லாம் விடயங்கள் இருக்கா?

உங்களது ஒவ்வொரு பதிவுகளும் உங்களை அடிக்கடி மன்றத்தில் பார்க்க முடியாதா என்று ஏண்க்க வைக்குதே!!!!!!!!!!!!!!

ஆதவா
20-07-2007, 07:29 PM
மிகவும் நன்றி மக்களே....

ஆதவா
20-07-2007, 07:30 PM
தாமத நன்றியறிவுப்புக்கு மன்னிக்க மக்களே...

அனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றி.

நன்றிங்க பிரியன்..... குறைகள் சுட்டியது எனது வளர்ச்சிக்கு உதவும்.........