PDA

View Full Version : நிழல் + நிஜம்

இனியவள்
09-07-2007, 05:37 PM
கனவாக நீ வந்தால்
அணைக்கின்றேன் நான்
அன்றும் இன்றும்
உன்னை காதலிப்பதால்....

நிஜத்தில் நீ வந்தால்
வெறுக்கின்றேன் இன்னொருத்தியின்
கணவன் அல்லவா நீ
இன்று....

நிழலாக உன்னை
தொடர்கின்றேன்
காதலியாக...

நிஜமாக என்னை
மறைக்கின்றேன் ஒரு
பெண்ணாக....

அன்புரசிகன்
09-07-2007, 05:40 PM
உங்கள் வார்த்தை நிழல்
உங்கள் நினைப்பு நிஜம்...

வாழ்த்துக்கள் இனியவளே............

ஓவியன்
09-07-2007, 05:49 PM
கனவாக நீ வந்தால்
அனைக்கின்றேன் நான்
அன்றும் இன்றும்
உன்னை காதலிப்பதால்....
காதல் என்றாலே அது தானே − ஒரு முறை நினைத்து விட்டாலே இறக்கும் வரை இதயத்தில் எழுதிய உறவுகள் மறைவதில்லை.

நிஜத்தில் நீ வந்தால்
வெறுக்கின்றேன் நீ
இன்னொருத்தியின் கணவன்
அல்லவா இன்று....
உங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் − வாழ்த்துக்கள்!.

நிஜமாக என்னை
மறைக்கின்றேன் ஒரு
பெண்ணாக....

ம்ம்ம்ம்!!!

மிகக் கொடுமையான விடயம்.......

உங்கள் வலிகளைக் கொட்டித் தீர்த்து எங்களையும் கலங்க வைத்து வீட்டீர்களே இனியவள்!.

மீனாகுமார்
09-07-2007, 06:47 PM
அடடா... ஒரே குழப்பமாக உள்ளது... ஆனாலும் நிஜமாகவும் உள்ளது... இப்படி உண்மையாகவே மாட்டிக்கொண்டால் கடினம் தான்.....

வாழ்த்துக்கள்...

அக்னி
09-07-2007, 06:50 PM
அழுந்த பதிந்தால்தான் சுவடுகள் அழுத்தாமாய்ப் பதியும்...
காதலின் பிரிவின் சுவடு அழுத்தமாக தெளிவாகத் தெரியும் கவிதை...

இளசு
09-07-2007, 07:18 PM
நிழலும் நிஜமும் ஒன்றாகும் தினம் வரைக்கும்
நித்தமும் இருக்கும் இந்த ஊசலாட்டம்..

பிணைக்கும் வரை காதல் இரும்புச்சங்கிலி..
பிரிந்துவிட்டால் அதுவே வெறும் நூலாம்படை!

கிட்டாதாயின் வெட்டென மற..
விட்டு விடுதலையாகி மனமே பற!!!

இனியவள்
09-07-2007, 07:36 PM
உங்கள் வார்த்தை நிழல்
உங்கள் நினைப்பு நிஜம்...
வாழ்த்துக்கள் இனியவளே............

நன்றி அன்பு உங்கள் வாழ்த்துக்கு

வார்த்தகள் நிஜமென நம்பி
நினைவுகளை உயிர் வரை
சுமந்து உருகுகின்றேன்
சூட்டில் உருகும் பனி
மலை போல்

இனியவள்
09-07-2007, 07:38 PM
காதல் என்றாலே அது தானே − ஒரு முறை நினைத்து விட்டாலே இறக்கும் வரை இதயத்தில் எழுதிய உறவுகள் மறைவதில்லை.

உங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் − வாழ்த்துக்கள்!.

ம்ம்ம்ம்!!!
மிகக் கொடுமையான விடயம்.......

உங்கள் வலிகளைக் கொட்டித் தீர்த்து எங்களையும் கலங்க வைத்து வீட்டீர்களே இனியவள்!.

நன்றி ஓவியன்
ஆழமாய் படித்து அழகாய் தீட்டி இருக்கின்றீர்கள் உங்கள் பின்னூட்டத்தை
நன்றி

இனியவள்
09-07-2007, 07:39 PM
அடடா... ஒரே குழப்பமாக உள்ளது... ஆனாலும் நிஜமாகவும் உள்ளது... இப்படி உண்மையாகவே மாட்டிக்கொண்டால் கடினம் தான்.....

வாழ்த்துக்கள்...

நன்றி மீனாகுமார் உங்கள் வாழ்த்துக்கு

அழுந்த பதிந்தால்தான் சுவடுகள் அழுத்தாமாய்ப் பதியும்...காதலின் பிரிவின் சுவடு அழுத்தமாக தெளிவாகத் தெரியும் கவிதை...

நன்றி அக்னி

இனியவள்
09-07-2007, 07:42 PM
நிழலும் நிஜமும் ஒன்றாகும் தினம் வரைக்கும்
நித்தமும் இருக்கும் இந்த ஊசலாட்டம்..
பிணைக்கும் வரை காதல் இரும்புச்சங்கிலி..
பிரிந்துவிட்டால் அதுவே வெறும் நூலாம்படை!
கிட்டாதாயின் வெட்டென மற..
விட்டு விடுதலையாகி மனமே பற!!!

அருமையான கவி மனதை லேசாக்குகின்றது நன்றி இளசு அண்ணா...

சிறகை விரித்து
பறக்க நினைத்தேன்
பறவையாய் உன்னை
மறந்து

நினைவுகள் காற்றாய்
வந்து அழுத்துகின்றன
சிறகை பறக்க முடியாமல்

gayathri.jagannathan
10-07-2007, 04:02 AM
அருமையான கவி மனதை லேசாக்குகின்றது நன்றி இளசு அண்ணா...

சிறகை விரித்து
பறக்க நினைத்தேன்
பறவையாய் உன்னை
மறந்து

நினைவுகள் காற்றாய்
வந்து அழுத்துகின்றன
சிறகை பறக்க முடியாமல்

கவிதைக்கு வாழ்த்துக்கள் இனியவள்...
காலம், எல்லா ரணங்களையும் ஆற்றும் ஒரு அற்புத மருத்துவர்... இன்றில்லாவிடிலும் என்றாவது ஒரு நாள் சிறகு விரிக்கத்தானே வேண்டும்?

ஆதவா
10-07-2007, 08:26 AM
கவிதையும் இளசு அண்ணாவின் விமர்சனமும் அழகு...

இனியவள்
10-07-2007, 09:08 AM
கவிதைக்கு வாழ்த்துக்கள் இனியவள்...
காலம், எல்லா ரணங்களையும் ஆற்றும் ஒரு அற்புத மருத்துவர்... இன்றில்லாவிடிலும் என்றாவது ஒரு நாள் சிறகு விரிக்கத்தானே வேண்டும்?

நன்றி காயத்ரி அக்கா

கவிதையும் இளசு அண்ணாவின் விமர்சனமும் அழகு...

நன்றி ஆதவா

lolluvathiyar
11-07-2007, 08:12 AM
நிஜம் எல்லையை வகுத்து விட்டது தாண்ட முடியாது,
ஆனால் கவிதையில் கூட எல்லை தான்டமல் இருகிறீர்கள்

அமரன்
21-07-2007, 09:16 AM
இனியவள் கவிதை இப்படி வார்த்தைகள் குறைந்து இருக்கும்போது படிக்க இலகுவாக இருக்கு. நிழல்-நிஜம் அழகான ஒப்பீடு. இன்னொருத்தியின் கணவன் என்ற உடன் வெறுப்பது தப்பல்லவா? வெறுக்க வேண்டியது காரணத்தை அவனை அல்ல. காதலியாக தொடர்ந்து பெண்ணாக மறைவது கவர்ந்துள்ளது. பாராட்டுகள்.

இனியவள்
21-07-2007, 10:47 AM

நன்றி அமர்...