PDA

View Full Version : எனக்குள் ?? ...



அக்னி
09-07-2007, 05:05 PM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/My%20poems/j5.jpg

எனக்குள் இரு வினாக்கள்,
என்னவளே..!

என் இதயம்
உன்னைச் சேர்ந்ததால்..,
என் ஆத்மம்
உன்னையே தொடர்வதால்..,
நீயே சொல்லிவிடு..!

எதுவரை நீளப்போகின்றது
உன் மெளனம்..?
அதுவரை காத்திருக்குமா
என் மரணம்..?

அன்புரசிகன்
09-07-2007, 05:10 PM
மரணம் எப்போது
யாரறிவார்?
இன்று என்பது இப்பொழுது
வாழ்ந்துவிடுங்கள் காதலுடன்.

அக்னி
09-07-2007, 05:15 PM
மரணம் எப்போது
யாரறிவார்?
இன்று என்பது இப்பொழுது
வாழ்ந்துவிடுங்கள் காதலுடன்.

காதலுடன் வாழ்வதற்கு,
காத்திருக்கலாம்...
காதல் வருமா வராதா
என்று பார்த்திருக்கலாமா?

அன்புரசிகன்
09-07-2007, 05:22 PM
காதல் வருமா வராதா
என்று பார்த்திருக்கலாமா?

பிச்சை வேண்டாம்
அக்னியைப்பிடியுங்கள்...

(உங்கள் விடைக்கு பதில் விரைவில் வரும்... வேறொருவரின் கவியாக)

இனியவள்
09-07-2007, 05:23 PM
காதலுடன் வாழ்வதற்கு,
காத்திருக்கலாம்...
காதல் வருமா வராதா
என்று பார்த்திருக்கலாமா?

காதல் வருமா
வராத என காத்திருப்பதில்
தானே இன்பம் அதிகம்
துன்பத்தை விட

இனியவள்
09-07-2007, 05:25 PM
காத்திருக்க சொன்னால்
காத்திருக்கின்றேன் நீ
என்னைக் காதலிக்கின்றாய்
என்ற ஓர் வார்த்தையைக்
கேட்பதற்காய் ஓராயிரம்
ஆண்டுகள் வேணும் என்றாலும்
காத்திருப்பேன் உன்னை
உயிராய் நினைத்து...


கவி அருமையோ அருமை அக்னி வாழ்த்துக்கள்

அக்னி
09-07-2007, 05:51 PM
பிச்சை வேண்டாம்
அக்னியைப்பிடியுங்கள்...

(உங்கள் விடைக்கு பதில் விரைவில் வரும்... வேறொருவரின் கவியாக)
இதத்தானே எதிர்பார்த்தீங்க.... சந்தோஷமா..?

காதல் வருமா
வராத என காத்திருப்பதில்
தானே இன்பம் அதிகம்
துன்பத்தை விட
காத்திருக்கும் காலத்தில்,
கழுத்தைத் திருகுகின்றதே,
உன் மௌனம்...

காத்திருக்க சொன்னால்
காத்திருக்கின்றேன் நீ
என்னைக் காதலிக்கின்றாய்
என்ற ஓர் வார்த்தையைக்
கேட்பதற்காய் ஓராயிரம்
ஆண்டுகள் வேணும் என்றாலும்
காத்திருப்பேன் உன்னை
உயிராய் நினைத்து...


கவி அருமையோ அருமை அக்னி வாழ்த்துக்கள்
ஒரு வினாடி
என்னைக் காதலி... போதும்...
ஓராயிரம் ஆண்டுகள்
காத்திருக்க வைக்காதே...

நன்றி அன்புரசிகருக்கும், இனியவளுக்கும்...

இனியவள்
09-07-2007, 05:54 PM
காத்திருக்க சொன்னால்
மெளனமாக இருந்து
என்னை கொல்லாதே
என்கின்றாய் காதலைச்
சொன்ன பின் குடும்பத்தைக்
காட்டி பிரிந்து என்னை
அல்லவா கொண்டு விட்டு
செல்கின்றாய்.....

அக்னி
09-07-2007, 06:00 PM
காத்திருக்க சொன்னால்
மெளனமாக இருந்து
என்னை கொல்லாதே
என்கின்றாய் காதலைச்
சொன்ன பின் குடும்பத்தைக்
காட்டி பிரிந்து என்னை
அல்லவா கொண்டு விட்டு
செல்கின்றாய்.....

கொண்டு விட்டேன்,
உன் காதலை...
கொன்று விட்டாய்,
என்னையே...

பிழைவிட்டால், கிட்டும் அக்னிக்கு, தப்பும் வழி...

இனியவள்
09-07-2007, 06:03 PM
கொண்டு விட்டேன்,
உன் காதலை...
கொன்று விட்டாய்,
என்னையே...
பிழைவிட்டால், கிட்டும் அக்னிக்கு, தப்பும் வழி...

உன் காதலை சொல்லி
உன்னை நீ உயிர்ப்பித்துக்
கொண்டாய் என்னையல்லவா
பிணம் போல் ஆக்கிவிட்டு
சென்றுவிட்டாய்...

ஹீ ஹீ அக்னி

அக்னி
09-07-2007, 06:10 PM
உன் காதலை சொல்லி
உன்னை நீ உயிர்ப்பித்துக்
கொண்டாய் என்னையல்லவா
பிணம் போல் ஆக்கிவிட்டு
சென்றுவிட்டாய்...

ஹீ ஹீ அக்னி

என் காதல் சொன்னதும்தானே,
சொன்னாய்,
உன் காதல் நட்பென்ற காதலென்று...
பிணம் போலானது நட்பான காதலில் நீ...
பிணமேயானது நடக்காத காதலில் நான்...

ஓவியன்
09-07-2007, 06:14 PM
எனக்குள் இரு வினாக்கள்,
என்னவளே..!

என் இதயம்
உன்னைச் சேர்ந்ததால்..,
என் ஆத்மம்
உன்னையே தொடர்வதால்..,
நீயே சொல்லிவிடு..!

எதுவரை நீளப்போகின்றது
உன் மெளனம்..?
அதுவரை காத்திருக்குமா
என் மரணம்..?


சாதல் வரை
சாகாதிருப்பது தானே காதல்!

அக்னி!

இங்கே மெளனத்தைச் சம்மதமாகக் கொள்ள முடியாதா? :sport-smiley-018:

ஓவியன்
09-07-2007, 06:17 PM
என் காதல் சொன்னதும்தானே,
சொன்னாய்,
உன் காதல் நட்பென்ற காதலென்று...
பிணம் போலானது நட்பான காதலில் நீ...
பிணமேயானது நடக்காத காதலில் நான்...

நட்பு என்ற
போர்வைக்குள்
நம் காதல் சிக்குமென்று
அறிந்திருந்தால்!
அன்றே உதறியிருப்பேன்
நட்பை!!!
அதைக் கேவலப்படுத்தக் கூடாதென்று!

இனியவள்
09-07-2007, 06:18 PM
என் காதல் சொன்னதும்தானே,
சொன்னாய்,
உன் காதல் நட்பென்ற காதலென்று...
பிணம் போலானது நட்பான காதலில் நீ...
பிணமேயானது நடக்காத காதலில் நான்...

காதலையும் நட்பினையும்
பிரித்தறிந்து பார் அன்பே
நட்பு அன்பால் உருவாகி
அன்பால் வளர்வது....
காதல் உயிரால் உருப்பெற்று
உணர்வில் வலுப்பெற்று
உயிராய் உறைந்து போவது..

இனியவள்
09-07-2007, 06:19 PM
நட்பு என்ற
போர்வைக்குள்
நம் காதல் சிக்குமென்று
அறிந்திருந்தால்!
அன்றே உதறியிருப்பேன்
நட்பை!!!
அதைக் கேவலப்படுத்தக் கூடாதென்று!

உதறித் தள்ளுவதற்கு
நட்பு என்ன காலில்
போடும் செருப்பைப்
போன்றதா உடலில்
இருக்கும் தோலைப்
போன்றதல்லவா

ஓவியன்
09-07-2007, 06:34 PM
உதறித் தள்ளுவதற்கு
நட்பு என்ன காலில்
போடும் செருப்பைப்
போன்றதா உடலில்
இருக்கும் தோலைப்
போன்றதல்லவா

தோலையும் மாத்தலாம்!

ஒரு கூடை சண் லைட்!
ஒரு கூடை மூன் லைட்!

பாக்கலியோ − ஹீ!,ஹீ!:sport-smiley-018: :grin:

அக்னி
09-07-2007, 06:37 PM
சாதல் வரை
சாகாதிருப்பது தானே காதல்!

அக்னி!

இங்கே மெளனத்தைச் சம்மதமாகக் கொள்ள முடியாதா? :sport-smiley-018:

மதம் பிடிக்க வைக்காதீர்கள்...

இனியவள்
09-07-2007, 06:37 PM
தோலையும் மாத்தலாம்!
ஒரு கூடை சண் லைட்!
ஒரு கூடை மூன் லைட்!
பாக்கலியோ − ஹீ!,ஹீ!:sport-smiley-018: :grin:

கற்பனை உலகில் சஞ்சரித்து
கற்பனைகளை நிஜம் என
நினைத்து நிஜத்தை ஓதுக்காதே

இப்ப என்ன சொல்றீங்கள் :music-smiley-010:

இளசு
09-07-2007, 08:27 PM
தவணை முறையில் சிறுசிறு மரணம் − மௌனத்தால்..
தாவணி விசிறலில் மறுபடி ஜனனம் − அவள் ஜாடைகளால்..

காதலில் எல்லாமே சாத்தியம்..
கவிப்புயல் அக்னிமேல் சத்தியம்!

அமரன்
09-07-2007, 10:46 PM
வாழ்த்துக்கள் அக்னி. காதல் கவிதைகளில் பின்னுகின்றீர்கள். உங்களுக்குச் சரியான போட்டியாக இனியவள், ஓவியனுடன் அன்புவும் இணைந்து விட்டார். மூவரையும் சமாளித்து சமராடிவிட்டீர்களே. பாராட்டுகள் அனைவருக்கும்.

அக்னி
10-07-2007, 07:43 AM
கற்பனை உலகில் சஞ்சரித்து
கற்பனைகளை நிஜம் என
நினைத்து நிஜத்தை ஓதுக்காதே

இப்ப என்ன சொல்றீங்கள் :music-smiley-010:

கற்பனைகளையும் நிஜங்களாக்கும்,
விற்பன்னம் நிகழும் உலகம்...

அக்னி
10-07-2007, 07:46 AM
தவணை முறையில் சிறுசிறு மரணம் − மௌனத்தால்..
தாவணி விசிறலில் மறுபடி ஜனனம் − அவள் ஜாடைகளால்..

காதலில் எல்லாமே சாத்தியம்..
கவிப்புயல் அக்னிமேல் சத்தியம்!
நன்றி அண்ணா!

மௌனத்தால் கொள்ளும் மரணம்...
உன் கண் ஜாடைகள் கிட்டின்,
பாடையே எனக்கு,
ஜனனிக்கும் தொட்டில்...

வாழ்த்துக்கள் அக்னி. காதல் கவிதைகளில் பின்னுகின்றீர்கள். உங்களுக்குச் சரியான போட்டியாக இனியவள், ஓவியனுடன் அன்புவும் இணைந்து விட்டார். மூவரையும் சமாளித்து சமராடிவிட்டீர்களே. பாராட்டுகள் அனைவருக்கும்.
நன்றி!
இந்தக் கதை எல்லாம் சரி...
எங்கே கவிதைக் கருத்து..?

அமரன்
10-07-2007, 09:30 AM
நன்றி அண்ணா!

மௌனத்தால் கொள்ளும் மரணம்...
உன் கண் ஜாடைகள் கிட்டின்,
பாடையே எனக்கு,
ஜனனிக்கும் தொட்டில்...

நன்றி!
இந்தக் கதை எல்லாம் சரி...
எங்கே கவிதைக் கருத்து..?

இருங்கப்பு வருகின்றேன். கொஞ்சம் பிசி.

சூரியன்
10-07-2007, 09:36 AM
சிறப்பான படைப்பு அக்னி

அக்னி
10-07-2007, 09:39 AM
இருங்கப்பு வருகின்றேன். கொஞ்சம் பிசி.
கருத்துக்கு கவிதை அல்ல...
கருத்துக் கவிதை...
கருத்தில் கொள்ளுங்கள்...

சிறப்பான படைப்பு அக்னி
நன்றி சூரியன்...

அமரன்
10-07-2007, 10:59 AM
எனக்குள் இரு வினாக்கள்,
என்னவளே..!

என் இதயம்
உன்னைச் சேர்ந்ததால்..,
என் ஆத்மம்
உன்னையே தொடர்வதால்..,
நீயே சொல்லிவிடு..!

எதுவரை நீளப்போகின்றது
உன் மெளனம்..?
அதுவரை காத்திருக்குமா
என் மரணம்..?



இதயத்தை தந்துவிட்டு
மரணிக்க முடியுமா...
ரணமாக்க போவதை
கோடிட்டி காட்டுகிறாய்.

புரிந்துகொண்டேன்

வயப்பட்ட நீ
வசமிருக்கும் வரையே
சுவாசம்
வசமிருக்கும்.

மௌனம் கலைத்து
மனம் திறந்தால்
தியானம் கலைத்து
மனம் மாற்றிவிடுவாய்.

ஆத்மத்தின் திருப்திக்காக
ஆபத்தில் சிக்கமாட்டேன்.
வசமாகும் காலம் வரை
எசப்பாட்டாகும் மௌனம்.....


(ஏப்பா எனக்கு காதல் கவிதை வராது. தப்பாயின் மன்னித்து விடுங்கள்=)

அக்னி
21-07-2007, 11:34 AM
(ஏப்பா எனக்கு காதல் கவிதை வராது. தப்பாயின் மன்னித்து விடுங்கள்=)

அப்புறம் எங்கிருந்து வந்ததாம்..?
மன்னிக்கமுடியாது... காதல் கவிதைகளை, முளைக்கவிடாது தடுக்கும் உம்மை...

theepa
21-07-2007, 10:40 PM
நன்பரே காதல் வரும் என்டால் கத்திருக்கலாம் ஆனால் காதலே வராது எண்டு தெரிந்தால் காத்திருப்பை நிருத்தி விடுரது புத்திசாலி தனம்

அன்புடன்
லதுஜா

அமரன்
22-07-2007, 08:41 AM
அப்புறம் எங்கிருந்து வந்ததாம்..?
மன்னிக்கமுடியாது... காதல் கவிதைகளை, முளைக்கவிடாது தடுக்கும் உம்மை...

நான் தடுக்கவில்லை அக்னி. சமுதாயம் தடுக்கிறது.

சிவா.ஜி
22-07-2007, 08:54 AM
நான் தடுக்கவில்லை அக்னி. சமுதாயம் தடுக்கிறது.

அக்னி இருக்கும் வரை காதலையும் காதல் கவிதைகளையும் யாராலும் தடுக்க முடியாது.

அமரன்
22-07-2007, 08:55 AM
அக்னி இருக்கும் வரை காதலையும் காதல் கவிதைகளையும் யாராலும் தடுக்க முடியாது.

ஹா....ஹா....காதல் இருக்கும் வரை அக்னியையும் தடுக்க முடியாது..

ஆதவா
22-07-2007, 09:21 AM
எனக்குள் இரு வினாக்கள்,
என்னவளே..!

என் இதயம்
உன்னைச் சேர்ந்ததால்..,
என் ஆத்மம்
உன்னையே தொடர்வதால்..,
நீயே சொல்லிவிடு..!

எதுவரை நீளப்போகின்றது
உன் மெளனம்..?
அதுவரை காத்திருக்குமா
என் மரணம்..?


நீளாத மெளனத்திற்கும் வாராத மரணத்திற்கும் அவள் ஒரு வார்த்தை ஒன்றே போதுமானது இல்லையா அக்னி?

மறைமுகமாக காதலைச் சொல்லடி என்று சொல்வது கவிதையில் தென்படுகிறது. சொன்னவிதம் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள் அக்னி.

இன்பா
22-07-2007, 12:47 PM
நல்ல கவிதை....

பதில் கவிதைகளும் அருமை...

இதயம்
22-07-2007, 12:57 PM
தோலையும் மாத்தலாம்!

ஒரு கூடை சண் லைட்!
ஒரு கூடை மூன் லைட்!

பாக்கலியோ − ஹீ!,ஹீ!:sport-smiley-018: :grin:

செருப்பை மாற்றினால் அது சாதாரண நிகழ்வு. தோலை மாற்றுதல் தனித்தன்மை இழப்பு..!! அந்த நிகழ்வு சாமான்யமானதல்ல..!!

theepa
25-07-2007, 08:50 PM
உன் காதலை அவள் புரிந்து கொள்ளும் வரை நீளல போகிறது அவள் மெளனம் ... அவள் உன்னிடம் தன் காதலை சொல்லும் வரை நிச்சயம் உன் உயிர் உன்னிடமே இருக்கும் வாழ்த்துக்கள்

அக்னி
27-09-2007, 08:57 AM
நீளாத மெளனத்திற்கும் வாராத மரணத்திற்கும் அவள் ஒரு வார்த்தை ஒன்றே போதுமானது இல்லையா அக்னி?

மறைமுகமாக காதலைச் சொல்லடி என்று சொல்வது கவிதையில் தென்படுகிறது. சொன்னவிதம் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள் அக்னி.
ஆமாம் ஆதவா...
காதல் மொழி, காதலிப்போருக்கு, வாழும் வழியல்லவா...
வாழ்த்துக்கு நன்றி...

நல்ல கவிதை....

பதில் கவிதைகளும் அருமை...
மிக்க நன்றி வரிப்புலி அவர்களே.., அனைவர் சார்பாகவும்...

செருப்பை மாற்றினால் அது சாதாரண நிகழ்வு. தோலை மாற்றுதல் தனித்தன்மை இழப்பு..!! அந்த நிகழ்வு சாமான்யமானதல்ல..!!
உண்மைதான் இதயம்...
மனிதனின் இயல்பான தன்மைகள் விஞ்ஞானம் என்ற போர்வையில்,
புதைக்கபடுகின்றன...

உன் காதலை அவள் புரிந்து கொள்ளும் வரை நீளல போகிறது அவள் மெளனம் ... அவள் உன்னிடம் தன் காதலை சொல்லும் வரை நிச்சயம் உன் உயிர் உன்னிடமே இருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தீபா...