PDA

View Full Version : காத்திருப்பு..!



அக்னி
09-07-2007, 05:00 PM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/My%20poems/j6.jpg

என் நெற்றி
காத்திருக்கின்றது..,
உன் இதழின்
ஈரத்திற்காய்...

என் சுவாசம்
காத்திருக்கின்றது..,
உன் மூச்சின்
வெப்பத்திற்காய்...

என் இதயம்
காத்திருக்கின்றது..,
உன் இதயத்தின்
அதிர்விற்காய்...

என் உயிரே
காத்திருக்கின்றது..,
உன்னை உயிராய்
சுமப்பதற்காய்...

அன்புரசிகன்
09-07-2007, 05:08 PM
நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?

அழகான வரிகள்...

அக்னி
09-07-2007, 05:16 PM
நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?

அழகான வரிகள்...

அதான் மேலே சொல்லி இருக்கோமில்ல...

நன்றி ரசிகா...

இனியவள்
09-07-2007, 05:19 PM
கவி அருமை அக்னி

என் கண்கள் காத்திருக்கின்றன
உன் கண்களைப் பார்ப்பதற்கு

என் செவிகள் காத்திருக்கின்றன
உன் வார்த்தைகளைக் கேட்பதற்கு

என் மூக்கு காத்திருக்கின்றன
உன் வியர்வை வாசத்தை நுகர்வதற்கு (தப்பா எல்லாம் நினைக்க கூடது)

என் தோள்கள் காத்திருக்கின்றன
ஆதராவாய் நீ தலை சாய்வதற்கு ..

என் உயிர் காத்திருக்கின்றது
உன்னை தன் உயிரோடு கலப்பதற்கு

அக்னி
09-07-2007, 06:07 PM
தப்பா நினைக்க இனியவளின்
பா தப்பாகவில்லையே...

என் கண்கள் உனக்காகக் காத்திருக்க
இமையாய் மூடினாய்...
என் செவிகள் உனக்காகக் காத்திருக்க
மௌனமாய் இருந்தாய்...
என் மூக்கு உனக்காகக் காத்திருக்க
ஜலதோஷமாய் வந்தாய்...
என் தோள்கள் உனக்காகக் காத்திருக்க
பாரமாய் மிதித்தாய்...
என் உயிர் சந்தோஷித்தது...
இப்படியாவது தீண்டினாயே என்று....

இனியவள்
09-07-2007, 06:13 PM
இமைகள் மூடினேன் கனவிலாவது
நீ வருவாய் என...

மெளனமாய் இருந்தேன் உன்
மெளனம் கலைப்பாய் என..

காற்றாய் மிதந்தேன் சுவாசமாய்
என்னை சுவாசிப்பாய் என..

சுவாசமாய் உன்னைத் தீண்டியதால்
என் சுவாசமே நீயாய் போனாய் :music-smiley-010:

ஹீ ஹீ இப்ப என்ன பண்ணுவீங்கள்:music-smiley-010:

ஓவியன்
09-07-2007, 06:19 PM
அழகான வரிகள்!

சொற்களைத் தேர்ந்தெடுத்து அதுகை மோனை பிசகாது கோர்த்த பாங்கு அலாதியானது!.

வாழ்த்துக்கள் அக்னி!.

ஓவியன்
09-07-2007, 06:21 PM
:

ஹீ ஹீ இப்ப என்ன பண்ணுவீங்கள்:music-smiley-010:

:auto003: :auto003: :auto003:

ஓவியன்
09-07-2007, 06:22 PM
காத்திருப்பதும் சுகம்
காத்திருப்பது காதலுக்கென்றால்!

காத்திருக்கும் அக்னிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!.

இனியவள்
09-07-2007, 06:24 PM
காத்திருப்பதும் சுகம்
காத்திருப்பது காதலுக்கென்றால்!


காத்திருப்பது சுகம்
காத்திருப்பே வாழ்க்கை
ஆகாத வரைக்கும்..

அக்னி
09-07-2007, 06:26 PM
இமைகள் மூடினேன் கனவிலாவது
நீ வருவாய் என...

மெளனமாய் இருந்தேன் உன்
மெளனம் கலைப்பாய் என..

காற்றாய் மிதந்தேன் சுவாசமாய்
என்னை சுவாசிப்பாய் என..

சுவாசமாய் உன்னைத் தீண்டியதால்
என் சுவாசமே நீயாய் போனாய் :music-smiley-010:

ஹீ ஹீ இப்ப என்ன பண்ணுவீங்கள்:music-smiley-010:

உன்னிடம் வந்தபின் உறக்கம் வருமா...
கனவுதான் ஏது..?

உன் மௌனத்தில் உணர்ந்தேன் நான்...
என் மௌனத்தில் ஏன் உணர மறுக்கின்றாய்..?

உன் வாசம் நுகரத் துடித்தால்,
காற்றாய் காணாமல் கலங்கடிக்கலாமா..?

உன் சுவாசம் நானாய்ப்போனாலும்,
அடிக்கடி வெளியேற்றுதல் நியாயமா..?

அப்பாடா...
ஏதோ பண்ணியாச்சு...

அக்னி
09-07-2007, 06:28 PM
அழகான வரிகள்!

சொற்களைத் தேர்ந்தெடுத்து அதுகை மோனை பிசகாது கோர்த்த பாங்கு அலாதியானது!.

வாழ்த்துக்கள் அக்னி!.
நன்றி ஓவியரே...

:auto003: :auto003: :auto003:
நடக்காது... நடக்கவும் கூடாது...
ஹி ஹி...
ஒரே ஓட்டம்தான்...

ஓவியன்
09-07-2007, 06:32 PM
நடக்காது... நடக்கவும் கூடாது...
ஹி ஹி...
ஒரே ஓட்டம்தான்...

ஆஹா!

அசத்துறீங்க அக்னி!

வாங்க இனியவள் வாறதுக்கிடை ஓடிடுவம்!. :sport-smiley-018:

இனியவள்
09-07-2007, 06:34 PM
உன்னிடம் வந்தபின் உறக்கம் வருமா...
கனவுதான் ஏது..?

உன் மௌனத்தில் உணர்ந்தேன் நான்...
என் மௌனத்தில் ஏன் உணர மறுக்கின்றாய்..?

உன் வாசம் நுகரத் துடித்தால்,
காற்றாய் காணாமல் கலங்கடிக்கலாமா..?

உன் சுவாசம் நானாய்ப்போனாலும்,
அடிக்கடி வெளியேற்றுதல் நியாயமா..?

அப்பாடா...
ஏதோ பண்ணியாச்சு...

தூக்கத்தை வலிந்து அழைத்தேன்
இரவிலும் கனவாக என்னருகில்
நீ இருப்பாய் என....

மெளனத்தை விட சிறந்த மொழி
ஏது காதலில் புரிந்து கொள் என்
மெளனமே எம் அன்பை பரிமாறும்
நவின அலைபேசி என்பதனை...

காற்றாய் வந்து உன் உயிரில் கலந்து
என்னோடு உன்னை ஜக்கியமாக்கியதை
அறியாமல் கண்களில் தெரியாமல்
காற்றாய் மாறி என்னைக் கொல்லாதே
என நீ புலம்பாதே :sport-smiley-018: :sport-smiley-018:

ஓவியன்
09-07-2007, 06:37 PM
மெளனத்தை விட சிறந்த மொழி
ஏது காதலில் புரிந்து கொள் என்
மெளனமே எம் அன்பை பரிமாறும்
நவின அலைபேசி என்பதனை...
:sport-smiley-018: :sport-smiley-018:

அலைபேசி என்றாலே
அலை இருக்க வேண்டுமே?
அலையே இல்லாமல்
விலைப் பட்டுப் போனபின்
எப்படி நான்
அன்பைப் பரிமாற?

அக்னி
09-07-2007, 06:40 PM
நீ வலிந்து வந்தாலும்
தெளிவாய்க் காதல் சொல்,
என்னைப்போல...
அல்லது,
தொடராதே என்னைப்போல
மரணத்தில்...

இனியவள்
09-07-2007, 06:42 PM
அலைபேசி என்றாலே
அலை இருக்க வேண்டுமே?
அலையே இல்லாமல்
விலைப் பட்டுப் போனபின்
எப்படி நான்
அன்பைப் பரிமாற?

அடிக்கும் அலைகள்
அனைத்தும் உன்னை
நோக்கியே விலை கேட்டு
நீ வந்தாய் முடியாது என
நான் வெறுத்தேன்

காதலிக்கும் போது என்ன விலை
கொடுத்தாவது உன்னை என்னவள்
ஆக்குவேன் என்று கூறிய நீ
மனைவி ஆக்க நினைக்கும் போது
சீதனம் என்ற பெயரில் என்னை
விலை பேசுவது நியாயமா

ஓவியன்
09-07-2007, 06:43 PM
நான் மரணித்தால்
உன் கண் பனித்து
ஒரு துளி
உதிக்குமா?

ஆமென்றால்
அது போதும்
என் ஆத்மா
சாந்தியடைய!.

இனியவள்
09-07-2007, 06:43 PM
நீ வலிந்து வந்தாலும்
தெளிவாய்க் காதல் சொல்,
என்னைப்போல...
அல்லது,
தொடராதே என்னைப்போல*
மரணத்தில்...

இன்ப துன்பத்தில்
பங்கு கொண்டு
ஒர் உயிராய் வாழ்ந்த
பின் மரணத்தில்
என்னைப் பின்
தொடராதே என்று
கூறி என்னை நரகத்தில்
அல்லவா தள்ளி விட்டு
போகப் பார்க்கின்றாய்

ஓவியன்
09-07-2007, 06:46 PM
காதலிக்கும் போது என்ன விலை
கொடுத்தாவது உன்னை என்னவள்
ஆக்குவேன் என்று கூறிய நீ
மனைவி ஆக்க நினைக்கும் போது
சீதனம் என்ற பெயரில் என்னை
விலை பேசுவது நியாயமா

என்னவள் ஆக்கத்
தவறியது தானே!
இங்கு உங்களை
இனியவளாக்கியது!
இனியாவது அறியுங்கள்
ஒன்றைத் தந்து
இன்னொன்றைப்
பறிப்பது தான்
காதல் என்று!.

இனியவள்
09-07-2007, 06:51 PM
என்னவள் ஆக்கத்
தவறியது தானே!
இங்கு உங்களை
இனியவளாக்கியது!
இனியாவது அறியுங்கள்
ஒன்றைத் தந்து
இன்னொன்றைப்
பறிப்பது தான்
காதல் என்று!.

:icon_wacko: :icon_wacko: :icon_wacko:
அம்மாடியோவ் இதுக்கு நான் என்ன சொல்றது
:icon_wacko: :icon_wacko: :icon_wacko:

கரம் மாறிக் கைப்பற்றி
நினைவைப் பரிசாகத்
தந்து நினைவுகளை
கவியாக்கி சென்று
விட்டான் கவிஞன்
அவன்

இனியவள்
09-07-2007, 06:53 PM
நான் மரணித்தால்
உன் கண் பனித்து
ஒரு துளி
உதிக்குமா?

ஆமென்றால்
அது போதும்
என் ஆத்மா
சாந்தியடைய!.

உன் மரணத்தை காண
என் உயிர் இவ்வூலகில்
இருந்தால் அல்லவா என்
கண்கள் கண்ணீர் சிந்துவதற்கு

அக்னி
09-07-2007, 06:57 PM
உன் மரணத்தை காண
என் உயிர் இவ்வூலகில்
இருந்தால் அல்லவா என்
கண்கள் கண்ணீர் சிந்துவதற்கு

நீ விண்வெளியில் பறப்பவளாயிருக்கலாம்...
உலகமே உன்னை
விண்வெளிவீராங்கனை எனப் புகழலாம்...
ஆனால்,
என் மரணத்தை ஓடமாக்கி,
விண்வெளியிலும்,
உன்னைத் தொடர்வேன்...
உன் கண்ணீர் என்றோ ஒருநாள்...
என் கல்லறையிலோ,
அன்றில்,
கரைக்கப்பட்ட நதியிலோ,
என்னைத் தழுவும்..

இனியவள்
09-07-2007, 07:01 PM
நீ விண்வெளியில் பறப்பவளாயிருக்கலாம்...
உலகமே உன்னை
விண்வெளிவீராங்கனை எனப் புகழலாம்...
ஆனால்,
என் மரணத்தை ஓடமாக்கி,
விண்வெளியிலும்,
உன்னைத் தொடர்வேன்...
உன் கண்ணீர் என்றோ ஒருநாள்...
என் கல்லறையிலோ,
அன்றில்,
கரைக்கப்பட்ட நதியிலோ,
என்னைத் தழுவும்..

கல்லறையில் உனக்காக
காத்திருக்கின்றேன்
வந்து விடு தமதமானலும்
என் ஆத்மா உன்னயே
சுற்றி சுற்றி வருகின்றது
நிழல் போல்.....

ஓவியன்
09-07-2007, 07:02 PM
உன் மரணத்தை காண
என் உயிர் இவ்வூலகில்
இருந்தால் அல்லவா என்
கண்கள் கண்ணீர் சிந்துவதற்கு

மரணத்திலே
சேரத்தயாரான நீ!
நிஜத்திலே தயார்
இல்லை என்பது
மட்டும் ஏனோ
புரியவில்லை?

இனியவள்
09-07-2007, 07:04 PM
மரணத்திலே
சேரத்தயாரான நீ!
நிஜத்திலே தயார்
இல்லை என்பது
மட்டும் ஏனோ
புரியவில்லை?

நிஜத்தில் நீ சேர
மறுக்கவே இறந்தும்
காத்திருக்கின்றேன்
உனக்காக கல்லறையில்

அக்னி
09-07-2007, 07:05 PM
கல்லறையானாலும்,
நீ காத்திருக்கச்
சொன்னால்,
அதுவே எனக்குப் பஞ்சணை...

இனியவள்
09-07-2007, 07:07 PM
கல்லறையானாலும்,
நீ காத்திருக்கச்
சொன்னால்,
அதுவே எனக்குப் பஞ்சணை...

பஞ்சணையாக நினைத்த
உன் இதயத்தை முட்கள்
நிறந்த மெத்தையாக
மாற்றிவிட்டாயே

அக்னி
09-07-2007, 07:10 PM
இதயத்தை நாடி,
வந்த தை...
தைத்தாள்... முள்ளாக...

இனியவள்
09-07-2007, 07:14 PM
இதயத்தை நாடி,
வந்த தை...
தைத்தாள்... முள்ளாக...

இதயத்தை அன்பு
என்னும் ஊசி கொண்டு
அவன் உயிரை நூலாய்
கொண்டு தைத்தை
என் உயிர் போவதும்
தெரியாமல் பிரித்து விட்டான்
பிரிவால்

ஓவியன்
09-07-2007, 07:17 PM
தை பிறந்தால்
தையலின் மையல்
கிட்டுமென்றிருந்தேன்!

தை வந்தது
தையலும் வந்தாள்
மையலுடனில்லை
தையலுடன்!

அக்னி
09-07-2007, 07:20 PM
நிஜத்தில் நீ சேர
மறுக்கவே இறந்தும்
காத்திருக்கின்றேன்
உனக்காக கல்லறையில்


தை பிறந்தால்
தையலின் மையல்
கிட்டுமென்றிருந்தேன்!

தை வந்தது
தையலும் வந்தாள்
மையலுடனில்லை
தையலுடன்!

அசத்துகின்றீர்கள்... வாழ்த்துக்கள்...
நம்மால இப்பிடி எழுதித் தள்ள முடியாது... இன்னொருவரைக் காணவில்லை...

இனியவள்
09-07-2007, 07:21 PM
தை பிறந்தால்
தையலின் மையல்
கிட்டுமென்றிருந்தேன்!
தை வந்தது
தையலும் வந்தாள்
மையலுடனில்லை
தையலுடன்!

தை பிறந்தால் வழி
பிறக்கும் உன் இதயம்
திறந்து எனக்கொர்
வழி பிறக்காத என்று
காத்திருக்கின்றேன் மெளனம்
என்னும் பூட்டைப் போட்டு
விட்டாய் வார்த்தை என்னும்
சாவி தேடி அலைகின்றேன்
காற்றைப் போல்

இனியவள்
09-07-2007, 07:22 PM
அசத்துகின்றீர்கள்... வாழ்த்துக்கள்...
நம்மால இப்பிடி எழுதித் தள்ள முடியாது... இன்னொருவரைக் காணவில்லை...

ஹீ ஹீ நான் சொல்ல இருந்தன் அக்னி முந்திட்டார் :music-smiley-010:

ஓவியன்
09-07-2007, 07:26 PM
அசத்துகின்றீர்கள்... வாழ்த்துக்கள்...
நம்மால இப்பிடி எழுதித் தள்ள முடியாது... இன்னொருவரைக் காணவில்லை...

நன்றி நண்பா!

உங்களைப் பார்த்து நான் பொறாமைப் பட்டிட்டிருக்கன் − நீங்கள் இப்படி சொல்லுறீங்களே!:sport-smiley-018:


ஆமா இந்த மம்மிமாமா எங்கே? :icon_shout: .

இளசு
09-07-2007, 08:31 PM
பாறைகளும் காத்திருக்கும் சில பாதங்கள் படுவதற்கு
இதிகாசம் சொன்னது..
பாவை வரக் காத்திருக்கும் இளமையும் இதயமும்
இது நம் கவிப்புயல் சொல்வது..

அது பாவ விமோச்சனம்..
இது காதல் மதனோற்சவம்!

வாழ்த்துகள் அக்னி!

அமரன்
09-07-2007, 10:43 PM
அடடா கவிமக்கள் என்னமாப் பின்னுறாங்க. அனைத்துக்கவியும் அழகு. வாழ்த்துக்கள் அனைவருக்கும். அக்னி ஆரம்பித்த கவிதைதீயை மேலும் பல கவிதைகளை நெய்யாக ஊத்தி சுடர்விட்டு எரியவைத்த இனியவள் ஓவியன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அக்னிக்கு விசேட*மான வாழ்த்துக்கள். இளசு அண்ணா வாயால் கவிப்புயல் பட்டம் பெற்றதுக்காக.

அக்னி
10-07-2007, 07:49 AM
தை பிறந்தால் வழி
பிறக்கும் உன் இதயம்
திறந்து எனக்கொர்
வழி பிறக்காத என்று
காத்திருக்கின்றேன் மெளனம்
என்னும் பூட்டைப் போட்டு
விட்டாய் வார்த்தை என்னும்
சாவி தேடி அலைகின்றேன்
காற்றைப் போல்
காற்றாய் நீ இருந்தாலோ..,
காதல் என்னும் சாவியைத் தொடாமலே,
மௌனம் என்னும் துவாரம் போட்டு,
என் இதயத்தை இறக்கடிக்கின்றாய்...

அக்னி
10-07-2007, 07:51 AM
பாறைகளும் காத்திருக்கும் சில பாதங்கள் படுவதற்கு
இதிகாசம் சொன்னது..
பாவை வரக் காத்திருக்கும் இளமையும் இதயமும்
இது நம் கவிப்புயல் சொல்வது..

அது பாவ விமோச்சனம்..
இது காதல் மதனோற்சவம்!

வாழ்த்துகள் அக்னி!

காதல் உற்சவம் செய்தேன்...
காதலில் விமோச்சனம் பெற...

நன்றி அண்ணா!

அக்னி
10-07-2007, 07:52 AM
அடடா கவிமக்கள் என்னமாப் பின்னுறாங்க. அனைத்துக்கவியும் அழகு. வாழ்த்துக்கள் அனைவருக்கும். அக்னி ஆரம்பித்த கவிதைதீயை மேலும் பல கவிதைகளை நெய்யாக ஊத்தி சுடர்விட்டு எரியவைத்த இனியவள் ஓவியன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அக்னிக்கு விசேட*மான வாழ்த்துக்கள். இளசு அண்ணா வாயால் கவிப்புயல் பட்டம் பெற்றதுக்காக.

நன்றி அமரன்...
தேகம் சிலிர்க்க...
உணர்வு நிறைந்த பெருமிதம்...

இனியவள்
10-07-2007, 09:02 AM
காற்றாய் நீ இருந்தாலோ..,
காதல் என்னும் சாவியைத் தொடாமலே,
மௌனம் என்னும் துவாரம் போட்டு,
என் இதயத்தை இறக்கடிக்கின்றாய்...

இறகடித்துப் பறக்கின்றேன்
வானமே உன்னைத் தொட
நிலத்தில் இருந்து பார்க்கும்
போது அருகில் இருப்பது
போல் தெரியும் நீ நான்
சிறகடித்து உன்னை நோக்கி
வரும் போது தூர தூர
செல்கின்றாய் புரிந்து கொண்டேன்
காண்பது எல்லாம் நிஜமல்ல....

அக்னி
10-07-2007, 09:09 AM
காதலின் பிரமாண்டம்...
உன் கண்களில்
சிறு விம்பமாய் அடங்கிடுமோ...
தொடமுடியாக் காதலுணர்வை
வாடவிடாதே...
எட்டாவிட்டாலும்,
உனக்காகவே ஒளிரும்,
மதிபோலவே..,
காதலும்...

இனியவள்
10-07-2007, 09:12 AM
காதலின் பிரமாண்டம்...
உன் கண்களில்
சிறு விம்பமாய் அடங்கிடுமோ...
தொடமுடியாக் காதலுணர்வை
வாடவிடாதே...
எட்டாவிட்டாலும்,
உனக்காகவே ஒளிரும்,
மதிபோலவே..,
காதலும்...

காதலின் பிரமாண்டம்
உன் கண்களில் கூத்தாட்டம்..
சிலுவையில் அறைந்து விடாதே
என் காதலையும் வலி தாங்குவேன்
நான் என்னில் இருக்கும் உன்னால்
தாங்க முடியாது அவ் வலி

அக்னி
10-07-2007, 09:16 AM
என்னுள் ஐக்கியமான
உன்னைச் சுமப்பது...
எனக்குச் சுகமாயிருக்க,
உன்னில் ஐக்கியமான
என்னைச் சுமப்பது,
உனக்கு சுமையா..?

அமரன்
10-07-2007, 11:16 AM
என்னுள் ஐக்கியமான
உன்னைச் சுமப்பது...
எனக்குச் சுகமாயிருக்க,
உன்னில் ஐக்கியமான
என்னைச் சுமப்பது,
உனக்கு சுமையா..?

என்ன செய்வது
எனக்குள் இருப்பதும்
ஐம்பொன் சிலையானால்
சுகமாக இருந்திருக்கும்.

அக்னி
10-07-2007, 11:19 AM
என்ன செய்வது
எனக்குள் இருப்பதும்
ஐம்பொன் சிலையானால்
சுகமாக இருந்திருக்கும்.

உணர்வான என் இதயத்தை,
ஐம்பொன் சிலையாக்கினால்,
நீ கைம்பெண் ஆகிவிடுவாய்
என்பதானாலேயே...
இன்னமும் துடிக்கின்றேன்...

அமரன்
10-07-2007, 11:23 AM
உணர்வான என் இதயத்தை,
ஐம்பொன் சிலையாக்கினால்,
நீ கைம்பெண் ஆகிவிடுவாய்
என்பதானாலேயே...
இன்னமும் துடிக்கின்றேன்...

இதயதைத்தந்து விட்டு
துடிக்கின்றேன் என்றால்
நம்பும்படியா இருகின்றது.

அக்னி
10-07-2007, 11:26 AM
இதயத்தைத் தந்தால் சுமை
என்கின்றாய்...
எனக்குள் வைத்து உனக்காய்த்
துடித்தாலோ,
சுயநலம் என்கின்றாய்...
என்செய்வேன்..?

அமரன்
10-07-2007, 11:28 AM
இதயத்தைத் தந்தால் சுமை
என்கின்றாய்...
எனக்குள் வைத்து உனக்காய்த்
துடித்தாலோ,
சுயநலம் என்கின்றாய்...
என்செய்வேன்..?

நலமில்லா இதயம்தந்து
நலம் கெட வைத்து
நலம்பற்றி பேசும்−நீ
சுயநலக்காரனே.

உன்சுயநலத்தால்
சுய நலமிழந்தது நானல்லவா

இனியவள்
10-07-2007, 11:36 AM
இதயத்தைத் தந்தால் சுமை
என்கின்றாய்...
எனக்குள் வைத்து உனக்காய்த்
துடித்தாலோ,
சுயநலம் என்கின்றாய்...
என்செய்வேன்..?

உனக்குள் வைத்து
உனக்குள் துடித்தால்
எனக்கு எப்படி தெரியும்
வெளிக்காட்டி விடு அன்பே
மெட்டில் இருந்து மலரும்
பூப்போல்

இனியவள்
10-07-2007, 11:38 AM
நலமில்லா இதயம்தந்து
நலம் கெட வைத்து
நலம்பற்றி பேசும்−நீ
சுயநலக்காரனே.
உன்சுயநலத்தால்
சுய நலமிழந்தது நானல்லவா

செயலிழந்து கிடந்த
என்னை உன் இதயம்
கொண்டு செயற்பட
வைத்து விட்டாயே
காதல் என்ன சத்திர
சிகிச்சையா வலிகள்
இன்றி இதயம் இடம்
மாற்றிக் கொள்ள

அமரன்
10-07-2007, 11:38 AM
உனக்குள் வைத்து
உனக்குள் துடித்தால்
எனக்கு எப்படி தெரியும்
வெளிக்காட்டி விடு அன்பே
மெட்டில் இருந்து மலரும்
பூப்போல்

இதயத்துள் இருக்கும் இதயம்
மெட்டுக்கட்டுவது தெரியாமல்
வெளிக்காட்டச் சொன்னால்
எப்படி செய்வது....

அமரன்
10-07-2007, 11:40 AM
செயலிழந்து கிடந்த
என்னை உன் இதயம்
கொண்டு செயற்பட
வைத்து விட்டாயே
காதல் என்ன சத்திர
சிகிச்சையா வலிகள்
இன்றி இதயம் இடம்
மாற்றிக் கொள்ள

சத்திர சிகிச்சை செய்து
துடிக்க வைத்த இதயத்தை
சத்துருவாக நினைத்து
துடிக்க வைக்கிறாயே.
இதயத்தை இடம்மாற்றி விட்டயா

இனியவள்
10-07-2007, 11:42 AM
சத்திர சிகிச்சை செய்து
துடிக்க வைத்த இதயத்தை
சத்துருவாக நினைத்து
துடிக்க வைக்கிறாயே.
இதயத்தை இடம்மாற்றி விட்டயா

இடம் மாறிய இதயம்
எனதல்லவே உனதல்லவா
துடி துடிக்கின்றது இதயம்
என் துடிப்பு அனைத்தும்
நீயல்லவா சத்துருவாக
நீயென்னை வெறுக்க
தெய்வமாக நான் உன்னை
பூஜிக்க முடிவில்லாமல்
போகின்றது என் காதலும்
கண்டு பிடிப்புக்கள் போல்

பிச்சி
11-07-2007, 06:25 AM
கடைசி வரி சூப்பர். நான் சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கலே? படம் மட்டும் சரியில்லை.

ஓவியன்
11-07-2007, 06:34 AM
கடைசி வரி சூப்பர். நான் சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கலே? படம் மட்டும் சரியில்லை.

அட நீங்க வேற பிச்சி!

நம்ம அக்னி!, கருத்துச் சொல்லாவிட்டால் தான் தப்பாக எடுத்துக்குவார்.:sport-smiley-018:

அக்னி
20-07-2007, 08:05 PM
கடைசி வரி சூப்பர். நான் சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கலே? படம் மட்டும் சரியில்லை.
நிதர்சனம்... என் மனதிலும் பட்டது... ஆனால், பதிந்துவிட்டேன்.
இதற்காக நான் தப்பா நினைக்க போவதில்லை..
இவைதான் எனது வளர்ச்சியின், திருத்தங்களின் உந்துதல்...
ஆதலால்,
நன்றி!

அட நீங்க வேற பிச்சி!

நம்ம அக்னி!, கருத்துச் சொல்லாவிட்டால் தான் தப்பாக எடுத்துக்குவார்.:sport-smiley-018:

அதுதானே... அப்பத்தானே கொஞ்சம் என்றாலும் முன்னேறமுடியும்...

ஆதவா
20-07-2007, 08:22 PM
காத்திருத்தல் காதலின் அலாதி அனுபவம். காலமெல்லாம் என்பது கவிதையில் காலத்தே சிறிது என்பது யதார்த்தம்.

ஈரத்திற்குக் காத்திருக்கும் நெற்றி
அவள் வெப்பமூச்சுக்காக சுவாசம்
அதிர்வுக்கு இதயம்
முடிவாக உயிருக்கு உயிர்..

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதத்திலும் காத்திருப்புகள். கவிதை எத்தனை காலமும் காத்திருக்கலாம்.. அருமையாகவும் எளிமையாகவும்.

பிச்சி சொல்வது போல படம் கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருக்கிறது.. நீங்கள் வேறு மாதிரி அமைத்திருக்கலாம். எனினும் இங்கே கவிதைக்கான முக்கியத்துவத்தில் படம் வீழ்ந்துவிட்டது எனலாம்.

பின்னூட்டங்களைப் படிக்கும் அளவுக்கு நேரமில்லை. எனக்காக தூக்கதேவதை காத்திருக்கிறாள். எனக்கும் நெற்றியும் சுவாசமும் இதயமும் உண்டல்லவா? (உயிர் உண்டு என்று சொல்லமுடியாது.. ஏன் என்று சொல்லுங்கள்?)

வாழ்த்துக்கள் அக்னி

அக்னி
20-07-2007, 08:27 PM
(உயிர் உண்டு என்று சொல்லமுடியாது.. ஏன் என்று சொல்லுங்கள்?)


ஆதவரே இப்படிப் பொடிவைத்து உறங்கப் போனால், எனது உறக்கம் என்னாவது..?
பாராட்டுக்கு நன்றி...

அமரன்
20-07-2007, 08:29 PM
ஆதவரே இப்படிப் பொடிவைத்து உறங்கப் போனால், எனது உறக்கம் என்னாவது..?
பாராட்டுக்கு நன்றி...

பொடிப்பொடியாவது...

ஆதவா
21-07-2007, 03:44 AM
எனக்காக தூக்கதேவதை காத்திருக்கிறாள். எனக்கும் நெற்றியும் சுவாசமும் இதயமும் உண்டல்லவா? (உயிர் உண்டு என்று சொல்லமுடியாது.. ஏன் என்று சொல்லுங்கள்?)

வாழ்த்துக்கள் அக்னி


உங்கள் கவிதைகளில் காத்திருக்கும் நெற்றி சுவாசம் இதயம் ஆகியவை என் தூக்க தேவதைக்காகவும் காத்திருக்கும்... ஆனால் உயிர் காத்திருந்தால் அது நிரந்தர தூக்கம் ஆகிவிடுமே..

மூளையின் அடக்கம் உறக்கம்
உயிரின் அடக்கம் நிரந்தர உறக்கம்.....

அதனால்தான் சொல்லமுடியாது என்றேன்...

lolluvathiyar
21-07-2007, 04:48 AM
எனுங்க அக்னி இழவு காத்த கிளி கதை கேள்வி பட்டிருகிறீர்களா?
கடைசியில அந்த கதையா போயிர போகுது

அக்னி
21-07-2007, 11:31 AM
எனுங்க அக்னி இழவு காத்த கிளி கதை கேள்வி பட்டிருகிறீர்களா?
கடைசியில அந்த கதையா போயிர போகுது

வாத்தியாரய்யா...
அது... இலவு காத்த கிளி...
இழவாக்கிவிட்டீர்களே என் லவ்வை...

நான் கிளியல்ல...
இலவு...
கிளி பறந்தால்,
வெடித்துவிடுவேன்...
இல்லாவிட்டால்....
காத்திருப்பேன்...
எனது காதலில்...
இலவு காத்த கிளி... அல்ல...
கிளி பார்த்திருக்கும் இலவு...