PDA

View Full Version : பணம் + பிணம்



இனியவள்
09-07-2007, 02:36 PM
பணம் பணம்
என்று அலைகின்றனர்
பிணம் ஆகப் போவது
தெரிந்தும் ....

நன்றி அமர்

அக்னி
09-07-2007, 02:58 PM
பணத்திற்கு விசிறி போட்டு,
பிணமாகும் மனிதர்கள்...
காத்த பணம் மட்டும் மிச்சமாக...
செத்த பிணமோ எச்சமுமின்றி...

நன்றி:− அமரன்

இனியவள்
09-07-2007, 03:05 PM
பணத்திற்கு விசிறி போட்டு,
பிணமாகும் மனிதர்கள்...
காத்த பணம் மட்டும் மிச்சமாக...
செத்த பிணமோ எச்சமுமின்றி...

நன்றி:− அமரன்

வியர்க்க வியர்க்க
ஓடி ஓடி பணம்
சேமித்து பணம்
வியர்க்காமல் இருக்க
விசுறுகின்றனர்..

ஓவியன்
09-07-2007, 07:45 PM
பிணம் தின்னா
பணத்திற்காய்
இன்றே பிணமாகிறது
நாளைய பிணம்!.

இனியவள்
09-07-2007, 07:48 PM
பிணம் தின்னா
பணத்திற்காய்
இன்றே பிணமாகிறது
நாளைய பிணம்!.

உயிரை எடுக்கின்றனர்
உயிரற்ற பணத்திற்காய்
உயிரைக் காக்கின்றனர்
உயிரற்ற பணத்திற்காய்
ஆக்கவும் செய்யும்
அழிக்கவும் செய்யும்
பணமும் கடவுளோ ???

இளசு
09-07-2007, 07:53 PM
பெரிய ஏரியையே வளைத்துப்போட்ட
பெரிய மனிதனுக்கும்
ஆறடிக்குமேல் அரையங்குலமும்
அவசியமில்லை!!!

ஆதவா
10-07-2007, 08:19 AM
நல்ல கவிதை இனியவள்..... ஆனால் பணமின்றி எதுவுமில்லை..... நாம் வெறும் வாய்ப்பேச்சுக்களால் நிரப்பிக் கொன்டு இருப்பதைவிட பணத்தைத் தேடுவது தவறில்லை என்று தோன்றுகிறது.

சூரியன்
10-07-2007, 08:27 AM
நல்ல படைப்பு......போகும் போது பணத்தையும் சேர்த்து கொண்டு போகவா முடியும்?

இனியவள்
10-07-2007, 09:06 AM
நல்ல கவிதை இனியவள்..... ஆனால் பணமின்றி எதுவுமில்லை..... நாம் வெறும் வாய்ப்பேச்சுக்களால் நிரப்பிக் கொன்டு இருப்பதைவிட பணத்தைத் தேடுவது தவறில்லை என்று தோன்றுகிறது.

நன்றி ஆதவா

பணம் இல்லை என்றால்
ஏதும் இல்லை ஆனால்
பணமே வாழ்க்கை இல்லை
அல்லவா தேவைக்கு மீஞ்சினால்
அமிர்தமும் விஷமே பணமும்
அப்படியே அளவோடு இருந்தால்
பணத்தால் நிம்மதி அளவு கூடினால்
பணத்தை காப்பாற்றவே நேரம் சரியாக
இருக்கும்

மனோஜ்
10-07-2007, 09:20 AM
பணம் தேடும் முயற்சியில் மனிதன்
உள்ளவனுக்கு இன்னும்
இல்லாதவனுக்கு இன்னும் அதிகம்
இருப்பவனுக்கு உள்ளதில் அதிகம்

அருமை கவி இனியவள் அவர்களே

அமரன்
10-07-2007, 08:17 PM
பணத்தால் பலர் பாதிக்கப்பட்டாலும் பணம் வாழ்க்கைக்கு முக்கியமே.

இதயம் சொல்கிறது
வாழ்க்கையின் பாதி
பணம் என்று.
லப் டப்(பு)

இளசு
10-07-2007, 09:35 PM
ஆஹா அமரன்..

அன்பு பாதி செல்வம் பாதியா அப்போ..

ல(வ்) +டப்... !

அமரன்
11-07-2007, 08:59 AM
ஆஹா அமரன்..

அன்பு பாதி செல்வம் பாதியா அப்போ..

ல(வ்) +டப்... !

அட நல்லா இருக்கே அண்ணா....:aktion033: :aktion033: :aktion033:

lolluvathiyar
12-07-2007, 04:28 PM
பினத்தை அடக்கம் செய்ய கூட பணம் வேண்டுமே

இனியவள்
12-07-2007, 04:32 PM
பினத்தை அடக்கம் செய்ய கூட பணம் வேண்டுமே

பணம் தானே பிணம் ஆக்குகின்றது சிலரை

அக்னி
12-07-2007, 04:33 PM
பணம் பிணமாக்குவது,
உண்மையே...
இருந்தாலும், இல்லாவிட்டாலும்...

இனியவள்
12-07-2007, 04:35 PM
பணம் பிணமாக்குவது,
உண்மையே...
இருந்தாலும், இல்லாவிட்டாலும்...

பணம் உன்னிடம் இருந்தால்
உன் மனசாட்சியை நீ
சவம் ஆக்கிடுவாய்

அதே பணம் பிறரிடம் இருந்தால்
உன் மனதை ஆகங்காரம்
கொண்டு ரணம் ஆக்கிவிடுவார்

இருந்தாலும் தொல்லை தந்து
இல்லாமலும் தொல்லை தரும்
பணத்திற்கு நிகர் பணமே தான்

அக்னி
12-07-2007, 04:42 PM
பணத்தை பொத்தி வைக்காதே...
அது,
சந்தோஷத்தை மூடிவிடும்...
சாட்சியாக, மனச்சாட்சியை,
மட்டும் கொண்டு,
தானம் செய்...
உதவி செய்...
பணம் சந்தோஷத்தையும் தரும்...

இனியவள்
12-07-2007, 04:48 PM
பணத்தை பொத்தி வைக்காதே...
அது,
சந்தோஷத்தை மூடிவிடும்...
சாட்சியாக, மனச்சாட்சியை,
மட்டும் கொண்டு,
தானம் செய்...
உதவி செய்...
பணம் சந்தோஷத்தையும் தரும்...

உன் கைக்கு மீறினால்
தான் செய் நண்பா
ஆனால் தானமே
உனக்கு எமனாகமல்
பார்த்துக் கொள்..

அளவுக்கு மீறினால்
அன்பு கூட விஷமாகும்
பணம் உனக்கே எமனாகும்

M.Jagadeesan
22-01-2013, 12:35 AM
பணமென்றால் பிணமும் வாய்திறக்கும். வாழ்க்கைக்குப் பணம் மிகவும் தேவை.
" செய்க பொருளை " என்பது வள்ளுவனின் வாக்கு.