PDA

View Full Version : நிலவு + சோகம்



இனியவள்
09-07-2007, 01:36 PM
காற்று வீசும் போது
நிலவை மறைத்திருக்கும்
மேகங்கள் விலகுவது
போல் உன்னைச்
சூழ்ந்து இருக்கும்
சோகங்கள் அனைத்தும்
வசந்தம் என்னும்
தென்றல் வீசும் போது
விலகிவிடும்

அக்னி
09-07-2007, 01:45 PM
மேகங்கள் தாண்டி,
விண்ணோடத்தில்
உன்னைத்தேடி வந்தேன்...
நிலவே, உயிர்வாயு எங்கே?
சோகங்கள் தாண்டி,
கண்ணோட்டத்தில்
உன்னிடம் வந்தேன்...
உறவே, உயிர்க்காதல் எங்கே?

அழகுக் கவிதை...
பாராட்டுக்கள் இனியவளே...

அரசன்
09-07-2007, 01:46 PM
நானும் அந்த வசந்த காற்றிற்காகதான் காத்திருக்கிறேன். வந்தால் சரிதான்.
கவிதையில் உற்சாகம் தெரிக்கிறதே. வாழ்த்துக்கள் இனி.

அக்னி
09-07-2007, 01:47 PM
நானும் அந்த வசந்த காற்றிற்காகதான் காத்திருக்கிறேன். வந்தால் சரிதான்.
கவிதையில் உற்சாகம் தெரிக்கிறதே. வாழ்த்துக்கள் இனி.

அப்போ இதற்கு முன்னர்...???

அரசன்
09-07-2007, 01:49 PM
அப்போ இதற்கு முன்னர்...???

எதற்கு முன்னர் அக்னி?
புரியாமல்தான் கேட்கிறேன்.

இனியவள்
09-07-2007, 01:50 PM
மேகங்கள் தாண்டி,
விண்ணோடத்தில்
உன்னைத்தேடி வந்தேன்...
நிலவே, உயிர்வாயு எங்கே?
சோகங்கள் தாண்டி,
கண்ணோட்டத்தில்
உன்னிடம் வந்தேன்...
உறவே, உயிர்க்காதல் எங்கே?

அழகுக் கவிதை...
பாராட்டுக்கள் இனியவளே...

மேகங்கள் தாண்டி
விண்ணோட்டத்தில் என்னைத்
தேடி வந்தாய் நிலவாய்
நான் வந்தேன் உன்னிடத்தில்

சோகங்கள் தாண்டி
கண்ணோட்டத்தில் வந்தாய்
புன்னகையாய் தவழ்கின்றேன்
உன் இதழ்களில்

உயிர்க் காதல் என்கே
என்கின்றாய் அது என்
இதயத்தில் பத்திரமாய்
இருக்கின்றது உயிர் என்னும்
பூட்டுப் போட்டு

நன்றி அக்னி

இனியவள்
09-07-2007, 01:51 PM
நானும் அந்த வசந்த காற்றிற்காகதான் காத்திருக்கிறேன். வந்தால் சரிதான்.
கவிதையில் உற்சாகம் தெரிக்கிறதே. வாழ்த்துக்கள் இனி.

நன்றி மூர்த்தி

அமரன்
09-07-2007, 01:53 PM
காற்று வீசும் போது
நிலவை மறைத்திருக்கும்
மேகங்கள் விலகுவது
போல் உன்னைச்
சூழ்ந்து இருக்கும்
சோகங்கள் அனைத்தும்
வசந்தம் என்னும்
தென்றல் வீசும் போது
விலகிவிடும்

விலகும் விலகும்.
வசந்தத்தை எடுத்துவிட்டு
காற்றுமட்டும் விடவைத்துவிட்டு
கதையா பேசுகின்றீர்.

அக்னி
09-07-2007, 01:53 PM
மேகங்கள் தாண்டி
விண்ணோட்டத்தில் என்னைத்
தேடி வந்தாய் நிலவாய்
நான் வந்தேன் உன்னிடத்தில்

சோகங்கள் தாண்டி
கண்ணோட்டத்தில் வந்தாய்
புன்னகையாய் தவழ்கின்றேன்
உன் இதழ்களில்

உயிர்க் காதல் என்கே
என்கின்றாய் அது என்
இதயத்தில் பத்திரமாய்
இருக்கின்றது உயிர் என்னும்
பூட்டுப் போட்டு

நன்றி அக்னி

உன் உயிர் போட்ட
பூட்டால்,
என் உயிர் அல்லவா
மூச்சுத்திணறுகின்றது...
காதலைத் திறந்துவிடு...
நான் உள்ளெடுத்து,
உயிர்வாழ...

அமரன்
09-07-2007, 01:53 PM
மேகங்கள் தாண்டி,
விண்ணோடத்தில்
உன்னைத்தேடி வந்தேன்...
நிலவே, உயிர்வாயு எங்கே?
சோகங்கள் தாண்டி,
கண்ணோட்டத்தில்
உன்னிடம் வந்தேன்...
உறவே, உயிர்க்காதல் எங்கே?

அழகுக் கவிதை...
பாராட்டுக்கள் இனியவளே...

கண்ணோட்டத்தில் வந்துவிட்டு
உயிர்க்காதல் தேடினால்
கிடைக்குமா..

அரசன்
09-07-2007, 01:55 PM
உன் உயிர் போட்ட
பூட்டால்,
என் உயிர் அல்லவா
மூச்சுத்திணறுகின்றது...
காதலைத் திறந்துவிடு...
நான் உள்ளெடுத்து,
உயிர்வாழ...


இன்னும் எத்தனை பேர் மூச்சுதிணறலுக்காக......

காதலைத் திறந்துவிட...

அக்னி
09-07-2007, 01:55 PM
கண்ணோட்டத்தில் வந்துவிட்டு
உயிர்க்காதல் தேடினால்
கிடைக்குமா..

கண் ஓட்டத்தில் உள்நுழைந்த காதல்,
கண்ணோட்டம் ஆகுமா..?

இனியவள்
09-07-2007, 01:57 PM
விலகும் விலகும்.
வசந்தத்தை எடுத்துவிட்டு
காற்றுமட்டும் விடவைத்துவிட்டு
கதையா பேசுகின்றீர்.

வசந்தத்தை ஓதுக்கி
வைத்து விட்டு தூரோகம்
செய்தவன் தந்த துன்பத்தை
மட்டும் நினைத்து கண்ணீர்
சிந்தி உன் கண்ணீரை
வீணாக்காதே

இனியவள்
09-07-2007, 01:59 PM
உன் உயிர் போட்ட
பூட்டால்,
என் உயிர் அல்லவா
மூச்சுத்திணறுகின்றது...
காதலைத் திறந்துவிடு...
நான் உள்ளெடுத்து,
உயிர்வாழ...

உன் அன்பின் அகோரத்தால்
மூச்சு விடக் கூட திணருகின்றேன்
உன் அன்பே எனக்கு எமனாகிவிடும்
கொஞ்சம் இடைவெளி விடு அன்பே
நான் மூச்சு விட்டுக் கொள்கின்றேன் :D:D:D

அரசன்
09-07-2007, 01:59 PM
வசந்தத்தை ஓதுக்கி
வைத்து விட்டு தூரோகம்
செய்தவன் தந்த துன்பத்தை
மட்டும் நினைத்து கண்ணீர்
சிந்தி உன் கண்ணீரை
வீணாக்காதே

ஆம்! உன் கண்ணீரில்தான் எத்தனை அயோடின் இருக்கிறது. அப்படித்தானே

அமரன்
09-07-2007, 02:01 PM
கண் ஓட்டத்தில் உள்நுழைந்த காதல்,
கண்ணோட்டம் ஆகுமா..?

கண் ஓட்டம் தப்பாயின்
உண்மைக்காதல் ஆகுமா?

அக்னி
09-07-2007, 02:02 PM
உன் அன்பின் அகோரத்தால்
மூச்சு விடக் கூட திணருகின்றேன்
உன் அன்பே எனக்கு எமனாகிவிடும்
கொஞ்சம் இடைவெளி விடு அன்பே
நான் மூச்சு விட்டுக் கொள்கின்றேன் :D:D:D

நீ மூச்சு விட்டு கொள்வதற்காய்,
நான் மூச்சு முட்டலாமா?
நீ மூச்சு விட்டு
என்னை அல்லவா கொல்கின்றாய்...

இனியவள்
09-07-2007, 02:05 PM
நீ மூச்சு விட்டு கொள்வதற்காய்,
நான் மூச்சு முட்டலாமா?
நீ மூச்சு விட்டு
என்னை அல்லவா கொல்கின்றாய்...

கொல்கின்றாய் கொல்கின்றாய்
என்று சொல்லி என்னைக்
கொல்லதே என்னுள் இருக்கும்
நீ மூச்சு விடவல்லவா நான்
நான் அவகாசம் கேட்கின்றேன்
புரிந்து கொள்... :D:D:D

இனியவள்
09-07-2007, 02:06 PM
கண் ஓட்டம் தப்பாயின்
உண்மைக்காதல் ஆகுமா?

என் மேலான உன் காதல்
கண் ஓட்டத்தால் வந்ததா
இதய ஓட்டத்தால் வந்ததா ??

அக்னி
09-07-2007, 02:11 PM
கண் ஓட்டம் தப்பாயின்
உண்மைக்காதல் ஆகுமா?
கண் ஓட்டத்தில் தப்பாவிடின், உண்மைக்காதல் ஆகலாமே...


என் மேலான உன் காதல்
கண் ஓட்டத்தால் வந்ததா
இதய ஓட்டத்தால் வந்ததா ??
என்.., மேலான உனது,
காதல் கண்ணோட்டத்தில்
இதய ஓட்டம் நடக்கிறது...
இதுவோ ஓட்டமும் நடையும்?

அமரன்
09-07-2007, 02:14 PM
கண் ஓட்டத்தில் தப்பாவிடின், உண்மைக்காதல் ஆகலாமே...

கண்ணோட்டம் தப்பா(க)விடின் உண்மைக்காதலா.

கண்னோட்டத்தில் தப்பா(து)விடில் காதலே இல்லையே (உங்க முதல் கருத்துப்படி)

இனியவள்
09-07-2007, 02:15 PM
கண் ஓட்டத்தில் தப்பாவிடின், உண்மைக்காதல் ஆகலாமே...

என்.., மேலான உனது,
காதல் கண்ணோட்டத்தில்
இதய ஓட்டம் நடக்கிறது...
இதுவோ ஓட்டமும் நடையும்?

ஓட்டமும் நடையுமாக
எமது காதல் முதல்
பிறந்த நாளைக் கொண்டாடி
விட்டது... நீ எனக்கு பின்னால்
ஓடி ஓடி வந்து வந்து கலைத்து
விட்டாய் நான் உனக்கு பின்னால்
நடந்து நடந்து கலைத்து விட்டேன் :D:D:D:D

இனியவள்
09-07-2007, 02:16 PM
கண்ணோட்டம் தப்பா(க)விடின் உண்மைக்காதலா

அவன் மேலான காதல்
கண்ணோட்டாம் அவளுக்கு
சரியாகவும் அவள் மேலான
காதல் கண்ணோட்டம் அவனுக்கு
சரியாகவும் இருந்தால் அக் காதல்
உண்மைக்காதலே

ஆதவா
10-07-2007, 08:20 AM
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்.

ஓவியன்
12-07-2007, 11:21 PM
காற்று வீசும் போது
நிலவை மறைத்திருக்கும்
மேகங்கள் விலகுவது
போல் உன்னைச்
சூழ்ந்து இருக்கும்
சோகங்கள் அனைத்தும்
வசந்தம் என்னும்
தென்றல் வீசும் போது
விலகிவிடும்

வசந்தம் வீசும் வரை
காத்திராது!
உழைப்பை நம்பி
களத்தில் குதித்தால்!
வசந்தம் தானே
வந்து வீட்டுக்
கதவைத் தட்டும்!.

இனியவள்
13-07-2007, 07:33 AM
நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்.

நன்றி ஆதவா

இனியவள்
13-07-2007, 07:35 AM
வசந்தம் வீசும் வரை
காத்திராது!
உழைப்பை நம்பி
களத்தில் குதித்தால்!
வசந்தம் தானே
வந்து வீட்டுக்
கதவைத் தட்டும்!.

கதைவைத் தட்டும்
வசந்தத்தை சீ போ
என துரத்தி விட்டு
தூரப் போகும் சனியனை
கூப்பிட்டு கூத்தாடுகின்றாயே :ohmy: