PDA

View Full Version : அழகுக் குறிப்புகள்... எடக்கு முடக்கு சிந்தனைகள்...



rambal
25-05-2003, 07:35 AM
அழகுக் குறிப்புகள்... எடக்கு முடக்கு சிந்தனைகள்...

முன்குறிப்பு: இந்த எடக்கு முடக்கு சிந்தனைகள் சிந்திப்பதற்கு அல்ல..
(மூக்கை சிந்தக் கூட உதவாத விஷயங்கள் இவைகள்.. இதை யாரும் சீரியசாக எடுக்கக் கூடாது)
இங்கு கொடுக்கப்படும் குறிப்புகளை யாரும் முயற்சி செய்து பார்க்கவேண்டாம். பின்வரும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..
உங்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட தொடரும் என்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.. (ஏனெனில், பாதிக்கப்படப்போவது நீங்கள் என்பதால்)

அழகுக் குறிப்பு : முகம் பளபளப்பாக...

தேவையானவை:

வெள்ளரிக்காய் : 2
கேரட் : 1
எலுமிச்சை : 2
முட்டை மஞ்சள் கரு : 1

வெள்ளரிக்காயை வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். (3 செ.மீ விட்டத்திலிருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்)
கேரட்டை பொடிப் பொடியான சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.(1.5 செ.மீ X 1.5 செ.மீ)
இந்த இரண்டையும் மிக்ஸியில் (தமிழ் அகராதி பார்த்து பின் தெளிவாக சொல்கிறேன்) போட்டு
அரைத்து கூலாக்கவும்.
இந்தக் கூலில் அரைவட்டமாக வெட்டப்பட்ட அந்த ஒரு எலுமிச்சையை புளிந்து விடவும்.
இப்போது தேக்கரண்டியை எடுத்து கலக்கவும்.
நன்றாக கலக்கிய பின் மஞ்சள் கருவை சேர்க்கவும். இப்போது மீண்டும் நன்றாக கலக்கவும்.
இப்போது எல்லாம் கலக்கி ஒரு குட்டையாக்கிய பின்
சிறிது நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிராக்கவும்.
சரியாக 10 நிமிடம் 30 நொடிகளுக்குப் பிறகு கலந்த பொருட்களை எடுத்து
முகத்தில் தேய்க்கவும். சரியாக 12 நிமிடங்கள் 27 நொடிகளுக்குப் பின் தண்ணீர் ஊற்றி கழுவவும்.
இப்படி தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்து வந்தால்...
என்ன என்ன மாற்றங்கள் ஆகிறது என்பதை குறித்துக் கொண்டு
ஏதேனும் நல்ல மாற்றங்கள் தெரிந்தால் மட்டும் பின்வரும்
முகவரியில் தெரிவிக்கவும்.

அழகானந்தா..
அல்டாப்பு தெரு,
பியூட்டி காலணி,
அழகூர்.


அடுத்த எடக்கு முடக்கில் உங்களை சந்திக்கும் வரை..
உங்களிடம் இருந்து விடை பெறுவது...

பாரதி
25-05-2003, 10:29 AM
(மூக்கை சிந்தக் கூட உதவாத விஷயங்கள் இவைகள்.. இதை யாரும் சீரியசாக எடுக்கக் கூடாது)

கைக்குட்டையை உபயோகம் இல்லாதது போல சொல்லி இருப்பது வருந்தத்தக்கது... சும்மா ராம்பால்.. ஒரு எடக்கு முடக்கா ஏதாவது சொல்ல வேண்டுமே...

அழகுக் குறிப்பை யாராவது உபயோகித்து பயன் அடைந்தால் சொல்லுங்கள். நானும் அதை முயற்சி செய்து பார்க்க வசதியாக இருக்கும்.

poo
25-05-2003, 03:38 PM
அரைவேக்காடு அழகானந்தா....

-இப்படி மாற்றிக்கொள்ளச் சொல்லுங்கள் பெயரை.....

suma
26-05-2003, 12:35 AM
http://www.inet.ba/~snet/002.jpg

இப்படியாகாமல் இருந்தால் சரி தான்...
நான் இந்த விளையாட்டுக்கு வரலை.

இளசு
26-05-2003, 06:27 AM
நல்ல பதிவு ராம்.... மிக ரசித்தேன்.....
அரசல் புரசலாய் கேள்விப்பட்ட குறிப்புதான்..
ஆனால் சொன்ன விதம் சுவை...நகைச்சுவை....
தொடரவும்...

அறிஞர்
26-05-2003, 07:41 AM
உம் சிந்தனைகள்.. தொடர வாழ்த்துக்கள்...

karikaalan
26-05-2003, 01:14 PM
சிரிக்கமுடிந்தது; நன்றிகள் ராம்பால்ஜி!

===கரிகாலன்

முத்து
26-05-2003, 11:01 PM
ராம்பால், நீங்கள் சொன்ன அழகுக்குறிப்புக்கு படத்தையே போட்டு அசத்திவிட்டார் சுமா... பாராட்டுக்கள் ..இருவருக்கும்...

Dinesh
27-05-2003, 06:04 AM
அழகுக்குறிப்புகளில் கேரட்டை அளவோடு வெட்டச்சொன்னதுதான் டாப்:lol::lol:
தொடருங்கள் உங்கள் எடக்கு முடக்குகளை ராம்பால் அவர்களே!
வாழ்த்துக்கள்.

தினேஷ்.

ஸ்ரீசரண்
13-11-2010, 06:07 AM
சூப்பர் எடக்கு முடக்கு
தொடருங்கள் உங்கள் கற்பனை முத்துக்களை ........:lachen001::lachen001::lachen001::lachen001:

அனுராகவன்
20-11-2010, 05:31 AM
இன்னும் தொடர வாழ்த்துக்கள்...
சிந்தனை சிறப்பாக உள்ளது........

ஆன்டனி ஜானி
20-11-2010, 05:41 PM
அழகு குறிப்புகள் எடக்கு,மடக்கா இருந்தாலும் பயனுள்ளதா இருக்கும் என்று நம்புகிறேன்...சரி .. இன்னும் தொடருங்கள்........