PDA

View Full Version : தொ(ல்)லைக் காட்சி



இனியவள்
09-07-2007, 10:24 AM
வீட்டின் அமைதியான தோற்றம்
என்னுள் கலக்கத்தை
ஏற்படுத்த தாகம் எடுத்த
தொண்டைக்கு புத்துணர்ச்சி
கொடுக்க சமையல் பக்கம்
சென்றேன் தண்ணீர்
குடிப்பதற்கு தக தகவென
எறிந்து கொண்டிருந்த அடுப்பை
பொங்கி வழிந்த சோற்று நீர்
அணைத்து இருந்தது...

நிலவை மறைத்து இருக்கும்
மேகங்கள் போல் பெரியம்மாவின்
விழிகளை பொங்கிய கடல் போல்
கண்ணீர் மறைத்திருந்தது குளிரில்
உறைந்த நீர் போல் அந்த காட்சியை
பார்த்த என் இதயம் உறைந்து போனது..

மென்மையாய் தாலாட்டும் தென்றல்
போல் கைகளை வருடி ஆசுவாசப்
படுத்து கொண்டேன் மின்சாரம்
தாக்கியதோ என்னும் அளவிற்கு
திடுக்கிட்டு என்னை நோக்கினர்...

கண்களில் அருவி மாதிரி கொட்டும்
கண்ணீருக்கு காரணம் வினாவினேன்
சிவாவுக்கு விபத்து உயிருக்கு
போரடிக் கொண்டிருக்கின்றான்
சிவாவா யாரது என நான்
ஆச்சரியப்பட்டேன் நாடகத்தில்
தாமரையின் கணவன் என்று கேட்ட
அந்த நொடி எனக்கு மின்சாரம்
தாக்கிய உணர்வு என்னுள்....

கோபத்துடன் தொ(ல்)லைக் காட்சியை
முறைத்துப் பார்த்தேன் என் கோபம்
அறியாமல் பரமசிவன் கழுத்தில் இருந்து
பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா
என் பாடல் ஒலித்துகொண்டிருந்தது
என்னை கொஞ்ச நொடி பதற வைத்தது
அறியாமல்........


(பல வீட்டில் நடக்கின்ற உண்மைச் சம்பவமும் கூட :icon_wink1: :icon_wink1: )

அன்புரசிகன்
09-07-2007, 10:37 AM
செய்தி நேரத்தில் தான் தேனீர் உணவு தயாரிப்பதென்றால் பார்த்தக்கொள்ளுங்கள்...

அழகான வரிகள் இனியவளே...

இனியவள்
09-07-2007, 10:40 AM
செய்தி நேரத்தில் தான் தேனீர் உணவு தயாரிப்பதென்றால் பார்த்தக்கொள்ளுங்கள்...
அழகான வரிகள் இனியவளே...

நீங்களாவது பராவாய் இல்லை சிலருக்கு செய்தி நேரத்தில் தான் உணவே

நன்றி அன்புரசிகன்

அன்புரசிகன்
09-07-2007, 10:45 AM
நீங்களாவது பராவாய் இல்லை சிலருக்கு செய்தி நேரத்தில் தான் உணவே

நன்றி அன்புரசிகன்

கடவுளே... தற்சமயம் எனது வீட்டில் தொல்லைக்காட்சிப்பெட்டியே இல்லை...

இனியவள்
09-07-2007, 10:47 AM
கடவுளே... தற்சமயம் எனது வீட்டில் தொல்லைக்காட்சிப்பெட்டியே இல்லை...

நல்ல காலம் தப்பிச்சுட்டீங்கள் இல்லாட்டி நேரத்துக்கு சாப்பாடு தேநீர் எல்லாம் வந்து இருக்காது :sport-smiley-019: :sport-smiley-019:

அமரன்
09-07-2007, 10:54 AM
நீங்களாவது பராவாய் இல்லை சிலருக்கு செய்தி நேரத்தில் தான் உணவே


இக்கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

என்னதான் இருந்தாலும் டிவிக்காரங்களுக்கு லொள்ளு அதிகம்தான். எந்நேரத்தில் எந்தப்பாட்டுப் போடுவது என்று தெரியவேண்டாம்.
கவிதை அழகு. வாழ்த்துக்கள் அம்மணி.

சூரியன்
09-07-2007, 11:08 AM
நல்ல படைப்பு

இனியவள்
09-07-2007, 11:12 AM
இக்கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

என்னதான் இருந்தாலும் டிவிக்காரங்களுக்கு லொள்ளு அதிகம்தான். எந்நேரத்தில் எந்தப்பாட்டுப் போடுவது என்று தெரியவேண்டாம்.
கவிதை அழகு. வாழ்த்துக்கள் அம்மணி.

ஆமாம் அமர் கோப நேரத்தில போய் தத்துவப்பாட்டு போட்டு முழிக்க வைச்சுட்டாங்கள் :icon_wacko:

நன்றி அமர்

இனியவள்
09-07-2007, 11:12 AM
நல்ல படைப்பு

நன்றி சூரியன்

ஷீ-நிசி
09-07-2007, 04:04 PM
ஹா ஹா ஹா ஹா............

அக்னி
09-07-2007, 04:08 PM
நன்றாகவே முழித்திருக்கின்றீர்கள்... ச்சே... விளித்திருக்கின்றீர்கள்...
பாராட்டுக்கள்...

இனியவள்
09-07-2007, 04:19 PM
நன்றாகவே முழித்திருக்கின்றீர்கள்... ச்சே... விளித்திருக்கின்றீர்கள்...
பாராட்டுக்கள்...

நன்றி அக்னி

மீனாகுமார்
09-07-2007, 04:51 PM
ஏதோ ஒரு படத்தில் வடிவேலு வேக வேகமாக ஆட்டோவைச் செலுத்திய பின்.. அவர்கள் நாடகம் பார்க்கப் பறந்த கதை−நகைச்சுவை ஞாபகத்திற்க்கு வருகிறது...

நிஜ உலகில் நிழல்களாய்த் திரியும் மனிதர்கள்.....

ஆதவா
10-07-2007, 08:29 AM
முன்பு ஒரு காலத்தில் அண்ணாமலை நாடகம் பார்த்தபிறகுதான் இரவு சாப்பாடு கிடைக்கும்.... அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்ட்... ம்.... ஒரு நாள் இந்த நாடகங்களுக்கு எல்லாம் முடிவு வரும் என்று காத்திருக்கிறேன்....

lolluvathiyar
11-07-2007, 07:19 AM
தொலை காட்சி பெட்டியை தொலைவிலேயே விடாமால் அதை நம் மனதிற்க்குள் நிலைபடுத்தினால் அது தொல்லைகாட்சியாக மாறிவிடும்

பிச்சி
11-07-2007, 09:36 AM
இதைக்கூட கவிதை ஆக்கலாமா... ஒரே வியப்பு. கவிதை சூப்பர் இனியவள் அக்கா.

அரசன்
11-07-2007, 02:41 PM
முன்பெல்லாம் பொழுதுபோக டிவி பார்ப்பார்கள். இப்போது டிவி பார்த்த மற்ற நேரங்களில் சமையலறையில் பொழுதை போக்குகின்றனர்.
நல்ல கவிதை இனி.

இனியவள்
11-07-2007, 04:14 PM
நன்றி பிச்சி ... நன்றி மூர்த்தி