PDA

View Full Version : கள்ளிப்பால் குடித்த சிசுவின் கதறல்சத்தியம்
09-07-2007, 08:11 AM
நாங்கள்
அன்னை வயிற்றுகுள்ளேயே
அழகற்று கொண்ட
அபிமன்யுக்கள்


எம் கண்கள்
கண்ணீர் சிந்த மட்டுமே தெரிந்த
முகில் குழந்தைகள்

சூரியனுக்கு இரவென்தே கிடையாதாம்
ஆனால் எங்களுக்கு
விடியல் என்பதே கிடையாது

இனியவள்
09-07-2007, 08:38 AM
வயிற்றுக்குள் அழக் கற்றுக்
கொண்ட குழந்தையே வெளியே
வரும் போதும் அழுது கொண்டல்லவா
வருகின்றாய் உன் முகத்தைக் கண்டு
புன்னகை பூக்கும் தாய் உன் அழுகை
கண்டு வாடி வதங்குவதை நீ அறியாயோ..

அழுதே பிறந்ததால் வாழும் போது
நீ சிரித்துக் கொண்டே வாழ்வாய்
பிறரையும் உன் செய்கையால் சிரிக்க
வைத்து சோகம் தனை கலைப்பாய்..

கண்ணீர் சொரிக்கும் கண்கள்
ஆனந்தக் கண்ணீர் வடிக்கும்
நாள் வெகு தொலைவினில்
இல்லை உன் வெற்றி தனைக்
கண்டு அன்னை அடையும்
பூரிப்பைக் கண்டு உன் கண்கள்
சொரிக்கும் ஆனந்த கண்ணீர்
உவர்ப்பதற்கு பதிலாய் அமுதம்
போல் தித்திக்கும்..

விடியலுக்காய் காத்து காத்து
விடிந்ததனை மறந்து தூங்கும்
நண்பனே உனக்காய் அற்புதமாய்
விடியல் விடிந்திருக்கின்றது
பூத்துக்குலுங்கும் மலர்கள்
மலர்களின் வாசத்தைச் சுமந்து
வரும் தென்றல்..

கவிதை அருமை நண்பரே
ஏக்கம் கொண்ட நெஞ்சுக்காய் என்னால் முடிந்த பதில் கவி

சுகந்தப்ரீதன்
09-07-2007, 08:59 AM
நாங்கள்
அன்னை வயிற்றுகுள்ளேயே
அழ* க*ற்று கொண்ட*
அபிம*ன்யுக்க*ள்

எம் க*ண்க*ள்
க*ண்ணீர் சிந்த மட்டுமே தெரிந்த*
முகில் குழந்தைக*ள்

சூரிய*னுக்கு இர*வென்தே கிடையாதாம்
ஆனால் எங்களுக்கு
விடிய*ல் என்ப*தே கிடையாது

கள்ளிப்பாலின் சுவையை
உங்களுக்கு சொல்ல*
எங்களுக்கு ஆசை...ஏனோ
உங்களுக்கு கேட்கவில்லை
எங்களின் அழுகுரல் ஓசை....

அமரன்
09-07-2007, 09:00 AM
சரித்திரம் மாறுகின்றது ஹீரோ.


நாங்கள்
அன்னை வயிற்றுகுள்ளேயே
அழ கற்று கொண்ட
அபிமன்யுக்கள்

கருப்பையிலேயே-எதிரி
கருவறுக்க கற்றுக்கொண்ட
அபிமன்யுக்கள் நாம்


எம் கண்கள்
கண்ணீர் சிந்த மட்டுமே தெரிந்த
முகில் குழந்தைகள்

அனல் புழுக்களுக்கு
நிழல் கொடுக்கும்
கருமுகில்கள் நாம்


சூரியனுக்கு இரவென்தே கிடையாதாம்
ஆனால் எங்களுக்கு
விடியல் என்பதே கிடையாது

விடியலை சமைத்திடும்
அழிவை அறியாத
உதய சூரியர்கள் நாம்

இனியவள்
09-07-2007, 09:02 AM
சரித்திரம் மாறுகின்றது ஹீரோ.
கருப்பையிலேயே-எதிரி
கருவறுக்க கற்றுக்கொண்ட
அபிமன்யுக்கள் நாம்

அனல் புழுக்களுக்கு
நிழல் கொடுக்கும்
கருமுகில்கள் நாம்

விடியலை சமைத்திடும்
அழிவை அறியாத
உதய சூரியர்கள் நாம்

சபாஷ் வாழ்த்துக்கள் அமர் :aktion033: :aktion033:

அமரன்
09-07-2007, 09:10 AM
சபாஷ் வாழ்த்துக்கள் அமர் :aktion033: :aktion033:

நன்றிங்க.. இனியவள்..

தங்கவேல்
09-07-2007, 09:34 AM
அசத்துறீங்க...

மனோஜ்
09-07-2007, 09:46 AM
கருவுக்கு கருசேர்க்கும் கவிதைகள் அருமை அனைத்தும்

ஆதவா
10-07-2007, 08:23 AM
அபிமன்யூ என்று ஏன் இட்டிருக்கிறீர்கள் நாயகரே!!???
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

அழிந்துபோகும் கருவுக்கும் கவிதை... பலே! மிக அருமையாக இருக்கிறது. நல்ல உவமைகள்... வாழ்த்துக்கள் நாயகரே!

பென்ஸ்
10-07-2007, 08:44 AM
வாழ்த்துக்கள் நாயகரே!
என்ன* ஆத*வா ஹீரோவுக்கு த*மிழ் பெய*ர் கொடுக்கிறீர்க*ளா???

வாழ்த்துகள் நண்பரே....

கள்ளிபால் குடித்த கரு....
குழந்தை பிறந்த பிறகு கள்ளிபால் கொடுப்பார்கள்... பெண்ணாக இருந்தால்...
தவறாக குழந்தை வரும்போது கள்ளிபால் குச்சியை நுளைத்து கொல்வார்களாம் (சிலநேரம் இரண்டும் "அவுட்", நன்றி: ஜீனியர் விகடன், எப்போதோ)


இந்த குழந்தை கருவில் கள்லிப்பால் குடித்தது எவ்வாறு... புரியலையே...

சூரியன்
10-07-2007, 08:53 AM
நல்ல படைப்பு நண்பரே

இதயம்
10-07-2007, 08:58 AM
சமுதாயத்தில் நடக்கும் சமூக அவலத்தை எடுத்துச்சொல்லும் அற்புதமான கவிதை. அதைத் தொடர்ந்த பின்னூட்டங்கள் நற்கருத்துக்களை உள்ளடக்கிய உயர் முத்துக்கள். பாராட்டுக்கள் நாயகனுக்கு..!

குறிப்பு: கவிதையின் தலைப்பு கவிதையோடு முரண்படுகிறது. பொதுவாக கள்ளிப்பால் ஊட்டப்படுவது கருப்பையில் இருக்கும் கருவுக்கல்ல. அதை விட்டு வெளிவந்த உருவுக்கு..! எனவே கரு என்பதற்கு பதிலாக சிசுவின் கதறல் என்பது பொருத்தமாக இருக்கும். எதுகை மோனைக்காக நீங்கள் "கரு"வை உபயோகப்படுத்தியிருந்தாலும் பொருத்தமில்லாத வார்த்தைப்பயன்பாடு சில நேரத்தில் நல்ல கவிதையை கெடுத்துவிடும். என் கருத்தை ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

சத்தியம்
10-07-2007, 11:59 AM
பதில் கவி அளித்த இனியவள்,அமரர் மற்றும் பின்னுட்டமிட்ட அனைத்து மன்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

மற்றும் என் கவிதையில் உள்ள தவறை சுட்டி காட்டிய பென்ஷ், இதயம் அவர்களுக்கும் என் நன்றிகள்

இது எனது முதல் பதிப்பு உங்களது வரவேற்பு என்னை உற்சாகம் கொள்ள செய்கிறது நன்றிகள்

M.Jagadeesan
22-01-2013, 02:46 AM
சிசுவின் கதறல் உள்ளத்தை உருக்கிவிட்டது.