PDA

View Full Version : மலரவள்.....!



வசீகரன்
09-07-2007, 05:12 AM
பூக்களை பறிக்கும்போது
உன் விரல்களை
இலைகளின் மீது படாமல் பார்த்துக்கொள் ..!!

எனென்றாள் உன் விரல்கள் தீண்டினாள்
இலைகளும் பூக்கலாக மாறலாம்....!

இனியவள்
09-07-2007, 06:52 AM
பூக்களை பறிக்கும்போது
உன் விரல்களை
இலைகளின் மீது படாமல் பார்த்துக்கொள் ..!!

எனென்றாள் உன் விரல்கள் தீண்டினாள்
இலைகளும் பூக்கலாக மாறலாம்....!


என்ன ஒரு கற்பனை வாழ்த்துக்கள் வசி

பென்ஸ்
09-07-2007, 06:54 AM
நயமான கற்பனை...
காத*ல் உரம்..
நல்ல கவிதை...

வாழ்த்துக*ள்..

ஓவியன்
09-07-2007, 07:26 AM
பூக்களை பறிக்கும்போது
உன் விரல்களை
இலைகளின் மீது படாமல் பார்த்துக்கொள் ..!!

எனென்றாள் உன் விரல்கள் தீண்டினாள்
இலைகளும் பூக்கலாக மாறலாம்....!

அழகான கற்பனைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!.

நீ தீண்டின்
இலை கூடப்
பூவாக வேதியல்
மாற்றமடையுமாமே?

எங்கே என்னையும்
ஒரு முறை தீண்டு!
பூவாக மாற
ரொம்ப நாளா ஆசை!.

இனியவள்
09-07-2007, 07:31 AM
அழகான கற்பனைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!.
நீ தீண்டின்
இலை கூடப்
பூவாக வேதியல்
மாற்றமடையுமாமே?
எங்கே என்னையும்
ஒரு முறை தீண்டு!
பூவாக மாற
ரொம்ப நாளா ஆசை!.

உன் விரல் தீண்டி
பூவான நான் என்று
உன் கூந்தல் சேர்வேன்
என்று நிமிடங்களை
பூவிதழ் கொண்டு
எண்ணிக்கொண்டிருக்கின்றேன்...

அமரன்
09-07-2007, 08:33 AM
உன் விரல்தீண்டினால் இலைகூட பூக்களாக மாறிவிடுமே. என்ன ஒரு கவித்துவமான வர்ணனை. பாராட்டுகள் வசீகரன்.



எங்கே என்னையும்
ஒரு முறை தீண்டு!
பூவாக மாற
ரொம்ப நாளா ஆசை!.

உன்னைத் தீண்டி விட்டால்
பூவாகவா மாறுவாய்.
பூ நாகமாக மாறி
தீண்டிச் சென்றுவிடுவாய்.

அமரன்
09-07-2007, 08:40 AM
உன் விரல் தீண்டி
பூவான நான் என்று
உன் கூந்தல் சேர்வேன்
என்று நிமிடங்களை
பூவிதழ் கொண்டு
எண்ணிக்கொண்டிருக்கின்றேன்...

விரல்தீண்டி பூவான நீ
என் காதில் குடிவந்தால்
வேண்டாம்..
உன் உடலாவது
பசுமையாக இருக்கட்டும்.

இனியவள்
09-07-2007, 08:40 AM
உன்னைத் தீண்டி விட்டால்
பூவாகவா மாறுவாய்.
பூ நாகமாக மாறி
தீண்டிச் சென்றுவிடுவாய்.

நீ தீண்டிச் சென்றாலும்
பரவாய் இல்லை உன்
ஒரு தீண்டலுக்காய் காத்துக்
கொண்டிருக்கின்றது என் உயிர்

ஷீ-நிசி
09-07-2007, 10:08 AM
நல்ல கற்பனை...

அருமை! வாழ்த்துக்கள் நண்பரே!

இனியவள்
09-07-2007, 10:28 AM
விரல்தீண்டி பூவான நீ
என் காதில் குடிவந்தால்
வேண்டாம்..
உன் உடலாவது
பசுமையாக இருக்கட்டும்.

விரல் தீண்டி பூவான
நான் அலங்கரிக்க போவது
உன் காதையல்ல
இதயம் என்னும் கோவிலை