PDA

View Full Version : நானோதொழில்நுட்பம்



மாதவர்
09-07-2007, 03:56 AM
நானோ தொழில்நுட்பம் என்றால் என்பதை அழகு தமிழில் யாராவது
கூறலாமே?

namsec
09-07-2007, 03:58 AM
சரியான விடயம் ஆனால் அறிவியல் சம்மந்தமான இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்

sns
10-07-2007, 04:09 AM
நுன் தொழில்நுட்பம் என்று கூறலாம்

இளசு
15-07-2007, 06:53 AM
நண்பருக்கு,

இந்தவார விகடனில் கல்விப்பகுதியில் நானோ பற்றிய சிறு அறிமுகமும்..
இந்தியாவில் எங்கெங்கு இதைக்கற்கலாம் என்ற தகவல்களும் வந்துள்ளன..

namsec
15-07-2007, 07:05 AM
நானோவை பற்றி அறிய இங்கே சொடுக்கவும் (http://en.wikipedia.org/wiki/Nanotechnology)

இணைய நண்பன்
15-07-2007, 09:49 AM
நனோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நனோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நனோ மீட்டர் தடிப்புடையது.

நனோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்துவரும் ஒரு நுட்பம் ஆகையால் நனோ தொழல்நுட்பங்கள் என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நனோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் நேஷனல் நானோ டெக்னாலஜி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications." நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

கருவிகளை சிறிதாக்கிக்கொண்டே போவதின் விளைவாக அணுப்புற விசை நுண்ணோக்கி (atomic force microscope (AFM)) மற்றும் வாருதல் வகை புரை ஊடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி (scanning tunneling microscope (STM)) போன்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் கிடைத்துள்ளன.
−−நன்றி − விக்கிபீடியா−

இணைய நண்பன்
15-07-2007, 09:51 AM
இது பற்றிய மேலும் செய்திகள்−−−


நானோ தொழில்நுட்பத்திற்கு கூடுதல் நிதி கோரிக்கை

நானோ தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் அதிநுண்ணியல் தொழில்நுட்பத்திற்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை செயல் அதிகாரி ஏ. சிவதாணு பிள்ளை கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அதி நுண்ணியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை கண்டறியும் வகையில் மாநில திட்டக்குழு நேற்று சென்னையில் கூடி விவாதித்தது.

சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சிறப்பான சேவைகளை ஆற்ற முடியும் என்பதை ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் உறுதிப்படுத்தியிருப்பதாக இந்தக் கூட்டத்தில் பேசிய சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து ஆய்வுப்பணியில் ஈடுபடவும், மாநில அரசின் பல்வேறு துறைகள் பயன்படும் வகையிலும் இந்த தொழில்நுட்பம் அமையும் என்பதால், தமிழக அரசு மேலும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மாநில திட்டக்குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கும் என்று சென்னையில் நேற்று வெளியான மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

இணைய நண்பன்
15-07-2007, 09:54 AM
புற்றுநோய் சிகிச்சையில் `நானோ' தொழில்நுட்பம்
சமகாலத்தில் வெகுவாகப் பிரபலமடைந்து வரும் நானோ தொழில்நுட்பம், இதுகாலமும் வைத்திய உலகிற்கு பெரும் சவாலாக இருந்த புற்றுநோயைக் குணப்படுத்துவதில் பெரும் சாதனை படைத்திருக்கிறது.

புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முயற்சியில் விலங்குகளில் மேற்கொண்டு வந்த `நானோ' தொழில்நுட்ப முறைகள் பெரிதும் வெற்றியளித்திருக்கின்றன. மனித புற்றுநோயைக் குணப்படுத்துவதில் நம்பிக்கையான, நிச்சயமான மற்றும் பாதுகாப்பான நானோ தொழில்நுட்பமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வெகு விரைவில் புற்றுநோயைக் குணப்படுத்தும் பொற்காலம் பிறக்கவிருக்கிறது' என அமெரிக்க மசூசெட் மாநில தொழில்நுட்ப கல்லூரி உயிரியல், பொறியியல் பேராசிரியர் சசிசேகரன் தெரிவித்திருப்பதாக அங்கிருந்து வெளிவரும் `நேச்சர்' என்னும் சஞ்சிகை கட்டுரையொன்றை பிரசுரித்திருக்கிறது.

சசிசேகரன் குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சமகாலத்தில் நடைமுறையிலிருக்கும் ஹிமோதெரப்பி சிகிச்சை முறையையே பிரயோகித்திருந்தனர். இருப்பினும், இலக்கை எட்டுவதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையே பாராட்டப்படக்கூடிய கண்டுபிடிப்பு.

புற்றுநோய்ச் சிகிச்சையில் பாதிக்கப்பட்ட கலங்களை அழிப்பதற்கு கையறு நிலையில் இறுதியாக ஹிமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் வெற்றியும் இழப்பும் இறைவன் கைகளில் என்பதை வாசகர்கள் அறிவார்கள். ஹிமோதெரப்பி மருந்து பாதிக்கப்பட்ட கலங்களை மட்டும் அழிப்பதில்லை. சிலவேளைகளில் ஆரோக்கியமான கலங்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. மேலும், புற்றுநோய்க் கலங்கள் இத்தகைய மருந்திற்கு எதிர்ப்பாற்றலை விருத்தி செய்து கொள்கின்றன. எனவே, இவ்வகை சிகிச்சையில் எழும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வைத்திய உலகம் இன்னமும் போராடி வருகிறது.

பாதிக்கப்பட்ட கலங்களானாலும், பாதிக்கப்படாத கலங்களானாலும் அவை விருத்தியடையவும் உயிர் வாழவும் குருதி விநியோகம் மிக முக்கியம். எனவே, புற்றுநோய்க் கலங்களுக்கு வழங்கப்படும் குருதியை தடை செய்தல், அக்கலங்களை அழிப்பதற்கு ஒரு சிறந்த வழி. இருப்பினும், அழிவுற்ற கலங்களை மீளவும் விருத்தியடையச் செய்யும் ஆற்றல் புற்றுநோய்கலங்களுக்கு உண்டு. எனவே, ஒரே வேளையில் புற்றுநோய்க் கலங்களை அழிக்க, ஹிமோதெரப்பி சிகிச்சையும் குருதி விநியோகத் தடை சிகிச்சையும் இணைத்து சிகிச்சையளிக்கும் தேவை முக்கியம் பெறுகிறது.

இருப்பினும், இச்சிகிச்சை முறை ஒரு வரையறைக்குட்பட்டது. ஏனெனில், குருதி விநியோகத்தடை மருந்து தனியே புற்று நோய்க் கலங்களுக்கு இரத்தம் வழங்கலைத் தடை செய்வது மட்டுமல்ல, ஒட்சிசன் விநியோகத்தை மட்டுப்படுத்தி ஹிமோதெரப்பி மருந்தை வலுவிழக்கச் செய்கிறது. இக்கட்டத்தில்தான் சசிசேகரன் நானோ தொழில்நுட்பத்தை வெகுநுணுக்கமாகப் பிரயோகித்து பெரும் சாதனை படைத்துள்ளார்.

அவர் மேற்குறிப்பிட்ட இரு முறைகளையும் இணைத்து ஆனால், ஒரு வித்தியாசமான பாதையில் அந்தச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தார். பலூன் போன்ற அமைப்புள்ள நானோகலத்தை சசிசேகரன் தேர்ந்து எடுத்திருந்தார். அதன் மேற்புறத்தில் குருதித்தடை மருந்தையும் உட்புறத்தில் ஹிமோதெரப்பி மருந்தையும் வைத்து சிகிச்சையில் உபயோகப்படுத்தினார். முதல் குருதி விநியோகத்தைத் துண்டித்தல் அவசியம். தொடர்ந்து ஹிமோதெரப்பி மருந்தை விடுவிக்க வேண்டும். இவ்வழியில் நானோ கலங்கள் நல்ல பலனைத் தந்தன. `பிறமுறைகள் எதுவுமே நல்ல விளைவைத் தர தவறிவிட்டன' என்கிறார் சசிசேகரன்.

நானோ கலங்களின் புற்றுநோய்க் கலங்களை அழிக்கும் ஆற்றல், புற்றுநோய்க் கலங்களிலேயே தங்கியிருக்கின்றது. பெரிதாக வளரும் புற்றுநோய்க் கட்டிகள் தமது சூழலில் உள்ள பொருட்களை உறிஞ்சி தன்னகத்தே உள்ளிளுக்கின்றன. எனவே, நானோ கலங்களும் உட்சென்று சிறைப்பிடிக்கப்படுகின்றன. குருதிக் கலங்களில் ஏற்படும் ஒழுக்கு காரணமாக நானோகலங்கள் குருதியுடன் வெளியேறி வளர்ச்சியடைந்த புற்றுநோய்க் கலங்களுள் சென்று தங்குகின்றன. நானோ கலத்தின் மேற்பகுதியிலுள்ள குருதித் தடை மருந்து குருதிக் குழாய்களைச் சுருங்கச் செய்து குருதியோட்டத்தை தடை செய்கிறது. நானோ கலங்களின் உட்பகுதியிலுள்ள ஹிமோதெரப்பி மருந்து மெதுவாக வெளியேறி மிகவும் வினைத்திறனாக புற்றுநோய்க் கலங்களை அழிக்கிறது.

இவ்வகை மருந்துகள் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளிவிட்டால் மிகவும் வினைத்திறனாக பாதிக்கப்பட்ட கலங்களை அழிக்க முடிவதில்லை. இருப்பினும், நானோ கலங்களை உபயோகித்து மேற்குறிப்பிட்டபடி மருந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியேற்றப்படுவதால் புற்றுநோய்க் கலங்கள் முற்றாக அழிக்கப்படுகின்றன.

புற்றுநோய்ச் சிகிச்சையில் சர்வதேச பொதுவான மருந்து கிடைப்பதில்லை. அவை குறிப்பிட்ட வகைப் புற்றுநோயில் தங்கியுள்ளன. `எனவே, நாங்கள் குறிப்பிட்ட புற்றுநோய்க்கு ஏற்ற மருந்துக் கலவையைக் கண்டறிவதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது' என்கிறார் சசிசேகரன்.

எலிகளை வைத்து நடாத்தப்பெற்ற பரிசோதனையில் ஹிமோதெரப்பி சிகிச்சையின் விளைவாக அவை 30 நாட்களே உயிர் வாழ்ந்தன. ஆயினும், நானோ தொழில்நுட்ப சிகிச்சையின் விளைவாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளில் 85 சதவீதம் 65 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்தது கண்டறியப்பட்டது. `நாங்கள் இந்த ஆய்வை ஆரம்பித்த வேளையில் இவ்வளவு நீண்ட நாட்கள் எலிகள் உயிர் வாழும் என நாம் எதிர்பார்க்கவில்லை. 65 நாட்கள் உயிர் வாழ்ந்தது எமக்குக் கிடைத்த பெருவெற்றி' என்றார் சசி. இவ்வகை நானோகலச் சிகிச்சை மனிதர்களுக்கு பிரயோகம் செய்யும் ஆய்வு முடுக்கி விடப்பட்டுள்ளது. புற்றுநோயை இலகுவாக குணப்படுத்தும் பொற்காலம் வெகுவிரைவில் உதயமாகும் என எதிர்பார்ப்போம்.

அறிஞர்
16-07-2007, 02:55 PM
நானோ தொழில் நுட்பம் பற்றி.. நல்ல ஆய்வு... நன்றி இக்ராம்.

கிட்டத்தட்ட 6−7 வருடமாக அது சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுகிறேன்...

விகடன்
29-07-2007, 03:30 AM
நன்றி இக்ராம்.
நனோ என்றால் அளவு கோல்களில் ஒரு அலகு என்று தெரியும். ஆனால் நனோதொழில் நுட்பம் என்றால் என்ன என்று குழம்பியே போவிவிட்டேன். டெளியவைத்துவிட்டீர்கள்.

sagee
04-08-2007, 05:58 PM
நன்றி இக்ராம்
நானேதொழில் நுட்பத்தை பற்றி அறிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆவல்.
அதைப்பற்றி தேடிக்கொன்று இருந்த சமயம், இங்கு இந்த பதிப்பை கண்டதில் மிகவும் மகிழ்ச்சி.

மேலும் உங்க*ளிட*ம் இருன்து நிரைய* த*க*வ*ல்க*ளை எதிர் பார்க்கிறேன்.
ந*ன்றி....

தமிழ்சுவடி
28-11-2007, 01:11 PM
எனது உயிர் நண்பர் ஒருவர் மூளையில் ஏற்பட்ட புற்று நோய் கட்டியால் தனது இளம் வயது மனைவி இரண்டு சிறு குழந்தைகளை விட்டு விட்டு இயற்கை எய்தினார். தாளாத துக்கத்தைத் தந்த நிகழ்ச்சி. இப்போது 4 வயது குழந்தை அப்பாவை தேடி அலைகிறது. தினமும் அம்மாவுக்கு இது மனபாரத்தை கொடுத்து அழுகை கொடுக்கிறது. குழந்தைக்கு தெரியாமல் பாத்ரூமிற்குள் சென்று அழுது முடித்து வருகிறார்.

தொழில் நுட்பம் வளர அரசு அதிக நிதியுதவி செய்ய வேண்டும்.

மயூ
29-11-2007, 06:55 AM
தமிழ் மன்றத்தில் ஒரு தடவை நனோ தொழில் நுட்பம் பற்றி ஒரு அறிமுகக் கட்டுரை எழுதினேன் பொறுங்கள் தேடித்தருகின்றேன்...!!!

மயூ
29-11-2007, 07:07 AM
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

மாதவர்
07-12-2007, 01:48 AM
தமிழ் மன்றத்தில் ஒரு தடவை நனோ தொழில் நுட்பம் பற்றி ஒரு அறிமுகக் கட்டுரை எழுதினேன் பொறுங்கள் தேடித்தருகின்றேன்...!!!

இன்னும் கிடைக்கவில்லையே?