PDA

View Full Version : காதல் தீவிரவாதிமாதவர்
09-07-2007, 03:50 AM
கண்ணா!
எனது தேக தேசத்தில்
எல்லை தாண்டி ஊடுருவிய
பயங்கரவாதி அல்லவா நீ

இனியவள்
09-07-2007, 06:35 AM
கண்ணா!
எனது தேக தேசத்தில்
எல்லை தாண்டி ஊடுருவிய
பயங்கரவாதி அல்லவா நீ

கத்தி இன்றி இரத்தம் இன்றி
அன்பு என்னும் ஆயுதம்
கொண்டு போராடும்
மென்மையான தீவிரவாதி
அல்லவா நான்

கவிதை அருமை மாதவர் வாழ்த்துக்கள்

ஆதவா
09-07-2007, 06:36 AM
அட!!!

பென்ஸ்
09-07-2007, 07:23 AM
அட.. அடடே...
ஆதவர் விமர்சனம் கலக்கல்....

மாதவரே... வாழ்த்துகள்....
அனுமதியின்றி வந்ததாலா.
அனுதினமும் மதியின்றி விழுந்ததாலா...

பயங்கரவாதிகல் வருவது எல்லைகளும்
வேலிகளும் துருபிடித்து போனதால்...
கவனமாயிரும்..
குண்டு வெடிக்கும் முன் தப்பி விடுவான்...

அமரன்
09-07-2007, 08:29 AM
காதலிக்க வந்தவனைத் தீவிரவாதி ஆக்கிவிட்டீர்களே. பாராட்டுகள் மாதவரே!...


கண்ணா!
எனது தேக தேசத்தில்
எல்லை தாண்டி ஊடுருவிய
பயங்கரவாதி அல்லவா நீ

எல்லைதாண்டி வரவில்லை
காதல் தீ மூட்டிய நீ
பிடிவாதம் பிடித்தத்தால்
தீவிரவாதமாய் பற்றினேன்.

அன்புரசிகன்
09-07-2007, 08:39 AM
எல்லை தாண்டிய பயங்கரவாத காதலால் எல்லையில்லா மகிழ்வுவருமா?
காதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பு உண்டோ?
இரண்டிலும் தம்முயிரை தியாகம் செய்யும் ஆத்மாக்கள் உண்டு.
இரண்டிற்கும் அசாத்திய துணிவு வேண்டும்.
இரண்டினாலும் ஏற்படும் வடு மனதில் என்றும் ஆறாது...
இவ்வாறு அடுக்கிக்கொண்டு போகலாம். மிகுதியை அக்னியின் தொடர்ச்சிக்காய் விட்டுவிடுகிறேன். :D

இனியவள்
09-07-2007, 08:43 AM
எல்லை தாண்டிய பயங்கரவாத காதலால் எல்லையில்லா மகிழ்வுவருமா?
காதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பு உண்டோ?
இரண்டிலும் தம்முயிரை தியாகம் செய்யும் ஆத்மாக்கள் உண்டு.
இரண்டிற்கும் அசாத்திய துணிவு வேண்டும்.
இரண்டினாலும் ஏற்படும் வடு மனதில் என்றும் ஆறாது...
இவ்வாறு அடுக்கிக்கொண்டு போகலாம். மிகுதியை அக்னியின் தொடர்ச்சிக்காய் விட்டுவிடுகிறேன். :D

ஆஹா அன்பு ரசிகன் :D

பயங்கரவாதம் உயிரை அழித்து
உலகை வெறுக்கின்றது
காதல் உயிரைக் கொடுத்து உலகை
நேசிக்கின்றது

அமரன்
09-07-2007, 08:51 AM
அன்பு வேண்டாம்..பயங்கர வாதம் பண்ணி கலாய்க்கிறீங்க. ஆதவா சொன்னதுபோல் குசும்பு சாஸ்தியாகிவிட்டது.....

அன்புரசிகன்
09-07-2007, 08:59 AM
நீங்கள் கூறுவது உண்மை...
நான் சும்மா தான் ஒப்பிட்டுப்பார்த்தேன். தப்பாக எண்ணிவிடாதீர்கள். காதலிலும் தீவிரவாதம் உண்டு என நான் நினைக்கிறேன்.

சாதாரணமாக யோசித்துப்பாருங்கள். வாலிப வயதில் படிப்புத்தான் முக்கியம். காதல் வேண்டாம் என்றால் வாலிபம் விலத்திவிடுமா? அது போல தான்.. தீவிரவாதம் தவறு... நிறுத்துங்கள் என்று கூறிப்பாருங்கள்... .இன்னமும் அதிகரிக்கும். யாராவது அவ்வாறு கூற காதல் செய்வதை நிறுத்தியிருக்கிறார்களா?

(நான் நல் நோக்கில் தான் தீவிரவாதத்துடன் ஒப்பிடுகிறேன்... சரியான நோக்கு இருந்தால் தீவிரவாதம் தப்பில்லையே...)

அவளிடம் அல்லது அவனிடம் இருந்து ஒரு வார்த்தை வாராதோ என்று எதிர்பார்ப்பு அதிகம்...

உன் மெளனமொழி
என் காதலை கூறாதோ...

என்ற ஏக்கம்... எதிர்பார்ப்பு இத்தனை குணாதிசையங்களையும் கொண்டது...

உன் மொழி எனக்கேது
கண்சிமிட்டிவிடு
காதலில் ஆகுதியாவேன்...

இதுவும் காதலின் இயல்பு.

ஒரு வார்த்தை
நீ போகலாம்...
போவதற்கு எத்தனை
கரும் உயிர்கள்...
கரியாவதற்கல்ல
விடியலுக்கு கருவாக...
உரிமைக்கு வித்தாக..

இது எதற்கென்று புரியும் என நினைக்கிறேன்... இல்லையா அமரா... அக்னி... ஓவியரே...

இனியவள்
09-07-2007, 09:05 AM
ஒரு வார்த்தை
நீ போகலாம்...
போவதற்கு எத்தனை
கரும் உயிர்கள்...
கரியாவதற்கல்ல
விடியலுக்கு கருவாக...
உரிமைக்கு வித்தாக..

இது எதற்கென்று புரியும் என நினைக்கிறேன்... இல்லையா அமரா... அக்னி... ஓவியரே...

புரிந்து கொண்டேன் அன்பு ரசிகரே :icon_08:

அமரன்
09-07-2007, 09:07 AM
புரிந்தது மக்கா. புரிந்தது. குசும்பு என நினைத்தால் கோபுர சிந்தனையல்லவா செய்திருகின்ரீர்கள் அன்பு.


அப்பாவிமக்களை அழிக்கும் எதுவும் தீவிரவாதம். அது தம்மினமக்களாக இருந்தால் என்ன. வேறு இனமக்களாக இருந்தால் என்ன. அதே போல் அப்பாவி மக்களைக் காக்கும் எதுவும் தீவிரவாதமில்லை. காதல்கூட சில வேளைகளில் மக்களை அரித்து அழிகின்றது. சரியாங்க நான் சொல்வது. (அனுபவம் இல்லைங்க. உங்க கிட்ட கத்துக்கொள்ளக் நினைகின்றேன்.)

அன்புரசிகன்
09-07-2007, 09:18 AM
சரியாங்க நான் சொல்வது. (அனுபவம் இல்லைங்க. உங்க கிட்ட கத்துக்கொள்ளக் நினைகின்றேன்.)

எல்லாம் இனியவளின் கவிகளுக்கே சமர்ப்பணம் ஐயா... நமக்கும் அனுபவம் இல்லை...

இனியவளின் வரிகளைப்பார்த்து கற்றுக்கொண்டது தான் எனதனுபவம்.

இனியவள்
09-07-2007, 09:25 AM
எல்லாம் இனியவளின் கவிகளுக்கே சமர்ப்பணம் ஐயா... நமக்கும் அனுபவம் இல்லை...
இனியவளின் வரிகளைப்பார்த்து கற்றுக்கொண்டது தான் எனதனுபவம்.

:ohmy: :ohmy: :icon_wacko: :icon_wacko: :icon_wacko: :shutup: :shutup:

நான் கற்றுக்கொண்டது இங்கு தானே :sport009:

lolluvathiyar
11-07-2007, 08:41 AM
கவிதைகளும் பின்னூட்டங்களும் அருமை

அனைவரும் காதலித்தால் தீவிரவாதம் குரையுமோ என்னவோ

மாதவர்
11-07-2007, 08:59 AM
கவிதையை விட சிறப்பாக கருத்துக்கள் கூறிய அனைத்து தீவிர சுவைஞர்களுக்கும்
நன்றி

பிச்சி
11-07-2007, 12:24 PM
கவிதை அருமையாக இருக்கிறது மாதவர் அவர்களே. வித்தியாசமாக இருக்கிறது

ஓவியன்
13-07-2007, 12:26 AM
கண்ணா!
எனது தேக தேசத்தில்
எல்லை தாண்டி ஊடுருவிய
பயங்கரவாதி அல்லவா நீ

எல்லை தாண்டாமல்
உள்ளம் தோடுவதுதானே
காதல் − உடலைத் தொடாமல்!

என்ன சொல்கிறீர்கள் மாதவர்?

ஓவியன்
13-07-2007, 12:28 AM
மாதவரே... வாழ்த்துகள்....
அனுமதியின்றி வந்ததாலா.
அனுதினமும் மதியின்றி விழுந்ததாலா...

பயங்கரவாதிகல் வருவது எல்லைகளும்
வேலிகளும் துருபிடித்து போனதால்...
கவனமாயிரும்..
குண்டு வெடிக்கும் முன் தப்பி விடுவான்...

அசத்திட்டீங்க அண்ணா!