PDA

View Full Version : அனில் அம்பானியின் வளர்ச்சி



namsec
09-07-2007, 02:18 AM
முகேஷ் அம்பானியை தொடர்ந்து அவரது சகோதரர் அனில் அம்பானியும் இந்தியாவில் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக சொத்து உள்ளோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சேர்ந்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களில் உள்ள அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பின் அடிப்படையில், "டிரில்லினர்' பட்டியலில் அவர் இடம் பிடித்துள்ளார். மும்பை பங்குச் சந்தை கடந்த வெள்ளியன்று 15 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை படைத்தது. அன்றைய தினம் அனில் அம்பானி வசமுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ரிலையன்ஸ் கேபிடல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு விலை போயின. இதன் காரணமாக அனில் அம்பானியின் பங்கு மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 334 கோடியாக உயர்ந்தது. இவரது குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்கு மூலதனம் மட்டும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 930 கோடியாக உள்ளது.

இவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் பங்கு மூலதனம் மட்டும் ரூ.ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 657 கோடியாக உயர்ந்துளளது. இதில், 67 சதவீத பங்குகளை வைத்திருக்கும் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.74 ஆயிரத்து 354 கோடி. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.28 ஆயிரத்து 219 கோடியாக உள்ளது. இதில், அனில் அம்பானியின் 53 சதவீத பங்குகளின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் எனர்ஜி நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனங்களில் அனில் அம்பானியின் பங்குகள் ரூ.இரண்டாயிரத்து 856 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள டி.எல்.எப்., நிறுவனத்தின் கே.பி.சி., தற்போது 85 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன், "டிரில்லினர்' பட்டியலில் இடம் பிடிக்க நெருங்கிக் கொண்டு இருக்கிறார்.


தினமலர்

தங்கவேல்
09-07-2007, 02:35 AM
வளரட்டும். வாழ்த்துவோம். அனில் அம்பானி அவர்கள் நீண்ட காலம் பேரும் புகழுடனும் வாழ வாழ்த்துவோம். ஏராளமான சகோதரர்கள் அவரிடம் பணியாற்றுகிறார்கள். அவர்களையும் வாழ்த்துவோம்.
கொசுவலைக்கான ரா மெட்டீடரியலில் இவர்கள் தான் மோனோபோலி. இது போல எண்ணற்றவை. இவர்களின் வியாபார உத்தி − போட்டி இல்லாமல் செய்வது. அல்லது போட்டி கம்பெனியை நிலை குலைய செய்வது. அதுதான் இவர்களின் வெற்றிக்கான பார்முலா. இது தான் வியாபார தர்மம்.

aren
09-07-2007, 02:38 AM
அம்பானி சகோதர்கள் போல் இன்னும் பல இந்தியர்கள் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்பதே என் கனவு. அது நிச்சயம் நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

saguni
11-08-2007, 07:10 AM
உங்கள் கருத்து உண்மைதான் தங்கவேல் அவர்களே! ஆனால் அனில் அம்பானியைப்பொருத்தவரை ஓரளவிற்கு பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். முகேஷின் பெயர் கெட்டது அதிக பிரிமியம் நிர்ணயிக்கப்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் ஐபிஓவில்தான் என்பது இங்கே குறிப்பிடவேண்டியது அவசியம்.

தங்கவேல்
11-08-2007, 09:22 AM
அம்பானிதான் சிறந்தவர். அனில், முகேஷ் − சும்மா வெத்து வேட்டு.. பாருங்கள் விரைவில்.. நான் சொன்னது உண்மை என்று தெரியவரும்.. பிர்லா குழுமம் எங்கே இப்போது ? காலத்தின் கைகளில் எதிர்காலங்கள் நிச்சயிக்கப்படுகிறது...