PDA

View Full Version : அழிக்க முடியா உன் நினைவு

இனியவள்
08-07-2007, 01:26 PM
உன் நினைவை மறக்க
முயன்றேன் கரையைத்
தொட முனையும் கடல்
அலைகள் போல்...

நிலவைப் போல் தேய்ந்தும்
வளர்ந்தும் வந்தன உன் நினைவு
பூமிப் பந்து சுழல்வதைப் போல்....

எறியும் பந்து போல் தூக்கி
தூக்கி எறிந்தேன் திரும்பி
வந்தது என்னிடமே நினைவுப் பந்து...

என்னை அழித்து உன் நினைவை
அழிக்கலாம் என்றால் என் உடலை
அழித்து உன்னைக் கொல்ல முடியவில்லை
என் உயிராய் இருப்பது நீயல்லவா.....

ஓவியன்
08-07-2007, 02:20 PM
இனியவள்!

இணைவது மட்டுமில்லை காதல்!

இணையாமல் பிரிந்து நினைவு வலிகளோடு வாழ்வதும் தான் காதல்!.

இந்த உலகத்திலே ஒன்றை இழந்து தான் இன்னொன்றைப் பெற வேண்டியுள்ளது!.

அதற்குக் காதலும் விதி விலக்கல்ல!,

ஏதாவது ஒன்றை இழந்தால் தான் காதலைப் பெறலாம், அல்லது எதையாவது பெற வேண்டின் காதலை இழக்க வேண்டி வரும்.

இங்கே எப்போதும் வெற்றி−வெற்றி வாய்புக்கு (win-win Solution) சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே உள்ளது.

ஆதலால் பலருக்கு வாய்ப்பது இந்த நினைவுகளின் வலிகளே......................

இளசு
08-07-2007, 06:00 PM
நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள்ளை
நீக்கவும் இயலாமல் சுமக்கவும் முடியாமல்
எல்லையற்ற வேதனையில் துடிக்கும் உணர்வுகள்
இனியவள் கவிதையின் வரிகளில்..

பாராட்டுகள்!

ஷீ-நிசி
09-07-2007, 01:40 AM
வாழ்க்கை வலிகள் நிறைந்ததுதான்.... அதிலும் காதல் வலி கொஞ்சம் கடினம்தான்...

இனியவளின் கவிதையில் வலி எங்களுக்கும் கூடியது...

அமரன்
09-07-2007, 07:53 AM
என்னை அழித்து உன் நினைவை
அழிக்கலாம் என்றால் என் உடலை
அழித்து உன்னைக் கொல்ல முடியவில்லை
என் உயிராய் இருப்பது நீயல்லவா.....

காதலுக்கு வலுச்சேர்க்கும் வரிகள். அனேகர் காதல் தோல்வி என்றால் தற்கொலையை நாடுவது வழக்கம். உணர்ச்சி வசப்படும் போது ஒரு நொடி சிந்தித்தால் போதும். காதலை,வாழ்க்கையை உணர்ந்துகொள்ளலாம். என்னுள் இருக்கும் அவள்/அவன் தொடர்ந்தும் உயிர்வாழ நான் உயிரோடு இருப்பது அவசியம் என்றாவது நினைத்து தற்கொலையை தவிர்க்கலாம். இனியவள் இவ்வரிகள் மூலம் அதை சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

இனியவள்
12-07-2007, 06:18 PM
நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள்ளை
நீக்கவும் இயலாமல் சுமக்கவும் முடியாமல்
எல்லையற்ற வேதனையில் துடிக்கும் உணர்வுகள்
இனியவள் கவிதையின் வரிகளில்..

பாராட்டுகள்!

நன்றி இளசு அண்ணா

இனியவள்
12-07-2007, 06:19 PM
வாழ்க்கை வலிகள் நிறைந்ததுதான்.... அதிலும் காதல் வலி கொஞ்சம் கடினம்தான்...

இனியவளின் கவிதையில் வலி எங்களுக்கும் கூடியது...

நன்றி ஷீ

வலிகளுடன் கூடியது
தானே வாழ்க்கையும்

இனியவள்
12-07-2007, 06:19 PM
காதலுக்கு வலுச்சேர்க்கும் வரிகள். அனேகர் காதல் தோல்வி என்றால் தற்கொலையை நாடுவது வழக்கம். உணர்ச்சி வசப்படும் போது ஒரு நொடி சிந்தித்தால் போதும். காதலை,வாழ்க்கையை உணர்ந்துகொள்ளலாம். என்னுள் இருக்கும் அவள்/அவன் தொடர்ந்தும் உயிர்வாழ நான் உயிரோடு இருப்பது அவசியம் என்றாவது நினைத்து தற்கொலையை தவிர்க்கலாம். இனியவள் இவ்வரிகள் மூலம் அதை சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி அமர் பாராட்டுக்கு

இனியவள்
12-07-2007, 06:25 PM
இனியவள்!
இணைவது மட்டுமில்லை காதல்!
இணையாமல் பிரிந்து நினைவு வலிகளோடு வாழ்வதும் தான் காதல்!.
இந்த உலகத்திலே ஒன்றை இழந்து தான் இன்னொன்றைப் பெற வேண்டியுள்ளது!.
அதற்குக் காதலும் விதி விலக்கல்ல!,
ஏதாவது ஒன்றை இழந்தால் தான் காதலைப் பெறலாம், அல்லது எதையாவது பெற வேண்டின் காதலை இழக்க வேண்டி வரும்.
இங்கே எப்போதும் வெற்றி−வெற்றி வாய்புக்கு (win-win Solution) சந்தர்ப்பம் மிகக் குறைவாகவே உள்ளது.
ஆதலால் பலருக்கு வாய்ப்பது இந்த நினைவுகளின் வலிகளே......................

இணைவோம் என்று எண்ணித் தான்
அனைவரும் காதலிக்கின்றனர்
பிரிவோம் என்று தெரிந்தே
காதலித்து யாரும் வலியை
விரும்பி ஏற்றுக்கொள்வதில்லையே..

சிலர் தெரிந்தே பிரிகின்றனர்
பலருக்காக அவர்களுக்கு
நினைவுகள் வலியைக்
கொடுப்பதற்கு பதிலாய்
அந்த நினைவுகள் இனிமை
கொடுக்கின்றன

நீங்கள் சொல்வது சரி தான் ஓவியன்

நாம் நேசித்தது கிடைக்கவில்லை
எம்மை நேசிப்பவர்களையாவது
நாம் நேசிப்போம்

இழந்து பெருவதல்ல காதல்
இழந்ததையும் சேர்த்தே பெருவது
காதல்....

மற்றவர்களின் கண்ணீரில்
உருவாகும் காதல் வாழ்வை
கல்லறை ஆக்கிவிடும்
மற்றவர்களின் சந்தோஷத்தோடு
உருப்பெரும் காதல்
வாழ்வை சொர்க்கம் ஆக்கி
விடும்

மீனாகுமார்
12-07-2007, 06:28 PM
அற்புதமான உணர்வுகள்....... பாராட்டுவதற்க்கு வார்த்தைகளே இல்லை.... இனியவள் அவர்களே... உங்கள் ஐக் கண்டு வியக்கிறேன்...... உங்கள் கவிதைகள் யாவும் அருமை....

இனியவள்
12-07-2007, 06:33 PM
அற்புதமான உணர்வுகள்....... பாராட்டுவதற்க்கு வார்த்தைகளே இல்லை.... இனியவள் அவர்களே... உங்கள் ஐக் கண்டு வியக்கிறேன்...... உங்கள் கவிதைகள் யாவும் அருமை....

நன்றி மீனாகுமார் உங்கள் பாராட்டு என்னை மென்மேலும் உயர்த்தும்

மாதவர்
12-07-2007, 06:46 PM
கலக்குறீங்க இனியவள் சும்மா மன்றம் அதிருதில்ல!!!

இனியவள்
12-07-2007, 06:51 PM
கலக்குறீங்க இனியவள் சும்மா மன்றம் அதிருதில்ல!!!

நன்றி மாதவர்