PDA

View Full Version : பேசும் விழிகள்



இனியவள்
08-07-2007, 08:20 AM
உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளங்கள் வார்த்தையாக
உருப்பெற நம்முள் உருவான
காதல் உயிரோடு இரண்டறக்
கலந்தன...

உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா என
காதுகள் தவம் இருக்க - நம்
விழிகள் ஆயிரமாயிரம் வார்த்தைகள்
பரிமாறிக் கொண்டன....

நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக்
கொண்டிருந்தன இதயத்தின்
துணையுடன்....

என் உயிர் அவனோடு சங்கமிக்க
அவன் உயிர் என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் மாற்றிக்
கொண்டோம்..

ஓவியன்
08-07-2007, 08:52 AM
கத்தியின்றி
இரத்தமின்றி
உயிரை இடமாற்ற
முடியுமா?

ஆம்
காதலில் எல்லாம்
சாத்தியமே!.

விளக்கிய இனியவளுக்கு இந்த ஓவியனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!.

இனியவள்
08-07-2007, 09:24 AM
கத்தியின்றி
இரத்தமின்றி
உயிரை இடமாற்ற
முடியுமா?
ஆம்
காதலில் எல்லாம்
சாத்தியமே!.
விளக்கிய இனியவளுக்கு இந்த ஓவியனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!.

நன்று ஓவியன்

கத்தியின்றி இரத்தமின்றி
உயிரை இடம் மாற்றும்
சக்தி காதலுக்கு உண்டு
அதே சமயம் கத்தியின்றி
இரத்தமின்றி உயிரை வாங்கும்
சக்தியும் காதலுக்கே உண்டு

ஷீ-நிசி
08-07-2007, 10:22 AM
இனியவள் கவிதை எழுதி தள்ளிகிட்டே இருக்கீங்க.. வாழ்த்துக்கள்!

இனியவள்
08-07-2007, 10:34 AM
இனியவள் கவிதை எழுதி தள்ளிகிட்டே இருக்கீங்க.. வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ

அக்னி
08-07-2007, 11:43 AM
ஐம்புலன்களும்,
விழிகளுக்குள் அடக்கமானது...
பார்த்தது...
பேசியது...
கேட்டது...
சுவைத்தது...
சுவாசித்தது...
விழிகள்...
உன் விம்பம் பட்டதால்...
விந்தையான காதல்...

கவிதைக்குப் பாராட்டுக்கள் இனியவளே...

இனியவள்
13-07-2007, 02:15 PM
கவிதைக்குப் பாராட்டுக்கள் இனியவளே...

நன்றி அக்னி

வசீகரன்
17-07-2007, 05:40 AM
உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளங்கள் வார்த்தையாக
உருப்பெற நம்முள் உருவான
காதல் உயிரோடு இரண்டறக்
கலந்தன...

உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா என
காதுகள் தவம் இருக்க - நம்
விழிகள் ஆயிரமாயிரம் வார்த்தைகள்
பரிமாறிக் கொண்டன....

நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக்
கொண்டிருந்தன இதயத்தின்
துணையுடன்....

என் உயிர் அவனோடு சங்கமிக்க
அவன் உயிர் என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் மாற்றிக்
கொண்டோம்..
அருமை..... தெளிந்த நீரோடை உங்களது வரிகள் இனியா...

இனியவள்
18-07-2007, 02:53 PM
அருமை..... தெளிந்த நீரோடை உங்களது வரிகள் இனியா...

நன்றி வசி

அமரன்
18-07-2007, 02:57 PM
அம்மணி கவிதை...கலக்கல்..

இனியவள்
18-07-2007, 03:01 PM
அம்மணி கவிதை...கலக்கல்..

நன்றி அமர்

theepa
19-07-2007, 12:03 AM
மிகவும் அருமையான கவிதைய எங்கலுக்காண்டி தந்ததுக்கு மிக்க நண்றிகள் நண்ப*ரே

அன்புட*ன்
ல*துஜா

இனியவள்
19-07-2007, 03:45 PM
மிகவும் அருமையான கவிதைய எங்கலுக்காண்டி தந்ததுக்கு மிக்க நண்றிகள் நண்ப*ரே
அன்புட*ன்
ல*துஜா

நன்றி தீபா

theepa
25-07-2007, 09:01 PM
ஆகா எத்தனை அழகு உங்கள் காதல் கவிதை பாராட்டுக்கல்
அன்புடன்
லதுஜா

இனியவள்
26-07-2007, 06:15 AM
ஆகா எத்தனை அழகு உங்கள் காதல் கவிதை பாராட்டுக்கல்
அன்புடன்
லதுஜா

நன்றி லதுஜா