PDA

View Full Version : 'ரைஸ் சர்வ்' என்ற வணிகத்தை துவங்க முயற்சி



namsec
08-07-2007, 07:33 AM
நலிவடைந்து வரும் அரிசி ஆலைத் தொழில் 'ரைஸ் சர்வ்' என்ற வணிகத்தை துவங்க முயற்சி
தமிழகத்தில் நவீன அரிசி ஆலை தொழிலில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை சமாளித்திட, 'ரைஸ் சர்வ்' என்ற புதிய வணிகத்தை துவங்கிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மிகுந்த தரத்துடன் ஜப்பான், கொரியா நாட்டு மிஷின்கள் மூலம் அரிசி தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அரிசித் தொழில் நாளுக்கு நாள் மிகவும் நலிவடைந்து வருகிறது. கூலி, அரிசி தயாரிப்பு செலவு மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் அரிசி வர்த்தகம், இடைத்தரகர்களாலும், தரமற்ற சில வணிகர்களாலும் மிகுந்த பிரச்னைக்கு உள்ளாகி வருகிறது. அரிசி வசூல் மூன்று மாதங்கள் வரை இழுத்தடிக்கப்படுகிறது.சேகோ மில் உரிமையாளர்கள் 'சேகோ சர்வ்' என்ற வியாபார முறையை பின்பற்றி, வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால், அதே முறையில் 'ரைஸ் சர்வ்' ஒன்று ஆரம்பிக்கும் முயற்சியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதி நெல், அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் நவீன அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் மாநில சம்மேளனத்திற்கு அனுப்பியுள்ள தீர்மான கடிதத்தில் கூறியிருப்பதாவது :தமிழகத்தை 10 பாகங்களாக பிரித்து அந்த இடங் களில் உள்ள முக்கிய ஊர்களில் 'ரைஸ் சர்வ்' ஆரம்பிக்கப்பட வேண்டும் அல்லது மார்க்கெட்டிங் கமிட்டி மூலமாக அரிசி விற்பனை செய்ய வேண்டும். போட்டியின் காரணமாக நியாயமான விலை கிடைக்கும். பணம் மூன்று நாட்களில் பட்டுவாடா செய்யப்படும். இது குறித்து மாநில சம்மேளனம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்

தங்கவேல்
08-07-2007, 09:25 AM
அரிசி வியாபாரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். நான் அரிசி ஏற்றுமதியில் ஈடுபட்டு இருந்தபோது, அரிசிக்கு வரி என்று கிளப்பி விட்டு, அதில் ஒரு அரிசி ஆலை அதிபர் அதிகார வர்க்கத்தை நேரில் பார்த்து விட்டு, ஒரு மாதம் கிறுக்கு பிடித்தது போல இருந்தார். அரசியலில் சேர்ந்து விட்டார் இப்போது...