PDA

View Full Version : மலரும் மலரெல்லாம்



நிரன்
08-07-2007, 06:46 AM
மலரும் மலரெல்லாம்
வாடத்தான் போகிறது
அதற்காக மலரெல்லாம்
மலர மறுத்தால்
இயற்கையின் கதி என்ன?

என்றும்
நிரஞ்சன்

இனியவள்
08-07-2007, 08:01 AM
நிரஞ்சன் உங்கள் கவி அருமை வாழ்த்துக்கள்

பல கனவுகளோடு
மலரும் மலரும்
மலர்களில் சில தமது
கனவை அடைந்து உதிர்கின்றது
சில மலர்கள் கனவுகள்
கனவுக்களாகவே போக
உதிர்கின்றன..

பிச்சி
08-07-2007, 08:05 AM
மலறா? அப்படீன்னா என்னங்க நிரஞ்சன் அண்ணா? கவிதை சூப்பர்

சுகந்தப்ரீதன்
09-07-2007, 08:39 AM
அதோகதிதான் நண்பரே.....நல்ல கவிதை வாழ்த்துக்கள்... நிர*ஞ்சன்!

அமரன்
09-07-2007, 08:49 AM
மலறா? அப்படீன்னா என்னங்க நிரஞ்சன் அண்ணா? கவிதை சூப்பர்

வல்லின மலர்கள் என்று சொல்கின்றார். பிச்சி. உங்களை ரொம்பநாளாகக் காணவில்லையே. அடிக்கடி வாங்க. கவிதைகள் தாங்க.


நிரஞ்சன் நல்ல கவிதை தொடருங்கள்

இளசு
09-07-2007, 07:02 PM
பாடுபொருள் மலராக இருக்கையில்
அச்சொல்லே தவறாக எழுதப்பட்டால்
வாசிக்கும் மனதில் கருத்து மலர்வதெங்கே?

நிரஞ்சன்.. ஒரு முறை மலர் என நீங்களே சரியாக எழுதியுள்ளீர்களே..
பிறகேன் மற்ற இடங்களில் மலறாக மாற்றம்?

மெல்லப் பிழை குறைத்து, அதிலும் தலைப்பு,கருப்பொருளில் பிழைதவிர்த்து..

இன்னும் இன்னும் எழுதி மெருகேற வாழ்த்துகள்!

ஓவியன்
13-07-2007, 12:36 AM
மலறா? அப்படீன்னா என்னங்க நிரஞ்சன் அண்ணா? கவிதை சூப்பர்

எழுத்துப் பிழை போல பிச்சி!.

புதியவர் தானே போகப் போக அசத்துவார் பாருங்களேன்!.

ஓவியன்
13-07-2007, 12:38 AM
மலரும் மலரெல்லாம்
வாடத்தான் போகிறது
அதற்காக மலரெல்லாம்
மலர மறுத்தால்
இயற்கையின் கதி என்ன?

என்றும்
நிரஞ்சன்

மலரும் மலரெல்லாம்
இறைவனடி சேர்வதில்லை
சில சேரும், சில உதிரும்!
அதற்காக மலர் காத்திருந்து
பூப்பதில்லை − அப்படியே
காதலும்!.....................

பாராட்டுக்கள் நிரஞ்சன் வரிகள் அருமையா இருக்கு!. :aktion033:

aren
13-07-2007, 02:18 AM
அருமை நிரஞ்சன். தொடருங்கள்.

மலர்கள் மலர மறுத்தால் − நினைக்கவே பயமாக இருக்கிறது. கலியுகத்தின் கடைசி அத்யாயமோ என்னவோ என்ற பயமே உண்டாகிறது.

உங்கள் வரிகள் ஆழமாக உள்ளன. தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்