PDA

View Full Version : நிலை

ஆதவா
08-07-2007, 05:19 AM
கடல் படிந்த முகத்தோடு
கண்கள் தேடிய முகாமினுள்
கூட்டங்கள் நுழையக் காண்கிறோம்

கைகளை இழந்தோ
கால்களை இழந்தோ
தத்தியோ
தாவியோ
வேண்டா வெறுப்புடனோ
எப்படியோ
சேர்கின்றனர்
மந்தையடைப்பாய்
விந்திய நாடு
ஏற்பதைக் காண்கிறோம்

வற்றிய மார்போடு
கைம்பெண்கள்
அதை உறிஞ்சிக் கொண்டிருக்கும்
கண் திறக்கா சிசுக்கள்

சீழ்வடியும் புண்களோடு
இளைஞர்கள்
இன்றோ நாளையோ
கண்மூடக் காத்திருக்கும்
முதியவர்கள்

அனைவரையும்
அலட்சியமாய்
அன்பில்லாத மனமாய்
கைதிகளாய்
அடைத்து

முகாமை பூட்டிச் செல்லுகையில்
ஒரு குரல் மட்டும்
கிசுகிசுக்கிறது

" ''எங்கட நாட்டிலேயே செத்திருக்கலாம்"

ஓவியன்
08-07-2007, 05:47 AM
கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள், ஆனால் உண்மையே கவியாகும் போது அதுவும் ஒரு உணர்ச்சிக் கவிஞனின் கரங்களினால் வரியாகும் போது உடம்பு புல்லரித்துத் தான் போகிறது. நான் ஈழத்தில் இருந்த போது கவிஞர் புதுவை இரத்தின துரையினது உணர்ச்சி வரிகளால் பல முறை புல்லரித்துப் போயிருக்கிறேன். நீண்ட நாட்களின் பின்னே இங்கே ஆதவனின் வரிகளினால்......

மிக்க நன்றிகள் ஆதவா!.

கவிதைக்கு முத்தாய்ப்பான முடிவு.....

நாட்டெலேயே செத்திருக்கலாம்!

ஏதிலிகளாக பசுமை தேடி வந்த சிலர் பட்ட அவலகங்களால் வந்த வார்த்தையது, ஆனால் அதே வார்த்தையை முன்னமே தங்கள் முடிவாகக் கொண்டு சொந்த நாட்டிலேயே போராடிக் கொண்டிருக்கின்றனர் பலர்.....

தினம் தினம் எறிகணை மழைக்குள் உயிர் வாழ்ந்து கொண்டு, என்ன நடந்தாலும் சொந்த மண்ணை விட்டு வெளியேற்ய்வதில்லை என்று வாழ்கிறார்கள் பலர் (என் பெற்றோர் கூட........). அவர்களையும் நாம் இங்கே எண்ணிப் பார்க்க வைக்கிறது கவிதை!.

பாராட்டுக்களும் நன்றிகளும் ஆதவா!

மன நெகிழ்வுடன்
ஓவியன்!.

அமரன்
08-07-2007, 07:15 AM
ஆதவன். இவர்களின் நிலையை நான் நேரில் பார்த்தது கிடையாது. பத்திரிகைகள் மூலமும் அங்கே இருந்த எனது நண்பர்கள் மூலமும், இந்தியாவில் இருக்கும் என உறவினர் மூலமும் அறிந்திருகின்றேன். நீங்கள் சொன்னவற்றுடன் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்று அறிந்திருகின்றேன். பல வகையான பிரச்சினைகள். எத்தனையோ கழுகளின் வக்கிரப் பார்வைகள். தாயகத்தில் இருந்து ஒரே குடும்பமாகப் பயணம் செய்யும் சிலர் அங்கே போனதும் வேட்டைக்காரர்களாக மாறிவிடும் தன்மை கொடுமையானது. உடலாலும், விழியாலும் வேட்டையாடுபவர்களுக்குப் பயந்து தூங்காதிருப்போர் எத்தனையோ. படியலிட்டால் அநுமர் வாலாகிவிடும். இறுதி வார்த்தைகள் போதும் அவர்களது மன உளைச்சலை எடுத்துக்கூற. நன்றியும் பாராட்டுகளும்.

ஷீ-நிசி
08-07-2007, 08:09 AM
அகதிகளாய் சென்று சேரும் ஒவ்வொருவரின் நிலையும் விளக்கி. கடைசியாய் நிறுத்தியிருக்கும் அந்த வலி நிறைந்த வரி நிதர்சனமானது...

ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வை கவிதையாக்கினதற்கு வாழ்த்துக்கள் ஆதவா....

இனியவள்
08-07-2007, 08:25 AM
கவி அருமை ஆதவா வாழ்த்துக்கள்

சொர்க்கமே சென்றாலும் நம் ஊரைப் போல வருமா என்ற பாடல் ஞாபகம் வருகின்றது

இறந்தாலும் எங்க நாட்டிலே இறக்க வேண்டும்

ஆதவா
09-07-2007, 05:58 AM
மிகவும் நன்றி ஓவியன்... நெகிழ்ச்சியான விமர்சனம் உங்களுடையது.,. இதுவரை நான் எந்த ஒரு அகதிகளையும் பார்த்ததும் கிடையாது. இந்த மாதிரி குரலும் கேட்டது கிடையாது. ஆனாலும் எந்த ஒரு அகதியாக இருந்தாலும் இந்திய நாட்டில் தக்க மதிப்பு தருவதில்லை என்பது தெரிந்துவைத்திருக்கிறேன்... அதற்குப் பதிலாக அகதிகள் போரிட்டு உயிரிழக்க*லாம் என்ப*து என*து எண்ண*ம்...... ந*ன்றிக*ள் கோடி ஓவிய*ன்...

ஆதவா
09-07-2007, 06:01 AM
மிக மிக நன்றி அமரன்... கவிச்சமரில் இலங்கை சம்பந்தமாக எழுதிய கவிதை ஒன்றுக்கு விமர்சனமிட்டிருந்தீர்கள்... ஓவியன் என்று நினைக்கிறேன்......... அதன் பின் எழுதி அந்த காகிதத்தை எங்கோ போட்டு வைத்துவிட்டேன்... நேற்றுதான் கிடைத்தது.............. இந்த மாதிரி சூழ்நிலையில் எனது குரு உணர்ச்சிக் கவிஞன் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்......

ஆதவா
09-07-2007, 06:03 AM
அகதிகளாய் சென்று சேரும் ஒவ்வொருவரின் நிலையும் விளக்கி. கடைசியாய் நிறுத்தியிருக்கும் அந்த வலி நிறைந்த வரி நிதர்சனமானது...

ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வை கவிதையாக்கினதற்கு வாழ்த்துக்கள் ஆதவா....

மிக*வும் ந*ன்றிங்க* ஷீ!! உங்க*ளை விட*வா? (ஈழம் ச*ம்ப*ந்த*மான* க*விதை ஒன்று உங்க*ள் வ*ரிக*ளில் வேண்டும்.....)

கவி அருமை ஆதவா வாழ்த்துக்கள்

சொர்க்கமே சென்றாலும் நம் ஊரைப் போல வருமா என்ற பாடல் ஞாபகம் வருகின்றது

இறந்தாலும் எங்க நாட்டிலே இறக்க வேண்டும்

மிகவும் நன்றி இனியவள்..... ஞாபகக் கிளறல் கூட கவிதைக்கு வெற்றி தானே!! அந்த வகையில் பெருமை அடைகிறேன்.

ஓவியன்
09-07-2007, 06:04 AM
மிகவும் நன்றி ஓவியன்... நெகிழ்ச்சியான விமர்சனம் உங்களுடையது.,. இதுவரை நான் எந்த ஒரு அகதிகளையும் பார்த்ததும் கிடையாது. இந்த மாதிரி குரலும் கேட்டது கிடையாது. ஆனாலும் எந்த ஒரு அகதியாக இருந்தாலும் இந்திய நாட்டில் தக்க மதிப்பு தருவதில்லை என்பது தெரிந்துவைத்திருக்கிறேன்... அதற்குப் பதிலாக அகதிகள் போரிட்டு உயிரிழக்க*லாம் என்ப*து என*து எண்ண*ம்...... ந*ன்றிக*ள் கோடி ஓவிய*ன்...

நன்றி ஆதவா!

நான் கூட வேறு நாட்டில் அகதியாகச் சென்றதோ, அவ்வாறான அகதிகளைப் பார்த்ததோ கிடையாது ஆனால் சொந்த நாட்டிலேயே எனது பகுதியை விட்டுப் போர்ச்சூழலில் அகதியாக வேறு சூழலுக்கு உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு போயிருக்கிறேன், அவ்வாறே அப்படியான அகதிகள் நிறையப் பேரைப் பார்த்தும் இருக்கிறேன்.

அந்த வலிகள் இன்றும் நெஞ்சில்......

புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பா!.

அமரன்
09-07-2007, 08:09 AM

ஓவியன்! ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த சில நண்பர்கள் கூட சொல்வதைக் கேட்டிருகின்றேன். 'இங்கே வாழ்வதை விட அங்கே செத்திருக்கலாம்'

சத்தியம்
09-07-2007, 08:21 AM
நிஜங்களை பதிவு செய்யும்
இலக்கியங்கள்
என்றும்
அழியாது
என்னை கவியால் அழ வைத்த*

கவி ஆதாவாவுக்கு என் வாழ்த்துக்கள்

ஆதவா
14-07-2007, 05:36 PM
நிஜங்களை பதிவு செய்யும்
இலக்கியங்கள்
என்றும்
அழியாது
என்னை கவியால் அழ வைத்த*

கவி ஆதாவாவுக்கு என் வாழ்த்துக்கள்

சத்தியம் அவர்களே! ஈழக் கவிகள் பலர் எழுதும் கவிதைகளைவிடவா இவை மேலானதாகிப் போனது?/ அப்படியே எனில் அது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும்.... மிகவும் நன்றிங்க சத்தியம்//

சிவா.ஜி
15-07-2007, 04:22 AM
சத்தியம் அவர்களே! ஈழக் கவிகள் பலர் எழுதும் கவிதைகளைவிடவா இவை மேலானதாகிப் போனது?/ அப்படியே எனில் அது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும்.... மிகவும் நன்றிங்க சத்தியம்//

ஆதவா,அனுபவித்தவர்களின் வலியால் விளைந்த கவிதைகள் அந்த வலியை காட்டுவது இயற்கையானது ஆனால் நீங்கள் மனதால் உணர்ந்த வலியை,வேதனையை கவியாய் படைத்து அதிலும் அந்த வலியை எங்களையும் உணரச்செய்திருப்பதுதான் உங்கள் கவிதைக்கு கிடைத்த வெற்றி. மனதில் பாரத்தோடு பாராட்டுகிறேன்.

aren
15-07-2007, 07:21 AM
நெஞ்சை நெகிழவைக்கும் கவிதை. அதுவும் கடைசி வரி மனதை அப்படியே கலக்கிவிட்டது. அருமை ஆதவன்.

நன்றி வணக்கம்
ஆரென்