PDA

View Full Version : காதல் 'பூ'



சூரியன்
07-07-2007, 04:38 PM
வாழ்ககை என்னும்
மரத்தில்
காதல் என்பது
ஒரு பூ
அது பல
நல்ல கனிகளை
வெளிகொண்டுவரும்.

இளசு
07-07-2007, 04:40 PM
உண்மைதான்..

காதல் பூதான்
(காதுல பூ சுத்துகிறவரிடம் ஏற்படாதவரை..)

பாராட்டுகள் சூரியன்!

அமரன்
07-07-2007, 04:43 PM
சின்னதாக இருந்தாலும் அழகாக இருகின்றது சூரியன். காதல் என்கின்ற ஒரு பூ பல கனிகள் தருவது சிறப்பானது. சில வேளைகளில் அது வாடிவிடும். பாராட்டுகள் சூரியன். இப்போதெல்லாம் கவிதைகள் பக்கம் உங்களை அதிகம் காண்கின்றேன். வளர வாழ்த்துகள்.

அக்னி
07-07-2007, 04:48 PM
ஆனாலும்,
ஈற்றில், கனிகள் மட்டுமே,
மீதமாகி...
பூக்கள் காணாமல் தொலைந்து போகின்றன...

பாராட்டுக்கள் சூரியன்...

ஓவியன்
07-07-2007, 04:56 PM
பூக்களில் தான் எத்தனை வகை நன்மைதரும் கனிகளைத் தருவன!, எதுவுமே தராமல் வீணே மலர்பவை (எருக்கலம் பூ).

அவ்வாறே காதலிலும்................

வாழ்க்கை என்னும் மரத்திலே பயன் தரும் காதல் பூ மலர்வது வாழ்வின் வரம்!.


நல்ல கரு சூரியன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.............

இனியவள்
07-07-2007, 05:55 PM
வாழ்ககை என்னும்
மரத்தில்
காதல் என்பது
ஒரு பூ
அது பல
நல்ல கனிகளை
வெளிகொண்டுவரும்.

என்னுள் பூத்த
காதல் என்னும்
பூ அரலிமரத்தில்
அல்லவா முளைத்து
விட்டட்து :redface:

கவி நன்று வாழ்த்துக்கள் சூரியன்

அமரன்
07-07-2007, 05:59 PM
என்னுள் பூத்த
காதல் என்னும்
பூ அரலிமரத்தில்
அல்லவா முளைத்து
விட்டட்து :redface:

கவி நன்று வாழ்த்துக்கள் சூரியன்

நினைச்சேன் வருவீங்கன்னு. வந்திட்டீங்க...இளசு அண்ணனின் பின்னூட்டம் படித்தீர்களா.

பூக்கும் போது
நினைக்கவில்லை
அலங்கரிக்கப்போகும்
அழகான பூவென்று.
காதில் பூ
காரணம் பூ

அக்னி
07-07-2007, 06:02 PM
என்னுள் பூத்த
காதல் என்னும்
பூ அரலிமரத்தில்
அல்லவா முளைத்து
விட்டட்து :redface:


அலரியில் பூத்த மலரானாலும்
தேன் என்றும் இனிமையே...
காதலும் சோகம் தந்தாற்கூட,
சுகமான சோகமாகவே இருக்கும்...

இனியவள்
07-07-2007, 06:02 PM
நினைச்சேன் வருவீங்கன்னு. வந்திட்டீங்க...இளசு அண்ணனின் பின்னூட்டம் படித்தீர்களா.

பூக்கும் போது
நினைக்கவில்லை
அலங்கரிக்கப்போகும்
அழகான பூவென்று.
காதில் பூ
காரணம் பூ

வந்திட்டேன் வந்திட்டேன்...

கூந்தலில் பூ
சூடுவாய் என்று
பார்த்தேன் காதில்
அல்லவா பூ
வைத்து சென்று
விட்டாய் :D:D:D

இனியவள்
07-07-2007, 06:04 PM
அலரியில் பூத்த மலரானாலும்
தேன் என்றும் இனிமையே...
காதலும் சோகம் தந்தாற்கூட,
சுகமான சோகமாகவே இருக்கும்...

அலரியில் பூத்த
பூவில் உள்ள
பூவின் தேனை
ரசிப்பதற்குள் அலரி
பூவில் இருந்து உருவான
காய் என் உயிரையல்லவா
வாங்கிவிட்டது

அமரன்
07-07-2007, 06:05 PM
அலரியில் பூத்த மலரானாலும்
தேன் என்றும் இனிமையே...
காதலும் சோகம் தந்தாற்கூட,
சுகமான சோகமாகவே இருக்கும்...

வாங்க தலை...

அலரிப் பூ மங்கலம்
காதல் பூ மங்களம்.

அக்னி
07-07-2007, 06:05 PM
வந்திட்டேன் வந்திட்டேன்...

கூந்தலில் பூ
சுடுவாய் என்று
பார்த்தேன் காதில்
அல்லவா பூ
வைத்து சென்று
விட்டாய் :D:D:D

உன் கூந்தலில் சுட்ட பூ,
காதலைத் தரவில்லை,
காய்ந்து போனது...
ஆனாலும்,
பத்திரமாக வைத்திருக்கின்றேன்...
என் காதலையும்,
உன் பூவையும்...

இனியவள்
07-07-2007, 06:07 PM
உன் கூந்தலில் சுட்ட பூ,
காதலைத் தரவில்லை,
காய்ந்து போனது...
ஆனாலும்,
பத்திரமாக வைத்திருக்கின்றேன்...
என் காதலையும்,
உன் பூவையும்...

என் காதலையும்
என் பூவையும்
பத்திரமாக நீ
வைத்திருந்து ஏது
பயன் என் உணர்ச்சிகளையும்
மனதையும் அல்லவா குழி
தோண்டி புதைத்து விட்டாய்

அக்னி
07-07-2007, 06:09 PM
அலரியில் பூத்த
பூவில் உள்ள
பூவின் தேனை
ரசிப்பதற்குள் அலரி
பூவில் இருந்து உருவான
காய் என் உயிரையல்லவா
வாங்கிவிட்டது

காதலில் இன்பம்
அலரியில் தேன்...
காதலில் துன்பம்
அலரியில் விசம்...

அமரன்
07-07-2007, 06:12 PM
காதலில் இன்பம்
அலரியில் தேன்...
காதலில் துன்பம்
அலரியில் விசம்...

ஆழமான காதலும்
ஆலமே

உண்மையா நண்பர்களே

இனியவள்
07-07-2007, 06:22 PM
காதலில் இன்பம்
அலரியில் தேன்...
காதலில் துன்பம்
அலரியில் விசம்...

காதலில் இன்பம்
தேன்
காதலின் துன்பம்
தேனில் கலந்த
விஷம் பிரிவு

அக்னி
07-07-2007, 06:28 PM
காதலில் இன்பம்
தேன்
காதலின் துன்பம்
தேனில் கலந்த
விஷம் பிரிவு

அபாரம்...

இனியவள்
07-07-2007, 06:39 PM
அபாரம்...

நன்றி குருவே எல்லாம் உங்களிடம் இருந்து சுட்ட திறன் தான் :icon_wink1:

அக்னி
07-07-2007, 06:58 PM
நன்றி குருவே எல்லாம் உங்களிடம் இருந்து சுட்ட திறன் தான் :icon_wink1:

இது நக்கலடிக்கிற மாதிரின்னோ இருக்கு...

இனியவள்
07-07-2007, 07:00 PM
இது நக்கலடிக்கிற மாதிரின்னோ இருக்கு...

நக்கல் எல்லாம் இல்லைங்க உண்மைய சொன்னன்

அமர் கேட்டது விளங்கேலை உங்களுக்காவது விளங்கினதா :confused:

ஓவியன்
07-07-2007, 07:03 PM
ஆமா என்னோட காதில யாரோ பூ வைச்ச மாதிரி ஒரு பீலிங் − எல்லாம் இனியவளோட கவிதையைப் பார்த்த பிறகுதான்.

இனியவள்
07-07-2007, 07:06 PM
ஆமா என்னோட காதில யாரோ பூ வைச்ச மாதிரி ஒரு பீலிங் − எல்லாம் இனியவளோட கவிதையைப் பார்த்த பிறகுதான்.

பூவா :icon_wacko: பாருங்க காதில இருந்த கடுக்கண் காணாமல் போய் இருக்க போகுது ஓவியன் :D :p

ஓவியன்
07-07-2007, 07:07 PM
பூவா :icon_wacko: பாருங்க காதில இருந்த கடுக்கண் காணாமல் போய் இருக்க போகுது ஓவியன் :D :p

ஹீ!

நான் என்ன உங்களை மாதிரியா? :sport-smiley-007:

இனியவள்
07-07-2007, 07:09 PM
ஹீ!
நான் என்ன உங்களை மாதிரியா? :sport-smiley-007:

ஹீ அதே அதே :sport-smiley-007:

சூரியன்
10-07-2007, 08:54 AM
விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி...