PDA

View Full Version : நிலவு



சூரியன்
07-07-2007, 04:20 PM
நிலவை போல
நீ என்னை
விட்டு விலகி
இருந்தாலும்
என் நினைவுகள்
விண்வெளியை போல
என்றும் உன்னை
சுற்றி இருக்கும்

அமரன்
07-07-2007, 04:23 PM
அழகான கவிதை. காதலாக நினைத்துப்பார்த்தாலும் பொருந்துகின்றது. அன்னையை,தந்தையை, ஏன் உறவுகளை விட்டுப் பிரிந்து வாழும் என்போன்ற நண்பர்களின் ஏக்கத்தை இயம்புவதாகவும் இருகின்றது. நன்றியும் பாராட்டுகளும் சூரியன்.

அக்னி
07-07-2007, 04:24 PM
நிலவு காதலிக்கப்பட்டவரானால்,
விண்வெளி, காதலித்தவர் ஆத்மா...
காதலிக்கப்பட்டவர் உருவம்..,
காதலித்தவர் அருவம்...
இதில், தூரமான பூமி, காதலித்தவர் உடல், அல்லது உயிரோடிருந்த வாழ்வு,
குறிப்பிடாமலே இணைக்கப்பட்ட சிறப்பு... கவிதையில் அழகாக...

வாழ்த்துக்கள்...

இனியவள்
07-07-2007, 04:25 PM
கவிதை அருமை சூரியன் வாழ்த்துக்கள்

அக்னி
07-07-2007, 04:26 PM
அழகான கவிதை. காதலாக நினைத்துப்பார்த்தாலும் பொருந்துகின்றது. அன்னையை,தந்தையை, ஏன் உறவுகளை விட்டுப் பிரிந்து வாழும் என்போன்ற நண்பர்களின் ஏக்கத்தை இயம்புவதாகவும் இருகின்றது. நன்றியும் பாராட்டுகளும் சூரியன்.

ஆமாம் அமரன்... எனக்கு இந்த பார்வை தெரியவில்லையே...
பாராட்டுக்கள்...