PDA

View Full Version : உ(எ)ன் காதல்இனியவள்
07-07-2007, 11:09 AM
ரம்மியமான காலைப் பொழுதில்
நண்பர்கள் புடைசூழ
ஜோதியாய் சுடர்விட்டுக் கொண்டிருந்த
உன்னைக் கண்ட அவ்நொடி என்னுள்
பல கோடி மின்சாரம் தாக்கிய ஒர் உணர்வு

நாமிருவரும் ஒரே வகுப்பில்
எதிரெதிரே அமர்ந்து உன்
கண்கள் என்னையும் என் கண்கள்
உன்னையும் வட்டமிட அதனை
கண்ணுற்ற எம் நண்பர்கள் கேலி செய்ய
என்னில் அரும்பிய வெட்கத்தைக்
கண்ணுற்று நீ கண் சிமிட்டிய
நேரம் என்னுள் பிறந்தது உன்
மேலான என் காதல்...

தன்னந்தனியே அந்தி மாலைப்பொழுதில்
கடவுளை தரிசித்து ஆசிபெறச் சென்ற
வேளை உன்னைக் கண்டு என்னுள் ஒர்
பூரிப்பு நான் இவ்வூலகில் அவதரித்த
நாளன்று என்னுள் அவதரித்த உன்னைக்
கண்டதும் உடலெங்கும் சந்தோஷ
ரேகை அரும்பியது என்னுள்...

என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்வாய்
என் நான் நினைத்திருக்கையில் என்னை
உன்னுள் கலந்து உன்னவன் ஆக்குவாய
என நீ கேட்ட அந்நொடி உலகத்தில்
உள்ள சந்தோஷங்கள் அனைத்தும் என்
காலடியில் வீழ்ந்து கிடப்பதாய்
என்னுள் ஒர் பிரமிப்பு...

காலங்கள் கரைந்தன நாட்கள்
நிமிடங்களாகவும் மாதங்கள்
நாட்களாகவும் ஆண்டுகள்
வாரங்களாகவும் கரைந்தோடின
எம்மிடையே.....

தேக்கி வைத்த அன்புகளை
இருவருக்கிடையே இடம்
மாற்றிக்கொண்டோம் துன்பங்கள்
எம்மைக் கண்டு பயந்தோடின
இன்பங்கள் எம்மை அரவணைத்துக்
கொண்டன...

உறக்கத்தை வலிந்து அழைத்துக்
கொண்டேன் கனவில் நீ வருவாயென
நீ என்னருகில் இருக்கும் போது
இமைகள் இமைக்க மறந்தன
இமைகள் கூட தேவையில்லை எனக்கு
உன்னைப் பார்த்துக் கொண்டு
இருப்பதனாலே....

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு
மணித்துளியும் சொர்க்கத்தில்
இருப்பதைப் போல் உணர்ந்தேன்
சொர்க்கம் என்றால் இதுவா என்ற
வினா என்னுள்

எப்பொழுதும் சிரித்துக் கொண்டேயிருக்கும்
உன் கண்களைப் பார்ப்பதே என்
பொழுது போக்காய் ஆனது..

தென்றல் வந்து இதமாய் கலைத்து
விட்டுச் செல்லும் உன் கேசத்தை
என் விரல் கொண்டு சீராக்குவதில்
எனக்கொர் தனி அலாதி..
தென்றல் கலைக்கும் ஒவ்வொர் விநாடிக்கும்
தவம் இருக்க தொடங்கியது என் விரல்கள்.

உன் வாய்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு
வார்த்தைகளும் எனக்கு வேத வாக்காக
போடி என நீ செல்லமாய் கோபித்துக்
கொள்வதும் போடா குரங்கு என நான் பதிலுக்கு
சிணுங்குவதும் எமது அன்பின் உச்ச கட்டமல்லவா...

என் உடம்பில் உள்ள ஒவ்வொரு துளி
இரத்தமும் உன் நாமத்தையே
மந்திரமாய் உச்சரித்த படி என்னை
உயிர்ப்பித்துக் கொள்கின்றது...

சூரியன் மேற்கு நோக்கி நகர்ந்து
கொண்டிருந்தான் நீ என்னை
நோக்கி அடி மேல் அடி வைத்து
வந்து கொண்டிருந்தாய் அந்த
அடியே என் வாழ்வில் பேரிடியாக
வந்து விழும் என்று அறியாமல்
அதனை அனு அனுவாய் ரசித்துக் கொண்டிருந்தேன்
அவன் கண்களில் இதுவரை நான்
கண்டிராத வெறுமை என்னைப் பயமுறுத்தியது
காரணம் அறிய என் உயிர் துடித்தது
அவன் மெளனம் என் உயிர் வாங்கியது

ஆதரவாய் தலை கோதினேன்
என் ஸ்பரிசம் தாங்காது
அவன் கண்கள் கண்ணீர் சொரிந்தன
அதைக் கண்ட என் இதயம்
ரத்தக் கண்ணீர் வடித்தது அன்றைய
சந்திப்பே எமது இறுதி
சந்திப்பு என்று அறியாமல்....

(உரைநடையின் தாக்கம் இக் கவிதையில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் நன்றி)

அக்னி
07-07-2007, 11:16 AM
காதல்,
உவகை தரும் தனது ஒவ்வோர் அசைவிலும்,
உடனிருக்கும்போதெல்லாம்...
கொடுமை செய்யும் ஒவ்வோர் கணத்திலும்,
பிரிந்திருக்கும்போதெல்லாம்...
துன்பங்கள் நிரந்தரமா என்றால் இல்லை..,
விதிவிலக்காய்,
காதல் தரும் துன்பம் மட்டும்,
வாழும் காலம் முழுதும் நீடிக்கும்...
பிரிந்த கணங்கள், தினமும் வாடவைக்கும்...
ஏக்கம், நிரந்தரமாகும்...
சுவாசம் பாரமாகும்...
நினைவு கருமைப்படும்...

காதலின் பிரிவின் வேதனையால், வந்த கவிதை,
நெஞ்சை உலுக்குகின்றது...

பிரிவின் காரணம் சொல்லாமை, தொடரும் என்ற வார்த்தையை எதிர்பார்க்க வைக்கின்றது...
பாராட்டுக்கள்...

அமரன்
07-07-2007, 03:44 PM
ஏங்க இனியவள் உங்கள் கவிதைகளைப் படித்தால் காதலை முழுதாக படித்துவிடலாம் போல இருக்கே. அத்துணை அழகாக எழுதுகின்றீர்கள். பாராட்டுகள். உங்களுடன் இணைந்து ஒருவர் கலக்கியுள்ளார். இருவருக்கும் எனது பாராட்டுகள். இதைப் படிப்பதற்கு ஆவி வேசம் போட வேண்டி இருக்கு.

காணல், கல்லூரி குறும்பர்கள் மத்தியில்படும் ஆனந்த அவஸ்தை, பிறந்தநாள் பரிசு, செல்லச் சிணுங்கல், செல்லக்கோபம்,செல்ல வாடா போடா (இதுதான் சாக்கென வைத்து பின்னிவிடுவாங்களே) இப்படி கலகலப்பான காதலை கண்முன் நிறுத்தி கடைசியில் கண்ணீர் வரவழைத்து விடும் கிளைமாக்ஸ். காசு கொடுக்காது ஒரு காதல் படம் பார்க்க வைத்ததுக்கு நன்றிங்க

ஷீ-நிசி
07-07-2007, 03:56 PM
நேரிலிருந்து பார்த்தது போன்ற உணர்வு..

ஆண் பெண்ணிற்காய் உருகி கவிதை எழுதுவது அநேகம், ஒரு பெண் ஆணை நினைத்து உருகி எழுதுவது சொற்பம்.. கவிதையில் இருவருக்குமான நெருக்கம் மிக அழகாக சொல்லபட்டிருக்கிறது. அவன் தன்னிடம் பிரிவை சொல்ல வருகிறான் என்று தெரியாமல் அவன் வரும் திசையில் கண் வைத்து அவனை ரசித்துக்கொண்டிருப்பது மிக ரசிக்க வைத்தது இனியவளே.....

எல்லாமே உங்களின் நிஜ சம்பவங்களோ என்று எண்ணுகிறது மனம்.... வாழ்த்துக்கள்!

இனியவள்
08-07-2007, 09:21 AM
காதல்,
உவகை தரும் தனது ஒவ்வோர் அசைவிலும்,
உடனிருக்கும்போதெல்லாம்...
கொடுமை செய்யும் ஒவ்வோர் கணத்திலும்,
பிரிந்திருக்கும்போதெல்லாம்...
துன்பங்கள் நிரந்தரமா என்றால் இல்லை..,
விதிவிலக்காய்,
காதல் தரும் துன்பம் மட்டும்,
வாழும் காலம் முழுதும் நீடிக்கும்...
பிரிந்த கணங்கள், தினமும் வாடவைக்கும்...
ஏக்கம், நிரந்தரமாகும்...
சுவாசம் பாரமாகும்...
நினைவு கருமைப்படும்...

காதலின் பிரிவின் வேதனையால், வந்த கவிதை,
நெஞ்சை உலுக்குகின்றது...

பிரிவின் காரணம் சொல்லாமை, தொடரும் என்ற வார்த்தையை எதிர்பார்க்க வைக்கின்றது...
பாராட்டுக்கள்...

நன்றி அக்னி உங்கள் பதில் கவி அருமை

ஏங்க இனியவள் உங்கள் கவிதைகளைப் படித்தால் காதலை முழுதாக படித்துவிடலாம் போல இருக்கே. அத்துணை அழகாக எழுதுகின்றீர்கள். பாராட்டுகள். உங்களுடன் இணைந்து ஒருவர் கலக்கியுள்ளார். இருவருக்கும் எனது பாராட்டுகள். இதைப் படிப்பதற்கு ஆவி வேசம் போட வேண்டி இருக்கு.

காணல், கல்லூரி குறும்பர்கள் மத்தியில்படும் ஆனந்த அவஸ்தை, பிறந்தநாள் பரிசு, செல்லச் சிணுங்கல், செல்லக்கோபம்,செல்ல வாடா போடா (இதுதான் சாக்கென வைத்து பின்னிவிடுவாங்களே) இப்படி கலகலப்பான காதலை கண்முன் நிறுத்தி கடைசியில் கண்ணீர் வரவழைத்து விடும் கிளைமாக்ஸ். காசு கொடுக்காது ஒரு காதல் படம் பார்க்க வைத்ததுக்கு நன்றிங்க

நன்றி அமர்...

இனியவள்
08-07-2007, 09:21 AM
நேரிலிருந்து பார்த்தது போன்ற உணர்வு..
ஆண் பெண்ணிற்காய் உருகி கவிதை எழுதுவது அநேகம், ஒரு பெண் ஆணை நினைத்து உருகி எழுதுவது சொற்பம்.. கவிதையில் இருவருக்குமான நெருக்கம் மிக அழகாக சொல்லபட்டிருக்கிறது. அவன் தன்னிடம் பிரிவை சொல்ல வருகிறான் என்று தெரியாமல் அவன் வரும் திசையில் கண் வைத்து அவனை ரசித்துக்கொண்டிருப்பது மிக ரசிக்க வைத்தது இனியவளே.....
எல்லாமே உங்களின் நிஜ சம்பவங்களோ என்று எண்ணுகிறது மனம்.... வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ

ஓவியன்
08-07-2007, 06:56 PM
என்ன இனியவள் ஒரு கதை போன்று உங்கள் கவிதை வாழ்த்துக்கள்!

அத்தனை அழுத்தமாக அத்தனை அர்த்தமாக..........

இதனைப் பிரித்து விமர்ச்சிக்க என்னால் முடியவில்லை, அத்தனை கனமான கலங்க வைக்கும் கரு!.

பனிவிழும் ஒரு அதிகாலையில்!
பார்த்துப் பார்த்து,
மொட்டரும்பி பூத்து நிற்கும் ஒரு
பாரிஜாதம்!
காற்றையே நறுமணத்தால் நிரப்பி!
தேனுண்ணும் வண்டுகளை
கூவி அழைக்கும்
அருமையான தருணத்தில்!
யார் கண்ணோ பட்டது போல்
பறந்து வந்த ஒரு
பொல்லாக் கழுகு!
அந்த மலரைக்
கொத்தி அத்தோட்டத்தின்
ஏகாந்தத்தைக் குலைப்பது
போலிருந்தது இந்தக் கவிக்கரு!

மலரின் மென்மை தெரியாத கழுகுகள் இருக்கும் வரை மணம் வீசி மனம் மயக்கும் மலரைப் போன்ற காதலுக்கும் இடமில்லை போலும்.................

gayathri.jagannathan
09-07-2007, 03:57 AM
கனமான கரு.. அதைக் கையாண்டிருக்கும் விதம் அருமை...
இனிமையாகத் தொடங்கி... இயலாமையோடு முடித்திருக்கும் விதம் ஒரு வாழ்வியலை நேரில் கண்டது போன்ற அனுபவத்தைத் தருகிறது...

வசீகரன்
09-07-2007, 04:57 AM
உங்கள் அழகான காதல் வரிகளை சந்தோஷமாக படித்து கொண்டே வந்த நான் அந்த கடைசி வரிகள் ரொம்பவே காயப்படுத்தி விட்டது

இனியவள்
09-07-2007, 07:46 AM
[FONT="Latha"]என்ன இனியவள் ஒரு கதை போன்று உங்கள் கவிதை வாழ்த்துக்கள்!
அத்தனை அழுத்தமாக அத்தனை அர்த்தமாக..........
இதனைப் பிரித்து விமர்ச்சிக்க என்னால் முடியவில்லை, அத்தனை கனமான கலங்க வைக்கும் கரு!.
[FONT]

நன்றி ஓவியன்

கனமான கரு.. அதைக் கையாண்டிருக்கும் விதம் அருமை...
இனிமையாகத் தொடங்கி... இயலாமையோடு முடித்திருக்கும் விதம் ஒரு வாழ்வியலை நேரில் கண்டது போன்ற அனுபவத்தைத் தருகிறது...

நன்றி காயத்ரி அக்கா

சுகந்தப்ரீதன்
09-07-2007, 08:02 AM
மிக அழகாக அல்ல...மிக அற்புதமாகவும்...ஆழமாகவும் உணர்வுகளை வெளிபடுத்தி இருக்கிறீர்கள்....எனது வாழ்த்துக்கள்!

இனியவள்
09-07-2007, 08:23 AM
மிக அழகாக அல்ல...மிக அற்புதமாகவும்...ஆழமாகவும் உணர்வுகளை வெளிபடுத்தி இருக்கிறீர்கள்....எனது வாழ்த்துக்கள்!

நன்றி சுகந்