PDA

View Full Version : முதலீட்டாளர்களை குறிவைத்து புதிய ஏமாற்ற



saguni
07-07-2007, 09:26 AM
மக்களை ஏமாற்றும் யூலிப்

ULIP- UNIT LINKED INSURANCE PRODUCT இன்று மக்களிடத்தில் வேகமாய் பரவிவரும் வைரஸ் இது. முண்ணனி வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டம் கேட்க மிக சுவாரஸ்யமாய் இருக்கும்.

" இன்று முதலீடு செய்த ஒருலட்சம் 10வருடங்களில் 20லட்சமாய் கிடைக்கும்" என்கிற விளம்பரபலகைகளை முன்ணனி வங்கியின் பெயரிட்டு ஊர்களில் ஆங்காங்கே காணலாம்.

இதில் எப்படி சாத்தியம்???????வங்கியின் உறுதியான நம்பிக்கை. இவற்றை நம்பி இரு முன்ணனி வங்கிகளில் முதலீடு செய்தேன். போதுமடா சாமி என நாக்குத்தள்ள வைத்த பலரின் கதை இது. ஆனால் கற்றுக்கொண்ட பாடம்தான் மிச்சம்.

முதலில் இவர்கள் என்ன செய்கிறார்கள்?

நீங்கள் முதலீடு செய்யும்போதே ஐடிஆர்பியின் விதிகளின் படி உங்கள் முதலீட்டில் எத்தனை சதவீதம் நிரந்தர முதலீட்டிற்கு எத்தனை சதவீதம் பங்குவர்த்தகர்த்தகத்திற்கு எத்தனை சதவீதம் பேலன்ஸ் என குறிப்பிட வேண்டுமென கூறுகிறார்கள்.

அதாவது 1 லட்சம் முதலீடு செய்தால் அதை யூனிட்டாக பிரித்துவிடுவர். புதிதாக துவங்கும் ஸ்கீமிற்கு பத்துரூபாய் முக மதிப்பு. நடைமுறையில் இருக்கும் ஸ்கீமிற்கு அன்றைய மதிப்பில் பிரிப்பர். அதிலும் கடந்த சில நாட்களில் அதிகம் இருந்தால் அந்த மதிப்பிற்கே எடுத்துக்கொள்வர். ஏனெனில் அதிகமதிப்பில் குறைவான யூனிட் மட்டுமே கிடைக்கும் அது நிறுவனங்களுக்கு லாபம்.

குறைந்தபட்சம் 10 சதவீதம் நிரந்தரமுதலீட்டிற்கு(இதை லோனாக வங்கிகளுக்கு/நிறுவங்களுக்கு நிரந்தரவருமானம் கிடைப்பதற்கென கொடுப்பார்கள்)

பங்குவர்த்தகத்திற்க்கு உங்கள் விருப்பம் அதிக ரிஸ்க் அதிக ரிடர்ன் உள்ளது. பெரும்பாலும் 80 சதவீதம் தேர்வு செய்வோம்.

பேலன்ஸ்டில் பத்து சதவீதம் அதாவது 5 சதவீதம் இதில் 5 சதவீதம் அதில் என்பதே.

இப்போது 1 லட்சம் எனில் முகமதிப்பு 10ரூபாயில்

800யூனிட்− பங்குவர்த்தகத்தில் முதலீடுசெய்ய
100யூனிட்−நிரந்தரவருமானத்திற்கு
100யூனிட்− பேலன்ஸ்ட் என ஒதுக்கப்படவேண்டும் இல்லையா?? ஆனால் அதுதான் இல்லை. ஒருவருடம் கழித்து பார்த்தால்

இதில் அந்த ஐ வங்கி எனில் முதலிலேயே கிட்டத்தட்ட 20 சதவீத யூனிட்டுகளை தங்களின் செலவுக்கென முழுங்கிவிடுவர். ஆக முதலீடு செய்த 1 லட்சம் மொத்தமே 75,000 மட்டுமே முதலீடு செய்வர். மற்றா வங்கிக்கள் எனில் ஒருவருடம் கழித்து கைவரிசையை காட்டுவர். விரைவில் இந்த கழிப்புத்தொகையை இன்னும் உயர்த்தப்போகிறார்களாம்.இதில் இன்சூரன்ஸ் இலவசம் என்று கூறி வருடாவருடம் சில சதவீத முதலீடுகளை முதலீடுகளை முழுங்கிக்கொண்டே இருப்பர். பங்குச்சந்தை நன்றாக இருந்தால்தான் லாபம் ஓரளவாவது கிடைக்கும் இல்லையேல் அதுவும் அம்போதான்.

இவர்கள் காட்டும் வரலாற்று ரிடர்ன் 2000 முதல் 2004வரை இருக்கும் ஆனால் அன்றைய சென்செக்ஸ் 2000திலிருந்து 9000ஆகியது. ஆகையால் மாறியது. அதுவே இன்று 15000 ஆகிவிட்டது. ஆனால் இன்றைய சென்செக்ஸ் புள்ளி15000ல் நீங்கள் முதலீடு செய்யும்போது 7வருடத்தில் 75000 ஆகுமா என்றால் யாரைக்கேட்டாலும் சிரிப்பார்க*ள். இதுதான் ஏமாற்றுவேலை என்பது.

அவர்கள் லாபத்தின் குறிக்கோளை முதலில் அடைந்துவிட்டு வருடாவருடம் இன்சூரன்ஸ் பிரீமியமும் எடுத்துவிட்டு நம்மை நடுக்காட்டில் விட்டு விடுவர். போதுமடா சாமி என 2வருடத்தில் பணத்தை திருப்பி எடுக்கலாமென்றால் நீங்கள் 10வருடத்திற்கு செலுத்த வேண்டிய தொகையையும் கழித்தபின்னரே பணம் திரும்ப கிடைக்கும். இதில் முக்கிய விசயம் என்னவென்றால் அவற்றை காட்டி உங்களை மயக்கும் ஏஜெண்ட்களுக்கு கமிசன் மட்டும் 12.5% அதனால்தான் அவர்கள் மயக்குகிறார்கள்.இன்ஸ்யூரன்ஸ் மட்டுமே நம்பி முதலீடு செய்தால் இது ஓரளவிற்கு சரி.
ஆனால் வருமானத்தை நம்பி இந்த ULIPகளில் முதலீடு செய்வோர் இதைவிட சிறந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதே சிறந்தது. கனராவின் அவிவா மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளியின் புருடென்ஸியலிலிருந்து யாரேனும் வீடுதேடிவந்தால் அன்புடன் திருப்பி அனுப்புதலே சாலச்சிறந்தது.