PDA

View Full Version : டாலரின் மதிப்பு ரூ.30ஐத்தொடுமா???& நில விலை உய&saguni
07-07-2007, 08:56 AM
:sport-smiley-018: இதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி:sport-smiley-018:

கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் டாலரின் மதிப்பு மீண்டும் மீள வாய்ப்பு மிக மிகக்குறைவு என்கிற பேச்சு அடிபடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இது பற்றி பேச்சளித்த பிஎஸே மெம்பர் ரமேஸ்தாமனி கூட இதன் மதிப்பு 35க்கு அருகில் விரைவில் செல்லலாம் என்கிறார். இன்னும் 4வருடங்களில் இது கண்டிப்பாய் 30ஐத்தொட்டுவிடும் என்றும் இதனால் புதிய காண்ட்ராக்ட் போடும் மென்பொருள் நிறுவனங்களும் நெசவுத்துறை நிறுவனங்களும் வேறுபடும் பணமதிப்பில் உஷாராக காண்ட்ராக்ட் போடுவதாகவும் கூறுகிறார்கள்.

இந்த பண உயர்வால பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இரு சாரோர். ஒன்று ஏற்றுமதியாளர்கள். இரண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்போர். விரைவில் பாதிக்கப்படப்போவது ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர். அரசாங்கம் மற்றும் ஐடி நிறுவனங்கள் இவர்களின் சம்பள மற்றும் இதர வருமானங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் மறைமுகமாய் ஈடுபடத்துவங்கிவிட்டன. அரசாங்கம் இதில் ஈடுபடக்காரணம் என்ன என யோசிக்கும்போது நிலங்களின் விலை முக்கிய பெரு நகரங்களான சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உயர முக்கிய காரணகர்த்தாவாக இந்நிறுவனங்களில் வேலை செய்வோர் இருக்கிறார்கள். ஏனெனில் வருமான வரியிலிருந்து தப்பிக்க இவர்கள் வருமானம் அதிகமாய் உள்ளதாய் மேலும் கடன் வாங்கி நிலம் வாங்கிக்குவிக்கிறார்கள். அது சாதாரண மக்களை வாங்கவிடாமல் விலை உயர்வை ஏற்படுத்துகிறது. அவர்கள் இதரவருமானத்தை குறைத்துவிட்டால் வருமானம் ஓரளவு குறையும். கடனை அடைக்க சிரமப்பட்டு கடன் வாங்கமாட்டார்கள். கடன் வாங்க வில்லையெனில் நிலம் வாங்கவில்லையெனில் விலை குறையும் இல்லையேல் குறைந்தபட்சம் விலை உயராமலாவது இருக்கும் என்பது வல்லுநர்களின் கணக்கு. இது எப்படி இருக்கு???

முன்பு சதுர மீட்டரில் இருந்து சதுர அடிக்கு மாறி பின்பு இன்ச்க்கு மாறிய நில அளவுகோல் அடுத்த தலைமுறைக்கு விலை அளவானது மில்லி மீட்டரில்தான் நிர்ணயிக்கப்படுமென நினைக்கிறேன்.

lolluvathiyar
07-07-2007, 09:05 AM
நல்ல விளக்கம் நன்பரே, ஆனால் இடம் விற்பனையில் நில விலை ஏற ஐடி நிறுவத்தில் வேலை செய்பர்கள் அதிக நிலம் வாங்குவது காரனமல்ல. தொழில்கள் பெருகி விட்டன. ஆனால் இடம் பற்றாகுரை, இடைதரகர்கள் ஆதிக்கம் இவையே நில விலையை உயர்த்த காரனம்

namsec
07-07-2007, 09:42 AM
இடைத்தரகர்கள் ஒருபுரம் என்றால் நிலத்தை விற்பவனும் ஒருகாரணம் ஆசை அதிகம் ஆகிவிட்டது.

பொருளாதர வளர்ச்சியினால்தான் டாலரின் மதிப்பு குறைந்துள்ளது

இதில் அரசு மறைமுகமாக செய்ய என்ன இருக்கிறது

இந்த சுட்டியை கவனித்து வாருங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10475)

அன்புரசிகன்
07-07-2007, 09:49 AM
ஒன்று புரியவில்லை. டாலர் மதிப்பு குறைந்து உள்ளூர் ரூபாய் மதிப்பு கூடுகிறதெனில் அது சர்வதேச சந்தையில் இந்தியாவின் வளர்ச்சியைத்தான் குறிக்கிறதே... இன்னொரு வகையில் கூறினால்வெளிநாட்டுப்பணம் இந்தியாவில் அதிகமாக உள்ளது அல்லது அவர்கள் இந்தியாவுடன் அதிக ரூபாய் கொடுத்து வாங்கவேண்டிவரும்... அப்படியானால் எரிபொருள் விலை குறைந்திருக்கவேண்டுமே...

saguni
07-07-2007, 10:46 AM
சர்வதேச சந்தையில் ஈராக்கில் உற்பத்தி பாதிக்கப்பட்ட காரணத்தில் கையிருப்பு குறைந்துள்ளது எனவே விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் உயர்வு நம் பணமதிப்பின் உயர்வைவிட அதிகம் எனவே எரிபொருள் விலையை குறைப்பது கடினம் என்பது என் கருத்து.

அன்புரசிகன்
07-07-2007, 11:03 AM
சர்வதேச சந்தையில் ஈராக்கில் உற்பத்தி பாதிக்கப்பட்ட காரணத்தில் கையிருப்பு குறைந்துள்ளது எனவே விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையின் உயர்வு நம் பணமதிப்பின் உயர்வைவிட அதிகம் எனவே எரிபொருள் விலையை குறைப்பது கடினம் என்பது என் கருத்து.

நீங்கள் கூறுவது உண்மை. ஆனால் OPEC இன் சகல வர்த்தக நடவெடிக்கையும் அமெரிக்க டொலரில்தான் நடைபெறுகிறது. அத்துடன் ஈரராக்கில் மட்டும் தான் மசகு எண்ணெய் கிடைப்பதல்ல. ஆனாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் வளைகுடாவில் இருப்பது ஒரு காரணம் எனலாம். அத்துடன் இந்தியா எரிபொருள் விலையை உயர்த்தாதற்கு வேறுகாரணங்கள் பல காரணங்கள் இருக்கலாம். குறைக்கமுடியாதென்பதற்கு நீங்கள் கூறும் காரணம் சற்று சிந்திக்கவேண்டியதே. காரணம் அரசின் மானிய ஒதுக்கீட்டிலிருந்தும் டொலரின் பெறுமததிகுறைப்பையும் வைத்து குறைக்க முயற்சிக்கலாம்.