PDA

View Full Version : கவிதைக்கு பொய் அழகு....!



வசீகரன்
07-07-2007, 06:06 AM
உன் புத்தகத்தின் முதல் பக்கத்தில்
ஒரு கவிதை படித்தேன்.....
மிகவும் அழகாக இருந்தது
பிறகு தான் சொன்னார்கள்
அது உன் பெயர் என்று!!........

அமரன்
07-07-2007, 08:01 AM
இதே மாதிரி பல கவிதைகள் படித்தாலும் சுவையாகவே இருகின்றது காதலைப் போல. வாழ்த்துகள் வசீகரன்.

இனியவள்
07-07-2007, 08:04 AM
உன் புத்தகத்தின் முதல் பக்கத்தில்
ஒரு கவிதை படித்தேன்.....
மிகவும் அழகாக இருந்தது
பிறகு தான் சொன்னார்கள்
அது உன் பெயர் என்று!!........

என் பெயர் அழகுற்றது
அதனை நீ உச்சரிப்பதால்

உன் புத்தகம் அழகுற்றது
உன் பெயரை தாங்கி
இருப்பதால்

கவிக்கு பொய் அழகு
காதலுக்கும் பொய் அழகு
அழகுபடுத்திய பொய்யே
காதலை அழிவு படுத்தாமல்
இருக்கும் வரை பொய் கூட
அழகு தான் காதலில் :)

கவி அருமை வசிகரன்

lolluvathiyar
07-07-2007, 08:15 AM
நீங்கள் தெர்ந்துகொண்டது கவிதை அல்ல அது பெயர் என்று
நாங்கள் தெர்ந்துகொண்டது பெயர் அல்ல அது கவிதை என்று



கவிக்கு பொய் அழகு
காதலுக்கும் பொய் அழகு

காதலை அழிவு படுத்தாமல்


காத*லே ஒரு பொய் அது அழிவு ப*டுத்தாம*ல் இருக்குமா இனிய*வ*ளே

ஓவியன்
07-07-2007, 11:49 AM
உன் புத்தகத்தின் முதல் பக்கத்தில்
ஒரு கவிதை படித்தேன்.....
மிகவும் அழகாக இருந்தது
பிறகு தான் சொன்னார்கள்
அது உன் பெயர் என்று!!........

உங்களது இந்த வகைக் கவிதைகள் அமர் சொன்னதைப் போல அழகானவை. இந்த வகைக் கவிதைகளை எழுதுவதில் தபு சங்கர் புகழ் பெற்றவர் உங்களது கவிதைகளைப் படிக்கையில் அவரது ஞாபகம் வருகிறது!.

வாழ்த்துக்கள்!.

அக்னி
07-07-2007, 12:55 PM
உனது பெயரை,
எழுதிவைத்தேன்...
கனமானது புத்தகம்...

அழகிய கவிதைக்குப் பாராட்டுக்கள்... வசீகரன்...

அக்னி
07-07-2007, 12:58 PM
இதே மாதிரி பல கவிதைகள் படித்தாலும் சுவையாகவே இருகின்றது காதலைப் போல. வாழ்த்துகள் வசீகரன்.


உங்களது இந்த வைகைக் கவிதைகள் அமர் சொன்னதைப் போல அழகானவை. இந்த வைகைக் கவிதைகளை எழுதுவதில் தபு சங்கர் புகழ் பெற்றவர் உங்களது கவிதைகளைப் படிக்கையில் அவரது ஞாபகம் வருகிறது!.

வாழ்த்துக்கள்!.

வாழ்த்துக்கள் இருவருக்கும்...
கவிதையையும் காதலையும் அனுபவிப்பதற்கு...

தாமரை
10-02-2009, 12:22 PM
உனது பெயரை,
எழுதிவைத்தேன்...
கனமானது புத்தகம்...

...

ஏங்க அக்னி,

அவ்வளவு குண்டா அவங்க?

தவறிப் போய் இதை காதலிக்குக் கொடுத்திடாதீங்க..

அப்படியே கொடுக்க்கறதுன்னாலும், முன்னாடியே ஆம்புலன்ஸிற்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடுங்க.

:violent-smiley-010:

அமரன்
10-02-2009, 12:55 PM
ஏங்க அக்னி,

அவ்வளவு குண்டா அவங்க?

தவறிப் போய் இதை காதலிக்குக் கொடுத்திடாதீங்க..

அப்படியே கொடுக்க்கறதுன்னாலும், முன்னாடியே ஆம்புலன்ஸிற்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடுங்க.

:violent-smiley-010:

இப்பிடிப் பொய் சொன்னால் ஆம்புலன்ஸ் தேவையில்லை அண்ணா.

ஐம்புலனும் அடங்கிய பிறகு ஆம்புலன்ஸ் எதுக்கு.

ஷீ-நிசி
11-02-2009, 12:59 PM
ஏங்க அக்னி,

அவ்வளவு குண்டா அவங்க?

தவறிப் போய் இதை காதலிக்குக் கொடுத்திடாதீங்க..


:violent-smiley-010:

ஹா! ஹா! :icon_b:

அக்னி
05-03-2009, 12:33 AM
தூசி தட்டி எடுத்து வந்து மொக்கைபோடும் செல்வரையும்,
தூசு தட்டும் செல்வருக்கு ஒத்து ஊதும் அமரன், ஷீ-நிசி ஆகியோரையும்,
வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கனம் என்று மரியாதைக்காக, மதிப்புக்காகப் பயன்படுத்துவதும் உண்டல்லவா...
அந்த மரியாதை மதிப்புத்தான் இங்குள்ள கனம்...

நேசம்
05-03-2009, 07:38 AM
இப்பிடிப் பொய் சொன்னால் ஆம்புலன்ஸ் தேவையில்லை அண்ணா.

ஐம்புலனும் அடங்கிய பிறகு ஆம்புலன்ஸ் எதுக்கு.

:D:D:D:D:D:D

படிச்சவுடன் சிரிப்பு வந்துவிட்டது அக்னிஜி. மத்தப்படி ஒத்து ஊதும் வேலை எல்லாம் இல்லை.எனக்கு அந்த கனம் எந்த கனம் என்று தெரியும்

perolidhasan
05-03-2009, 12:27 PM
what a surprise poem to read. I really enjoy it and expect more like this one

அக்னி
05-03-2009, 12:37 PM
what a surprise poem to read. I really enjoy it and expect more like this one
நண்பரே...
தமிழ்மன்றம் அவசியமில்லாதவிடத்து ஆங்கிலப்பதிவுகளை விரும்புவதில்லை.
அழகான கவிதையை ரசிக்கும் உங்களால், நிச்சயமாக அழகுத் தமிழில் பதிவுகளைக் கொடுக்க முடியும்.
உங்களது முதற்பதிவும் ஆங்கிலப்பதிவு என்பதாலேயே அகற்றப்பட்டது.
பதிவுகளைத் தமிழிற் கொடுங்கள்.

நன்றி!

பொறுப்பாளர்
~அக்னி