PDA

View Full Version : முகேஷ் அம்பானிக்கு நோட்டீஸ்



namsec
07-07-2007, 05:36 AM
ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான 'அனிதிலியா' என்ற நிறுவனம் சார்பில் வக்பு வாரியத்திடமிருந்து நான்காயிரத்து 532 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலம் வாங்கப்பட்டது. இந்நிலத்தில் 27 அடுக்கு மாடி கட்டடத்தை கட்ட 'அனிதிலியா' நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், வக்பு வாரியத்திடம் நிலம் வாங்க முகேஷ் அம்பானி போட்ட ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்றும், வக்பு வாரியம் மீண்டும் நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து நிலத்தை மீண்டும் திரும்பப் பெறுவது குறித்து பதிலளிக்கும்படி, முகேஷ் அம்பானிக்கு வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ஆர்.ஷேக் கூறுகையில், ''சட்டப்பிரிவு 52ன் கீழ் 'அனிதிலியா' நிறுவனம் உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு நாங்கள் விற்ற நிலங்களை திரும்பப் பெறும்படி மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது,'' என்று கூறினார்.

நன்றி தினமலர்

lolluvathiyar
07-07-2007, 05:47 AM
ரிலையன்ஸ் போண்ற மிக பெரிய நிறுவனங்கள், சரியான சட்ட அலோசனை இல்லாமல் நிலம் வாங்கி இருக்க மாட்டார்கள். ஆகையால் இந்த விசயத்தில் அவர்களுக்கு எந்த பாதகமும் வராது. சும்மா மிரட்டலுடன் நின்று விடும்

அமரன்
07-07-2007, 07:53 AM
காத்திருப்போம் வாத்தியாரே! காலம் பதில் சொல்லட்டும்.