PDA

View Full Version : வீதி விளக்குகள்.



அமரன்
06-07-2007, 08:47 PM
மின்னல் வெட்டில்
இன்னல்கள் விரட்டி

கரு மை பூச்சில்
வெறுமை கலைத்து

சாயம் வெளுத்து
உதயம் வழங்கும்

வீதி விளக்குகளும்
குத்து விளக்குகளே.

ஓவியன்
06-07-2007, 09:06 PM
சிலேடையாகச் சொல்கிறீர்களா?, நேரடியாகச் சொல்கிறீர்களா? என்று விளங்கவில்லை அமர்!.

பல அர்த்தங்கள் வருகிறது − மற்றவர்கள் வந்து விளக்கும் வரை பொறுத்திருக்கிறேனே.

அமரன்
06-07-2007, 09:08 PM
சிலேடையாகச் சொல்கிறீர்களா?, நேரடியாகச் சொல்கிறீர்களா? என்று விளங்கவில்லை அமர்!.
பல அர்த்தங்கள் வருகிறது − மற்றவர்கள் வந்து விளக்கும் வரை பொறுத்திருக்கிறேனே.

உங்களுக்கு தோன்றும் கருத்தைச் சொலுங்கள் என அன்பாகக் கட்டளையிடுகின்றேன்.

அக்னி
06-07-2007, 09:12 PM
எனக்குத் தோன்றுவது,
வயிறு கொண்ட பசிக்காய்,
குடும்பம் கொண்ட வறுமைக்காய்,
வெறுமை கலந்த உறவுதேடி,
உயிர் கொண்ட உடலை,
அரிதாரம் பூசி, அலங்கரித்து,
பலதாரமான பரிதாபபிறவிகள்,
விலைமாதர்...

ஓவியன்
06-07-2007, 09:16 PM
அக்னிக்கு தோன்றியவையே எனக்கும் தோன்றின!

ஆனாலும்

மின்னல் வெட்டில்
இன்னல் விரட்டி

என்ற வரிகள் குழப்பிக் கொண்டிருந்தன.

அக்னி
06-07-2007, 09:22 PM
அக்னிக்கு தோன்றியவையே எனக்கும் தோன்றின!

ஆனாலும்

மின்னல் வெட்டில்
இன்னல் விரட்டி

என்ற வரிகள் குழப்பிக் கொண்டிருந்தன.

மின்னல் போன்ற பார்வை வீசி தமதின்னல் போக்குபவர்கள்...
இன்னொருவகையில்,
மின்னல் போன்று பிரகாசமான நிலையற்ற இன்பம் தந்து, தொடர்ந்து, இன்னல் தருபவர்கள்...
என்று கொள்ளலாமோ..?

அமரன்
06-07-2007, 09:29 PM
நன்றி அக்கினி என்ன நினைத்து எழுதினேனோ அதை எடுத்துக் கூறிவிட்டீர். ஓவியனும் அதே கருவைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி.

மின்னல் வெட்டில்
இன்னல் விரட்டி

இவரிகளுக்கு அக்கினியின் பொருள் சரி. ஆனாலும் சின்னத் திருத்தம். மின்னல் வெட்டுப் பார்வையில் பிறர் துன்பம் போக்குவதுடன் மின்னல் போன்ற நிலைல்லாத இன்பம் தந்து தொடர் இன்னல்களால் விரட்டப் படுபவர்களெனப் பொருள் கொண்டு அடுத்த வரிகளைப் படித்தால் பொருள்மாறுபடும்


ஏங்க ஓவியன் தொடுவானமாய் கவிதைக்கு உங்கள் விமர்சனத்தை காணவில்லை

ஓவியன்
06-07-2007, 09:32 PM
புரிந்து கொண்டேன் நன்றி அக்னி மற்றும் அமர்!

என்ன அழகாகச் சிந்திக்கிறீர்கள் − பாராட்டுக்கள்!.

ஓவியன்
06-07-2007, 09:34 PM
ஏங்க ஓவியன் தொடுவானமாய் கவிதைக்கு உங்கள் விமர்சனத்தை காண*வில்லை

உண்மைதான் அமர்!

கொஞ்சம் விளக்கமாக விமர்சிக்க நினைத்தேன்!

எப்படியும் நாளைக்குள் விமர்சித்து விடுவேன் கொஞ்சம் பொறுத்தருளுக நண்பரே!.

அமரன்
07-07-2007, 08:05 AM
பரவாயில்லை ஓவியன். நேரம் கிடைக்கும்போது விமர்சியுங்கள்.

இனியவள்
07-07-2007, 08:40 AM
கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

தமது கனவுகளை
தீயில் கருக்கி அந்த
தீயில் இருட்டில் இருக்கும்
குடுபத்தை வெளிச்சத்துக்கு
கொண்டு வந்து வெளிச்சத்தில்
இருக்கும் அவர்கள் இருட்டில்
இருக்கின்றனர்.....

மெழுகாய் தம்மை உருக்கி
கனவுதனை சுருக்கி
மனதால்,உடம்பால் ரணப்பட்டு
வேதனையை புன்னைகை என்னும்
பூச்சு பூசி பிறருக்கு இன்பம் கொடுத்து
தம் வேதனையை மறைக்கும் விட்டில்
பூச்சிகள் இவர்கள்

ஷீ-நிசி
07-07-2007, 10:18 AM
வீட்டிலிருக்கும் மங்கையரை
குத்துவிளக்காய் ஒப்பிடுவார்கள்...

விட்டில் பூச்சியாய் இருக்கும் மங்கையரை
தெருவிளக்காய் ஒப்பிட்டு உள்ளீர்கள்...

தெருவிளக்காய் இருந்தாலும் இவர்களும் குத்துவிளக்குகள் தானே!


நல்ல படைப்பு அமர்

ஆதவா
07-07-2007, 11:16 AM
நல்ல அருமையான படைப்பு அமரன்.. இருவேறு அர்த்தங்கள்....

விளக்குகளில் எத்தனையும் இருக்கலாம்... ஆனால் எரிவது என்னவோ எண்ணையால் தான்..... எண்ணையில்லையேல் விளக்கேது?.

வாழ்த்துக்கள்.

அமரன்
07-07-2007, 01:23 PM
கவிதை அருமை அமர் வாழ்த்துக்கள்

நன்றி இனியவள் பதில் கவிதையால் எனது கவிதைக்கு இன்னும் மெருகேற்றி விட்டீர்கள்.

அமரன்
07-07-2007, 01:24 PM
வீட்டிலிருக்கும் மங்கையரை
குத்துவிளக்காய் ஒப்பிடுவார்கள்...
விட்டில் பூச்சியாய் இருக்கும் மங்கையரை
தெருவிளக்காய் ஒப்பிட்டு உள்ளீர்கள்...
தெருவிளக்காய் இருந்தாலும் இவர்களும் குத்துவிளக்குகள் தானே!
நல்ல படைப்பு அமர்

ஆமாம் ஷீ. அவர்களைக் காணும்போதெல்லாம் எனக்குள் அப்படி ஒரு எண்ணமும் தோன்றுவது வழக்கம். அதனை நினைவில் கொண்டே எழுதினேன். நன்றி ஷீ.

அமரன்
07-07-2007, 01:26 PM
நல்ல அருமையான படைப்பு அமரன்.. இருவேறு அர்த்தங்கள்....
விளக்குகளில் எத்தனையும் இருக்கலாம்... ஆனால் எரிவது என்னவோ எண்ணையால் தான்..... எண்ணையில்லையேல் விளக்கேது?.
வாழ்த்துக்கள்.

நன்றி ஆதவா! சரியாகப் புரிந்து கொண்டீர்கள். எண்ணைதான் எரிவிற்கே காரணம். இதை வைத்து ஏதாவது கிறுக்கலாம் போல இருக்கே. நன்றி ஆதவா.