PDA

View Full Version : தியேட்டர்

இனியவள்
06-07-2007, 05:06 PM
நீண்ட நாட்களுக்கு பிறகு
குடும்பத்துடன் படம் பார்க்க
சென்றேன் அங்கே வரவேற்றது
உன் பழைய நினைவுகள் என்னை

அன்று நானும் நீயும் படம்
பார்க்க சென்ற அதே தியேட்டர்
ஒன்றாய் இருவம் கைகோர்த்து
வரிசையில் நின்று டிக்கட் வாங்கி
இணைந்த கைகள் பிரிய மனம்
இல்லாமல் இன்னும் இருக்கி
பிண்ணிய படியே இருக்கை நோக்கி
நகர்ந்த நினைவு இன்றும் பசுமையாய்
என்னுள்.....

ஒவ்வொரு நகைச்சுவைக் கட்டத்திலும்
நீ சிரிப்பதைப் பார்த்து நான் சிரித்த
அந்த நேரம் படம் பார்ப்பதை விட்டு
உன் கண்கள் என்னைப் பார்ப்பதை
கண்டு என் மனம் போட்ட ஆனந்த கூச்சல்
இன்றும் இனிக்கின்றது...

இன்று நீ இல்லையே என்னருகில்
என்று மன அழுகையை ஒரு
புறம் தள்ளிவிட்டு உள் சென்று
நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்

திரையில் படம் ஓடிகொண்டிருந்தது
மற்றவர்கள் சிவாஜி பார்த்துக்கொண்டிருந்தனர்
நான் மட்டும் நீயும் நானும் அன்று கண்களால்
பகிர்ந்து கொண்ட அன்றைய நிகழ்வைக்
கண்களில் கண்ணீருடன் பார்த்துகொண்டிருந்தேன்

அமரன்
06-07-2007, 07:46 PM
தியேட்டர் நினைவுகள் அருமை. பாராட்டுகள் இனியவள்.

ஓவியன்
06-07-2007, 08:15 PM
திரையில் படம் ஓட*
உங்கள் மனதிலும் படம் ஓட*
அதை வரிகளாக இங்கே
கவிப் படம் ஓட்டியது!
அருமையிலும் அருமை!

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இனியவள்!.

அன்புரசிகன்
06-07-2007, 08:25 PM
தியேட்டர் பல காதலர்கள் ஒன்றுகூடும் கூடாரம். உங்கள் கவிகளின் நாயகன் ரொம்பக் கொடுத்து வைத்தவன்...

காதலிக்கவேண்டும் என்ற உணர்விலும் அன்பைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. தீயேட்டர் கவி நன்றாக உள்ளது.

ஷீ-நிசி
07-07-2007, 02:32 AM
இனியவளே! உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க வைத்தது அந்த தியேட்டர்.. எத்தனை அற்புதமான வலிகள் நிறைந்த சூழ்நிலை... வாழ்த்துக்கள்!

ஒரு சின்ன குறை:

வரிகளை இன்னும் கவிதைபடுத்தியிருக்கலாம்... கொஞ்சம் உரைநடைபாணியிலேயே இருப்பதாய் தோன்றுகிறது..

(தவறாக நினைக்கவேண்டாம்)

இனியவள்
07-07-2007, 07:34 AM
தியேட்டர் நினைவுகள் அருமை. பாராட்டுகள் இனியவள்.

நன்றி அமர்

திரையில் படம் ஓட*
உங்கள் மனதிலும் படம் ஓட*
அதை வரிகளாக இங்கே
கவிப் படம் ஓட்டியது!
அருமையிலும் அருமை!

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இனியவள்!.

நன்றி ஓவியன்

இனியவள்
07-07-2007, 07:34 AM
தியேட்டர் பல காதலர்கள் ஒன்றுகூடும் கூடாரம். உங்கள் கவிகளின் நாயகன் ரொம்பக் கொடுத்து வைத்தவன்...

காதலிக்கவேண்டும் என்ற உணர்விலும் அன்பைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. தீயேட்டர் கவி நன்றாக உள்ளது.

நன்றி அன்பு

இனியவள்
07-07-2007, 07:36 AM
இனியவளே! உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க வைத்தது அந்த தியேட்டர்.. எத்தனை அற்புதமான வலிகள் நிறைந்த சூழ்நிலை... வாழ்த்துக்கள்!
ஒரு சின்ன குறை:
வரிகளை இன்னும் கவிதைபடுத்தியிருக்கலாம்... கொஞ்சம் உரைநடைபாணியிலேயே இருப்பதாய் தோன்றுகிறது..
(தவறாக நினைக்கவேண்டாம்)

நன்றி ஷீ

ம்ம் நானும் நினைத்தேன் ஷீ உரைநடையில் இருப்பதாக...
இதில் தவறாக நினைப்பதற்கு என்ன இருக்கின்றது...

அமரன்
07-07-2007, 07:56 AM
வெள்ளித்திரையில் சூப்பர்ஸ்டார்
உள்ளத்திரையில் உங்க ஸ்டார்
கேட்டாலே அதிருதில்ல....

இனியவள்
07-07-2007, 08:01 AM
வெள்ளித்திரையில் சூப்பர்ஸ்டார்
உள்ளத்திரையில் உங்க ஸ்டார்
கேட்டாலே அதிருதில்ல....

ஆஹா அமர் அருமை....

என் மனத்திரையில்
ஒரு படம் அது நான்
இயக்கியது நினைவு
என்னும் கரு கொண்டு
வெள்ளித்திரையில் ஒரு
படம் ஷங்கர் இயக்கியது
பிரமாண்டத்தையும் கருப்பு
பணத்தையும் கருவாக
கொண்டு உருப்பெற்றது....

lolluvathiyar
07-07-2007, 08:07 AM
இனியவளே மலரும் நினைவுகளிலேயே காலம் கழிக்கிறீர்களா,
நினைக்க தெரிந்த மனமே, உனக்கு மறக்க தெரியவேண்டும்