PDA

View Full Version : பசுமையான நினைவு

இனியவள்
06-07-2007, 03:52 PM
ஆட்டுக்குட்டியோடு துள்ளித்
திரிந்த அந்த பசுமையான காலம்

அக்காவோடு செல்லமாய்
சண்டை பிடித்து அம்மம்மா
காதைத் திருக பெரியம்மா
பின்னால் ஒடி ஒளிந்த
அந்த இனிமையான நினைவு

பள்ளிக்கூடத்துக்கு தாமதமாய்
போய் மாணவத் தலைவியிடம்
அகப்பட்டு கன்னத்தில் முத்தப்பரிசு(லஞ்சம்)
கொடுத்து தப்பித்த பள்ளி வாழ்க்கை

நண்பிகளுடன் அரட்டை அடித்து
வீட்டுக்கு தமதமாய் வந்து பேச்சு
வாங்கி பெரியம்மாவிடம் பேச்சு
வாங்கிக் கொண்டே உணவு உண்ட சுகம்

கோயில் போவதாய் சொல்லி
நண்பர்களுடன் கடல் காற்று
வாங்கிக்கொண்டு அதற்கு பரிசாய்
பிரம்படி வாங்கிய அந்த நாள்

அடடா எவ்வளவு பணம் கொடுத்தாலும்
திரும்பி வருமா மீண்டும் ஒரு காலம்
ஏங்கித் தவிக்குது மனசு பழசை நினைச்சு...
ஏக்கங்களைத் தணிக்குது நினைவு..

rajaji
06-07-2007, 03:56 PM
என் பசுமையான* வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தி விட்டது. அத்தனை இனிமையாக உள்ளது. இது போன்ற படைப்புக்களை மேலும் வழங்க வாழ்த்துக்கள்.

அமரன்
06-07-2007, 07:21 PM
பழைய பசுமையான நினைவுகள் என்றுமே மனதிற்கு இதமானவை. தனிமையில் இருக்கும்போது அவை சில நேரங்களில் நெருஞ்சி முள்ளாய் குத்தவும் செய்யும். சில நேரங்களில் அவைதான் நமக்குத் துணையாகவும் இருக்கும். எனக்குக்கூட அப்படியான நினைவுகள் தாலாட்டுவது வழக்கம். அவையுடன் ஒத்துப்போகின்றது உங்கள் நினைவுகள். இது பலரது ஏக்கம் இனியவள். எப்போது தீருமோ தெரியாது.

இனியவள்
06-07-2007, 07:25 PM

தெரியவில்லை அமர் அது தெரிந்தால் தான் நாங்கள் கடவுள் ஆகிவிடுவோமே...

ஏக்கங்களே எமக்கு
சொந்தமாக
நினைவுகளே எமக்கு
துணையாக
காலம் போட்ட
விதி மாற்ற தான்
முயற்சிக்கின்றோம்
முடியாமல் தவிக்கின்றோம்

அமரன்
06-07-2007, 07:35 PM
மழைகால நேரத்தில்
நிரம்பிய கிணற்றில்
நீந்தப்பழக்கிய மாமா.

நணபர் குலாமுடன்
ஆற்றில் குளித்தது கண்டு
தாண்டவம் ஆடிய அம்மா.

அம்மா எனக்கடிக்க
அழுத அம்மம்மா

மார்மீது போட்டு சீராட்டி
ஆங்கிலம் சொல்லித்தந்த
சின்னமாமா.

நாவல் மரத்திலேறி
கிளைமுறிந்து விழுந்து
கதறிய நண்பன்.

உச்சி பொழுதில் நேரத்தில்
வெயில் மண்டையைப் பிளக்க
கதைபேசித் திரிந்த தார்வீதி

இப்படி எத்தனையோ நினைவுகள். குளுகுளு புலத்தில் இருந்தாலும் குளிராத மனதுடன் எத்த்னைகாலம்.

இனியவள்
06-07-2007, 07:37 PM
ம்ம் ஆமாம் அமர்

பசுமையான நினைவுகள்
பசுமரத்தாணி போல்
என்றும் எம் மனதைவிட்டு
அகலாது இயற்கை
அதனை இசைமீட்டிக்
கொண்டே இருக்கும் எமக்கு

ஷீ-நிசி
07-07-2007, 02:39 AM
ஒரு முறை எங்களின் பசுமையான நினைவுகளையும் மீட்டெடுக்க வைத்தீர்கள்.. அருமை இனியவளே!

இனியவள்
07-07-2007, 07:40 AM
என் பசுமையான* வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தி விட்டது. அத்தனை இனிமையாக உள்ளது. இது போன்ற படைப்புக்களை மேலும் வழங்க வாழ்த்துக்கள்.

நன்றி ராஜா ஜீ

ஒரு முறை எங்களின் பசுமையான நினைவுகளையும் மீட்டெடுக்க வைத்தீர்கள்.. அருமை இனியவளே!

நன்றி ஷீ