PDA

View Full Version : ஹைகூ - தோற்றம், வளர்ச்சி, இலக்கணம்.- (மகாகவியி



Nanban
24-05-2003, 06:27 PM
ஹைகூ கவிதையின் இலக்கணம்.............

(இது உரை நடை தான். கவிதையைப் பற்றியது தான் என்பதால் இங்கே....... சில நாட்களுக்குப் பின் வேறு இடஙகளுக்கு மாற்றி விட்டால் போயிற்று....)

பாரதியின் கருத்துகள் பத்தாவது பதிப்பாக உள்ளது..........

ஹைகூ கவிதைகள் ஜப்பானில் தோன்றிய பொழுது, வழங்கப்பட்ட பெயர் - ஹொக்கூ (hokku). ஹைகூவின் அடிப்படை இலக்கணம் - மூன்று வரிகளுக்கு மேல் போகக் கூடாது. முதல் வரியில் ஐந்தும், இரண்டாம் வரியில் ஏழும், மூன்றாம் வரியில் மீண்டும் ஐந்து என்ற எண்ணிக்கையில் பதங்கள் (syllables) கொண்டதாக இருக்க வேண்டும். - கவனிக்கவும், வார்த்தைகள் அல்ல. ஹைகூ கவிதைகள் ஒரே ஒரு காட்சியையோ, பொருளையோ, உணர்வையோ மட்டும் தான் வெளிப்படுத்த வேண்டும். பல்வேறு காட்சிகளையோ, கருப்பொருட்களையோ, உணர்வுகளையோ கலக்கி படைக்கக் கூடாது. (ஹைகூ என்பது கூட்டாஞ்சோறு அல்ல). ஒரு புகைப் படத்தில் எப்படி ஒரே ஒரு பொருளை மட்டும் focus செய்வோமோ - அது போல.

மற்ற தகவல்கள் -

பிறப்பு - 16ம் நூற்றாண்டு.
பெயர் மாற்றம் - 19ம் நூற்றாண்டு.
பிறப்பித்தவர் - Basho (ஜப்பானியர் - உண்மை பெயர் - Matsuo Munefusa 1644 - 94)
வளர்ப்பித்தவர் - Kobayassi Issa (ஜப்பானியரே தான் - பெயர் Kobayashi Nobuyuki 1763 - 1828)
உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் - T.E. Hulme மற்றும் Imagists கவிதை உலகைச் சார்ந்த கவிஞர்கள்.
குறிப்பிடத் தக்கவர்கள் - Ezra Pound; Amy Lowell; Robert Frost; Conrad Aiken; W.B.Yeats.

நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் - எத்தனை கவிதைகள் qualify ஆகும் என்று.

(யாராவது அடிக்க ஓடி வராதீர்கள் - படைப்பாளிகளுக்கு இலக்கணத் தடையா? என்று கூறிக் கொண்டு. படைப்பு செய்யுங்கள் - இலக்கணம் உடைய ஒரு கவிதையின் வடிவம் என்று கூறிக் கொள்ள வேண்டாம் என்று தான் சொல்கிறேன்...... புதிதாக ஒரு பெயர் வைத்துக் கொள்ளுங்கள்........)

இளசு
24-05-2003, 10:21 PM
மிக நல்ல பதிவு அருமை நண்பர் நண்பன் அவர்களே.....
படித்ததை பகிரும் உங்கள் படர்ந்த ரசனைக்கும்
உயர்ந்த மனதுக்கும் வந்தனம்.....

முன்னொரு காலத்தில்
வேறொரு களத்தில்
ஹைக்கூ பற்றி நம் மன்ற உறுப்பினர்கள்
கருத்தாடல் நடத்தினர்..
ஆனால் கண்ணியம் குறையாமல்....

என் மனம் கவர்ந்த அவர்களின்
எண்ணச்சிதறல்களை இங்கே
மறுபதிவு செய்வது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்...

இதில் கலந்து கருத்து சொன்ன அனைவரும் என் நண்பர்கள்...
ஒவ்வொருவர் கருத்தும் திறம்பட எடுத்து வைக்கப்பட்டிருக்கும்
நேர்த்தி, அடுத்தவர் மனம் புண்படாமல் தம் எண்ணங்களை
மென்மையாய் ஆனால் அழுத்தமாய் எடுத்தியம்பும் பாங்கு,
தகவல் அளிக்க பல வலைத்தளம் தேடும் அக்கறை என
பல பண்பு பட்டைகள் இந்த வைர நெஞ்சங்களில் ஒளிவிடுகிறது....

முதிர்ச்சியும், முனைப்பும் பெற்ற இந்த நண்பர்கள் ஏனோ
அடிக்கடி மன்றம் வருவதில்லை...
(குறிப்பாய் அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன்,,,)
கமெண்ட்டுத்திலகம் அஞ்ஞானி விடுப்பு முடிந்து வரும் நாளை
ஆவலோடு எதிர்பார்க்கிறேன்....

இனி... இதோ அந்த மறுபதிவு....


வந்தியத்தேவன் ஹைக்கூ பற்றி எழுதிய ஹைக்கூ:
மூன்று வரிகள்..
இரண்டு காட்சிகள்..
ஒரு ஆச்சர்யம்..!!

இது அவர் " என்னைக் கவர்ந்த ஹைக்கூ"எனப் பதித்தது.......:

மின் அதிர்ச்சிக்குப் பிறகும்
சாகவில்லை..
அவளது புன்னகை..!!

கருத்தாடல் ஆரம்பம்.......

முதலில் அஞ்ஞானி:

காட்சிகள் கண்ணுக்கு புலனாகின்ற
காட்சிகளாக இருக்க வேண்டும்.

0000000000000000000000000000000000000000

அடுத்து அருள்மொழிவர்மன்:

எழுத்தாளர் சுஜாதா ஹைக்கூக்களைப் பற்றி பலமுறை விகடனில் எழுதியுள்ளார்.
அவர் வரையறுத்தபடி ஹைக்கூ என்பது observed irony என்ற வரைமுறைக்குட்பட வேண்டும்.
It has to be observed in reality or if it is your imagination,
the presentation should make it sound like an observed reality.

தமிழ் கவிதைகள் இலக்கணத்தில் வரி, சீர், தளை என்றுதான் இருக்கிறதேயன்றி
அதன் அர்த்தத்தை பற்றி எனக்கு தெரிந்து எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
ஆனால் ஹைக்கூ ஜப்பானிய கவிதை மரபில் வந்தது. அங்கு அவர்கள்
கடைபிடிக்கும் மரபு "observed irony" என்பது.
நான் observed என்று கூறியது "பார்த்த" என்ற அர்தத்தில்தான்.
உருவகங்கள் சுஜாதா கூறிய ஹைக்கூ மரபில் வருவதில்லை

0000000000000000000000000000000000000000000000000000
மீண்டும் அஞ்ஞானி :

ஹைகூ பற்றிய சில தளங்களில் திரிந்ததில், இரண்டு காட்சிகள் இருப்பது
மட்டும் ஹைகூ ஆகி விடாது என்று தெரிகிறது. அவ்விரண்டும் அன்றாடம்
கண்ணில் படும் காட்சிகளாக இருக்க வேண்டுமாம். இரண்டும்
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத காட்சிகளாக, ஆனால் ஒன்று மற்றதை
செறிவூட்டும் (independent, but enriching) காட்சிகளாக இருக்க வேண்டுமாம்.
அவை ஏதாவது ஒரு காலத்தை அல்லது பருவத்தை சுட்ட வேண்டுமாம்.

நண்பர் அ.வர்மன் சொன்னபடி எழுத்தாளர் சுஜாதா இது பற்றி விபரமாக
பலமுறை எழுதியிருக்கிறார்.
விகடனில் அவர் எழுதும் 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் அவ்வப்போது விதிப்படி எழுதப்பட்ட
ஹைகூகளையும் பிரசுரித்து வருகிறார்.

0000000000000000000000000000000000000000000000000000000
வந்தியத்தேவனின் நீண்ட பதில்:

பழைய விகடனில் சுஜாதா அங்கீகரித்துள்ள சில ஹைக்கூ கவிதைகளில் ஒன்று:

இலவசமாக
நீந்திச் சென்ற நிலா.
மழை.
இதில் "நிலா நீந்திச் சென்றது" என்ற உருவகம்/உவமையைக் கவிஞர்
பயன்படுத்தியுள்ளார்.. அது கண்ணால் பார்க்கக் கூடிய காட்சியா
அல்லது கவிஞர் தன் கற்பனையை ஏற்றித் தந்துள்ள காட்சியா..??
மேலும், ஒன்றுக்கொன்று independent காட்சிகளா இவையிரண்டும் என்பது
கேள்விக்குரியதே..

இன்னொன்று:

உடைந்த பொம்மை
அழாத குழந்தை
கவலையோடு அப்பா

இது இரண்டு காட்சிகளா மூன்று காட்சிகளா என்பதே முதலில் சர்ச்சைக்குரியது..!!
காலம்/பருவத்தைச் சுட்டி நிற்பது பற்றியும் இதில் ஒன்றுமில்லை..

கொலம்பியா பல்கலையின் ஜப்பானிய இலக்கியப் பேராசிரியர் Haruo Shirane
கூறுவது வருமாறு:

One of the widespread beliefs in North America is that haiku should be
based upon one's own direct experience, that it must derive from one's
own observations, particularly of nature. But it is important to remember
that this is basically a modern view of haiku, the result, in part, of
nineteenth century European realism, which had an impact on modern
Japanese haiku and then was re-imported back to the West as something
very Japanese. Basho, who wrote in the seventeenth century, would have
not made such a distinction between direct personal experience and
the imaginary, nor would he have placed higher value on fact over fiction.

(பாஷோ என்று மேலே சுட்டப்படுபவர், மிகச் சிறந்த ஹைக்கூ முன்னோடி என்று அறிக..)

[விளக்கம்: வட அமெரிக்காவில், குறிப்பாக ஆங்கிலத்தில் ஹைக்கூ என்பது சொந்தமாகக்
கண்ணால் பார்த்த காட்சிகளால், அதுவும் இயற்கை குறித்த காட்சிகளால் புனையப்பட
வேண்டுமென்ற ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது. இது, 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய
உண்மையியல் சித்தந்தங்களால் ஏற்பட்ட தாக்கத்தினால் உருவான நவீன ஹைக்கூ
கோட்பாடு என்பதே உண்மை.. 17ம் நூற்றாண்டில் ஜப்பானில் ஹைக்கூ எழுதிய
சிறப்பான பாஷோ போன்ற கவிஞர்கள் இதை ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே..
உண்மையையும் கற்பனையையும் அவர்கள் சமமாகவே பாவிப்பார்கள்.]

மேலும் அவர் கூறுவது:

Another rule of North American haiku that Basho would probably find
discomforting is the idea that haiku eschews metaphor and allegory.
North American haiku handbooks and magazines stress that haiku should
be concrete, that it should be about the thing itself. The poet does
not use one object or idea to describe another, using A to understand B,
as in simile or metaphor; instead the poet concentrates on the object itself.
Allegory, in which a set of signs or symbols draw a parallel between one
world and the next, is equally shunned. All three of these techniques -
metaphor, simile, and allegory - are generally considered to be taboo in
English-language haiku, and beginners are taught not to use them..

However, many of Basho's haiku use metaphor and allegory, and in fact
this is probably one of the most important aspects of his poetry.

[விளக்கம்: மற்றொரு அமெரிக்க ஹைக்கூ விதி என்னவென்றால், ஹைக்கூவில்
முடிந்த அளவுக்கு உவமை, உருவகம் போன்ற கற்பனை சார்ந்த அணிகளைத்
தவிர்க்க வேண்டும் என்பதே. ஆனால், பாஷோவின் ஹைக்கூ கவிதைகளில்
மிகுதியாக நாம் இத்தகைய உவமைகள், உருவகங்களைக் காணலாம்.
அவர் ஹைக்கூவில் அவை சிறப்பான இடம் பெற்றிருந்தன என்பதே உண்மை.]

00000000000000000000000000000000000000000000000000000000


அருள்மொழிவர்மன் தொடர்கிறார்:

நல்ல விளக்கம். நன்றி. சுஜாதா அளிக்கும் ஹைக்கூக்களில் (99%) observed irony
இருக்கும். நீந்திச் செல்கிறது நிலா என்பது கண்ணால் காணக்கூடிய காட்சியே.
தேங்கியிருக்கும் தண்ணீரில், தண்ணீர் மட்டம் அசையும் போது, நிலாவின் பிம்பம்
நீந்துவது போல தோன்றும். அதில் இரண்டு காட்சிகளும் இருக்கின்றன.
(மழை - மிதக்கும்/நீந்தும் நிலாவின் பிம்பம்).

மிக மிக வெளிப்படையான உருவகம், உவமை இரண்டையும் ஹைக்கூக்களில்
புகுத்தகூடாது என்று பல மாதங்களுக்கு முன்னர் சுஜாதா எழுதியதாக ஞாபகம்.

00000000000000000000000000000000000000000000000000000000000

அஞ்ஞானியின் அடுத்த கட்ட தேடலும் பதிலும்:



வலைத்தளங்களில் இன்னும் கொஞ்சம் துழாவியதில் ஹைக்குவின் இலக்கணங்களில்
எதுகை மோனை ரீதியான வரைமுறைகளும் இருக்கிறதென்று தெரிகிறது.
ஜப்பானிய மொழி தவிர்த்த மற்ற மொழிகளில் இத்தகைய இலக்கணத்தை
கடைப்பிடிப்பது கடினமே. இதற்காக இலக்கணம் மீறப்பட்டால், மற்ற விதிமுறைகளையும் மீறலாமா?

ஏதோ நான் இலக்கணம் தலையாயது; பெண்டிரின் கற்பு போல் காத்தே ஆக
வேண்டும் என்ற வறட்டுப் பிடிவாதம் பிடிக்கவில்லை. கவிதை இலக்கணம் என்னைப்
பொறுத்த வரையில் கவிஞனுக்கு வைக்கப்படும் சவால். பொங்கிப் பெருகும் சிந்தனைகள்,
கற்பனைகள், சொற்கள் முதலியவற்றை ஒரு வரைமுறைக்குள் வகுக்க வேண்டிய கட்டாயம்.
சொல்லப் போனால் ஒருவகை steeple chase. விதிகளுக்குட்பட்டு படைக்கப்படுபவை நிலைக்கும்.
விதிகளுக்கு அப்பாற்படுபவற்றில் புதினங்கள் (innovations) புதிய விதிகளை உருவாக்கும்.
விதிகளை மீறி விட்டு, இது விதிக்கு உட்பட்டதுதான் என்று வாதாடுபவை மறக்கப்படும்.

இளசு
24-05-2003, 10:26 PM
இது ஹைக்கூ பற்றி இன்னொரு நினைவுப்பதிவு......

நான் மிக மதிக்கும் தீட்சண்யக் கவிதாயினி அவர்கள்
பதித்த " சின்னதாய் சில காட்சிப்பாக்கள்"

செங்கல் சுமக்கும் சிறுவன்
பலகை அறிவிப்பு
படித்தான் - இளமையில் கல்...

மனைவியின் நெற்றிப் பொட்டு
இடம் மாறியது
கணவனின் போட்டோவுக்கு

கணவன் - மனைவி சண்டை
அமைதியாக முடிந்தது
பாத்திரங்கள் பேசிக் கொண்டன...

கருத்தாடல் இந்த பதிவை ஒட்டி....

நண்பர் கலை :

நறுக்கென்று கருத்துக்களை கூறும்
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் மாறும்
சொல்ல நினப்பதை சுறுக்கி
சொல்லில் அர்த்தத்தை பெருக்கி
அர்த்தத்துக்கான வார்த்தைகளை பொறுக்கி
பொறுக்கின வார்த்தைகளை அடுக்கி
அழகு படுத்தி
மிகைப்படுத்தி
அணி சேர்த்து
ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பவைகள்தான்
ஹைக்கூ எனப்படும் காட்சிப்பாக்கள்.

அத்தகைய காட்சிப்பாக்களையே தரம் பார்த்து
தந்த நங்கையே...
வாழ்த்துகிறது உன்னை, எந்தன் சிந்தையே!

0000000000000000000000000000000000000000000000000000000000
நண்பர் அருள்மொழிவர்மனின் கருத்து:

லாவண்யா ஹைக்கூக்கள் அற்புதம்.
கவிஞர் சுஜாதா பலமுறை ஹைக்கூக்களின்
வரையறையை சொல்லியிருக்கிறார் - மூன்று வரியில் வருவது எல்லாம்
ஹைக்கூக்கள் அல்ல - அது ஒரு கண்ட காட்சியை, பெரும்பாலும்
ஒரு முரண்பாட்டு சிந்தனையை வைத்திருக்க வேண்டுமென.

நீங்கள் இங்கு அளித்த ஹைக்கூக்கள் அந்த மரபை பேணுகின்றன.
மிக நல்ல தரம். பாராட்டுக்கள்.

00000000000000000000000000000000000000000000000000000000

லாவண்யா அவர்களின் படைப்பைப் படித்து ரசித்து
தாம் படித்த ஒன்றை பதிவு செய்தார் ராஜ் எனும் நண்பர்...

உதிர்ந்த பூவொன்று
கிளைக்குத் திரும்புகிறது-
வண்ணத்துப்பூச்சி

இளசு
24-05-2003, 10:31 PM
குக்கூ

ஹைக்கூ ........
இதன் இலக்கணங்கள் இங்கே
ஏற்கனவே அலசி ஆராயப்பட்டு இருக்கின்றன.

பழைய பெயர்கள் : limerick, குறும்பா.

நம் மன்றத்தில் காட்சிப்பா ( லாவண்யா அவர்கள்)
கருத்துப்பா என அழகான தமிழ்ப்பெயரும் சூட்டப்பட்டு இருக்கின்றன.

தமிழ்நாட்டுக் கலாச்சாரக் காலமானி மீரா அவர்கள்
ஹைக்கூவின் மூன்று வரி மரபை மீறி
படைத்த புதிய குக்கூக்கள் இவை.
அதிக வரிகள் தரும் சுதந்தரம் மீராவுக்குப் பிடித்திருக்கிறதாம்...
உங்களுக்கு?

"கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் " மூலம்
ஏராளமான வசனக் காதல் கவிதைத் தொகுதிகள்
பலர் படைக்கும் மரபை தந்த மீராவின்
"குக்கூ "


பின்னால் இருந்த
என் மடிச்சந்தில்
வந்து விழுந்தது.........
மாற்றான் தோட்டத்து
மல்லிகை
ஓடும் பேருந்தில்!

இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
ஊதி ஊதித் தள்ளும்
எங்கள் ஊருக்கு வந்த
புதிய சிமெண்ட் ஆலை


கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற்காலையில்
கண்மூடிக் கிடக்கும்
ஊர் நாய் ஓர் மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில்


கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி;
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்.

வாத்தியார் மனைவி
செத்ததற்காக
விடுமுறை......
மகிழ்ச்சியில் குதித்த
மணிப்பயல் கேட்டான்:
" வருத்தமாயிருக்கு,
ஒரே ஒரு மனைவிதானா
அவருக்கு."

முகமூடி போட்டேன்
குழந்தைக்கு வேடிக்கை காட்ட;
முடியவில்லை அதற்குப்பின்
முகத்தைச் சும்மா நீட்ட

தாமரைத் தடாகம்
ஒற்றைக்கால் விருந்தினர்க்கு
பசியோ அபாரம்
இலைகள் விரிந்திருந்தும்
பரிமாறவில்லை யாரும்.

அழுக்கைத் தின்னும்
மீனைத் தின்னும்
கொக்கைத் தின்னும்
மனிதனைத் தின்னும்.....
பசி

karikaalan
25-05-2003, 06:15 AM
ஹைக்கூ பற்றி இவ்வளவு செய்திகள், எடுத்துக்காட்டுகள். இப்பதிவுகள் படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது. நன்றிகள் நண்பர் & இளவல்ஜி!

இதே போன்று தமிழ் இலக்கியத்தில் பாடல்களை/செய்யுள்களைப் பற்றியும் ஒரு தொடர் துவக்கலாமே!

===கரிகாலன்

Nanban
25-05-2003, 07:18 AM
Haiku is a Japanese form of poetry generally (but not always) consisting of 17 syllables, usually within three lines, with the first line containing five syllables, the second seven, and the third five again. Traditional haiku contain a kigo, a season word, and should form two contrasting parts, using a 'cutting word' or, in English, a hyphen or colon at the end of the first or second line to show the cutting. Your haiku should be in the form 5-7-5.

ஹைகூ என்பது ஜப்பானிய கவிதை வடிவம். பொதுவாக 17 பதங்கள் உடையது. எப்பொழுதுமே அல்ல. மூன்று வரிகளைக் கொண்டது. முதல் வரியில் ஐந்தும், இரண்டாவது வரியில் ஏழும், மூன்றாவது வரியில் ஐந்தும் என வரும். மரபு சார்ந்த ஹைகூவில், ஒரு பழம் வார்த்தை இடம் பெறும். Kigo எனப்படும் இந்த வார்த்தை. ஹைகூ இரண்டு மாறுபட்ட கருத்துகளை உடையது. இரண்டையும் இணைக்கும் பாலமாக ஒரு இணை வார்த்தை (cutting wordஐ எப்படி சொல்வது?) இருக்க வேண்டும். இரண்டு கருத்துகளைப் பிரித்துக் காட்டவும், ஒட்டவும் - அதுவும் ஒரே சமயத்தில். அல்லது ஒரு hyphen / colon இவற்றால் பிரிக்கப் பட்டிருக்க வேண்டும்.

நல்ல நல்ல பதிவுகள் கிடைத்திருக்கின்றன. இத்தனை நாட்களும் கண்ணில் படாது போயிற்று. என்றாலும் இப்பொழுதாவது காணக் கிடைத்ததே என்ற பொழுதில் மனம் மகிழ்கிறது.

பாரதி
25-05-2003, 10:00 AM
அருமை.. அருமை.. நன்றி நண்பர்களே.

rambal
25-05-2003, 12:27 PM
ஹைக்கு பற்றிய ஒரு அருமையான விளக்கம் பற்றி நண்பன் கொடுக்க..
அதற்கு இளசு அவர்கள் எங்கோ நடத்திய விவாதத்தை இங்கு முன் வைக்க..
கலைகட்டுகிறது இந்தப்பதிப்பு..
ஆனால்,
இப்படி ஹைக்கூவைத் தொக்கிக் கொண்டு நிற்பதைவிட
நம் தமிழ் இலக்கணத்தில் எத்தனையோ வகைகள் உண்டு...
அதை எழுத முயற்சிக்கலாம்.

ஒன்னே முக்கால் அடியில் இருப்பதெல்லாம் குறளும் அல்ல..
அவைகள் பதிணென் கீழ் கணக்கு நூல்களும் அல்ல..
ஆனால்,
புதிய சிந்தனை..
இதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும்..

அதே போல்தான் இதுவும்..

எழுதுவதெல்லாம் ஹைக்கூ அல்ல என்பதற்காக வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை..
(நண்பன் ஒரு இடத்தில் வருத்தப்பட்டிருக்கிறார்)
இது ஹைக்கூ அல்லாத ஆனால், அதே போன்று தோற்றமளிக்கும் ஏதோ ஒன்று..
வேண்டுமானால்,
இவற்றிற்கு
சிறகு என்று பெயர் வைத்து அழைக்கலாம்.

poo
25-05-2003, 04:47 PM
நண்பனின் கருத்துக்கு இளசு அண்ணனின் பதிவு சொல்கிறது பதிலை..

இலக்கண தடையென சண்டை வேண்டாமென ராமின் தீர்ப்பு முத்தாய்ப்பாய் "சிறகு" விரித்துள்ளது..

மொத்தத்தில் மிஞ்சுவது குழப்பமே.....

lavanya
25-05-2003, 11:45 PM
என்ன ஒரு ஆழமான பதிவு...

நண்பன் ஆரம்பித்து வைத்தார்..... எதிர்பார்ப்பு வந்தது
இளையவர் சுவைபட எடுத்துரைத்தார்..... ஆச்சர்யம் அப்பிக் கொண்டது
ராம்பால்ஜி,பூ ,அண்ணல் மற்றும் பாரதி முத்தாய்ப்பாய் பாராட்டி யோசனைகள் சொல்ல.....
அடடா மன்றம் வந்த தென்றல் கூட மதிமயங்கி நிற்கிறது...பாராட்டுக்கள் அனைவர்க்கும்

Nanban
28-05-2003, 04:50 PM
ஹைகூ எப்படி இருக்க வேண்டும்?

மகாகவி சுப்ரமண்ய பாரதி

ஹைகூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி. அவர் அக்டோ பர் 18, 1916 சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இது:

சமீபத்திலே மார்டன் ரிவ்யூ என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்ல்வது என்னவென்றால்,இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக்கவிதை சிரந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கை இல்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவின்மையாலும், பல சொற்களைச் சேர்த்து, வெறுமே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகிற வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. தம்முடைய மனதில் உள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன், எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவ்னே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மல்ர்களின் பேச்சு, இவற்றிலே ஈடுபட்டுப்போய் , இயற்கையுடன் ஒன்றாகி வாழ்பவனே கவி.

ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ஹொக்கு என்ற பாட்டு ஒரு தனிக் காவியமாக நிற்கும். முப்பதோரசையுள்ள உத்தா என்பதும் அங்கனமே. உயோநே நோகுச்சி தமது கருத்தை விளக்கும் பொருட்டுச் சில திருஷ்டாந்தங்கள் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் மிஸ் ரீஸ் என்பதோர் கவிராணியிருக்கிறார். வேண்டாததைத் தள்ளிவிடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து விளக்கம் என்ற இரண்டுமில்லாமல், முத்துப் போல பதங்கள் கோர்க்கும் நல்ல தொழிலாகிய அக் கவிராணி, இங்லீஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார்.

மழை

மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்

1.ஓ! வெண்மையுடையது மழை! இளையது. கூரை மேலே சொட்டுச் சொட்டென்று விழுகிறது. வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் ஓடி வருகின்றன. பூண்டுகளின் மணம், பழமியின் நினைவு, இவையெல்லாம் புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது, உடைந்த கண்ணாடித் துண்டு போல.

2.சிறிய வெளிக்கதவு புடைக்கிறது பார். அதுவரை செவந்த கொடிப் பூண்டுகள் நேர ஓடிச் செல்லுகின்றன.

3.ஓ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் நுழைகின்றன.கற்பூரச் செடியின் மணம், பழைய மகிழ்ச்சி, பழைய துன்பம், இளைய வெண்மழையிலே கிடைத்தன.

மேற்கூறிய பாட்டை எடுத்துக் காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்கிறார்:

வெண்மையுடையது மழை; இளையது என்ற முதலடியில் வியப்பில்லை. அதி சாமான்யமான வார்த்தை.கடைசி விருத்தம் வயிரம் போலிருக்கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக் கொண்டு மற்றதைத் தள்ளிவிடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப் போதும். சொற்கள், சொற்கள் சொற்கள், வெறும் சொற்கள் வளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்?



ஜப்பானிலே ப்தினெட்டாம் நூற்றாண்டில் பூஸோன் யோஸாஹோ என்ற ஜப்பானியக் கவிராயர் ஒரு ஹொக்கு ( பதினேழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழி பெயர்ப்பு:

பருவ மழையின் புழையொலி கேட்பீர் இங்கென்

கிழச் செவிகளே

இந்த வசனம் ஒரு தனிக்காவியம். பாட்டே இவ்வளவுதான்.

மேற்படி ஹொக்குப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மனனம் செய்ய வேண்டும்.படிப்பவனுடைய அனுபவத்திற்கேற்ப அதிலிருந்து நூறுவகையான மறைபொருள் தோன்றும். பலபலப் பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிரந்த கவிதையன்று. கேட்பவனுள்ளத்திலே கவிதை உணர்வை எழுப்பிவிடுவது சிறந்த கவிதை.

மற்றுமொரு நேர்த்தியான ஹொக்குப் பாட்டு, வாஷோ மத்ஸுவோ என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார்.அவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம். ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடித்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்று ரியே, அதாவது ஏறக்குறைய முப்பது வராகன், காணிக்கையாகக் கொடுத்தான்.இவர் ஒரு நாளூமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தம்க்குத் தொல்லையாதலால், வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம்..

இவருக்குக் காகா என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணவர் இருந்தார். இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர், தமது குருவாகிய வாஷோ மத்ஸுவோ என்பவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்:



தீப்பட்டெரிந்தது;

வீழும் மலரின் அமைதி என்னே!

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் போது எத்தனை அமைதியோடியிருக்கிறதோ அத்தனை அமைதியோடு வரும் துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதி இழந்து போகவில்லை என விஷய்த்தை ஹோகூஷி இந்தப்பாடின் வழியாகத் தெரிவித்தார்.

"சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயர் கவிதை இதற்கு நேர்மாறாக இருக்கிறதென்றும் சொல்கிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'. கிழக்குத் திசையின் கவிதையில் இவ்விதமான ரசம் அதிகந்தான். தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும் கவிதை ஒரேடியாகச் சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் ஹொக்குப் பாட்டன்று.நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு..

(திசைகள் இதழில் வெளிவந்தது. விவாதிக்கும் நம் தலைப்புக்கும் பொருந்துவதாய் இருப்பதால், உங்கள் பார்வைக்கு இறக்கி வைத்தேன். பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்..........)

rambal
28-05-2003, 06:33 PM
நீங்கள் (இவர்கள்) சொல்லி உள்ளது போல் சொன்னால், கவிதைகளே அல்ல.. வெறும் வாக்கியங்கள்.
பொருள் பொதிந்த வாக்கியங்கள். (statements).. இது ஆரம்பம்தான்..
மற்றபடி, ஒரு நீண்ட விவாதத்துடன் நாளை வருகிறேன்..

rambal
29-05-2003, 11:02 AM
உலக வாழ்க்கையை மிகச் சுருக்கமாக சொல்லவேண்டும்
என்று ஒரு மன்னன் கேட்டானாம். இறுதியாக, ஒருவர் மட்டும் மிகச் சுருக்கமாக சொன்னான்.
அது,
பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள்..

ஹைக்கூ இலக்கணம், ஹைக்கூ கவிதைகள்.. எல்லாம் சரி..
ஆனால், ஜப்பானிய வடிவம் என்பதற்காக எதிர்க்கவில்லை..
குறள் உள்ளூர் வடிவம் என்பதற்காக ஆதரிக்கவும் இல்லை..

அந்தந்த கால கட்டத்தில் அவரவர் வாழ்ந்த சூழ்நிலை, சமூகவியல் அமைப்பு..
இதற்குத் தக்கவாறு இலக்கியம் உருமாறுகிறது..

1916ல் பாரதி இதை எடுத்துக் கூறி இருப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?
அவனது பன்மொழிப் புலமையைக் காட்ட.. இங்கிருப்பவர்களை விட வித்யாசப்படுத்த..
முதல் புதுக்கவிதையை எழுதியதும் பாரதிதானே..
ஏன்?
இலக்கணங்களை உடைத்து புதுப்பாணி காண.. மற்றவர்களை விட தன்னை வேறுபடுத்திக் காட்ட..

இன்றைய கால கட்டத்திற்கும் ஹைக்கூ ஒத்துவரும்..
ஏனெனில், அவசர உலகத்தில் அத்தனையையும் உட்கார்ந்து படிக்க யாருக்கும் பொறுமை இல்லை என்பதால்..

ஹைக்கூ என்பதும் ஒரு வடிவம்.
நிலைமண்டில ஆசிரியப்பா என்றும் ஒரு வடிவம்.

இன்றைய சூழ்நிலையில் வடிவங்களைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை..
சொல்ல வந்ததை எத்தனை தூரம் அழுத்தமாக சொல்லி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்..

கருத்துக்கள் என்பது ஆன்மா மாதிரி..
அந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் வார்த்தைகள் என்பது உடல் மாதிரி..
இந்த வார்த்தைகளை உவமைகளாகவோ, உருவகமாகவோ, அல்லது குறியீடுகள் அணிவித்தோ
வெளிப்படுத்தினால் அவைகள் உடலுக்கு போட்ட சட்டை மாதிரி..

இதில் எந்தச் சட்டை கன கச்சிதமாக இருக்கிறது? எந்த சட்டை எந்த ஆத்மாவிற்குப் பொருந்துகிறது?
என்பதெல்லாம் தையல்காரராக இருக்கும் கவிஞர்களைப் பொறுத்தது.
வாசகனுக்கு இலக்கணம் தேவை இல்லை..
ஆனால், படைப்பவனுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கவேண்டும்.
அப்படி தெரியும் இலக்கணங்களை மீறவும் தெரிந்திருக்க வேண்டும்..

Nanban
29-05-2003, 01:47 PM
ஆனால், படைப்பவனுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கவேண்டும்.
அப்படி தெரியும் இலக்கணங்களை மீறவும் தெரிந்திருக்க வேண்டும்..

இதைத் தான் நானும் கூற விழைந்தேன் - இலக்கணங்களை மீறி படையுங்கள் - அந்த படைப்பு வடிவத்திற்கு புதுப் பெயரும் சூட்டுங்கள் என்று....

அருள்மொழி வர்மன்
05-06-2003, 08:58 PM
அறிவில், குணத்தில் முதிர்ந்து, மனதால் இளையவருக்கும், மற்ற கற்றறிந்த அன்பர்களுக்கும் (குறிப்பாக நண்பன், ராம்பால்), இவ்விசயங்களை சிறப்பாக தொகுத்தமைக்கும், ஹைக்கூ பற்றிய பல அரிய செய்திகளை தந்தமைக்கும் நன்றி.. இந்தளத்தின் புண்ணியத்தால் அறிவை சற்று வளர்த்துக்கொள்கிறேன்!

அன்புடன்,
அ.வ.

Nanban
07-06-2003, 08:13 PM
ஹைக்கூக்கு உரியது மூன்று இலக்கணங்கள்

1. நேரடி அனுபவம்
2. உவமை,உருவகம் கூடாது
3. மூன்றே வரி ..மூன்றாவது வரியில் ஒரு திருப்பம்

( நன்றி : சுஜாதா (கற்றதும் - பெற்றதும்))

மாதிரிக்கு சில

1. செவிடன் இறந்த
போதும் தலைமாட்டில்
ஒப்பாரி.....

2. மண்ணெண்ணெய் விளக்கில்
மாணவன் படித்தான்
கம்ப்யூட்டர் சயின்ஸ்

(லாவண்யாவின் பதிவு. வேறொரு பக்கத்தில் இருந்து............. இந்த தலைப்புக்கு அவசியமான விளக்கங்கள் என்பதால் இங்கேயும் கொண்டுவந்து விட்டேன். ஹைகூவைப் பற்றிய அனைத்து கருத்துகளும் ஓரிடத்திலே கிடைக்கப் பட வேண்டும் என்ற ஆவலில்............. லாவண்யாவிற்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையில்..........)

lavanya
07-06-2003, 10:45 PM
(லாவண்யாவின் பதிவு. வேறொரு பக்கத்தில் இருந்து............. இந்த தலைப்புக்கு அவசியமான விளக்கங்கள் என்பதால் இங்கேயும் கொண்டுவந்து விட்டேன். ஹைகூவைப் பற்றிய அனைத்து கருத்துகளும் ஓரிடத்திலே கிடைக்கப் பட வேண்டும் என்ற ஆவலில்............. லாவண்யாவிற்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையில்..........)

நன்றி நண்பரே... எல்லோர்க்கும் பயன்பட்டால் எது செய்தாலும் சரிதான்...
இதில் ஆட்சேபிக்க என்ன இருக்கிறது?

cidruvan
09-06-2003, 06:16 PM
ஆராச்சும் உட்காந்து, எல்லாத்தையும் கத்திரிச்சு, ஒட்டி, நகாசு வேல பண்ணி, சுர்க்கமா ஒரு பத்திவு போட்டிடலாம். நீளம்மா வாசிக்கனும்னா உள்ள போட்டும். இல்லன்னா, சாராம்சம் மட்டும் ப்டிச்சு தெரின்சுக்கட்டுமே? நேரம் - மிச்ச்மாகுமேன்னு தான்? browsing பன்றவங்களுக்கு, இத்ன நீளமா பார்த்தா, பயப்பட மாட்டார்களாஆ?

Nanban
10-06-2003, 06:50 PM
உண்மைதான்........ ஆனால், தன்னுடைய சொந்த post அல்லாத, வேறு எவர் பதிப்பையும் edit செய்ய இயலாது. எல்லாவற்றையும் print செய்து, பிறகு சுருக்கி, type செய்தாலும் அது இறுதியில் தான் வரும். ஆரம்பத்தில் அல்ல. தள நிர்வாகிகளோ, கண்காணிப்பாளர்களோ ஏதாவது செய்தால் தான் உண்டு. நம் கையில் எதுவும் இல்லை.........

Nanban
23-12-2003, 02:51 PM
ஹைக்கூ ஓர் அலசல்
- மரவண்டு

ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ
கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன

ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய
மண்ணில் தான்.

1. ஹைக்கூவின் தோற்றம்

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ்,
மற்றொன்று ப்ரெஞ்ச்.

தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம்,
கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள்.

ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு
பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த
அடிகள் 5,7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7,7 என்ற அசை
அமைப்பிலும் இருந்தது சோக்கா கவிதை. சோக்கா கவிதைக்கு வரி வரம்பு எதுவும்
கிடையாது. மக்கள் இந்தக் கவிதையை விரும்பி ரசிக்கவில்லை.

பிரிவு 2 : ஹயன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற நீண்ட கவிதை தன்கா என்ற 5 வரிப் பாடலாக
சுருங்கியுள்ளது. 5,7,57,7 என்ற அசை அமைப்பில் அமைந்த ஐந்து வரிப் பாடலே
தன்கா கவிதை.

பிரிவு 3 : காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)

இக்காலத்தில் ஜாக்கின்சூ என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்திருக்கிறது
கடுமையான இலக்கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே போதைய
வரவேற்பைப் பெறவில்லை.

பிரிவு 4 : நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)

இக்காலத்தில் "நோஹ" என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள்
வெளிவந்தன.

பிரிவு 5 : எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)

இக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை
தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.

பிரிவு 6 : டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)

ஹைக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு ப்ரெஞ்ச், ஆங்கிலம் என கொடிகட்டிப்
பறந்து தமிழுக்கும் வந்துவிட்டது.

2. ஹைக்கூ பெயர்க் காரணம்

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு
ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி
போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.

தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா,
மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக
அழைக்கப்படுகிறது.

தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான
விளக்கம் அளித்திருகிறார்.

ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது !)

ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி,
கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை
உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை.

தமிழக பெண் கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று
பொருள் தருகிறார்.

3. ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்
7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்
கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில்
ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று
எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும்
பொருந்தி வரும் விதி!)

ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை
பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத்
தூற எறிந்து விட்டார்கள்.

தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த
ஹைக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார் (காற்றின் கைகள்)

4. ஹைக்கூ கவிதையின் வளர்ச்சி

புத்த மதத்தின் கிளைப் பிரிவான ஜென் தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல
ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது.

ஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553)
ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி என்றழைக்கப் படுகிறார்கள்.
உதிர்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதோ ? / வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)
நிலவிற்கு ஒரு / கைப்பிடி வைத்தால் / எத்துனை அழகான கைவிசிறி (சோகன்)

ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து ஹைக்கூ நால்வர்கள் தோன்றினார்கள்

1. மட்சுவோ பாஸோ (1465-1553)
2. யோசா பூசன் (1716-1784)
3. இஸ்ஸா (1763-1827)
4. சிகி (1867-1902)

இவர்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் (பாகம்- 2) விரிவாகக் காண்போம்...

கொசுறுச் செய்தி :

ஜப்பானியர்கள் பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணிற்கு ஆடத் தெரியுமா?
பாடத் தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்களாம்..
"பொண்ணுக்கு ஹைக்கூ எழுத வருமா? அப்படின்னுதான் கேப்பாங்களாம்!

நன்றி:http://www.tamiloviam.com/html/Kavioviam48.Asp

ஆர்வமுள்ள தோழர்கள் முடிந்தால்
நேரடியாக தமிழோவியம் வலைதளத்தில் வாசிக்கவும்.
இக்கட்டுரையில் உள்ள செய்திமட்டுமே
அய்க்கூவுக்கான முழுவிவரம் அல்ல. தீர்வும் அல்ல.

அய்க்கூ வலைதளங்களை ( ஆங்கிலத்தில் ) படிக்க
http://groups.yahoo.com/group/thulippaa/links
_________________
தூயநேயன்
இ.இசாக்
______________________
வருமானம் போனாலும்
தமிழ் மானம் போகக்கூடாது!
-இலட்சியக்கவி அறிவுமதி

--------------

இளசு
24-12-2003, 01:13 AM
நன்றி நண்பன்.
அந்தச் சரடைப் பூட்டிவிடுகிறேன்.

Nanban
24-12-2003, 09:50 AM
நன்றி நண்பன்.
அந்தச் சரடைப் பூட்டிவிடுகிறேன்.

பொதுவாகவே, இப்பொழுதெல்லாம், ஒரே தலைப்பில் நிறைய தனித்தனிப் பதிவுகள் ஆரம்பித்து விடுகின்றனர்........

முதல் வருடம் முடிந்ததும், சிலவற்றை தொகுத்து ஒரு archieve மாதிரி செய்து விட்டால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன்......

இளசு
14-04-2004, 11:14 PM
வாமன வடிவம்
விஸ்வருப விதிகள்
ஹைக்கூ..

kavitha
30-04-2004, 09:20 AM
வாமன வடிவம்
விஸ்வருப விதிகள்
ஹைக்கூ..
_________________


இளசு

நம்ம ஊர் பாஷையில் சொன்னால் திருநெல்வேலிக்கே அல்வா!
ஹைக்கூவிற்கே ஹைக்கூ!

( கவிதா, உனக்கு இனி குறும்பா எழுத வருமா? :( )

kavitha
30-04-2004, 09:46 AM
" வருத்தமாயிருக்கு,
ஒரே ஒரு மனைவிதானா
அவருக்கு."

முகமூடி போட்டேன்
குழந்தைக்கு வேடிக்கை காட்ட;
முடியவில்லை அதற்குப்பின்
முகத்தைச் சும்மா நீட்ட




1. முன்னது பிள்ளை குறும்பு
2. பின்னது பிள்ளைக்கு குறும்பு

மிக மிக ரசிக்கவைக்கிறது மீராவின் குக்கூ
இளசு அண்ணா... எங்கே இருந்து இப்படி திரட்டுகிறீர்கள்?!!

kavitha
30-04-2004, 09:50 AM
கணவன் - மனைவி சண்டை
அமைதியாக முடிந்தது
பாத்திரங்கள் பேசிக் கொண்டன...

உறவுகள் பேசாத நேரத்தில்
பாத்திரங்கள் பேசிக்கொள்ளும்
பாத்திரங்கள் பேசாத நாட்களில்
வயிறுகள் பேசிக்கொள்ளும்!!
நல்ல ஒரு காட்சிப்பா லாவ்!

kavitha
30-04-2004, 10:00 AM
இவற்றிற்கு
சிறகு என்று பெயர் வைத்து அழைக்கலாம்.

ராம்பால் அவர்களின் குறியீடு ஏற்புடையதே!
ஹைக்கூ: சிறகு

நடனமாடும் மயிலின் தோற்றம் முழுமை!
என்றாலும் ஒற்றைச்சிறகு சொல்லாமல்
போவதில்லை அதன் அருமை!

kavitha
30-04-2004, 10:29 AM
சிரத்தையுடன் தொகுத்தளித்த நண்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!!

விதை என்பதால் அதன் விருட்சம் சிறியதில்லை!
அகலம் என்பதால் ஆற்றின் தெளிவு வேறெதிலுமில்லை!!

Nanban
30-04-2004, 04:57 PM
தொகுத்தவற்றை நாள்பட்டாலும், சிரத்தையாக வாசித்து, கருத்துக் குவியல்களை அள்ளித் தெளிக்கும் கவிதாவிற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்....

ஹைக்கூ எழுதிப் பழகினாலே, நல்ல ந்டை வந்து விடும் - ஏனென்றால், அதன் விதி அப்படி - மூன்று வரிகளுக்குள் சொல்லி விடு என்பதனால், பல வேண்டாத வார்த்தைகளை வெட்டி எறிந்து விட்டு, கருத்துகளைக் காட்சியாக வைத்துத் தர வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எழுதும் கவிதைகளில், மூன்றில் ஒரு பங்கை, ஹைக்கூவாக வைத்துக் கொண்டால் நலம். பின்னர் அவற்றை விரித்து, அழகூட்டி, செம்மையான கவிதையாக்கி விடலாம்....

kavitha
04-05-2004, 05:06 AM
இது ஹைக்கூ இலக்கணத்தில் பொருந்துகிறதா என்று தெரியவில்லை!
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...

தோல்வி

மலரின் மீது
மடிந்த வண்டு
பிளாஸ்டிக் ரோஜா!

மன்மதன்
11-03-2007, 12:40 PM
ஹைக்கூ பிரியர்களுக்கான பதிவு..
(பென்ஸ்க்கு நன்றி..)

இளசு
11-03-2007, 03:49 PM
சட்டென யூனிகோடாக்கி பதித்த
மன்மதன், பென்ஸூக்கு பாராட்டுகள் + நன்றிகள்!

leomohan
11-03-2007, 05:25 PM
வாமன வடிவம்
விஸ்வருப விதிகள்
ஹைக்கூ..

ஆஹா விமர்சனத்திலும் ஹைக்கூவா. இளசுக்கு ஸலாம்.

இளசு
12-03-2007, 07:07 AM
நன்றி மோகன், கவீ,,


-------------------------


...

தோல்வி

மலரின் மீது
மடிந்த வண்டு
பிளாஸ்டிக் ரோஜா!

அருமை கவீ..

ஹைக்கூ இலக்கணத்துக்குப் பொருந்துகிறதா என்பதை அப்புறம்
பார்த்துக்கொள்ளலாம்.

மலர் = மென்மை..
ஒரே ஒரு மலரிதழ் கூட அந்த மென்மையின் நிலையான குறியீடு.

மரக் கட்டில் மீதோ, பித்தளைத் தாம்பாளம் மீதோ
ஓர் ஓரத்தில் ஒரே ஒரு மலரிதழை வைத்துப் பாருங்கள்.
வைத்த இடத்தின் வன்மை மாறி, மென்மை தெரியும்...

வண்ணம் இன்றி வாசம் இன்றி
வடிவம் மற்றும் மென்மை நினைவைத் தர
வந்து மோதிய வண்டு... மாண்டு போனது!

பல எண்ண அலைகளை எழுப்பும்
சின்ன கவிதைக்குப் பாராட்டுகள்!

மனோஜ்
12-03-2007, 07:39 AM
எங்கப்பா ஹைக்கூ பத்தி ஒரு வறலாறு படைக்கப்பட்டுள்ளது அருமை