PDA

View Full Version : உன் பிரிவு



இனியவள்
06-07-2007, 03:36 PM
இனிமை தந்த இரவு
இன்று வேதனயாக

கனவு தந்த தூக்கம்
இன்று தூக்கம் கலைக்கின்றது

உன் காட்சியே கோலமாய்
இருந்த கண்கள் இன்று
கண்ணீர் கோலமாய்

தென்றலாய் இருந்த என்
மனம் அன்று உன்னை
மணக்கோலம் கண்ட முதலாய்
புயலாய்

உன் திசையை நோக்கி
பயணித்த என் கால்கள்
இன்று மரணத்தை நோக்கி

rajaji
06-07-2007, 03:42 PM
அழகான கவிதை. சோகமான கவிதைகள் என்றுமே ஆழமானவை. பாராட்டுக்கள்.

அமரன்
06-07-2007, 07:18 PM
நல்ல கவிதை இனியவள். கருவில் எனக்கு உடன் பாடில்லை.காதல் வலியின் முடிவு தற்கொலை என்கின்றீர்களா?

இனியவள்
06-07-2007, 07:30 PM
நல்ல கவிதை இனியவள். கருவில் எனக்கு உடன் பாடில்லை.காதல் வலியின் முடிவு தற்கொலை என்கின்றீர்களா?

நன்றி அமர்

காதல் வலியின் முடிவு
தற்கொலையல்ல அதில்
எனக்கும் உடன்பாடில்லை

ஆனால் அவனை மறக்க
முடியாது தவிக்கும் மனம்
மரணத்தை நாடுகின்றது
அறிவு தடுக்கின்றது

என்றும் பொருள் படும்

அமரன்
06-07-2007, 07:38 PM
பக்கத்தில் நீ இருக்க
மரணம் கூட
சாதரணமானது.

பிரிந்து சென்றதும்
சாதா ரணம்கூட
மரணாமாகிறது.

இனியவள்
06-07-2007, 07:40 PM
பக்கத்தில் நீ இருக்க
மரணம் கூட
சாதரணமானது.

பிரிந்து சென்றதும்
சாதா ரணம்கூட
மரணாமாகிறது.

நீ என்னருகில்
இருக்கும் போது
ஓடி ஒளிந்த மரணம்
நீ என்னை விட்டு
சென்றதும் இரு
கரம் நீட்டி அழைக்கின்றது

ஷீ-நிசி
07-07-2007, 02:36 AM
காதலியைப் பிரிந்த காதலனின் வலி நிறைந்த வார்த்தைகள்......

இந்த கவிதையின் சாயலில் என்றோ நான் ஒன்று எழுதியது... உன் திருமணம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=168775&postcount=365)

இனியவள்
07-07-2007, 07:39 AM
அழகான கவிதை. சோகமான கவிதைகள் என்றுமே ஆழமானவை. பாராட்டுக்கள்.

நன்றி ராஜா ஜீ