PDA

View Full Version : இதை முயன்று பாருங்கள்



shivasevagan
06-07-2007, 08:00 AM
MS WORD இல் Q33NY என்று டைப் செய்து Wingdings fontக்கு அதை மாற்றி பாருங்கள் ஒரு அதிசயம் உள்ளது.

namsec
06-07-2007, 08:21 AM
பார்த்திவிட்டேன் ஆனால் சரியாக விளங்கவில்லை சற்று தெளிவுபடுத்துங்கள். ஐயா

shivasevagan
06-07-2007, 08:35 AM
Q33NY அமெரிக்கா இரட்டை கோபுரத்தின் மீது தாக்கிய விமானத்தின் எண்.

அதை wingdings fontக்கு மாற்றும் போது ஒரு விமானம் இரண்டு கோபுரம் மீது மோதுவது போலத் தெரியும். மேலும் அபாய முத்திரையான மண்டை ஓடு முத்திரையும், கிறிஸ்தவர்களை எதிர்த்து இந்த தாக்குதல் நடைபெற்றதால் அவர்களது புனித சின்னமான நட்சத்திரமும் தெரியும்.



இதுதான் அதிசயம்.

namsec
06-07-2007, 08:43 AM
விளக்கியமைக்கு நன்றி

leomohan
06-07-2007, 10:35 AM
சுவாரஸ்யமான தகவல். வியத்தகு வகையில் யோசிக்கிறார்கள் இந்த தீவிரவாதிகள்.

mgandhi
06-07-2007, 06:14 PM
தகவலுக்கி நன்றி

aren
06-07-2007, 06:35 PM
எப்படியெல்லாம் மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இப்பொழுது.

shivasevagan
07-07-2007, 04:15 AM
எப்படியெல்லாம் மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் இப்பொழுது.

ஆமாம் ஐயா! ஓசாமா பின் லேடன் கூட இப்படி யோசித்திருக்க மாட்டார்!

அன்புரசிகன்
07-07-2007, 06:48 AM
சுவாரசியமாக உள்ளது. பாவம் பில்கேட்ஸ்... அவர் கூட அறிந்திருக்கமாட்டாரர்

ஷீ-நிசி
07-07-2007, 07:14 AM
Q33NY அமெரிக்கா இரட்டை கோபுரத்தின் மீது தாக்கிய விமானத்தின் எண்.

அதை wingdings fontக்கு மாற்றும் போது ஒரு விமானம் இரண்டு கோபுரம் மீது மோதுவது போலத் தெரியும். மேலும் அபாய முத்திரையான மண்டை ஓடு முத்திரையும், கிறிஸ்தவர்களை எதிர்த்து இந்த தாக்குதல் நடைபெற்றதால் அவர்களது புனித சின்னமான நட்சத்திரமும் தெரியும்.



இதுதான் அதிசயம்.

இது ஏற்கெனவே வந்த செய்திதான்... ஆனால் Q33NY இதில் நான் இன்னொன்று கேள்விபட்டேன்.. அந்த விமானத்தின் எண் இது என்று Q33NY.. உண்மையா என்று தெரியவில்லை.

lolluvathiyar
07-07-2007, 07:17 AM
கிறிஸ்தவர்களை எதிர்த்து இந்த தாக்குதல் நடைபெற்றதால் அவர்களது புனித சின்னமான நட்சத்திரமும் தெரியும்.

வித்தியாசமான சிந்தனை, பாராட்டுகள் சிவசேவகரே, இதை பார்த்தவுடன் உங்கள் விளக்கத்தை படிக்கும் முன்னமே நான் கண்டுபிடித்து விட்டேன். ஆனால் கடைசி சிம்பளை எனக்கு கிருஸ்த்துவ சின்னம் என்று தெரியாது. ஆனால் அது அனு ஆயுதத்தின் சின்னம். விமானம் மோதி அபாயம் வரும் போது அனுஆயுதம் பயனற்று நின்றது என்று நினைத்து கொண்டேன்

இதயம்
07-07-2007, 07:38 AM
இது இரட்டைக்கோபுரங்கள் தாக்கப்பட்ட மோசமான நிகழ்வுக்கு பிறகு இணைய தளங்களிலும், மின்னஞ்சல்களிலும் மிகப்பிரபலமாக உலா வந்த ஒரு செய்தி. ஆனால், இதில் அந்த குறிப்பிட்ட எழுத்துக்களை வேறு எழுத்துருவிற்கு மாற்றும் போது விமானத்தின் உருவமும், இரட்டைக்கோபுரங்கள் உருவமும் (அவை உண்மையில் காகித பக்கங்கள்), மண்டை ஓடும், நட்சத்திரமும் வருபவை எதார்த்தம் அல்ல. அதில் எந்த உள்செய்தியோ, அமானுஷ்யமோ இல்லை. காரணம், Q33NY என்பது தாக்கிய விமானத்தின் எண் அல்ல. இப்படி ஒரு எண்ணை உருவாக்கும் முன்பே windings எழுத்துருவில் உள்ள உருவங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி, அந்த எண்களை விமானத்தின் எண்களாக்கிய சிலர் வேலை. அந்த தாக்குதலை பிரபலப்படுத்தவும், இணைய உலகத்தில் வியப்பை ஏற்படுத்தவும் செய்த யுக்தி இது. அதனால் தான் அந்த தாக்குதல் நடந்து நீண்ட காலமாகி அதை மறந்து விட்ட நாம், இன்று இதை மறக்காமல் இதன் மூலம் தாக்குதலை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த வதந்தியை அடிப்படையாக கொண்ட பதிவிற்கும், கணிணி பற்றிய சந்தேகம், விவாதம் போன்ற பயனுள்ள விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற பதிவை இங்கு இட வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

குறிப்பு: நட்சத்திரத்திற்கும் கிறிஸ்துவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த குறிப்பிட்ட நட்சத்திரம் இஸ்ரேல் நாட்டு கொடியில் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம். வாத்தியார் சொன்னது போல் அழிவை உண்டாக்கும் அணுஆயுதத்தை குறிக்க இந்த குறியை பயன்படுத்துவதும் உண்டு. என்னைப்பொறுத்தவரை தன் பயங்கரவாதத்தால் அமெரிக்காவின் துணையோடு மனிதப்பேரழிவை செய்து வரும் இஸ்ரேல் தன் கொடியில் இந்த சின்னத்தை வைத்துக்கொண்டது மிகப்பொருத்தம். அதைத்தான் தன் கொடியின் மூலம் உலகுக்கு இஸ்ரேல் உணர்த்தும் செய்தி என்றும் நம்புகிறேன்.

shivasevagan
08-07-2007, 07:50 AM
இரட்டை கோபுரத்தில் மோதிய இரண்டு விமான எண்கள்

Q33NY AND Q11NY

NY என்பது NewYorkஐக் குறிப்பது.

இது உண்மையே.

இதயம்
08-07-2007, 08:49 AM
இரட்டை கோபுரத்தில் மோதிய இரண்டு விமான எண்கள் Q33NY AND Q11NY

NY என்பது NewYorkஐக் குறிப்பது. இது உண்மையே.

நீங்கள் சொன்ன படியே Q33NY என்ற எண்ணை தாக்குதலோடு தொடர்பு படுத்தும் நீங்கள் மற்ற எண்ணான Q11NY-ஐ தொடர்பு படுத்தாதது ஏன்.?

விமானத்தின் படம் சரி..! அந்த காகித பக்கங்கள் கூட இரட்டை கோபுரங்கள் சரி..! நட்சத்திரம் எங்கிருந்து வந்தது.? அதற்கும் இந்த தாக்குதலுக்கும் என்ன தொடர்பு..? கிறிஸ்துவர்களுக்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் எந்த வகையில் என்று சொல்லுங்கள்.!!

உண்மையே என்று சொன்ன நீங்கள் அதற்கான ஆதாரம் தரவில்லை. எந்த அடிப்படையில் இதை உண்மை என்கிறீர்கள் என்ற விளக்கமும் இல்லை. நாம் விவாதிக்க பல பயனுள்ள விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இது போன்ற வீண் விஷயங்களில் நம் நேரத்தை வீணாக்குவதில் பயனில்லை என்பது என் கருத்து.

shivasevagan
08-07-2007, 12:33 PM
நண்பரே! இது விவாதத்திற்கான இடம் இல்லை.

கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் அன்று நட்சத்திரம் தொங்கவிட்டு பார்த்தில்லை போல!!!

சரி அதை விடலாம்.

இதை முயன்று பாருங்கள்


1.go to google (www.google.com இணைய தளத்திற்கு செல்லுங்கள்)
2.click on images (இமேஜ் என்ற பட்டனை அழுத்துங்கள்)
3.search for shiva (shiva என்று தேடுங்கள்)
4.then paste and enter this in the address bar n c what happens:
(கீழே உள்ள கோடிங்கை www.google.com என்று அடித்த இடத்தில் போட்டு enter பட்டணை அழுத்துங்கள்)

javascript:R= 0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= 'absolute' ; DIS.left=Math. sin(R*x1+ i*x2+x3)* x4+x5; DIS.top=Math. cos(R*y1+ i*y2+y3)* y4+y5}R++ }setInterval( 'A()',5); void(0)


இது எப்படி இருக்கு?

அன்புரசிகன்
08-07-2007, 12:42 PM
படங்கள் அனைத்தும் ஓடித்திரியும் என நினைக்கிறேன்...

shivasevagan
08-07-2007, 12:47 PM
ஆம் நண்பரே!

இதயம்
08-07-2007, 12:54 PM
1.go to google (www.google.com இணைய தளத்திற்கு செல்லுங்கள்)
2.click on images (இமேஜ் என்ற பட்டனை அழுத்துங்கள்)
3.search for shiva (shiva என்று தேடுங்கள்)
4.then paste and enter this in the address bar n c what happens:
(கீழே உள்ள கோடிங்கை www.google.com என்று அடித்த இடத்தில் போட்டு enter பட்டணை அழுத்துங்கள்)

javascript:R= 0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= 'absolute' ; DIS.left=Math. sin(R*x1+ i*x2+x3)* x4+x5; DIS.top=Math. cos(R*y1+ i*y2+y3)* y4+y5}R++ }setInterval( 'A()',5); void(0)


இது எப்படி இருக்கு?
ஐயா சிவசேவகனாரே..! நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை..!! காரணம், நீங்கள் விஞ்ஞானத்தையும், வதந்தியையும் ஒப்பிடுகிறீர்கள். வதந்தியை உண்மை என்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட படி செய்தால் வரும் புகைப்படங்களின் அசையும் ஜாலம் java script-ஐ கொண்டு செய்யப்படும் கணிணி ஜாலம். அது எப்படி செய்வது, எப்படி அது உண்டாகிறது என்று என்னால் நிரூபிக்க முடியும்.

ஆனால், நீங்கள் குறிப்பிட்ட விமான தாக்குதல் தொடர்பான விவரங்கள் எல்லாம் கப்ஸா..! வெறும் வதந்தியாக கிளப்பிவிடப்பட்டவை. எல்லாம் கிடைக்கும் இணையத்தில் அந்த விமான எண்கள் உண்மையானவை என்ற ஆதாரம் உங்களுக்கு கிடைக்கவில்லையா..?




நண்பரே! இது விவாதத்திற்கான இடம் இல்லை.


விவாதத்திற்கான பகுதியில் உங்கள் பதிவை இட்டுவிட்டு இது விவாதத்திற்கான இடமில்லை என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. அதுவும் சம்பந்தமே இல்லாமல் கணிணி பற்றிய பகுதியில்..!! ஏன் இந்த முரண்பாடு..?!!

shivasevagan
08-07-2007, 01:06 PM
நண்பர்களே! கணினியில் solitaire என்று ஒரு விளையாட்டு இருக்கும் பார்த்திருக்கிறீகளா? அதை விளையாடி வெற்றி பெற்றால் எல்லா சீட்டுக் கட்டுகளும் பறந்து வரும். இந்த விளையாட்டு மிகவும் கடினமானது வெற்றி பெற்றவர்க்கே இந்த முடிவு தெரியும். நீங்கள் எளிதில் வெற்றி பெற, அந்த விளையாட்டை திறந்து கொண்டு

Alt + Shift + 2. என்று அழுத்துங்கள் . பிறகு பாருங்கள் மாயா ஜாலத்தை. இது Windows XP மட்டுமே இவ்வாறு நடக்கும்.

இதயம்
08-07-2007, 01:19 PM
ஜாவா ஸ்க்ரிப்ட் மாயாஜாலங்களில் இன்னொன்று. கீழே உள்ள ஸ்க்ரிப்டை வெட்டி, அட்ரஸ் பாரில் ஒட்டி என்டர் கொடுங்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்கள்..!

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0

aren
08-07-2007, 01:19 PM
நண்பர்களே! கணினியில் solitaire என்று ஒரு விளையாட்டு இருக்கும் பார்த்திருக்கிறீகளா? அதை விளையாடி வெற்றி பெற்றால் எல்லா சீட்டுக் கட்டுகளும் பறந்து வரும். இந்த விளையாட்டு மிகவும் கடினமானது வெற்றி பெற்றவர்க்கே இந்த முடிவு தெரியும். நீங்கள் எளிதில் வெற்றி பெற, அந்த விளையாட்டை திறந்து கொண்டு

Alt + Shift + 2. என்று அழுத்துங்கள் . பிறகு பாருங்கள் மாயா ஜாலத்தை. இது Windows XP மட்டுமே இவ்வாறு நடக்கும்.

மகத்தான வெற்றிபெற்ற நினைப்பு வருகிறது.

shivasevagan
08-07-2007, 01:27 PM
யாரையாவது போட்டிக்குக் கூப்பிட்டு விட்டு சத்தமில்லாமல் இதை உபயோகித்தால் உடனே வெற்றி தான்.

அன்புரசிகன்
08-07-2007, 07:59 PM
உங்கள் கணிணியில் new folder ஒன்றை திறவுங்கள் அதைனை con என rename செய்துபாருங்கள்... முடிந்ததா?

shivasevagan
09-07-2007, 03:58 AM
முடியவில்லை நண்பரே!

ஒரு வேலை con என்பது system folder ஆக இருக்குமோ?

namsec
09-07-2007, 04:19 AM
என்ன வித்தைகாமிக்கிரீர்கள்

அன்புரசிகன்
09-07-2007, 05:08 AM
வித்தை எல்லாம் அல்ல. இவ்வாறான கலைச்சொற்கள் pre-defined functions of Windows OS. con மட்டுமல்ல... சில உள்ளன. இன்னும் சில உ+ம் : com1, com2, lpt1... இவ்வாறு சில கலைச்சொற்களில் உள்ளவை உங்கள் system ல் பிரச்சனையை உண்டுபண்ணலாம் என்பதால் அவர்கள் தடுத்துள்ளனர். ஆனால் DOS mode ல் இந்த பெயர்களில் நீங்கள் folder களை உருவாக்கவும் முடியும். மாற்றவும் முடியும்.

shivasevagan
09-07-2007, 07:53 AM
தகவலுக்கு நன்றி அன்புரசிகன் அவர்களே!

அரசன்
09-07-2007, 12:37 PM
பார்த்தேன் வியந்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. இதெல்லாம் எப்படி கண்டுக்கொண்டீர்கள் சிவா.

shivasevagan
09-07-2007, 03:23 PM
நன்றி நண்பரே!

maxman
09-07-2007, 03:27 PM
நன்றிகள் சிவா மற்றும் அன்புரசிகன் :)

அக்னி
09-07-2007, 03:39 PM
எனக்கு உண்மையிலேயே மஜிக் காட்டுவதுபோலத்தான் உள்ளது...
நேற்று பார்த்ததும் படங்கள் சுற்றிய சுற்றில் பதிவிட மறந்துவிட்டேன்...
அப்புறம்,
சிவசேவகர் அவர்களே...
எந்தப் படங்களில் சோதிதாலும் சுற்றோ சுற்றென்று சுற்றுகின்றதே...
நீங்கள் கவனிக்கவில்லையா...???

shivasevagan
09-07-2007, 03:46 PM
நண்பரே! சிவசேவகன் என்றால் சிவன் படம் தானே வரும் :icon_good:

1. In WinAmp 5.0, click on Options then on Preferences (or simply press Ctrl-P).

விண் அம்பைத் திற*ந்து கொண்டு Ctrl + P அழுத்தவும். பின்னர்

2. Click on the Input option under Plug-ins (these are on the left side of the window).


இன்புட் கீழே உள்ள பிளக் இன்ஸைக் கிளிக் செய்யவும்.

3. Click on Nullsoft NSV Decoder 1.02

அதன்பிறகு நல்சாப்டுயை செலக்ட் செய்யவும்.

4. Click on about.

அதன் பிறகு அபோட் என்ற பட்டணைக் கிளிக் செய்யவும்.

5. Double click on the box with the llama picture in it. You can keep double clicking for different effects.


அதன் பிறகு ஒரு படம் வரும் அதன் மீது டபுள் கிளிக் செய்யவும். ஒவ்வொரு முறை டபுள் கிளிக் செய்யும் போது நிறைய அசையும் படங்களைப் பார்க்கலாம்.

lolluvathiyar
10-07-2007, 09:52 AM
நீங்கள் கூறியதை அனைத்தையும் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது சிவசேவகரே. பாராட்டுகள்

ஜாவா ஸ்க்ரிப்ட் மாயாஜாலங்களில் இன்னொன்று. கீழே உள்ள ஸ்க்ரிப்டை வெட்டி, அட்ரஸ் பாரில் ஒட்டி என்டர் கொடுங்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்கள்..!
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
ஒன்றுமே நடக்கவில்லையே இதயம் அவர்களே

இதயம்
10-07-2007, 10:29 AM
ஒன்றுமே நடக்கவில்லையே இதயம் அவர்களே

இதை நான் எதிர்ப்பார்த்தேன்..!

ஒன்றுமே நடக்காதது போல் இருப்பது தான் இந்த ஜாவா ஸ்கிரிப்டின் தனிச்சிறப்பு. ஆனால், அதன் பின்னே ஒரு விஷயம் ஒளிந்திருக்கிறது. இந்த ஸ்க்ரிப்டை எந்த வலைப்பக்கத்தில் வைத்து இயக்குகிறீர்களோ அந்த வலைத்தள பக்கம் தன் கட்டுப்பாட்டை இழந்து நமக்கு அடிமை ஆனது போல் ஆகிவிடும். தெளிவாக சொல்லுகிறேன். தமிழ் மன்றத்தின் வலைதள பக்கத்தில் உள்ள மற்ற நண்பர்களின் பதிவை உங்களால் திருத்தி அமைக்க முடியாது (அதற்கான அனுமதி கிடைக்காதவரை).

ஆனால் இந்த ஸ்கிரிப்டை இயக்கினால் வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வலைப்பக்கத்தை போல் ஆகிவிடும். அப்போது அதிலுள்ள படங்கள், எழுத்துக்களை நீக்கலாம், சேர்க்கலாம், அளவை பெரிது, சிறிதாக்கலாம். அந்த வலை தளத்தையே பிரித்து மேய முடியும். நீங்கள் அதை வெறும் கண்ணாம் மட்டும் பார்த்ததால் இப்படி எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சம் மவுஸ் கொண்டு விளையாடி பாருங்கள் தெரியும்..!

அக்னி
10-07-2007, 10:33 AM
ஆமாம் இதயம்...
எனக்குப் பிடிக்காத தளங்களை இப்படியாவது கொத்திக் குதறலாம் இனி...
ஆமாம், இதனால், உண்மையிலேயே, தளம் சேதப்படாதுதானே...?

அன்புரசிகன்
10-07-2007, 10:33 AM
ஆம். உங்களால் நேரடியாகவே டைப்பண்ணக்கூடியதாக இருக்கும். இருப்பவற்றை அழிப்பது போலவும் தோன்றும்.

அன்புரசிகன்
10-07-2007, 10:37 AM
ஆமாம் இதயம்...
எனக்குப் பிடிக்காத தளங்களை இப்படியாவது கொத்திக் குதறலாம் இனி...
ஆமாம், இதனால், உண்மையிலேயே, தளம் சேதப்படாதுதானே...?

அவை எல்லாம் மாயை அக்னி.. பயப்படாதீங்க... நீங்கள் இருப்பது client side. java script உம் client side ஐ கட்டுப்படுத்து. ஆனால் php, asp போன்றவை server side ல் செயற்படுத்த பயன்படுபவை...

இதயம்
10-07-2007, 10:38 AM
ஆமாம், இதனால், உண்மையிலேயே, தளம் சேதப்படாதுதானே...?
நிச்சயமாக முடியாது. காரணம், நாம் திரையில் காணும் அனைத்திற்கும் ஆதாரம் அவரவர்களின் சர்வர்கள். அதில் நாம் அத்தனை எளிதாக நுழைய முடியாது. இது தற்காலிகமாக செய்யும் விளையாட்டு மட்டுமே.. ஆனால், இதை வைத்து சிலர் விளையாடி விபரீத விஷயங்கள் செய்ய வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு ஆபாச தளத்தில் பக்கத்து வீட்டு பெண்ணின் புகைப்படத்தை அதில் வைத்து அந்த பெண்ணை மோசமான பெண்ணாக சித்தரித்து அடுத்தவர்களுக்கு காட்ட வழியிருக்கிறது. கணிணி பற்றி அறிவில் குறைவாக இருப்பவர்களை மிக சாதாரணமாக ஏமாற்றலாம்..! ஆனால், யாரும் அப்படி செய்யாதீர்கள்..!!

shivasevagan
10-07-2007, 01:41 PM
நீங்கள் கூறியதை அனைத்தையும் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது சிவசேவகரே. பாராட்டுகள்



நன்றி நண்பரே!


Windows 98 வைத்திருப்பவர்கள் Screen Saver யை எடுத்துக்கொண்டு அதில் 3D text யில் Volcano என்று கொடுத்துப் பாருங்கள்.

மலர்
12-07-2007, 05:40 AM
இதையும் முயன்று பாருங்கள்..

1) Go to Google site. (http://www.google.com/)

2) select Images at the top.

3) pastஎ " ***** " in the search box.

4) See the " POWER OF GOOGLE ".You will be surprised by seeing the truth.


திருத்தப்பட்டது − மேற்பார்வையாளர்

பிச்சி
12-07-2007, 06:01 AM
MS WORD இல் Q33NY என்று டைப் செய்து Wingdings fontக்கு அதை மாற்றி பாருங்கள் ஒரு அதிசயம் உள்ளது.

இந்த தகவல் முதலிலேயே வந்துவிட்டது அண்ணா. இங்கே கொடுத்தாதுக்கு நன்றி. நான் போய் முயற்சி செய்து பார்க்கிறேன்.

ஆதவா
12-07-2007, 11:54 AM
இதையும் முயன்று பாருங்கள்..

1) Go to Google site. (http://www.google.com/)

2) select Images at the top.

3) pastஎ " ***** " in the search box.

4) See the " POWER OF GOOGLE ".You will be surprised by seeing the truth.


திருத்தப்பட்டது − மேற்பார்வையாளர்

நண்பர் மலருக்கு,..

ஆங்கிலத்தில் எழுதுவ*தும் அசிங்க* வார்த்தைக*ளால் (சாதார*ண வார்த்தையாக* இருந்தாலும்) எழுதுவ*தும் ம*ன்ற* விதிமுறைக*ளுக்கு மீறான*து. இதை நீங்க*ள் புரிந்துகொள்வீர்க*ள் என்று நினைக்கிறேன்.

மலர்
12-07-2007, 12:28 PM
தெரியாமல் நடந்து விட்டது ..அப்படின்னு சொல்லமாட்டேன் தெரிந்தே தான் செய்தேன்... ஆனால் தப்பு என்று தெரியாது..
மன்னிக்கவும் இனி இது போல் தவறு நடக்காது பார்த்து கொள்கிறேன்

shivasevagan
12-07-2007, 01:38 PM
***** என்று கொடுத்து சேர்ச் செய்தால் ஒன்றும் வரவில்லை.

அன்புரசிகன்
12-07-2007, 02:58 PM
ஒன்றும் வரவில்லையே மலர்???

இனியவள்
12-07-2007, 03:07 PM
ஒன்றும் வரவில்லையே மலர்???

அன்பு ஆவி வந்து இருக்குமே வரேலையா ஹீ ஹீ :icon_wink1:

அக்னி
12-07-2007, 04:05 PM
எனக்கும் ஒன்றும் வரவில்லையே...
search தானே கொடுக்கவேண்டும்....

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 08:45 AM
கணிணியில் வித்தை காண்பிக்கிறீர்கள். நல்ல வித்தை

shivasevagan
08-07-2009, 09:37 AM
நன்றி ஈஸ்வரன் அவர்கள்

itsjai
09-07-2009, 04:32 PM
நல்ல முயற்சி தான் நண்பரே. Java Script மகிமை.
மேலும் con பற்றிய விளக்கம்
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=423511&postcount=12 இருக்கிறது.

பாலகன்
09-07-2009, 04:37 PM
நன்றி ஜெய்... ஆரம்பிச்சுட்டேள்ன்னு நினைக்கிறேன்....

anna
16-07-2009, 10:25 AM
நம்ம ஆட்களுக்கு அளவில்லாமல் கொட்டி கிடக்கும் அறிவின் வெளிப்பாடு தான் இது. இது தான் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்க்கும் முடிச்சு போடுவது என்பதா? பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு.

தாமரை
06-05-2010, 11:31 AM
இரட்டை கோபுரத்தில் மோதிய இரண்டு விமான எண்கள்

Q33NY AND Q11NY

NY என்பது NewYorkஐக் குறிப்பது.

இது உண்மையே.

Early on the morning of September 11, 2001, nineteen hijackers took control of four commercial airliners en route to San Francisco and Los Angeles from Boston, Newark, and Washington, D.C. (Washington Dulles International Airport).[1] At 8:46 a.m., American Airlines Flight 11 was crashed into the World Trade Center's North Tower, followed by United Airlines Flight 175 which hit the South Tower at 9:03 a.m.[7][8]

Another group of hijackers flew American Airlines Flight 77 into the Pentagon at 9:37 a.m.[9] A fourth flight, United Airlines Flight 93 crashed near Shanksville, Pennsylvania at 10:03 a.m, after the passengers on board engaged in a fight with the hijackers. Its ultimate target was thought to be either the Capitol (the meeting place of the United States Congress) or the White House.[10][11]

தப்பு தப்பா தகவல் தருகிறீர்களே!!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான எண் AA என ஆரம்புகும். யுனைடெட் ஏர்லைன்ஸ் யு ஏ என ஆரம்பிக்கும்....

நீங்க வேணும்னா ஏமாறலாம்.. நாங்க உஷாராக்கும்

பார்க்க
http://www.kwe.co.jp/en/useful/note/code1.html

nambi
06-05-2010, 12:26 PM
ஆ ஆங்கிலம் தமிழ் மன்றத்தில் ஆங்கிலம்....!