PDA

View Full Version : இவர்கள் தவழும் குழந்தைகள்!ஷீ-நிசி
06-07-2007, 07:01 AM
பறந்து செல்லும்
பறவைக் கூட்டங்களோடு
தவழ்ந்து செல்லும்
மேக கூட்டங்கள்!

காம்பில்லாத ரோஜாக்கள் -இந்த
காலில்லாத ரோஜாக்கள்!

வலிகளை சுமக்கமுடியுமென
இறைவன் தேர்ந்தெடுத்த
வான் குழந்தைகள்!

காலணிகளை வைக்கவும்
தயங்கும் இடங்களில்,
கரங்களை வைத்தபடி
இயங்கும் இதயங்கள்!

சமூகத்தின்
அவநம்பிக்கைகளை
களைய வைத்து,
தன்னம்பிக்கைகளை
விளைய வைத்தவர்கள்!

இழந்திட்ட அங்கங்களின்
உடல் வலிமையை
இருமடங்காய்
இதயத்தில் ஏற்றியவர்கள்!

இவர்களுக்கு தேவை....

வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல.......

பென்ஸ்
06-07-2007, 07:13 AM
சபாஷ் ஷீ....

கையகுடுங்க.... கலக்கிட்டிங்க போங்க....

முதலில் கூறிய வரிகள் எல்லாம் நீக்க படவேண்டியவைகள்...
அல்லது நீக்கபட முடியும்... அதை செய்ய வேண்டும்...
உதாரணமாக, மேலை நாடுகளில் எல்லா பொது இடங்களுக்கும் சக்கரநாற்காலி செல்ல வசதி இருக்கும். அவர்கள் இப்படி ஊர்ந்து செல்லவில்லையே... அதை நம் அரசாங்கம் செய்யவேண்டும்...
சில விசயங்கள் சட்டத்தால் கட்டாயபடுத்தபடவேண்டும். இந்த நிலை கண்டிப்பாக மாறும்.

இவர்களுக்கு தேவை....

வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல........
இது பஞ்ச்....
எல்லோருக்கும் காரமாக நீங்கள் கொடுத்த பஞ்ச்...
ஊனமுற்ற*வர் என்ற சொல்லே முதலில் தவறு...
இவர்களுக்கு நல்லது செய்வதாக நான் செய்யும் முதல் தவறு இவர்களை பரிதாபமாக பார்ப்பது...
இதை எல்லோரும் மாற்ற*வேண்டும்.

அமரன்
06-07-2007, 07:29 AM
ஷீ. கலக்கல் கவிதை. பறந்து செல்லும் பறவைகள், காம்பில்லாத ரோஜாக்கள் என பல இடங்களில் உவமான உவமேயங்கள். தவழ்ந்து செல்லும் மேகங்கள் ,காலில்லாத ரோஜாக்கள் என வலிக்காதபடி சொல்லி இருகின்றீர்கள். ஒவ்வொரு வரியிலும் பொருள் பொதிந்துள்ளது. சில வரிகளில் நன்பிக்கை, பல இடங்களில் சாட்டை. பாராட்டுகள் ஷீ.

gayathri.jagannathan
06-07-2007, 08:07 AM
கவிதை நெத்தியடி... ரொம்ப நல்லாயிருக்கு.... உவமான உவமேயங்கள் வெகு அழகு.... இவர்கள் இறைவனின் நேரடி குழந்தைகள்... அவரது அன்புக்குப் பாத்திரமானவர்கள்....


காலணிகளை வைக்கவும்
தயங்கும் இடங்களில்,
கரங்களை வைத்தபடி
இயங்கும் இதயங்கள்!ரொம்ப டச்சிங் இடம் இதுதான்....அவர்களையும் சக மனிதர்களாக (அனுதாபத்துடன் பார்க்காமல்) பார்க்க வேண்டும்...

அவர்களிடம் இருந்து தான் தன்னம்பிக்கையை பல மக்கள் கற்க வேண்டும்...

வாழ்த்துக்கள் ஷீ..

ஷீ-நிசி
06-07-2007, 08:21 AM
நன்றி பென்ஸ்... இவைகள் நீக்கப்படவேண்டும் என்பதில் நானும் உங்களோடு ஒத்துபோகிறேன்.. பணம் படைத்த தேசத்தில் ஊனங்கள் நவீன உபகரணங்களால் அவர்கள் கவலையினை மறக்க செய்கிறது. அரசாங்கமும் உதவுகிறது.. ஆனால் ஜனத்தொகை மிகுந்த வறுமையான தேசங்களில் வாழும் இவர்களுக்கு அவர்களைப்போல் வாழும் காலம் என்று வரும்? அதற்கு நம் அரசாங்கம் செய்யபோகும் வழிகள் என்ன?

ஷீ-நிசி
06-07-2007, 08:21 AM
நன்றி அமரன்.. உவமானங்களை மிக அழகாக புரிந்து சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி அமரன்

ஷீ-நிசி
06-07-2007, 08:22 AM
நன்றி காயத்ரி! உங்களின் விமர்சனம் கவிதையை இன்னும் மெருகூட்டுகிறது..

ஓவியன்
06-07-2007, 12:25 PM
அன்பான ஷீ!

கலங்க வைத்த வரிகள் உங்களுடையவை............

முத்தாய்ப்பாக முடித்துள்ளீர்க்ள், இவர்களுக்குத் தேவை வாய்ப்புகள் தான்.......

எவ்வளவு உண்மையான வார்த்தைகளாவை, அரசாங்கம் மாத்திரமன்றி உதவக் கூடிய நிலையிலுள்ளவர்கள் எல்லோரும் அவர்களுக்கு வாய்ப்பளித்தால் நிச்சயமாக அவர்கள் வாழ்வில் ஒளி கிடைக்கும்.

கிடைக்குமா?

ஷீ-நிசி
06-07-2007, 12:48 PM
உண்மைதான் ஓவியன்.....

தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி...

ஆதவா
07-07-2007, 12:09 PM
வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல.......


ஷீ நீசி... என*க்கு என்ன* சொல்வ*தென்றே தெரிய*வில்லை. விம*ர்ச*ன*மும் கைக்கு வ*ர*வில்லை. அதே எளீமை. அதே சிற*ப்பு, அதே தொடை... அட*டா!!

வாழ்வினில் ப*ல* புத்த*க*ங்க*ள் வ*ந்து போகும், சில* காகித*ங்க*ள் நெஞ்சில் நிற்கும். க*ரைய* முடியாத* மையினால் எழுத*ப்பட்டிருக்கும். வ*லிக*ள் நிறைந்திருக்கும்.. காண்ப*த*ற்கு க*ண்ணீர் வ*ரும். இது உங்க*ள் க*விதைக்கும் அந்த* காம்பில்லா ரோசாக்க*ளுக்கும் பொருந்தும்...


வாழ்த்தோடு நிற்க*முடிய*வில்லை.. நேர*மிருந்தால் க*ருத்து கிடைத்தால் சொல்லுகிறேன். இறுதி வ*ரிகள் மிக* அருமை... வாழ்த்துக்க*ள்.

ஷீ-நிசி
07-07-2007, 12:29 PM
ஆதவரே! குறுகிய விமர்சனமாக இருந்தாலும் மனதில் ஒட்டிக்கொண்டன உங்கள் வரிகள்.. நேரம் கிடைக்கும்.. மீண்டும் தாருங்கள்.... நன்றி ஆதவரே!

அக்னி
07-07-2007, 12:45 PM
வாழ்த்துக்கள் ஷீ−நிசி...
வரிகளில் ஆணித்தரம்...

இவர்களுக்கு தேவை....

வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல.......

மனவலிமை கொண்டவர்களுக்கு எங்கள் ஆறுதல்கள் தேவையில்லை...
மனவலிமை குன்றியவர்களுக்கு எங்கள் அனுதாபங்கள் தேவையில்லை...
இன்றைய உலகில்,
அங்கவீனருக்கான ஒலிம்பிக் போட்டிகளை சற்றுப் பார்ப்போமானால்,
உங்கள் கவிதையின் நிதர்சனம் உறுதியாகும்.
அவர்களின் திறமையான செயற்பாடுகள் அதிசயத்தைத் தருவதோடு,
சுகதேகியான சோம்பேறிகளுக்கு,
சாட்டையடியாகவும் இருக்கின்றது...

மீண்டும் வாழ்த்துக்கள், சிறப்பான கவிதைக்கு...

ஷீ-நிசி
07-07-2007, 03:39 PM
நன்றி அக்னி!

அங்கவீனருக்கான ஒலிம்பிக் போட்டி நல்ல உதாரணம்....

இனியவள்
08-07-2007, 01:06 PM
இவர்களுக்கு தேவை....
வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல.......

அருமை ஷீ அருமை

இவர்கள் வாய்ப்புக்கள்
கதிரையைத் தேய்த்து
நேரத்தை வீணாக்கி
பொழுது போக்கும்
சில சோம்பேறிகளால்
பறிக்கப்படுவதனை நினைக்க
வேதனை தான்.....

ஷீ-நிசி
08-07-2007, 03:37 PM
அருமை ஷீ அருமை

இவர்கள் வாய்ப்புக்கள்
கதிரையைத் தேய்த்து
நேரத்தை வீணாக்கி
பொழுது போக்கும்
சில சோம்பேறிகளால்
பறிக்கப்படுவதனை நினைக்க
வேதனை தான்.....

நன்றி இனியவள்.....

இளசு
08-07-2007, 05:31 PM
ஷீ−நிசி..

பார்த்தாலே படிக்க வைக்கும் பதிவாளர் பெயர்..
காரணம் − இந்தக் கவிதையை வாசித்தால் தெரியும்..

வலிய கருத்தை எளிய வரிகளில் சொல்லும் ரசவாதி.
பொருத்தமான உவமைகள் தாமாய் வந்தமரும் கவிச்சிற்பி..

காயத்ரி கலங்கிய அதே வரிகளில் நானும் கலங்கினேன்..
பென்ஸ் சொன்ன மேலைப்பாணி தீர்வுகள் மெல்ல வரும்..
அண்மையில் சென்னைப் பேருந்து தொடர்பான தீர்ப்பு ஒரு தொடக்கம்..

பாராட்டுகள் ஷீ!

ஷீ-நிசி
09-07-2007, 01:33 AM
நன்றி என்னருமை இளசு...

உங்கள் பாராட்டுகள் என்றைக்குமே எனக்கு உற்சாக டானிக் தான்.....


பொருத்தமான உவமைகள் தாமாய் வந்தமரும்

உண்மைதான்... சில நேரங்களில் உவமைகள் எனக்கு உடனடியாக வந்தமர்கின்றன,,

உதாரணம் முதல் நான்கு வரிகள்...

இந்த கவிதையில் எனக்கு மிக பிடித்த வரிகளும் அதுவே....

காரணம்.... இந்த வேகமான வாழ்க்கையில் மற்ற மனிதர்கள் பறவை போல ஓடிக்கொண்டிருக்கும்போது அதே வேகமான வாழ்க்கையில் இவர்களும் மேகம் போல தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...

நன்றி இளசு... உங்களின் வாழ்த்துதலுக்கு....

சுகந்தப்ரீதன்
09-07-2007, 08:20 AM
இவர்களுக்கு தேவை....

வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல.......

ஷீ-நிசி....என்னை கவர்ந்த மற்றும் கலங்கவைத்த வரிகள் இவை...தொடரட்டும் உங்கள் கவிசேவை...வாழ்த்துக்கள் நண்பரே...

ஷீ-நிசி
09-07-2007, 08:47 AM
ஷீ-நிசி....என்னை கவர்ந்த மற்றும் கலங்கவைத்த வரிகள் இவை...தொடரட்டும் உங்கள் கவிசேவை...வாழ்த்துக்கள் நண்பரே...

நன்றி ப்ரீதன்

சிவா.ஜி
16-07-2007, 08:51 AM
நான் விடுமுறையில் தாய்நாடு போயிருந்ததால் இந்த அற்புதமான படைப்பை காண முடியவில்லை. இப்போது நேரம் கிடைத்து ஒவ்வொன்றாய் பார்த்து வந்தபோது இந்த வைர வரிகள் கண்ணில் பட்டது. நான் புதிதாக என்ன சொல்ல இளசுவும், அமரனும், ஆதவாவும், ஓவியனும் மற்ற அனைவரும் இட்ட பின்னுட்டங்களை வழிமொழிகிறேன்.பாராட்ட வார்த்தையில்லை. ஷீ...அற்புதமான கவிதை.

ஷீ-நிசி
16-07-2007, 08:59 AM
நன்றி சிவா.ஜி.....