PDA

View Full Version : மணிக்கடை நூல்தங்கவேல்
06-07-2007, 03:15 AM
மணிக்கடை நூல்

இந்த கட்டுரை ஒரு வித்தியாசமான ஒன்று. அந்த காலத்தில் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு பொக்கிஷம் இது. சரி விசயத்துக்கு வருவோம்.

இந்த முறைப்படி நோய் என்ன என்று கண்டு பிடித்து விடலாம் என்று நூலில் சொல்லப்பட்டு இருக்கிறது.

மணிக்கடைக்கு மேல் நான்கு விரல் தள்ளி கைச்சுற்றளவை கயிற்றினால் அளந்து கண்ட நீளம் அவரவர் கையினால் எத்தனை விரற்கடை இருக்கிறதோ அதற்கு உண்டான நோய் விபரங்கள் கீழே.

பத்து - உடல் வெதும்பி, வாயுனால் நெஞ்சு, கால், கையில் குத்தும். உளையும். வயிற்றில் வாயுத் திரட்சியும் குன்மமும் உண்டாகும்.
ஒன்பதேமுக்கால் - அரையாப்பு, பிளவை, மறட்சி, இருமல்
ஒன்பதரை - உடல் வெதும்பி வீங்கும், சூடு, விழி காந்தும், மேகம் வரும். அன்னத்தை தள்ளும்.
ஒன்பதேகால் - விழி காந்தும், நீர் கடுத்து சிறுத்திரங்கும். நித்திரை வராது. பீனிசம் உண்டாகும்.
ஒன்பது - செவி மந்தமாகும். கண் புகைச்சல், குருக்கில் வாயு இறங்கி வலிக்கும். இரு துடையும் அயரும். நடக்க இயலாது.
எட்டேமுக்கால் - உடல் காயும். சில விஷத்தால் குட்டம்போல் வரும். மூல வாயுவினால் வயிறு பொருமும்.
எட்டரை - தேக வெதுப்பு, வெட்டை, கிரந்தி, குட்டம், சொரி, குடல் வாதந்தாது நஷ்டம்.
எட்டேகால் - உடல் பொருத்து வலித்துளையும், தலை வரட்சி, வலி, பீனிசம், வியர்வை, விஷத்தினால் இளைப்பிருமல்
எட்டு - மேககாங்கை, வயிற்றில் மந்தம், பொருமல், வாயுந்திரட்சி அன்னம் தள்ளும்.

இது போல, ஆறு விரற்கடை வரையிலும் நோய்க்குறிகள் கண்டு பிடிப்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டு இருக்கிறது மணிக்கடை நூலில்.

தமிழர்களின் ஆராய்ச்சியும், அவர்களின் முறைகளும்..ஒரு அதிசயமே.

aren
06-07-2007, 05:41 AM
இதெல்லாம உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

namsec
06-07-2007, 06:29 AM
இதெல்லாம உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.

தவறு எனகூறாதிர்கள். நம் நாட்டு மருத்துவமுறை வளராமல் சென்றதின் காரணம் இது பொன்ற ஏற்றுகொள்ளாமைதான். அதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சிசெய்து பார்க்க வேண்டும் அல்லது செய்பவ்ருக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். எதிர்மரை பேசக்கூடது.

தங்கவேல் கூறியது உண்மை என்பதற்க்கு உதாரணம்

என் தந்தை ஓர் சித்தமருத்துவர் அவரிடம் வரும் நோயாலிகலுக்கு முதலில் அவர் நாடி பார்ப்பார் பார்த்தவுடன் நோயாலியின் உடலில் உள்ள வியாதிகளை குறிப்பிட்டு சொல்லிவிடுவார். பிறகு அதற்க்கான வைத்தியத்தை பார்ப்பார்.

உண்மை சம்பவம்
கடந்த பிப்ரவரி 2004ம் வருடம் என் தந்தைக்கு உடல் நலம் குன்றியது நாங்கள் அவரை ஆங்கில மருத்துவரிடம் சென்று காட்டினோம் பிறகு அவர் வீட்டிற்க்கு திரும்பிவிட்டார். ஆனால் என் தந்தை அவருக்கு அவரே சுய பரிசோதனையாக நாடி பிடித்து பார்த்து கொண்டார். அவர் உடல் நிலையில் எந்தகுறையும் இல்லை என்றும் ஆனால் வரும் சித்திரை வருடபிறப்பிற்க்கு தான் இருக்க மாட்டேன் என்று கூறினார். நாங்கள் அவர் மனநிலையை தேட்றுவதற்க்கு கவலைபடவேண்டம் டாக்டர் சொல்லிவிட்டார் அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறினோம். 2 மாதம் கடந்தது சித்திரை 1க்கு முதல் நாள் என் தந்தை காலம் ஆனார்.

தங்கவேல்
06-07-2007, 08:32 AM
ஆரென் அனுபவ ரீதியாக உணர்ந்து எழுதப்பட்டது இந்த நூல். உண்மையாக இருக்காது என்று போகிற போக்கில் கருத்து பதிப்பது மனதுக்கு வேதனையை தருகிறது.

ஜோய்ஸ்
06-07-2007, 04:18 PM
உண்மைதான் ,நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.நாடி வைத்தியத்தில் இப்படித்தான் பார்ப்பார்களாம்,பண்டய வைத்திய மாமேதைகள்.